தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 21, 2018

A to Z

This is Writing Place in Germany–Stuttgart, Biergarten Park 04:30 pm 2012 Oct 16

முதலில் முன்னுரை
கீழ்காணும் ஆங்கிலம் நிச்சயமாக தவறாக இருக்கலாம் ? சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் என் உடம்புக்கு ஒத்துவராது நான் தாமரை இலையைப் போல் எவ்வளவுதான் விரிந்து கொடுத்தாலும் ஆங்கிலம், தண்ணீரைப் போல் என்னுடன் ஒட்டுவதில்லை. ஏதோமுன் ஜென்மப்பகை போல, தமிழில்தானே எழுதுகிறோம் ஒரு மாற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதுவோமே... என நினைத்து எழுதினேன் வார்த்தைகள் ஒழுக்கமான ஆங்கிலத்தில் இல்லை என்பது எனக்கும் தெரியும் But ஆங்கில எழுத்தான A, B, C, D யை வரிசையாக அமைக்க ஆசைப்பட்டேன் அதன் விளைவே இது தவறுகளுக்கு எனது முதற்கண் SORRY & THANKS for Adjustment.

Advance is not yet sanctioned.

Bad, very bad.  I am seriously

Contemplating on quitting my job, Mr. Sambasivam told

Dalen, the accountant.

Emergency? Or any crisis?

First sanction my advance.

Gaelle’s father, Mr.Zeig is in

Hospital. Please contact me after some time.

I will detail you all the matter.

Jabriga …where is she now?

Kaiser replied, she is on

Leave, Sir.

Manager is here right?

No. Not here. He is in the next room.

One minute, I will comeback. Finish all the

Pending works 

Quickly and then contact me.

Relegate all your

Social works.

Then get your money.

Urgent works are waiting, Mr. Sambasivam,

Valdemar told him.

Wait Sir please…

X-rays and scan reports have come. Any problem?

Yes, not positive.

Zeig  is no more. Got the message just now.


இதில் இடம் பெற்ற திரு சாம்பசிவத்தைத் தவிர Mr. Dalen,  Miss. Gaelle, Miss. Jabriga, Mr. Kaiser, Mr. Valdemar and Mr. Zelig அனைவரும் ஜெர்மனி நாட்டவர்கள்.


தமிழாக்கம்.

முன் பணத்திற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. பாதகம் மிகவும் பாதகம். நான் ராஜினாமா செய்வதைப் பற்றி தீவிரமாக யோசிக்கின்றேன் என்று கணக்கர் டேலியனிடம் திரு சாம்பசிவம் சொன்னார்.

அவசரத் தேவையா ? ஏதாவது நெருக்கடியா ?

முதலில் முன் பணத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்.

கேய்ல்லியின் அப்பா, திரு ஜேய்க் மருத்துவமனையில் இருக்கிறார். தயவாய் சற்று நேரம் கழித்துத் தொடர்பு கொள்ளவும். நான் உங்களுக்கு எல்லா விஷயத்தையும் விளக்கமாகச் சொல்கிறேன்

கப்ரிகா…. இப்போது அவர்(ள்) எங்கே இருக்கிறார்(ள்) ?

அவர்(ள்) விடுமுறையில் இருக்கிறார்(ள்) என்று கேய்சர் சொன்னார்.

மேலாளர் இங்குதானே இருக்கிறார் இல்லையா ?

இல்லை. அவர் இங்கு இல்லை. அடுத்த அறையில் இருக்கிறார்

ஒரு நிமிடம், நான் மீண்டும் வருவேன். நிலுவையில் அல்லது முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு, அதன்பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சமூகசேவைகள் எல்லாவற்றையும் புறக்கணியுங்கள். அதன் பின் உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும். திரு சாம்பசிவம், அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் காத்திருக்கின்றன.

தயவாய் காத்திருங்கள் ஐயா என்று வால்டேமார் அவனிடம் சொன்னார்.

எக்ஸ்ரே, ஸ்கான் முடிவுகள் வந்து விட்டன. ஏதேனும் பிரச்சனையா ?

ஆம்! எதுவும் நேர்மறையாக இல்லை.

ஜெய்க் இறந்து விட்டார். இப்போதுதான் செய்தி வந்தது.


மரணம், சில நேரங்களில்...
நெருங்குபவனை விலக்கி விடும்,
விலகுபவனை நெருங்கித் தொடும்.

இதில் திருத்தம் செய்து கொடுத்த வில்லங்கத்தாருக்கு நன்றி.

காணொளி

46 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா சூப்பர் கில்லர்ஜி... பொருத்தமான நல்ல வீடியோ.. எனக்கும் புல்லரிக்குது வீடியோப் பார்த்து...

    இங்கேயும் சிறி சிவசம்போ அங்கிளுக்கு இடமில்லைப்போலும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காணொளி கண்டதில் மகிழ்ச்சி உங்கள் அங்கிள் வேறு ஆங்கிலில் பேசி விடுவாரே இலவு வீட்டில்...

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்....கில்லர்ஜி...ஆஜர்...பின்னர்.

    அடடா... பாவம் சாம்பசிவம்..அவர் நேரம்..பாருங்க!! ...அட்வான்ஸ் கிடைச்சுச்சா....இல்லை கொடுவா மீசையை முறு க்கிக்கிட்டாரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இனி அட்வான்ஸ் கிடைச்சு என்ன... கிடைக்காட்டி என்ன... அவசரத்துக்கு நீங்களாவது கடன் கொடுத்து இருக்கலாம்.

      நீக்கு
  3. அருமை வாழ்த்துகள்.ஆனால் உட்கருத்து வலி.... நல்ல முயற்சி.ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றமல்ல சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலம்தானே.... வருகைக்கு நன்றி

      மன்னிக்கவும் தங்களது கருத்துரை எப்படியோ... Spamமில் போய் இருந்தது இப்பொழுதுதான் மீட்டெடுத்தேன்

      நீக்கு
  4. தாமதம் அவரை லேட் ஜெயிக் ஆக்கி விட்டது வருத்தமே. AtoZ ... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தாமதமும் லேட்'டும் இரட்டைக் குழந்தைகளே...

      நீக்கு
  5. அடடா!..
    இவ்வளவு தூரத்துக்கு முண்டியடிச்சும் முடியாமப் போச்சே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி விதியை மதியால் வென்றாலும் அதுவே விதியாகும்.

      நீக்கு
  6. அனைத்துக் கொல்ல வேண்டும் அல்ல...அணைத்துக் கொல்ல வேண்டும். மரண பயமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களுக்கு மன்னிக்கவும் பிழைக்கு வருந்தி மாற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  7. மரணம், தன்னை நாடி வருபவர்களைவிட்டு விலகும், விலக நினைப்பவர்களை நெருங்கும். உண்மை. இது பணத்துக்கும் பொருந்தும். எல்லாவற்றிர்க்கும் பொருந்தும். யோசிச்சுப் பாருங்க.

    உறவுகளிலும், நாம ரொம்ப நெருங்கிப் போகப் போக அவங்க விலகுவாங்க. அதனால எல்லா உறவிலும் ஒரு இடைவெளி (distance) maintain செய்யவேண்டும்.

    வில்லங்கத்தார் முழுவதுமாக திருத்தம் செய்யலை. 'அனைத்து' என்பது 'அணைத்து' என்று வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரைக்கு நன்றி.

      "அனைத்து" அது வில்லங்கத்தாருக்கு தெரியாது அது எனது தவறு மேலும் அந்த புகைப்படத்தை நான் உருவாக்கி இணையத்தில் இணைத்தது 2012-ல் அதை இப்பதிவில் உபயோகப்படுத்தினேன்

      மேலும் முனைவர் அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகே அறிந்தேன்.

      ஆகவே தவறுக்கு நான் பொருப்பேற்கிறேன் மன்னிக்கவும்.

      நீக்கு
  8. ஏ இல் இருந்து இசட் வரை ரசித்தேன், வீடியோ பார்க்கலை. பின்னர் தான் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இரசித்தமைக்கு நன்றி 30 நொடி காணொளி காண்பதற்கு நேரமில்லையா ?

      நீக்கு
    2. அப்போ நம்ம ரங்க்ஸ் தூங்கிட்டிருந்தார். அதனால் போடலை! இப்போப் பார்த்தேன்! :) நல்லா இருக்கு! சுருளிராஜன் நகைச்சுவையும் ரசிக்கும்படியாவே இருக்கு! எந்தப் படம்னு தெரியலை! :)

      நீக்கு
    3. மீள் வருகை வந்து கண்டமைக்கு நன்றி அந்தப்படம் 'ஹிட்லர் உமாநாத்' உங்கள் ஜிவாசி கணேசன் நடித்தது.

      நீக்கு
    4. என்னாது? எங்க ஜிவாஜியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))

      நீக்கு
    5. அவரு உங்க ஏரியாதானே....

      நீக்கு
  9. A to Z நல்லாருக்கு ஆனால் ஒருவரை இறக்க வைத்ததில் .........ம்ஹூம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காலன் வந்து காலை வாறி விட்டான் என்ன செய்யிறது விதி...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    A to z மிகவும் நன்றாக இருந்தது ரசித்து படித்தேன். மரணத்தை பற்றிய தங்களுடைய வாசகங்கள் முற்றிலும் உண்மை. காணொளி எப்படி பதிவுக்கு தகுந்த மாதிரி தேர்ந்தெடுத்தீர்களோ? தங்கள் பாணியில் பதிவு அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்படி எல்லாம் நான் பதிவு எழுதுவேன்'னு தெரிஞ்சுதான் ஹிட்லர் உமாநாத் திரைப்படம் எடுத்து இருப்பாங்களோ...

      இரசித்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. Thanks for adjustment என்று உங்கள் பதிவில் படித்ததும் திடுக்கிட்டு மேற்கொண்டு படிப்பதை நிறுத்தினேன். காரணம் -
    சற்றுமுன்தான் மீடியாவில் திரைஉலகத் தாரகைகள் படச்சான்ஸிற்காக adjust செய்யச்சொல்கிறார்களே என்று குறையோ வேதனையோபட்டதைப் படித்திருந்தேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை படித்தீர்கள்தானே ? என்னையும் கொண்டு போய் சினிமாக்காரனோடு இணைச்சுட்டீங்களே...

      இதுக்கு பதிலாக என்னை துப்பாக்கியால ரெண்டு முறை டுமீல் விட்ருந்தாலும் குண்டுகளை புடிச்சு பாக்கெட்ல போட்டு போயிருப்பேன்.

      நீக்கு
    2. சினிமாதானே தமிழனின் உயிர்மூச்சு..மூச்சா..இப்படியெல்லாம்..?

      மற்றபடி படித்தேன். சுருளியின் விஷமம் சிவாஜியை முண்டவிடாது ஓரத்தில் உட்காரவைத்திருக்கிறதே !

      ஹிட்லர் உமாநாத்தா? இப்படியும் ஒரு படம் வந்திருந்ததா?

      நீக்கு
    3. ஆம் நண்பரே 1982-ல் வெளி வந்தது நகைச்சுவைப்படம் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. A முதல் Z வரை நல்லா இருக்கே. ரசித்தேன் .சுருளியின் காணொளியும் சூப்பர் காமெடி .
    மரணம் பற்றி கூறியது உண்மையே

    பதிலளிநீக்கு
  13. முதலில் புரியல அண்ணா ஜீ. 2 தரம் வாசித்த பின்பே புரிந்து ரசித்தேன்.
    நானும் ஆச்சரியப்பட்டேன் எப்படி தகுந்தமாதிரி காணொளியும் அமைஞ்சுதுன்னு. அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக காணொளி கண்டமைக்கு நன்றி அது சிறிய அளவாக இருப்பினும் அதன் வேலைகள் அதிகம். இப்படி பாராட்டும்போது அந்த கஷ்டங்கள் பறந்து விடுகின்றது உண்மை.

      நீக்கு
  14. ரசித்தேன் நண்பரே
    இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
    தம இணைக்கப்படாமலே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தமிழ்மணம் இப்போது பிரச்சனையாக இருக்கிறது.

      நீக்கு
  15. பதிவை இரசித்தேன். இந்த பதிவு மூலம் எப்படி அலுவலக இயந்திரம் இயங்குகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள்! பொருத்தமான காணொளியை இணைத்தமைக்கு பாராட்டுகள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை நிகழ்வுகள் இப்படித்தானே இருக்கின்றது.

      மருத்துவமனைக்கு போக 500 ரூபாய் கொடுக்காதவன் இறந்த பிறகு சமூக பார்வைக்காக ரோஜா மாலை வாங்கி போடுவான்.

      நீக்கு
  16. வணக்கம் சகோ!

    எல்லாம் தெரிந்துகொண்டே பிறந்தாரென்று யாரும் இல்லை!
    தேடுதலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தால் தேறிவிடலாம்.

    5 வருடங்களுக்கு முன் வந்து ஜேர்மனியில் கண்டு, கேட்டுக் களித்த அனுபவத்தில் மனதில் பதிந்ததோ இந்த ஜேர்மனியப் பெயர்கள்?..
    சாதாரனமாக நம்மவர் யாருக்கும் இவர்கள் பெயர்கள் வாயில் நுளையாது..:)
    சர்வ சாதாரணமாக உங்கள் பதிவில் இணைக்கக் கண்டு
    உங்களின் அவதான சக்தியை உணர்ந்து மெச்சுகிறேன் சகோ!
    திறமை! அருமை!

    தன்னடக்கமுடன் ஒரு காணொளிப் பதிவு!
    உங்கள் பதிவிற்குப் பொருத்தமாக இணைத்துள்ளீர்கள். சிறப்பு!
    விடயத்திற்குத் தகுந்த ஒரு படத்தைக் கூகுளில் தேடுவதற்கே
    எனக்கு நேரம் போய் சிலசமயம் ஏனோதானோ என்றும் அமைந்துவிடும்.
    ஆனால் நீங்களோ பதிவும் காணொளியும் மிகப் பொருத்தமாகச் சேர்த்த விதம்
    சிறப்பு! பாராட்டத்தக்கது!

    இமுறையும் தாமதமான வருகைதான் எனது...:(

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி தாமதமானாலும் வந்து விடுவதே சிறப்புதான் நன்றி

      நீக்கு
  17. “புரியாத பேச்சைக் கத்துக்கிட்டா... சீக்கிரம் பெரிய மனுசனா ஆயிடலாம்” -யாரோ சொன்னது!

    முயற்சி திருவினை யாக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே நல்ல கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  18. நமது தேவைகள் பெரிதாகத் தெரிவதில்லை அதனினும் பெரிய சம்பவங்கள் நிகழும் போது ஆங்கிலல் அன்னிய மொழி அது தெரியாவிட்டாலும் பாதகமில்லை எப்படி அரபு நாட்டில் இருந்ததால் அரபி கற்றீர்களோ அதேபோல் இங்கிலாந்தில் இருந்திருந்தால் ஆங்கிலமும் வசப்பட்டிருக்கும் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது விரிவான கருத்துரை மகிழ்ச்சி தருகிறது நன்றி.

      நீக்கு