தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

தீர்க்கதரிசி


ஏழு ஆண்டுகள் காமராஜ் ஆட்சியினை கண்டபின் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே, என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டும் என்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறி விட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது இதை கில்லர்ஜி இடமான தேவகோட்டையில் கூறுகிறேன்.

(இராமநாதபுரம் மாவட்ட திராவிட கழக 4-வது மாநாடு 09.07.1961-ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி – 17.07.1961 விடுதலை)

டிசம்பர் 24
இன்று தந்தை பெரியாரின் 44-வது நினைவு தினம்
இதோ... ஆதாரம் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.

50 கருத்துகள்:

  1. நிஜத்தில் சொல்லி, உங்கள் பெயர் சேர்த்திருக்கிறீர்களா என்ன? இல்லை மொத்தமும் கற்பனையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதாரம் கொடுத்தும் மொத்தமும் கற்பனையா ? என்று கேட்டது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  2. பெரியாரின் இந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது. கல்வி மட்டும்தான் எல்லோரையும் முன்னேற்றும் என அவர் நம்பினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நல்ல தகவல் . உங்கள் பெயரை சேர்த்தத்தால் கற்பனையோ என்ற ஐயம் வந்து விடுகிறது. அதனை எடுத்து விடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்பதிவில் எனது எழுத்துகளே அது மட்டும்தானே எழுத்தை வேண்டுமானால் எடுத்து விடலாம். புகைப்படத்தில் உள்ளதை நீக்கினால் படத்தையே நீக்க வேண்டும்.

      நீக்கு
  4. கல்வி மட்டுமே அனைவருக்கும் முன்னேற்றம் தரும். உண்மை. காமராஜரைப் போல் இனி ஒருவர் கிடைப்பது அரிது. இப்போது இருப்பவர்கள் சுயநலம் மிக்கவர்கள், பொதுநலம் என்றால் கிலோ என்ன விலை என்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவரை மக்கள் தோற்கடித்ததின் சாபக்கேடுதானோ என்னவோ ?
      வருக அவரது நினைவு நாளில் நினைவு கூர்ந்தேன்,

      நீக்கு
  5. அதுதான் தவறவிட்டோமே மூடர்கள் ஏன் அதை கிளறி ...................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் ஏதும் உண்டோ என் கருத்தில்

      நீக்கு
    2. மன்னிக்கவும் தங்களுக்கு மறுமொழி சொல்லவில்லை என்பதை இப்பொழுதே அறிந்தேன்.

      ஆம் பெரியாரின் அறிவுரையை புரிந்து கொள்ளாதது மூடத்தனமே...

      மீள் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
    3. ஜி என்னதிது பெரிய வார்த்தையெல்லாம் தோழமைகளுக்குள் வேண்டாமே நான் தான் விரக்தியாய் சொல்லி விட்டோமே என்று பார்க்க வந்தேன் அவ்வ்ளவுதான்

      நீக்கு
    4. மன்னிப்பு கேட்பவர் ஸ்மால் பீஸ், மன்னிப்பை கொடுப்பவர் பிக்பாஸ் என்று எமது தாத்தா ஞானி ஸ்ரீபூவு சொல்லி இருக்கின்றார்.

      நீக்கு
  6. காமராஜர் மிகச் சிறந்த முதல் மந்திரி! நினைத்துப் பார்த்துக் கொள்ளத் தான் முடியும். இப்போ முதல் அமைச்சரின் விலை 150 கோடி! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ முதல் அமைச்சரின் விலை 150 கோடி!!///

      கீதாக்கா செம கமென்ட்!!! அடிச்சீங்க பாருங்க ஒரு பௌன்ஸர்!!! ரொம்ப ரசித்தேன் இந்த வரியை!!!!!

      கீதா

      நீக்கு
    2. கீதாக்கா உங்களின் அந்த வரி எவ்வள்வு வேதனை இல்லையா??!!! நாம் இப்படியான ஒரு தலைமையின் கீழ் இருக்க வேண்டி வருதேனு...?!!

      கீதா

      நீக்கு
    3. வருக சகோ 150 கோடி இனி வரும் காலங்களில் உயருமா ?

      நீக்கு
  7. பெரியார் பற்றிப் பெரிதாக எனக்கேதும் தெரியாது!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நன்று தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அவர் இருந்த போது நாம் அடையாளம் காணத்தவறி விட்டோமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இருப்பதின் அருமை இழந்த பிறகே தெரியும்.

      நீக்கு
  9. பச்சைத்தமிழர் என்ற அடைமொழியை காமராஜர் அவர்களுக்கு பெரியார் வழங்கியிருந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவர் தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலத்துக்கு வைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தார்.இருப்பினும் மதிய உணவுத்திட்டம் எனும் சிறந்த திட்டம் தமிழ்நாட்டின் கல்விக்கண்களை சுடரச்செய்தது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.அந்த பகுத்தறிவுச்சிங்கம் கில்லர்ஜியின் (புதுக்)கோட்டைக்குள் வந்து கர்ஜித்தது என்பது என்னை மிகவும் சிலிர்க்கச்செய்கிறது.

    அன்புடன் ருத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அவரது மதிய உணவுத்திட்டத்தில் கோதுமை களி உண்டவன் நான் தேவகோட்டையை புதுக்கோட்டை ஆக்கி விட்டீர்களே....
      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  10. பெரியார் இப்படி நிறைய உண்மைகளை மண்டையில் அடித்ததுபோல் சொல்லியிருக்கிறார். ஆனால் கேட்பது தமிழனின் குணமல்லவே நண்பரே..

    இன்னொன்றையும் கவனித்தேன் - பெரியாருக்குத் தெரிந்த முக்கியமானவர்கள் இருவர்: ஒன்று கில்லர்ஜி, இன்னொருவர் காமராஜ் ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தை
      அவருக்கு முக்கியமானவர்களை அறிந்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி.,

      நீக்கு
  11. நண்பரே, உங்கள் பதிவைப் படித்ததும், கூகிளில் பெரியார் இதுபோல ஏதும் பேசி இருக்கிறாரா என்று தேடிப் பார்த்தேன். ‘காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?’ என்ற தலைப்பினில் தி இந்து (தமிழ்) நாளிதழில் வெளிவந்த கட்டுரை(15.ஜூலை.2015) கண்ணில் பட்டது.

    இங்கு, பெரியார் பேசிய பேச்சில் உங்கள் பெயரையும், தேவகோட்டை என்ற உங்கள் ஊரின் பெயரையும், நகைச்சுவைக்காக சேர்த்தது சரியாக எனக்குத் தெரியவில்லை. பெரியார் பேச்சில் மட்டுமல்ல, வேறு எவரது பேச்சிலும் இவ்வாறு இடைச்செருகல் செய்வது என்பது தவறு என்பது எனது கருத்து. மீம்ஸ் என்ற விஷயத்திலும் கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பெரியார் சொல்லிச்சென்ற போதனைகள் எல்லோரும் அறிந்தவையே... இப்பதிவில் அந்த வரிகளை வைத்தே பதிவை நகர்த்தினேன்.
      தங்களது கருத்தை ஏற்று இனி இப்படி வருவதை தவிர்க்கிறேன் நன்றி

      நீக்கு
  12. தகவலுக்கு நன்றி ! நண்பரே..! பெரியார் சொன்னதையே கேட்காதவர்கள் தேவகோட்டை கில்லர் சொல்லியா...கேட்கப் போகிறார்கள்...?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் நான் சொல்லி எடுபடாது.

      நீக்கு
  13. கில்லர்ஜி இது உண்மையான தகவல் என்றால் உங்கள் பெயரை சேர்க்காமல் பின் குறிப்பு அல்லது சிவாஸ் பேசுவது போல் கொடுங்கள் ஜி....ஏனென்றால் பதிவு அப்படியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது இது உண்மையா அல்லது உங்கள் கற்பனையோ என்று....இது கில்லர்ஜியின் வரிகள் போலத்தான் தோன்றுகிறது!!! ஹிஹிஹி

    ஆனால் நன்று..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இது தேவகோட்டையில் நடந்த உண்மைச் சம்பவமே நகைப்புக்காக என்னை இணைத்தேன்

      பழங்கால புகைப்படத்தில் எனது எடிட் திறமைக்காக மன்னிக்கலாமே... கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. கில்லர்ஜி உங்கள் எடிட்டிங்க் என்றுமே எப்போதுமே சூப்பர்தான்..இத்தனைக்கும் நீங்கள் பெரிய பெரிய ஹைடெக்கான ஆப் அல்லது சாஃப்ட்வேர் எதுவும் வைத்துக் கொள்ளாமல் செய்வது என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியய்துஜி அதுவும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதும் தெரியும்....உண்மையான தகவல் என்பதும் தெரிகிறது.....இது ஒரு தலைவரைப் பற்றி என்பதால் அப்படித் தோன்றியது...ஜி அம்புட்டுத்தேன்....!!!

      கீதா

      நீக்கு
    3. அட! போங்க கில்லர்ஜி இதுக்குப் போய் மன்னிப்பு என்று...பெரிய வார்த்தை எல்லாம் நோ!!!ஓகேயா...

      கீதா

      நீக்கு
    4. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. தேவக்கோட்டையிலா..என நினைத்தேன். பின்னர் உங்களின் பாணி என அறிந்தேன். இருந்தாலும் அவர் கூறிய கருத்துகள் ஆழமானவை, அர்த்தமுள்ளவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களுக்கு இது தேவகோட்டையில் நிகழ்ந்ததை விடுதலை பத்திரிக்கை வெளியிட்ட உண்மை செய்திதான் எனது பெயர் மட்டுமே இணைப்பு.

      நீக்கு
  15. உங்கள் பெயர் இணைப்பு... பபெரியாரின் வெண்தாடி புன்னகைக்குள்..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நடந்த உண்மைதான் என் பெயரை இணைத்ததால் பலரும் தேவகோட்டையே இணைப்போ என்று நினைத்து விட்டனர் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. பெரியாரும் காமராசரும் இல்லையேல்
    இன்று நாம்ஏது?
    போற்றுதலுக்கு உரியவர்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள தகவல்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  18. அன்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை 50 வருட அரசியலும் அரசியல்வாதிகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார்கள். அரசியலைத் தொழிலாக மாற்றிய பெருமை நம்மூர் அரசியல்வாதிகளூக்கு உள்ளது. பெரியார் பெரிய தீர்க்கதரிசியாவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மிகவும் சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு