தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 01, 2017

எடப்பாடி, எத்தன் எல்லப்பன்


01. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
பதியும், சதியும் விதியோடு சாக.

02. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்
கடன் வாங்கித் தின்ற பிரியாணியால் கழிவறையில் கலக்கி நின்றான் இலங்கேஸ்வரன்.

03. நாயைத் தூக்கி நடுவீட்டுல வச்சாலும் அது நக்கி நக்கித்தான் குடிக்கும்
பாயை விரித்து படுக்கப் போட்டாலும் மொடாக் குடியன் கக்கிக்கிட்டே கிடப்பான்.

04. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது
விழுந்தார் கணக்குப் பிள்ளை உலக்கையடி பட்டு.

05. தென்னையப்பெத்தா இளநீரு புள்ளையப்பெத்தா கண்ணீரு
தென்னங்கள்ளு அடிச்சா இழு’’நூறு ஃபுல் அடிச்சா எழுநூறு.

06. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டு போயிட்டான்
காத்தமுத்து வைப்பாட்டி நேசமணியை கொன்று விட்டாள்.

07. ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடிமாதம் தேடி விற்றார் விதை நெல்லை.

08. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
காசுள்ளபோதே வாங்கிக்கொள்.

09. மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி கிடைக்காது
மலையேறிப் போயாவது மச்சினன் உயிரை எடு.

10. தைப்பிறந்தால் வழி பிறக்கும்
உதை கொடுத்தால் வலி பிறக்கும்.

11. தென்னை மரத்துல தேள் கொட்ட பனை மரத்துல நெறி கட்டும்
தொன்னையில் இருக்கிற பொங்கல் பண்ணை வீட்டுல சுட்டது.

12. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்சானாம்
கறிக்கடை பாய் கணக்குப்பிள்ளை மண்டையை உடைச்சானாம்.

13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
தொட்டுப் பழகினால் சுகந்தி வெட்டுவாள்.

14. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே
குடிசையில் கிடந்தாலும் குடியை மறக்காதே.

15. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
இப்ப ஒண்ணு பெத்தவனே ஓட்டாண்டியாவான்.

16. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
எத்தனுக்கு எத்தன் எடப்பாடியிலும் உண்டு.

Chivas Regal சிவசம்போ-
நல்லவேளை எங்க அப்பத்தா ஔவையார் உயிரோட இல்லை இருந்தா இதை எழுதியவருக்கு உலக்கையடிதான் கிடைக்கும்.

47 கருத்துகள்:

  1. த.ம. மைனஸ் ஒன்று

    பாளையங்கோட்டை
    கூழையன்

    பதிலளிநீக்கு
  2. உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று அல்லவா வரும்?

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைக்கு வருந்துகிறேன் திருத்தி விட்டேன் நன்றி ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  3. ஆக, அடுத்த நூல் கில்லர்ஜியின் பொன்மொழிகள். அப்படித்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வாக்கு பொன்னாகட்டும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. ஜி..

    எப்புடிங்க இதெல்லாம்!?... அருவியா கொட்டுதே!..

    அடே சோணமுத்தா.. குளவி தான் கொட்டும்..

    காலம் மாறிப் போச்சுல்லா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... வாங்க ஜி
      கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டீர்களே... நன்றி

      நீக்கு
  5. உதை கொடுத்தால் வலி ( வழி யும் ) பிறக்கும்...

    பதிலளிநீக்கு
  6. சம்போ உங்க அப்பத்தா இல்லாம போனதுல ரொம்ப வருத்தமா இருக்கு கேக்க ஆளில்லாம போச்சே
    5 பெற்றால் அரசனும் ஆண்டி நல்ல விளக்கம் ரொம்ப சரியும் கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்பத்தாக்களுக்கு இப்பொழுது மரியாதை இல்லையே... என்ன செய்வது ?

      நீக்கு
  7. வாயிலே இருக்கு வார்த்தை,என்பது சரியாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - நல்ல தகவல். மற்றவற்றையும் ரசித்தேன்... 'எத்தனுக்கு எத்தன்' - நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே "எத்தன்" நல்லா சொல்லி இருக்கிறேன் என்பதைவிட உண்மையை சொல்லி இருக்கிறேன் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    2. உண்மைனாலத்தான் ரசிக்கும்படி இருக்கு. அதுனாலத்தான் அவங்க எப்போதும் பழைய ஆளை நம்பி பொறுப்பு கொடுத்தமாதிரி இவர்கிட்ட பொறுப்பே கொடுத்ததில்லை.

      நீக்கு
    3. வருக நண்பரே அரசியலில் யாரும் யோக்கியர்களாக வாழவே முடியாதோ.... ஒருத்தருக்கொருத்தவர் சளைத்தவர்கள் இல்லை.

      நீக்கு
  9. ஹா...ஹா... அடிச்சி ஆடுங்க...
    மைனஸ் பிளஸ் மனம் வைக்காதீங்க...
    அது கெடக்குது கழுத...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      மைனஸ் கிடக்கட்டுமா ?
      அதெப்படி... நாங்க காவிரி மண் ஸாரி... கவரி மான் பரம்பரை.

      "சொன்ன சொல்லும் மாறாது
      சுட்ட கருவாடும் நாறாது"

      நீக்கு
  10. எல்லாமே நல்லா இருக்கு! அது எதுக்கு மைனஸ்? இன்னுமாப் போட்டுட்டு இருக்காங்க! என்னவோ போங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... ஐயோ.... உங்களுக்கு இன்னும் தெரியலை எனக்கு அவரென்ன மைனஸ் போடுவது நான்தான் முதலில் போட்டுக்கொள்வேன் எப்பூடி ?

      நீக்கு
  11. வரவரப் பழமொழிகளின் உண்மையான அர்த்தமே மறைஞ்சுடும் போலிருக்கு! :*

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாச்சாரமே மாறும்போது பழமொழி மாறிவதில் வியப்பென்ன ?

      நல்ல பேண்ட்''டை கிழித்துக்கொண்டு இதுதான் நாகரீகம் என்று சொல்கிறது சமூகம்
      குற்றம் சொல்பவன் கிறுக்கனாம் என்ன செய்வது ?

      நீக்கு
  12. 5 பெற்றால் அரசனும் ஆண்டி...அந்த ஐந்தும் அருமை! அனைத்தும் ரசித்தோம் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. திரு. ஜீவன்சிவம் அவர்களின் முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன்.

      நீக்கு
  14. ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  15. இப்போ கடன்பட்டார் என்பது பழசு ! கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்பது புதுசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உண்மையான வார்த்தை.
      வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  16. ஐந்து பெற்றால் ஆண்டி விளக்கம் சூப்பர் ..மற்ற பொன்மொழிகளும் சூப்பர் ..
    எத்தனுக்கு எத்தன் :) ஹாஹா flex பேனர் வைக்க கூடாதுனா பலூன் கட்டி பறக்க விடறாங்க நெஜமாவே எத்தன்ஸ் ஜித்தன்ஸ் தாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீதிபதிகளுக்கு இவ்வளவு யோசனை வந்தால் ? அவர்களுக்கு போஸ்ட் கொடுத்த எங்களுக்கு எவ்வளவு யோசனை வரும்...

      நீக்கு
  17. தொட்டு பழகினால் சுகந்தி வெட்டுவாள்....எதை? எதைக் கொண்டு..??தெரிந்தால் ..மற்றவர்களை உசார் படுத்தலாமே என்ற நல்ல நோக்கத்தில்....

    பதிலளிநீக்கு
  18. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:).. சிறீ சிவசம்போ அங்கிளிடம் சொல்லி அந்த முதல் படத்தில் வரும் 3 வது வரியை நீக்கச்சொல்லுங்கோகில்லர்ஜி இல்லையெனில்...
    காச்சலென்றும் பார்க்காமல் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன்ன்....:),,

    யாருமே இங்கின அதுபற்றிக் கணக்கெடுக்கவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்:)...

    அப்போ கணவன் ஒழுக்கமில்லாமல் இருக்கலாமாமோ? மனைவி மட்டும்தான் ஒழுக்கமா இருக்கோணுமோ? நான் பொயிங்கிட்டேன்.. இப்பவே போறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு:)... எனக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ இது ஆண்களுக்காக சொல்லப்பட்டது இதை சொன்னவர் சித்தராக இருந்தாலும் இந்நேரம் சமாதி ஆகியிருப்பார்.

      பெண்களுக்காக சொல்லப்பட்ட "பொண்ணு பெற்றால் பெண்ணே போண்டி" இதில் சொல்லப்பட்ட தத்துவத்தில் நீங்கள் ஆசைப்பட்டபடி ஆண்களை சவட்டி எடுத்த குறிப்புகள் இருக்கும்.

      ஆகவே அவசரப்பட்டு ஜேம்ஸ் ஊரணியில் குதிக்க வேண்டாம் என்று உங்கள் அங்கிள் சிவசம்போ சொல்லச் சொன்னார்.

      இருந்தாலும் நியாயத்தை கேட்டதற்காக உங்களுக்கு பிரித்தானியா பிஸ்கட் அரை பீஸ் வழங்கப்படலாம் ???

      நீக்கு
    2. அப்போ பெண்களுக்காக சொல்லப்பட்டதையும் விரைவில் போடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:)

      https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg?w=1000

      நீக்கு
    3. ஆஹா நானாக உளறி விட்டேனே....

      நீக்கு
  19. என்னண்ணே இப்படி கிளம்பிட்டீங்க?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி.. ஹி.. இது ஊமைக்குத்து மாதிரி இருக்குதே...

      நீக்கு
  20. எடுக்க எடுக்க வருகிறது உங்கள் கற்பனை ஊற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மூளை ஒரு அட்ஷய பாத்திரம் என்று சொல்வார்களே..... வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. புதுமொழியை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  22. அருமையான எண்ணங்கள் - தங்கள்
    கைவண்ணங்கள் அருமை!
    அஞ்சு அருமை

    பதிலளிநீக்கு