வெள்ளி, ஜனவரி 20, 2017

கும்ப மரியாதை


Nita Ambani Abhishek Bachchan visit Kamakhya Temple in Guwahati
God bless you - Killergee

அந்த ஊருல ஒரு ரிக்ஷாக்காரர் பெயர் தர்மராஜன் நியாயமானவர், நேர்மையானவர், சவாரி வருபவர்களிடம் கூடுதலாக பணம் கேட்க மாட்டார், கொடுத்தாலும் வாங்க மாட்டார் ஒருமுறை ரிக்ஷாவில் தவற விட்ட பணம் ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு போய் தவற விட்டவர்கள் வீட்டில் பணத்தை தேடிக்கொண்டு போய் கொடுத்து வந்தவர் பொய் பேசமாட்டார் இறைபக்தி உள்ளவர் அவரைப் போலவே அவருடைய தர்மபத்தினியும் அடுத்த பெண்களைப் போல பொறணி பேசும் பழக்கம்கூட இல்லாதவர் வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் பூ கட்டி கடைகளுக்கு கொடுத்து விடுவார் அதையும் கணவரே கொண்டு போய் கொடுக்க வேண்டும் அவசியமில்லாமல் பிற ஆண்களிடம் பேசமாட்டார் பழக மாட்டார் தனது ஒரே பெண்ணையும் அவரைப் போலவே கௌரவமாக வளர்த்து எட்டாவது வரை படிக்க வைத்து கட்டிக் கொடுத்து விட்டார்கள் அந்த மகளும் கணவனுடனும் மகனுடனும் நல்ல விதமாக வாழ்கின்றார் இவர்களின் சரித்திரம் சிறுவயது முதலே முகுந்தனுக்கு தெரியும் வித்தியாசமானவன் அவனுக்கு வெகு நாட்களாக தர்மராஜனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது என்ன செய்யலாம் ? பணஉதவி செய்தாலும் வாங்க மாட்டார்.

ஊரில் பிரசித்தி பெற்ற தேவையறிந்த தேவதையம்மன் கோயில் இருக்கின்றது அதன் பூசாரி முகுந்தனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவரிடம் பணம் தருகிறேன் எனக்கு வேண்டியவரை அழைத்து வருகிறேன் கோயிலில் செய்யும் கும்ப மரியாதை செய்ய வேண்டும் என்றான் 2000 ரூபாய் பேசி 500 ரூபாய் அடிவான்ஸும் கொடுத்து விட்டான் வழக்கம்போல அம்மனுக்கு ஊஞ்சல்கட்டி திருவிழா வந்தது அந்த விழாவின் மண்டகப்படியன்று செய்யலாம் என்று பூசாரி சொல்ல அவனும் சம்மதித்தான். திருவிழா தொடங்கியது அவன் தர்மராஜன் அண்ணிடம் மண்டகப்படியன்று என்னுடன் வரவேண்டுமென்று ஏற்கனவே சொல்லி இருந்தான் அதேபோல சரியான நேரத்திற்கு கோயிலுக்கு போனார்கள் பூசாரி அவனை பார்த்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார் நீ சொன்ன ஆள் எங்கே ? இதோ தர்மராஜன் அண்ணனைக் காண்பித்தான் அதெல்லாம் முடியாது ஏன் ? இவன் ரிக்ஷாக்காரன் அதனாலென்ன ? எல்லோரும் மனுசன்தானே அதிலும் இவர் நல்லமனுசன் இது எல்லோருக்கும் தெரியுமே... இவருக்கு செய்தால் என்ன ? சில செல்வம் கொழித்த பெரிய மனிதர்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றார்கள் அவன் சட்டென்று கீழே இருக்கும் புகைப்படத்தை காட்டி இவனுக்கெல்லாம் செய்யும் போது இவருக்கு செய்தால் என்ன ? அப்படினு கேட்டுப் பார்த்தான் யாரும் மசியவில்லை அப்புறமா ஒரேயொரு சின்னோண்டு கேள்விதாங்க கேட்டான் அதுக்கு எங்க தலைவனையும், தலைவியையும் எப்படிடா சொல்லுவே அப்படின்னு100 பேர் திரண்டுக்கிட்டு அவனை அடிக்க வந்துட்டாங்கே அவங்கிட்ட ஒரேயொரு கோடரி இருந்துச்சு அதைவச்சு அப்படி இப்படின்னு சமாளிச்சுட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடியாந்துட்டான் மறுநாள் விசாரித்தால் ? பாவம் தர்மராஜன் அண்ணனுக்கு தர்மஅடி கொடுத்தாங்களாம் அந்தக் கேள்வி இதுதாங்க...

முடிசவித்த சிறுக்கிய கட்டிய மொள்ளமாறிப்பயலுக்கு மரியாதை கொடுக்கும் பொழுது உத்தமியை கட்டின தர்மராஜன் அண்ணனுக்கு கொடுத்தால் என்ன ? அப்படின்னு கேட்ருக்கான் அப்பாவி முகுந்தன் அதற்குத்தான் பாவம் அவனை அடிக்க விரட்டி இருக்காங்கே.... 100 பேரும்...

சிவாதாமஸ்அலி-
கேள்வி நியாயமாகத்தான் ஆனால் ? அம்மணத்தான் ஊருல கோவணம் கட்டியவனை விரட்டித்தான் அடிப்பாங்கே...
Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்.
சாம்பசிவம்-
சிரங்கு சொறியிற விரலும், மீசை முறுக்குற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வருமாம்.

திங்கள், ஜனவரி 16, 2017

நிற்கட்டுமா ? போகட்டுமா ?


நான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக்கொண்டிருப்பவன், விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் குழைத்து என்ஞானம் பேசமுயல்பவன். நான் மதவாதி அல்ல ! மிதவாதி.

புராணக்கதைகளில் சொல்லப்படும் தசரதனுக்கு 60000 மனைவிகள் என்று சொல்கிறார்களே இது உண்மையா ? பொய்யாகத்தான் இருக்க முடியும் என்பதே எமது கருத்து காரணம் சொல்லும்போதே... புராணக் ’’கதை’’ என்று சொல்கிறார்களே... மேலும் இத்தனை மனைவிகளோடும் இவர் நியாயமான கணவனாக வாழ்ந்திருக்க முடியுமா ? என்பதும் எமக்கு ஐயமாகத்தான் இருக்கிறது காரணம் எப்பூடி ? நேரமில்லையே... சரி விசயத்துக்கு வருவோம்... அப்படீனா, மற்றவைகளும் புராணக்கதைகள்தானே நம்ம அண்ணன் ராமர் இருக்காரே... அவரு அயோத்தியில் பிறந்ததாக சொல்லப்படுவதும் கதைதானே, அவர் பிறந்த இடம் அயோத்தி என்றே வைத்துக் கொள்ல்வோம் அப்படியானால் தம்பி லட்சுமணன் பிறந்த இடம் எது ? அது ஏன் ? பிரச்சனைக்கு வரவில்லை (உள்ள பிரச்சனை போதாதுனு  இவன் வேறயா ?) அப்புறம் கர்ணன் யாரு ? எங்கே ? பிறந்தார் இப்படி போய்க்கொண்டே இருக்கும் சரி ராமண்ணா அங்கே பிறந்ததாகவே இருக்கட்டும் ராமர் கோயிலை கட்டுவதாலேயோ, பாபர் மசூதியை இடித்ததாலேயோ, மக்கள் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதா ? பிரச்சனைகள் புதிதாக முளைத்ததே மிச்சம் எத்தனை உயிர்கள் இருபுறமும் இழக்கடிக்கப்பட்டன ? யாராவது நினைத்து பார்க்கின்றார்களா ? நினைத்து பார்த்தாலும் திரும்பாது என்பது நாம் அறிந்ததே.. எல்லாம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு இதனால் லாபம் யாருக்கு ? நஷ்டம் யாருக்கு ? ஒருக்காலமும் கோயில் கட்டப்போவதுமில்லை பிரச்சினை ஓயப்போவதும் இல்லை தமிழ் நாடு முழுவதும் ட்ரக்களில் செங்கல்கள் வாங்கி கொண்டு போனார்களே.... அவையெல்லாம் எங்கே ? யாராவது நினைத்து பார்த்திருக்கின்றோமா ? எல்லாம் மாட மாளிகைகள் கட்டி விட்டனர் பகுதி விற்றனர் மீதி பார்வைக்காக பார்வையற்ற மக்களுக்கு...

இப்ப விசயம் என்னவென்றால் ? அதாவது சமீபகாலமாக எமக்கும் சாமியார்களின் வாழ்க்கைமீது ஒரு விதமான மோகம் உண்டாகி விட்டது இதன் காரணமாக நாமலும் மக்களின் குறிக்கோள் அறிந்து குறி சொல்லி வாழ்ந்தாலென்ன ? எனத்தோன்றுகிறது காரணம் நானும் சொல்வதெல்லாம் நடக்கிறதே.... ஆம் அடுத்த வீட்டு அழகர்சாமியின் மகன் இன்னும் 6 மாதத்தில் நடப்பான் என்றேன் அதேபோல் அவன் மகனும் நான்கு வயதானதும் நடந்து விட்டான், அதேபோல் கல்யாண சுந்தரத்திற்க்கு எப்படியும் கல்யாணம் நடக்கும் என்றேன் சரியாக 42 வது வயதில் கல்யாணம் நடந்து விட்டதே.... அதேபோல் நடிகை நளினாவுக்கு இன்னும் மூன்று மாதத்தில் விவாகரத்து நடக்கும் என்றேன் இரண்டே மாதத்தில் நடந்து விட்டதே... ஆகவே நாமலும் சாமியார் ஆனாலென்ன ? ஒருவேளை அப்படியே நித்தியானந்தா சுவாமிகள் அல்லது பிரேமானந்தா சுவாமிகள் மாதிரி மக்களுக்கு சேவை செய்து சமாதி ஆகிவிட்டேன் என்று வைத்துக்கொல்வோம் அடுத்த 500 ஆண்டுகளுக்கு பிறகு எமது பாடசாலை சான்றிதழ்களையும், எமது கடவட்டையையும் வைத்து சுவாமிஜி கில்ஜியானந்தா இங்குதான் பிறந்தார் என்று கீழக்கரை அரசாங்க மருத்துவமனையை இடிக்கப்போவார்களே.. இன்னும் 500 ஆண்டுகளுக்குப்பிறகு மக்கள் என்னால் படப்போகும் அவஸ்தையை நினைத்துப்பார்க்கிறேன் அந்த வேதனையின் விளைவே இந்தப்பதிவு ஆகவே இது தேவையா ?

இனிய நண்பர்களே... நான் இப்படியே இருக்கட்டுமா ? அல்லது அப்படியே போகட்டுமா ? என்பதை தாங்களே சொல்லுங்கள்.
நிற்கட்டுமா ?  போகட்டுமா ?

வெள்ளி, ஜனவரி 13, 2017

கற்பூரவாசனை

இந்தக்கை ஒரு பாலஸ்தீனிய நண்பனுடையது.

கற்பூரவாசனையை பூஜையறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் அறிவாளி கழிவறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் முட்டாள் அதைப்போல நமது கருத்துக்களை அறிவாளிகளோடு பகிர்ந்து கொள்ளவேண்டும், முட்டாள்களோடு பகிர்ந்து கொள்பவன் கழிவறையில் கற்பூரத்தை காண்பித்தவனுக்கு ஒப்பானவன். நானும் சிலநேரங்களில் கழிவறையில் காண்பித்து மனம் நொந்து இருக்கின்றேன் அந்த நேரங்களில் சகோதரி கஸ்தூரி கணவனின் தத்துவம் ஒன்று என்ஞாபகத்திற்கு வரும்.

முட்டாள்களோடு வாதம் செய்யாதே செய்தால்
யார் முட்டாள் என்பது தெரியாமல் போய்விடும்.
- மஹாத்மா காந்தி

செவ்வாய், ஜனவரி 10, 2017

தலைப்புச் சிரிப்புகள்


லைவர் இன்றைய அறிக்கையில் விட்ட தகவல் பிரச்சினையாகி விட்டதா ?
ஆமா, கொன்றே செய் அதே நன்றே செய் என்று சொல்லி விட்டார்.
*------------------------------ 01
லைவர் கூடவே எல்லா இடத்துக்கும் போறாங்களே புதுசா ஒரு பெண் அவங்க யாரு ?
தலைவருக்கு அரசியல் வாரிசு இல்லாததால இனிமே இவங்கதான் அடுத்த தலைவியாம்.
*------------------------------ 02
லைவர் திருவள்ளுவர் பிரியரா இருக்கலாம் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவருனு... சொல்லிட்டுப் போறாரே... செக்ரட்டரி ஏன் ?
அரசு கோப்புகளில் எழுத்தாணியாலதான் கையெழுத்து இடுவேன்னு கையெழுத்துப் போட்டே கிழிச்சுட்டாராம்.
*------------------------------ 03
லைவர் நான் ஆட்சிக்கு வந்தால் பிச்சைக்காரர்களை ஒழிப்பேன்னு சொல்றாரே... எப்படி ?
எல்லோரையும் கூண்டோட ஏற்றி பாக்கிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்ருவாராம்.
*------------------------------ 04
லைவர் கோஷம் போட்ட தொண்டர்கள் எல்லோரையும் திட்டினாரே ஏன் ?
அவங்க எல்லோருமே தலைவர் வால்க ! அப்படினு கத்தினாங்களாம்.
*------------------------------ 05
லைவர் திடீர்னு... எதுக்கு ? காக்காவை எல்லாம் பிடிப்பதற்கு குறவர்களின் உதவி தேவைனு அறிக்கை விடுகிறார் ?
நேற்று அவரு கட்சிக்கொடி ஏற்றும் பொழுது அவரு வாயில காக்கா கக்கா போயிடுச்சாம் அதனாலதான் இந்த அவரசகால உதவி.
*------------------------------ 06
லைவர் எதுக்கு ? எப்பொழுதுமே தனியாக இருக்கும் பொழுது தலையிலேயே அடிச்சுக்கிறாரு... ?
அப்பத்தான் அவருக்கு அக்கப்போரான சிந்தனைகளை ஒழிந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருமாம்.
*------------------------------ 07
லைவர் ஸ்விட்சர்லாந்து போய் பேங்க் அக்கவுண்ட் தொடங்க முடியாமல் திரும்பி வந்துட்டாரா ?
ஆமா கையெழுத்து போட தெரியாமல் ஃபாமில் கைநாட்டு வச்சுருக்கார் திருப்பி அனுப்பிட்டாங்க...
*------------------------------ 08
லைவர் எதுக்கு ? இப்பவும் கட்சியின் முதல் போஸ்டரை அவரே ஒட்டி துவங்கி வைக்கிறாரு ?
அவரு எப்பவுமே பழசை மறக்க கூடாது, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கனும்’’னு சொல்லுறவராச்சே....
*------------------------------ 09
லைவர் உகாண்டா நாட்டுக்கு புறப்பட்டவர் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்துட்டாரே... ஏன் ?
சன்னலோர ஷீட்டுல யாரு ? உட்காருறதுனு... தலைவரோட முதல் தாரத்துக்கும், ரெண்டாம் தாரத்துக்கும் குடுமிபிடி சண்டை வந்துருச்சாம்.
*------------------------------ 10

சனி, ஜனவரி 07, 2017

குற்றம் குற்றமே...


அந்த இடம் மேலோகம் என்று பூலோகத்தில் சொல்வோமே.. அதைப்போல் உணரப்பட்டேன், நிறைய மனிதர்கள் கூட்டம் நின்றிருந்தது இருபாலரும் மட்டுமல்ல குழந்தைகள் உள்பட ஆனால் ? எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதை சொல்லத் தெரியவில்லை என்பதைவிட முதலில் நானே உணரவில்லை என்பதே மிகச்சரியாகும் நாம் எதில் நிற்கிறோம் என்பதும் தெரியவில்லை சுற்றிலும் சாம்புராணி புகை வந்து கொண்டு இருந்தது கூடவே நல்லதொரு நறுமணம். சொல்லப்போனால் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராண திரைப்படங்களில் பார்த்திருப்போமே அதைப் போன்றே Setting System எனது மனம் வழக்கம் போலவே குழம்பினாலும், இது ஏதோ நம்மைப் படைத்தவனிடம் வந்து நிற்கிறோம் நாம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளோம் என்பது மட்டும் புரிய ஆரம்பித்தது இருப்பினும் மனதின் ஓரத்தில் சிறிய பயம் எட்டிப் பார்த்தது ஆனால் என்னுள் வாழும் ஒருவன் (அவன்தாங்கோ... மனசாட்சி) தைரியம் கொடுத்தான் ஏன் பயப்படணும் ? நாமதான் அரசியல்வாதி இல்லையே, நாமதான் சாமியார் இல்லையே, நாமதா... திடீரென சிந்தனை நிறுத்தப்பட்டது காரணம் கில்லர்ஜி, கில்லர்ஜி, கில்லர்ஜி 3 முறை ஏதோ நீதி மன்றத்தில் கூப்பிடுவதுபோல் குரல் மட்டும் கேட்க சட்டென அந்த மேடையில் நிறுத்தப்பட்டேன் இந்த இடத்தில் நிறுத்தியது யார் ? மனம் குழம்ப.... அசிரீரி குரல் கேட்டது.

யாம் உம்மைப் படைத்தவன் விசாரணைக்குப் பிறகு உனக்கு சொர்க்கமா ? நரகமா ? என்று தீர்மானிக்கப்படும் எமது கேள்விகளுக்கு பதில் கொடு.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டேன்....
முதல்ல நீங்க வெளியே வந்து சொல்லுங்க ?
சுற்றி நின்றவர்கள் திகைத்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள், சிறிது நேரம் அமைதி ஒருவேளை ‘’அந்தக்குரல்’’ பார்ட்டியும் திகைத்திருக்க வேண்டும் மீண்டும் குரல்.....
இங்கு வந்தவர்களில் முதன் முறையாக எம்மிடம் கேள்வி கேட்டது நீர் மட்டுமே....
’’ஹா ஹ் ஹா ஹா ஹ் ஹா’’
ஏன்... சிரிக்கின்றாய் ?
இப்பத்தான் தெரியுது இங்கே வந்தவங்க எல்லோருமே தப்பு செய்துருக்காங்க, அதனாலதான் பயந்து போய் கேள்வி கேட்கவில்லை.
உமது தவறுகளும் இப்பொழுது எடுத்து வைக்கப்படும்.
நான் என்ன தவறு செய்தேன் ? நான் அரசியல்வாதியும் கிடையாது, ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டும் கிடையாது யாருடைய பணத்தையும் சுருட்டியதில்லை, சினிமாவில் ஒரு மாதம் நடித்து வேலை செய்து விட்டு கோடிக்கணக்கில் அநியாயமாக சம்பளம் வாங்கினேனா ? இல்லை கிரிக்கெட் விளையாட்டில் கிடைத்த பெயரை வைத்து விளம்பரப் படங்களில் 5 நொடிக்குள் வந்து போகும் காட்சியில் நடித்ததற்காக பல லட்சங்கள் சம்பளம் வாங்கினேனா ?
இதோ இந்தக் காட்சிகளுக்கு பதில் சொல்.

திடீரென அந்தரத்தில் LED Screen போல் ஒன்று தெரிய அதன் மேல் பாகத்தில் SAMSUNG என்று எழுதியிருக்க அதில் திரைப்படம் போலவே ஓடியது.
நான் தி கிரேட் தேவகோட்டை சிவரக்கோட்டையார் வீதியில் கந்தன் கருணை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடந்து வருவாரே அதைப்போல் அழகாக நடந்து வருகிறேன் எனது கால்கள் மட்டும் ஸ்ரீராம் அவர்களின் திறமையால் (வலைப்பதிவர் ஸ்ரீராம் அல்ல, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம்) யானைக்கால்கள் போல பெரிதாக காண்பிக்கப்படுகிறது எறும்பு பார்த்திருப்பீங்க அது பழைய காலங்கள்ல கிராமங்களில் கம்மங்கஞ்சியை உருண்டையாக உருட்டிப் போடுவார்களே அந்த அளவில் அதுவும் ஊர்ந்து போகிறது நான் அதை கவனிக்காமல் மிதிக்க அது நசுங்கியதுகூட தெரியாமல் நான் M.K.T in வதனமே சந்த்ர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ வதனமே...... சந்த்ர பிம்பமோ என்று சிவகவி பாடலை பாடிக்கொண்டு வருகிறேன் வீடு வருவதற்க்குள் 17 எறும்புகளும், வீதியை கடந்து போன 4 புழுக்களும், நசுங்கியது வழியில் ஓரமாய் ’’இருந்து’’ கொண்டிருந்த பையனைக் கிளப்பிவிட்டு லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பன்றியை நான் ஒரு மிதி மிதித்து விட்டு வருகிறேன், இடையில் மாட்டு வண்டிவர ஒதுங்கிய நான் சாக்கடையோரம் முளைத்திருந்த புல்களை மிதிக்கும்போது அவைகள் துவண்டு விழுந்து மடிந்து விடுகிறது, இது போதாதென்று நிழலுக்காக சும்மா படுத்துக் கிடந்த நாயை கல்லெடுத்து எறிய நாய் WEEL என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு ஓடுகிறது... சட்டென Screen மறைய.... எனக்கு வியர்க்க ஆரம்பித்தது அசிரீரி குரல் கேட்டது.

பார்த்தாயா ?
என்னங்க இது, எறும்பு போறதையெல்லாம் எப்படி பார்க்க முடியும் ? என்னோட கண்ணுக்குத் தெரியாதே...
ஏன் தெரியாது ? நீ நடக்கும்போது காலணி போட்டு மிதித்து இருக்கின்றாய், எறும்பு, புழுக்களை வதைத்து விட்டு நீ வதனமோ என்று நக்கலடித்து பாடுகிறாய். சரி எதற்காக நாயை கல்லெடுத்து எறிந்தாய் ? எதற்காக பன்றியை மிதித்தாய் ? இன்னும் உனது மற்ற உயிர் வதை காட்சிகளும் இருக்கிறது, மூட்டைப்பூச்சி, கொசு, ஓணான், தவ....
ஐயா சாமி மன்னிச்சுடுங்க இனிமேல் ரோட்டுல நடக்ககூட மாட்டேன் தவழ்ந்து போறேன்.
இனி நீ பூமிக்கு போனால்தானே ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சீ வாயை மூடு என்ன ? சின்னப்புள்ளத்தனமா இருக்கு, இதுவரை உமது வாழ்நாளில் இரண்டு கோடியே, பதிமூன்று லட்சத்து, அறுபதாயிரத்து, முன்னூற்றி எண்பத்து நான்கு சிற்றெறும்புகளும், நான்கு கோ...
ஐயா சாமி உங்க கணக்கே வேண்டாம் சாமி எதைச் சொல்லப்போறீங்க, மூட்டைப்பூச்சியா இருக்கும், இல்லைனா கொசுவா இருக்கும், இனிமேல் கண்டிப்பாக டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள்கூட வாங்க மாட்டேன் சாமி.
யாம் பூமியை படைத்தது அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்க்கே அவைகளுக்காகவே பூமியை மேடு பள்ளமாக அமைத்தோம் மானிடர்கள் இயந்திரம் கொண்டு சமப்படுத்துகின்றீர்கள் ஆறு, குளம், அருவி, ஊரணி, கடல் என யாம் அமைத்திட நீங்கள் பூமாதேவியை துளையிட்டு ஆழ்கிணறு என்று வதைக்கின்றீர்கள்.
ஐயா சத்தியமா எனக்கும், இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க அது விஞ்ஞானிங்க படிச்சுப்புட்டு சும்மா இருந்து தொலையாம, எதையாவது கண்டு புடிச்சதுங்க.
யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே...
ஐயா இதுக்கு என்னதாங்க, முடிவு ?
உமக்கு மிகப்பெரிய தண்டனை இருக்கிறது.
இதுக்கே மிகப்பெரிய தண்டனையினா ? என்னோட பக்கத்து வீட்டுக்காரன் கரீம்பாய் கறிக்கடை வச்சுருக்கான் தினம் மூணு ஆட்டை கவுத்திப்போட்டு அறுக்கிறானே... அவன் கதியெல்லாம் ?
மற்றவர்களைப்பற்றி, குறை சொல்ல உமக்கு தகுதியும், உரிமையும் இல்லை.
ஐயா சாமி உங்க கால்ல வேணா விழுறேன் என்னை விட்டுறுங்க, எங்கிட்டாவது மனுஷன் அண்டாத காட்டுல போயி தண்ணியைக்குடிச்சு பொழைச்சுக்கிறேன்.
ஹூம் மனிதர்கள் அனைவரும் பூமியில் விதம் விதமாய் விழுந்து வணங்குகின்றீர்களே அதனால் எமக்கு பயன் என்ன ? மனிதனாக படைத்தேனே அதற்கு கைமாறாக மனிதநேய மனிதனாக வாழ்வில் ஒரு நாளாவது வாழ்ந்தீர்களா ?
ஐயா சாமி இனிமேல் எந்த முறையில வணங்கணும்னு சொல்லித்தாங்க சாமி அது படியே எல்லோருட்டையும் சொல்றேன்.
எத்தனை தூதுவர்களை பூமிக்கு அனுப்பினோம், யாராவது செவி சாய்த்தீர்களா ?
சாமி எனக்கிட்டே சொல்லுங்க சாமி என்னோட www.killergee.blogspot.com websiteடில், போட்டு உலகம் பூராம் உள்ள மக்கள் கண்டிப்பாக படிச்சு தமிழ் மணம் ஓட்டும் போடணும் இல்லைனா விரலில் நகச்சுத்தி வரும்னு நீங்க சொன்னதா சொல்றேன்.
ஹூம் மீண்டும் என்னிடமே விஞ்ஞானமா ? அதுவும் நான் தமிழ் மண ஓட்டு போட சொன்னதாக பொய்யுரை யாரங்கே... இந்த ஜடத்தை தூக்கி அந்தக் குழியில் போடுங்கள்.
எந்திரன் சினிமாவில் நடித்த ரோபோட்கள் மாதிரி இரண்டு நான் கதறியதை காதில் வாங்காமல் மிகவும் சுலபமாக என்னை தூக்கி கொண்டு போய் அதன் முனையில் நிறுத்தியது கீழே குனிந்து பார்த்தவன்.....
‘’அய்யோ ஆத்தா’’ என்று அலற...
எனக்கு பக்கத்தில் படுத்துக் கிடந்த மகன் தமிழ்வாணனும், மகள் ரூபலாவும் திடுக்கிட்டு மிரண்டு போய் எழுந்து என்னாச்சு ? என்றார்கள். நேரம் 03.48 am.
video
காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...