தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 08, 2017

சேரன் சோழன் பாண்டியன்


வாழவே புடிக்கலைனா என்ன செய்யிறது ?
அப்ப செத்துட வேண்டியதான்.
சாகவும் புடிக்கலைனா ?
அப்ப வாழவேண்டியதுதான்.
என்னய்யாநீ ஏடாகூடமா பேசுறே ?  
யாரு நானு... ஏண்டா டேய் நானே சாவோம்னு போயிக்கிட்டு இருக்கேன்... யேங்கிட்டே வந்து,
யேன் சாகப்போறே ?
வாழப்புடிக்கலே.
யேன் வாழப்புடிக்கலே ?
மொதல்லே ஒனக்கு யேன் வாழப்புடிக்கைலைனு சொல்லு.
விருப்பமே இல்லை வாழ
ரெண்டும் ஒரு எலவுதான்யா... 
என்னய்யா...  நீ எலவு கிலவுனு பேசுக்கிட்டு..
யேன் பேசுனா என்ன ?
அந்த மாதிரி பேசுனா எனக்குப் புடிக்காது.
புடிக்கலைனா போயி சாவுடா யேங் கழுத்தை அறுக்காம...
என்னை சாகச்சொல்ல நீ யாருடா ?
எங்கிட்டே ஏண்டா...  ஐடியா கேட்டே ?
நான் சாகத்தான் வந்தேன் ஆனா நீ சொல்லி சாகவேண்டிய அவசியம் இல்லை வேணும்னா நீ போயி சாவு.
என்னடா நீ தகராறு பண்ணுறதுக்கு வந்துருக்கியா ?
சட்டையை விட்றா...
என்னடா செய்வே ?
விட்றா....

இருவரும் சண்டையில் இருந்த மும்முரத்தில் தண்டாவாளத்தை விட்டு விலகாமலே பேசிக்கொண்டிருக்க.... பாண்டியன் எக்ஸ்பிரஸ் வருவதை கவனிக்காமல் உருண்டு கொண்டிருக்க.. அடுத்த சில நொடிகளில் இருவரும்  .......................................

பாண்டியன் சேரன் மாதேவியை விட்டு, சோழந்தூரை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தான்

Chivas Regal சிவசம்போ-
சாவுகிராக்கி பயலுகள் சண்டை போடுறதுக்கு வேற இடம் கிடைக்கலை ?

40 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா சிரிச்சு முடியுதில்லை:) சிறீ சிவசம்போ அங்கிள்.. இருவரும் அடிபடும்வரை பொறுமையாப் புறுணம் பார்த்துக்கொண்டிருந்திட்டு:)) கரீட்டாப் பதில் கொடுக்கிறார் பாருங்கோ:)).. அங்கதான் நிக்கிறார் அவர்:))...

    இதைப்படிச்சதால எனக்கே இப்போ தேம்ஸ்ல குதிச்சிடலாம் போல வருதே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அங்கிளாச்சே... கரைக்டா ஜொள்ளுறாரு...

      முதலில் ஜேம்ஸ் ஊரணிக்கு கேட் போடச் சொல்லணும்.

      நீக்கு
  2. ஏன், கில்லர்ஜி ஏன்?

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டை போட்டவர்களிடம் கேளுங்கள் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  3. ரயிலைத் தான் நிறுத்திட்டாங்களே! ரயில் மறியல் நடந்துச்சே, தெரியாதா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் ஓடும்போது சண்டை போட்டு இருப்பாய்ங்களோ...

      நீக்கு
  4. கில்லர்ஜி சரி ஏதோ காமெடியா முடியப் போகுதுனு பார்த்துட்டே வந்தா கடைசில இப்படித் தள்ளி விட்டுப்புட்டீங்களே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுந்தவங்களை போய்க்கேளுங்கள் நான் தள்ளி விடலை.

      நீக்கு
  5. ம்ம்ம்... சண்டை போடறதுக்கும் இடம் பார்க்கணும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நடுரோட்டில் சண்டை போட்டது போலாகிவிட்டதே...

      நீக்கு
  6. குழப்பமான மனங்களுக்கு இதுதான் முடிவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே குழப்பவாதிகள் சண்டையிட்ட இடம் சரியில்லையே...

      நீக்கு
  7. நகைச்சுவை நன்று!

    பதிலளிநீக்கு
  8. "பாருங்கள்..இன்னும் அந்த இரண்டு "ஆன்மாக்கள்" அங்கே சண்டை போட்டுக்கொண்டிருப்பதை! அடுத்த பிறவி எடுத்து இன்னும் இந்த‌
    தண்டவாளத்துக்கு வந்து சண்டை போடலாமா? வேண்டாமா? என்பது தான் அந்த சண்டை!


    ___________________ருத்ரா இ.பரமசிவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்முறை வருகை தரும் திரு. இ.பரமசிவன் ஐயா அவர்களை வரவேற்கிறேன்.

      நிகழ்கால மனிதர்களை ஆவிகளாக்கி விட்டீர்களே.... வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  9. வாழ புடிக்கல வாழ புடிக்கல ஏ என்னவே இது நீ பாட்டுகிட்டு தண்டாவாளத்துல l சண்டையை புடிச்சிகினு இருக்க அதை பார்த்து ரயிலை நிப்பாட்டி இருந்தா எம்ம்புட்டு கஷ்டமாயிருக்கும் நல்ல வேலை நிறுத்தாம போயி உங்க சண்டையை எப்படி நிறுத்தினான் பாரு! நாங்கெல்லாம் எம்புட்டு அப்பாடக்கரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே திருநெல்வேலி வழக்கு ஸூப்பர் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. வாழப் பிடிக்கலையா - அப்ப
    சாகப் பிடிக்கும் தானே - அப்ப
    சாக வேண்டியது தானே - அப்ப
    அச்சம் வந்து நோகடிக்குதே - அப்ப
    வாழ வேண்டியது தானே - அப்ப
    கொஞ்சம் உழைச்சால் தானே - அப்ப
    காசு/ பணம் வந்தால் தானே - அப்ப
    மகிழ்வாய் வாழலாம் தானே - இப்படி
    என்னை எண்ணத் தோன்றிய
    தங்கள் பதிவை பாராட்டுகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. நல்லவேளை சிவசம்போ ட்ரெயினை காப்பாத்திட்டார் :) தத்துவம் பேசற இடமா அது :)
    அப்புறம் சிராய்ப்பு ஏதும் இல்லையே :) ட்ரெயினுக்கு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரயிலின் சக்கரம் லேசாக நஞ்சு போச்சாம் வேறொன்றும் பிரச்சனை இல்லை.

      நீக்கு
  12. இன்றைய சாமான்ய இந்தியனின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. என்னமோ போங்க..
    இந்த ரயிலுக்கு வந்த சோதனை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதுக்கு போயி இரயிலை குறை சொல்றாங்களே.. நியாயமா ?

      நீக்கு
  14. இப்படி...அவங்க வாழ்க்கையே De-rail ஆயிடுச்சே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மதி, சதி செய்ததால் விதி விளையாடி விட்டது.

      நீக்கு
  15. ஏன் இம்மாதிரி பதிவு கில்லர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பதிவின் வழி சறுக்கி விட்டது பொருத்தருள்க...

      நீக்கு
  16. வெட்டியா செத்தாலும் சாவாங்களே தவிர..... ஒரு நல்ல செயலுக்காக நியாயத்துக்காக சாக மாட்டங்க....நண்பரே..

    பதிலளிநீக்கு
  17. ‘காற்றுக்காக ஜன்னலைத் திறந்தேன்...

    காற்றே ஜன்னலைத் சாத்தியது...!’

    மூவேந்தே வாழ்க!

    த.ம.11

    பதிலளிநீக்கு
  18. அடிக்கடி இப்படியானவர்களினால் ரயில்ப்போக்குவரத்து தாமதமாகின்றது ஜீ!);;;;;;

    பதிலளிநீக்கு