வெள்ளி, மார்ச் 24, 2017

காலணி


காலமெல்லாம் உன் காலடியில் கிடந்தேனே...
காலம் ஒருநாள் மாறுமென நினைத்தேனே...
வீரநடை போடும்போது வீரியமாய் வந்தேனே...
வீட்டுக்கு வந்தவுடன் வாசலில் கிடந்தேனே...

காலமெல்லாம் உன் கால்கள் நடக்க...
காவல் காத்து வாயிலில் நான் கிடக்க...
எழுந்து உள்ளே போக என்மனம் தடுக்க...
எழ முடியாமலும் என்னுடல் படுக்க...

எம்மையும் மதிக்கும் ஜீவன்கள் இருக்கிறதோ...
ஷோகேஸ் கடைகளில் அலங்கரிக்கிறதோ... 
வாங்கியவர்களுக்கு, மட்டும் மனம் மறுக்கிறதோ...
எமது மனம் கொடுத்தவர்களை வாழ நினைக்கிறதோ...

அந்த ஜீவன்கள்தான் செருப்புக்கடை அதிபர்கள்
வாழ்க அவர்கள் வளர்க அவர்கள் தொண்டு
  
இப்படிக்கு
Bata Brothers  & Sons

செவ்வாய், மார்ச் 21, 2017

7 வதில் 7 ½


ஏண்டா அந்த வக்கீலு பேரு, ஏன் துண்டு துரைனு சொல்றாங்க ?
வேறொண்ணுமில்லே அவருக்கிட்ட கேஸை கொண்டு போனா போனவனை கடைசியிலே இடுப்புல துண்டு மட்டும்தான் மிச்சம் விடுவாராம், 
* * * * * * *01* * * * * * *
எதுக்கு... இங்கே போலி போலீஸ் ஸ்டேஷன்னு எழுதிபோட்டு இருக்காங்க ?
இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க யாரு வந்தாலும் அவன் மேல போலியா ஒரு கேஸ் எழுதுவாங்களாம், அதுனாலதான்
* * * * * * *02* * * * * * *
இந்த பல் டாக்டரை எல்லாரும் ஏன் கொரடு கொம்பையானு சொல்றாங்க ?
இவருட்ட யாரு, பல் வலிக்கு வந்தாலும் பல்லை புடுங்காம விடமாட்டாராம்.
* * * * * * *03* * * * * * *
இந்த கடைக்கு ஏன் மறந்து மருந்துகடைனு பேர் வச்சுருக்காங்க ?
இந்தக் கடையிலே ஒரு தடவை மருந்து வாங்குறவன் உடனே மறந்துடுவானாம்... ஏன்னா அவன்தான் செத்துடுவானே.
* * * * * * *04* * * * * * *
இந்த ஆபீஸரை ஏன் செக் செல்லமுத்துனு சொல்றாங்க ?
இவருக்கு லஞ்ச பணத்தை செக்கா கொடுத்தாதான் வேலை நடக்குமாம்.
* * * * * * *05* * * * * * *
இவனை ஏன் தீ தீனதயாளன்னு சொல்றாங்க ?
கடன் கொடுத்தவன், திருப்பி கேட்டால்.... வீட்டுக்கு தீ வச்சுடுவானாம்.
* * * * * * *06* * * * * * *
சரி உன்னை ஏன் எல்லோரும் படாபட் பட்டாபினு சொல்றாங்க ?
நான் பேசிக்கிட்டு இருக்கும்போதே, படார் படார்னு அறைஞ்சிடுவேனாம்.
* * * * * * *07* * * * * * *
சொல்லிக் கொண்டு, இருக்கும்போதே... படார் படார் என அறைந்து கொண்டிருக்க... கேட்டவன் தெறித்து ஓடிக்கொண்டிருந்தான்.... 

வெள்ளி, மார்ச் 17, 2017

கா.கா.தி.ஹைக்கூ


கார்பெண்டரின்... ஹைக்கூ.
அன்று உன் விழியால் குத்தி
வலியால் துடிக்க விட்டாய் என்னை,
இன்று என் உலியால் குத்தி
பழி வாங்கினேன் உன்னை
ஆகவே நீ போனாய் மேலூருக்கு...
நான் போனேன் வேலூருக்கு...

காதலனின்... ஹைக்கூ.
கண்ணே என்றேன் கனிவாய் உன்னை,
களங்கப்படுத்தி விட்டான் என்றாய் என்னை,
கலக்கத்தை மனதில் உண்டாக்கினாய் நீ
களங்கத்தை உறுதி படுத்தினேன் நான்
களங்கத்தால் நீ போனாய், திரும்பாக்கோட்டை
கைதாகி நான் போனேன், பாளையங்கோட்டை.

திருடரின்... ஹைக்கூ.
பறிக்க வந்தேன் செயினை
மறிக்க வந்தாள் செல்லாயி
பிடித்து விட்டேன் கைப்பையை
கடித்து விட்டாள் என்கையை
ஜெயில் எனக்கு, ஜெயின் போலீசுக்கு
ஆனால் உனக்கு ? ? ? 
திருந்துவீர் திருமதிகளே...
உதவுவீர் திரு. திருடர்களுக்கு.

சாம்பசிவம்
புடிபடவும் திரு திருனு முழிச்சுருப்பானே... திருடன் திருநாவுக்கரசு மன்னிக்கவும் திரு. திருடர். திருநாவுக்கரசர்ரர்ர்ர்ர்ர்ர்ர

செவ்வாய், மார்ச் 14, 2017

கோமளவள்ளி


ஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா ?
உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு...
வாய் தவறி வந்துடுச்சு அதுக்கேன் கோவிக்கிறே.... ?
ஒரு தடவை தவறுனாச்சரி எப்பவுமேவா ?
இதெல்லாம் ஒரு பிரச்சனையா. ஒங்க அப்பா நல்லா பேராத்தான் வச்சாயென்ன ?
இப்ப அதான் குறைச்சலாப் போச்சா ?
அப்ப யேண்டி... குரைக்கிறே ?
இஞ்சே பாருங்க இப்படி ரெட்டை அர்த்தத்துலே பேசுனீங்க.... ?  
என்னடி... செய்வே ?
எங்க ஊருக்குப் போயிட்டு வந்துடுவேன்.
யேன்.. ஒங்க ஊருலருந்து மச்சானுக்கு என்ன கொண்டு வரப்போறே.. ?
கொண்டு வரமாட்டேன் அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்.
வச்சுட்டு வந்துடுவியா ? மச்சானுக்காக ஊருக்குப் போறவ... அங்கே ஏன்... வச்சுட்டு வர்றே... ?
இதெல்லாம் கொண்டு வரமுடியாது... எங்க ஊரு ஆத்துலதான் வச்சுட்டு வரமுடியும்.
என்னடி ஒண்ணும் புரியலையே.... ஆத்துல என்ன... வைக்கப்போறே... ?
செய்வினைதான்.
? ? ?
என்ன... பேச்சைக் காணோம். ?
யேண்டி... இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமாடி ?
உங்களை வாயைக்கட்டி வச்சாத்தான் சரியா வரும் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை சாப்பிட மட்டும் வாயைத் திறங்க போதும்.
அடியே இனிமேல் அப்படிக் கூப்பிட மாட்டேன் எனக்கு வாயில அதான் வருது வேற ஏதாவது பேரு நீயே சொல்லேன். ?
ஏன்... வள்ளினு கூப்பிட்டா என்ன ?
சரி அதுக்கும் வள்’’ளுனு விழமாட்டியே.... ?
சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்த ஊர் புத்திதானே வருது.
அடியே.... ராஜபாளையம் தமிழ் நாடு முழுக்க பேமஸு தெரிஞ்சுக்க.
இனிமே இப்படிப்பேசினீங்க... உடனே பஸ் ஏறிடுவேன் ஞாபகம் வச்சுக்கங்க...
ஹும் அன்னைக்கே தரகர்கிட்டே சொன்னேன் எமனேஸ்வரத்துல பொண்ணு வேண்டாம்னு கேட்டாரா.... அந்த ஆளு... எதுக்கெடுத்தாலும் ஊர்ப்புத்தியை காட்டிடுறா.... அந்த தரகர் மட்டும் மாட்டுனான்....
திடீரென வீட்டுக்குள் நுழைந்த 6 வயதில் ஆணும், 4 ½ வயதில் பெண்ணுமான 2 வாண்டுகள் வந்து தாத்தா.... அம்மாச்சி... என்று பெரியசாமி ஐயாவையும், கோமளவள்ளி அம்மாளையும் கட்டிப்பிடிக்க... அடடே.... வாங்க வாங்க செல்லங்களா... தங்கம் வாங்க, தங்கம் வாங்க மாப்பிள்ளை, வாம்மா, வாங்க மாப்பிள்ளை... நல்லாயிருக்கியாம்மா..... ஏங்க சேர் எடுத்துப்போடுங்க... வாங்க உட்காருங்க... கோமண..... அது... அது... வந்து சீக்கிரம் தூக்குச்சட்டியை எடுத்தா கடைக்குப் போயிட்டு வர்றேன் என்ற பெரியசாமி ஐயாவை கோமளவள்ளி அம்மாள் முறைத்து விட்டு தூக்குச்சட்டியை எடுத்துக் கொடுத்ததை மதுரையில் இருந்து வீட்டுக்கு விருந்தாளி வந்த இளைய மகளும், மருமகனும், பேரனும், பேத்தியும் கவனிக்கவில்லை ஐயா தனது T.V.S.50யை எடுத்துக்கொண்டு பேரன் முகேஷை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு விரைந்தார் கறிக்கடையை நோக்கி... சரி அவங்க சந்தோஷமாக இருக்கட்டும் நீங்க கருத்துரையை போட்டுப் போங்க... நான் ய்யேன் வேலையைப் பார்க்கிறேன் அடுத்த பதிவைப் போடணும்...

சாம்பசிவம்-
 ?நாற்பது வருஷமா கூப்பிட்டு வந்த பேரை மாற்ற முடியுமா
Chivas Regal Sivasambo- 
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தரகரு இன்னும் உசுரோட இருக்காரா ?
சிவாதாமஸ்அலி-
பெருசுக.. இந்த வயசு வரைக்கும் சந்தோஷமாக விளையாடுதுகளே இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா ? 

நகைச்சுவை பதிவு எழுத வைத்த நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன் என்னால் பிறர் சிரித்து மகிழட்டும் என் சோகம் என்னோடுதான். 

சனி, மார்ச் 11, 2017

வறுமையின் நிறம் இருட்டே...

வறுமையின் நிம் இருட்டே...

இறைவா என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு முதற்கண் நன்றி.
நீ படைத்த இவர்களை என்னை காண வைத்தமைக்கும் நன்றி.
கண்டு இவர்களுக்கு என்னை உதவ வைத்தமைக்கும் நன்றி.
இவர்களுக்கு உதவ என்னை செல்வந்தனாக்கியதற்கும் நன்றி.
என் சந்ததிகளை இந்நிலைக்கு ஆகவிடாமல் என்னை தடுக்க வைத்தமைக்கும் நன்றி.
பின்குறிப்பு ஆக்கமாட்டாய் என்பதற்கும் நன்றி.

இருப்பினும் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயடா... சண்டாளா...

என் நெஞ்சிருக்கும்வரை என் நினைவில் நிற்க வேண்டியவை.

நட்பூக்களே கீழ்காணும் இவையனைத்தும் முதலில் எனக்கே பிறகே தாங்களுக்கு.

ஸ்ரீ சாரதா சக்தி பீடம் சென்னை.

சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் சென்னை.
தி யுனைடெட் பேஸிக்கிலி ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் கோவை.

செவ்வாய், மார்ச் 07, 2017

கண்மணிக்கு கண்ணீரஞ்சலி


இன்னும் நம்ப முடிய வில்லையடா
உனக்கு மரணம் வந்து விட்டதடா
எனக்கு கனவு போன்றே உள்ளதடா
இதற்குத்தான் நான் இந்தியா வந்தேனாடா
உனது வாழ்வின் கடைசி பத்து தினங்களடா
அவசியமின்றி எனது மடியில் படுத்தாயடா
இதன் அர்த்தம் அன்று புரிய வில்லையடா
இன்று நினைத்து அழ வைத்து விட்டாயடா
என்னை விட்டுப் போகாதண்ணே என்றாயடா
என்னை விட்டுப் போய் விட்டாயடா
எனது கையைப் பிடித்திருந்த காட்சியடா
இன்னும் கண்ணுக்குள்ளே நிற்குதடா
எனது கைச்சூடு தணிய வில்லையடா
உயிர்களுக்கு இங்கு மதிப்பு இல்லையடா
இவர்களால் மூன்றறை மணி நேரத்திலடா
இவ்வளவு பணம் பறிக்க முடியுதடா
உனது உயிர் பறிக்க பணமாடா
மருத்துவர்கள் இறைவனுக்கு சமமடா
என்று சொன்னவன் மடையனடா
உன்னை சராசரி பெண்ணைப் போன்றடா
சிகிச்சை அளித்து விட்டார்களடா
நீ குழந்தை என்று அவர்கள் நம்ப வில்லையடா
பதினாறு வருடங்களுக்கு முன்பேடா
என் வாழ்க்கையை வகுத்தது உன்னால் தானடா
இன்று பாதையை மாற்றி விட்டாயடா
நீ மட்டும் பயணம் கொண்டாயடா
எனக்கு வழி தெரிய வில்லையடா
எல்லாக் குழந்தைகளின் திருமணத்திலடா
நீ இருந்து சந்தோஷமாய் வாழ்த்தினாயடா
என் குழந்தைகளை மறந்து விட்டாயடா
நான் உனக்கு தவறு செய்து விட்டேனாடா
நீ ஒரு வருடமாவது இருந்திருக்கலாமடா
என் மகளின் திருமணம் பார்த்திருப்பாயடா
நம் இருவருக்கும் மறுபிறவி இருக்குமடா
அதில் நான் உனக்கு மகனாய் பிறப்பேனடா
அல்லது நீ எனக்கு மகளாய் பிறப்பாயடா
அன்று சராசரி பெண்ணாய் வேண்டாமடா
இதே கள்ளம் கபடமற்ற குழந்தை போன்றேடா
நீ மீண்டும் பிறந்தால் மட்டும் போதுமடா
அதில் நான் இதே அண்ணன் என்ற விபரமடா
நீ அதே வனிதா இது அறியப்படல் வேண்டுமடா
இப்பொழுதே இறைவனிடம் சொல்லி வையடா
எனக்கு சில கடமைகள் பாக்கி உள்ளதடா
முடித்து விட்டு நான் உன்னை காண வருவேனடா
அதுவரை அப்பாவின் கையைப் பிடித்து விளையாடடா

இறுதிவரை மறக்காமல் நடைபிணமாய் வாழும் உன் அன்பு அண்ணன்


தில்லை அகத்தாரின் விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே ! இந்த பதிவில் வந்து எனது அன்புத்தங்கை க. வனிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைத்து உள்ளங்களுக்கும், மின்னஞ்சல் வழியாக எனக்கு ஆறுதல் அளித்த உள்ளங்களுக்கும் மற்றும் செல்பேசி வழியாக ஆறுதல் தந்த உள்ளங்களுக்கும் பதிவிட்டு என்னை அடிக்கடி அழைத்து ஆறுதல் தந்த சகோ திருமதி. கீதா மற்றும் பதிவுலகிற்கு தகவல் கொடுத்த அன்பு ஜி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது விழிகள் நிறைந்த நன்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...