தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 03, 2018

கிளியை வளர்த்து பூனைக்கிட்டே....



வணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை என்று வைத்துக்கொள்வோம் அன்னியத்தில் தரகர் மூலமாக மாப்பிள்ளை பார்க்க சொல்கின்றார்கள் மாப்பிள்ளை நிச்சயமாக அனாதையாக இருக்ககூடாது என்று நினைப்பதோடு இல்லாமல் பெரிய தலைக்கட்டாக அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இவர்களோடு பிறந்த பெருங்கொண்ட சொந்த பந்தம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள் காரணம் இவனை நாளை ஒருவன் அடிக்க வந்தால் ? ? ?  கேட்பதற்கு ஒரு கூட்டமே பின்புலத்தில் இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றார்கள் சம்பந்தம் பேசத்தொடங்கவும் தனது சொந்த பந்தங்களிடம் ஆச்சாக்கும், பூச்சாக்கும் என்று புதிய சம்பந்திகள் அளந்து விட்டதை கேட்டுக்கொண்டு அதை மூன்றாக திறித்து அளக்கின்றார்கள் சம்பந்திகள் (பெண்பால்) அண்ணி அண்ணி என்று நொடிக்கொரு முறை மாய்கின்றார்கள் பெண் மாப்பிள்ளை உள்பட அனைவருக்கும் பிடித்துப்போய் திருமணமும் நல்லவிதமாக கோலாகலமாக நடந்து முடிகின்றது ஒருமாதம் வரை மாப்பிள்ளைக்கு நல்ல விருந்தும், பெண்ணை மாமியாரும் தாங்குகின்றார்கள் என்னோட புது மருமகள் அறுபது பவுன் போட்டு வந்துருக்காளாக்கும் என்று தெருமுனைக்கு கேட்கும் அளவுக்கு சொல்லி வைக்கின்றாள் இது திருட்டுப்பயலுக காதுகளுக்கு போனால் நாளைக்கு நமக்குத்தானே ஆப்பு என்பதை அறியாத அறியாமடந்தை மாமியார் மூன்று மாதம் கடந்து விடுகின்றது.

அதன் பிறகு 90 % குடும்பங்களில் புகைச்சல் கண்டிப்பாக வந்து விடுகின்றது சோற்றுக்கு உப்பு போட மறந்து விட்டதைக்கூட பெரிதாக்கி மாமியார் மருமகளை குறை சொல்ல ஆரம்பிக்கின்றாள், மருமகள் மாமியாரைப்பற்றி தனது அம்மாவிடம் உங்கள் மருமகன் சம்பாத்தியத்துலதான் எல்லோரும் சாப்புடுறாங்க இப்படியே இருந்தால் நான் எப்ப சொந்தவீடு வாங்குறது ? நாத்துனாவுக்கு ட்ரெஸெல்லாம் துவைக்க சொல்றாங்க என்று என்றோ வாஸிங் மெஷினில் துவைத்து கிடந்ததை எடுத்து காயப்போட்டதை நினைவு படுத்தி சொல்ல ஆரம்பிக்கின்றாள் இந்தப் பேச்சு வழக்கு ஒருநாள் முற்றி சண்டையும் வந்து விடுகின்றது மகன் அம்மாவையும் கண்டிக்க முடியாமல், மனைவியையும் அடக்கிப் பேச முடியாமல் முடியும்........ ஆனால் முடியாது...... தட்டிக் கேட்க முடியாத மருமகனை உங்க சம்பாத்தியத்தில சாப்பிடுற அவங்க உங்க மனைவியையே மதிக்கலைன்னா எப்படி ? என்று அறிவுப்பூர்வமான கேள்வி கேட்பதோடு உசுப்பேற்ற பேச்சோடு பேச்சாக கிளியை வளர்த்து பூனைக்கிட்டே கொடுத்துட்டோம் என்று சுமார் 3470 ஆண்டுகளுக்கு முன்பு குசும்பராய ஸ்வாமிகள் சொல்லி விட்டுச்சென்ற அந்த வார்த்தையை எடுத்து விடுகின்றாள் பெண்ணின் அம்மா. பிறகு இருபுறமும் வார்த்தைகள் தடித்து விழுகின்றன மகளைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து விடுகின்றாள் தாய்க்காரி மகளும் செல்போனில் ரிமோட் வார்த்தைள் மூலம் தொல்லை கொடுத்து கணவனை தனது வீட்டுக்கு வரவழைத்து விடுகின்றாள் பிறகு மருமகனிடம் தனிக்குடித்தனம் போங்கள் அப்பொழுதுதான் உங்கள் அம்மாவுக்கு புத்தி வரும் என்று மிகப்பெரிதாக கண்டு பிடித்து சொல்கின்றார்கள் தன் மகளை அந்த வீட்டில் பெண் கொடுக்கும் பொழுதே தெரிந்துதானே கொடுத்தார்கள். அதேநேரம் தன் மருமகள் தனது வீட்டில் கொத்தடிமை மாதிரி நடத்தப்படுகின்றாள் என்பது வேறு விடயம் இதைப்பற்றி பதிவைப் படிப்பவர்கள் கேட்க கூடாது ஆக இப்படியும் அப்படியுமாக அந்த அப்பாவி மதில்மேல் பூனையாக வாழ்கின்றான் இது பல இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அம்மாவை பேசினால் பொண்டாட்டிதாசன் என்ற பெயர் கிடைக்கும் காளிதாசன், கண்ணதாசன் என்ற பெயர் எடுத்தாலும் பெருமைப்படலாம் மனைவியை பேசினால் இந்தக்கால பெண்கள் எதற்கெடுத்தாலும் விவாகரத்து கேட்கின்றார்கள் கொடுக்கலாம் இன்றைய சூழலில் இன்னொருத்தி கிடைப்பது சாதாரண காரியம் அல்ல ! செல்லம்மா புருஷனும் புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி அப்படின்னு சொல்லிட்டு அவரு போய்ச் சேர்ந்திட்டாரு பாவம் இவனும் என்ன செய்வான் ? அம்மாவும் வேணும், மனைவியும் வேணும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

அதாவது குடும்பத்தில் பிறந்தவனுக்கு கட்டிக் கொடுப்பதால்தானே இவ்வளவு பிரச்சனைகள் வருகின்றது ? அனாதையாக எத்தனை பேர்கள் சமூகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல கௌரவமாக உழைத்து வாழ்கின்றார்கள் ? அவர்களைப் போன்றவர்களுக்கு கட்டிக்கொடுத்தால் பிரச்சனைகள் வராது அல்லவா ? இதிலும் உங்களுக்கு வேறு முக்கியமான பிரச்சனை இருக்குமே... அவன் எந்த மதமோ ? எந்த ஜாதியோ ?
என்ன செய்யிறது ? உங்களுக்கும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

சிவாதாமஸ்அலி-
குசும்பராய ஸ்வாமிகள் மாப்பிள்ளையை பூனை என்று 3470 ஆண்டுகளுக்கு முன்பு சரியாத்தான் சொல்லி இருக்காரு....

68 கருத்துகள்:

  1. ஆஜர்!!!! வாசிக்கிறோம் கில்லர்ஜி!!! இதோ கருத்து வரும்...ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉவா? இல்லை பூஸார் ஓடி வந்துவிட்டாரா?!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பூஜார் நடுநிசியில் வருவார்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்படி இன்று பகலில் கில்லர்ஜி போஸ்ட் போடலாம்:) நோஓஓஓஓஓஓஒ நான் சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்குப் போகப்போறேன்:)... அதெப்பூடி கீதா 1ஸ்ட்டா வந்தாஆஆஆஆஆ இது ஞாயமே இல்ல ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:))... ஹலோ கீதா அதெப்பூடி அதிராவின் போஸ்ட்டை மட்டும் கரெக்ட்டா மிஸ் பண்ணிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      நீக்கு
    3. நான் வெளியூரில் இருந்தால் பதிவு பகலில் வெளியாகும்.

      உள்ளூரில் வீட்டில் இருந்தால் நள்ளிரவில் வெளியாகும்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இபூடி ஒரு விதிமுறை இருக்கோ.. இனி வெளியூர் போகும்போது எதுக்கும் ஜொள்ளிட்டுப் போங்கோ கீசாக்காவைப்போல:)..

      நீக்கு
  2. குசும்பராய சுவாமிகள் மாப்பிள்ளையை பூனை என்று 3470 ஆண்டுகளுக்கு முன்பு சரியாகச் சொன்னதாக சிவதாமஸ் அலி சொன்னதை ....ஏன் அப்படிச் சொன்னார் என்ன பொருத்தம் பூனைக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு கு ரா சா இப்போ இல்லை என்பதால் சி தா அ மேல் ஒரு வழக்கு தொடுத்து அதை தேம்ஸ் பூசார் பதில் விளக்கம் சொல்லுமாறு கேட்டுருக்கேன்....இனம் இனத்திற்குத்தானே தெரியும்!!! ஹா ஹா ஹா ஹா...பூஸாரே வாங்க வாங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கு. ரா. சா. அது யாரு...?

      நீக்கு
    2. வந்திட்டேன் கீதா.. இப்போ ஆருக்கு வைக்கோணும் சொல்லுங்கோ..

      https://tse4.mm.bing.net/th?id=OIP.Q0aigDYznw6LOnjXyC_N8wHaEU&pid=15.1&P=0&w=270&h=158

      நீக்கு
  3. அட? இப்போத் தான் வாட்ஸப்பில் பார்த்தேன். அதுக்குள்ளே தி/கீதா வந்தாச்சா? :)

    பதிலளிநீக்கு
  4. கில்லர்ஜி முன்னாடி எல்லாம் பெண்ணுக்குப் பையன் பார்க்கும் போது குடும்பம் பெரிசானு பார்த்துதான் கொடுத்தாங்க...என் தலைமுறை வரை...ஆனா என் தலைமுறையிலேயே எனக்குத் தெரிஞ்சே தொடங்கிட்டாங்க...ஒரே ஒரு நாத்தானார் இருந்தா ஓகே...ஆனா கூடுதலா இருந்தா கொடுக்க யோசிச்சாங்க...அப்ப அரசு சொன்ன குடும்பமா இருந்தாத்தான் அதாவாது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று இருவர் போதும் என்ற அரசின் விளம்பரத்துக்கு ஈடாக இருந்த குடும்பத்தில்தான் பெண் கொடுப்பதாக....

    இப்ப அதுவும் மாறிடிச்சு....ஒரே ஒரு பையனா இருக்கணும்...அதுவும் மாமியார் இல்லைனா ஓகே! மாமியார் மாமனார் இல்லைனா டபுள் ஓகே!!! இப்படித்தான் பெண் வீட்டார்களின் லேட்டஸ்ட் கண்டிஷனாக...பையன் அம்பேரிக்கா செல்வானா? வீடு இருக்கா...கார் இருக்கா...மாமனார் மாமியார் இருந்தா கூட இருப்பாங்களா இல்லை தனியாவா என்றெல்லாம் எனது நெருங்கிய உறவினர் பைய்னுக்குக் கேட்கப்பட்டு...ஒரு சில அவர்களுக்குத் திருப்தியாக இல்லாததால் திருமணம் ஆகாமல் இப்ப பெரியவனுக்கே 38 ஆகிடுச்சு!! சிறியவன் 36...இன்னும் திருமணம் ஆகவில்லை...அந்த மாமா மாமிக்கும் வயது 75 கடந்தாச்சு...பாவம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியார் இல்லைனா... ஓகே அதுவும் மாமனார்-மாமியார் இல்லைனா டஃபுள் ஓகே.

      ஹா.. ஹா.. ஸூப்பர்.

      நீக்கு
    2. நாளைக்கு மருமகன் தன்னோட சொத்தையெல்லாம்
      பொண்டாட்டிக் கிட்டக் கொடுத்துட்டு(!)
      போய்ச் சேர்ற சூழ்நிலையில் இருந்தால்

      சூப்பர் ஓக்கே!..

      நீக்கு
    3. இன்றைக்கு எல்லா இடங்களும் இப்படித்தான் ஜி

      நீக்கு
    4. கீதா ரங்கன் - உங்கள் கருத்தைப் பார்த்ததும் மனது கஷ்டமானதுதான் மிச்சம்.

      நான் பொதுவா நினைப்பது, ஒரு பெண் மட்டும் உள்ள வீட்டில் திருமணம் செய்யக்கூடாது என்று. ஆனால், பெண்ணே இப்போ கிடைப்பதில்லை. என்ன செய்ய?

      நீக்கு
    5. நானும்தான் ஆசைப்பட்டேன் 12 கொளுந்தியாள்கள் உள்ள வீட்டில் பெண் எடுக்க...

      நடந்தது என்ன ?
      கொளுந்தியாள், மச்சினன் ஒருத்தரும் இல்லை ஏன்.... இன்று மனைவி மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும் இல்லை.

      நீக்கு
  5. கில்லர்ஜி, நீங்க சொல்வது சரி தான். ஆனால் எல்லோரும் ஒத்துக்கணும். என்றாலும் எனக்குத் தெரிந்த ஒரு மாமி(பிராமணர்) பெற்றோர் யார் என்றே தெரியாத நிலையில் காவிரியில் போடப் போன 3 நாள் பெண் குழந்தையை எடுத்து வளர்த்துத் திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பூர்விகம் தெரிந்தே அந்தப் பையரும் திருமணம் செய்திருக்கிறார். ஒரு குழந்தையும் உண்டு. வளர்ப்புப் பெண்ணையும், மருமகனையும் (அவரும் என்ன ஜாதி என்றே தெரியாது! பெண் விரும்பினாள், திருமணம் ஆனது) தன் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கவும் செய்கிறார். மாப்பிள்ளையும் வேலைக்குப் போகிறார். பெண்ணும் வேலைக்குப் போகிறார். பெண்ணை எம்.ஃபில் வரை படிக்க வைத்துள்ளார். இந்த மாமியும் வேலை செய்கிறார். சமையல் உத்தியோகம் தான்! அதில் தான் இத்தனை சாதனைகள்! பெண்ணுக்காக வீடும் கட்டி வைத்துள்ளார். தற்போது அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். நூறாண்டு நன்றாக வாழட்டும் என்று வாழ்த்தினோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மாமிக்கு எனது இராயல் சல்யூட் சொல்லி விடவும்.

      வாழ்க வளமுடன் அந்த தம்பதிகள்.

      நீக்கு
    2. மனித நேயம் மிக்க அந்தப் புண்ணியவதிக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!...

      நீக்கு
    3. அந்த குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் .இந்தமாதிரி நல்ல விஷயங்களை கேட்டாலோ வாசித்தாலோ மனசு லேசாகி பட்டாம்பூச்சியா பறக்கும் ஆனந்தத்தில்

      நீக்கு
    4. மேட்டூர்ல நான் வேலை பார்த்தபோது இத்தகைய சம்பவம் நடந்தது. ஒரு பிராமணர், முள் வேலியில் தூக்கி எறியப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கினார். சொந்தப் பெண்போல (அப்போ நான் பார்த்தபோது அந்தக் குழந்தைக்கு 7 வயசு?). என்னால் அந்த வயசுல என் அனுபவக் குறைவினால், ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். என்ன விதமான மனித நேயம். இறைவனை நம்பினால், அவன் படைத்த எல்லாமே அவனுடைய குழந்தைகள்தான் என்ற எண்ணம் வரவில்லையானால் அது எத்தகைய தவறு என்று பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.

      நீக்கு
  6. இப்போதெல்லாம் பையனுக்குப் பெண்கிடைப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கு...பாருங்க ஸ்ரீராம் வந்து இதைப் பற்றி ஒரு சில வரிகள் சொல்லிட்டுப் போவார்!!! ஹிஹிஹிஹி...அதனால் அவருக்குச் சொல்லணும் இல்லையா...அதனால் நான் விட்டுச் செல்கிறேன்...அப்புறம் கீதாக்காவும்....அவங்ககிட்ட நிறைய அனுபவக் கதைகள் இருக்கும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரட்டும் ஸ்ரீராம்ஜி ஏற்கனவே பெண் கிடைக்காததைப்பற்றி ஒருமுறை புலம்பி இருந்தார்.

      நீக்கு
    2. இன்னுமா பொண்ணு கிடைக்கல்லே!...

      நீக்கு
    3. நீங்க யாருக்கு கேட்கிறீங்க ஜி ?

      நீக்கு
    4. ஒரே கன்பியூசா க்கீதே!..

      நீக்கு
    5. ஸ்ரீராம்ஜி பெண் கிடைக்கவில்லை என்று சொன்னது அவரது மகனுக்காக இருக்கும்.

      நீக்கு
  7. இப்பொழுது இப்படி நிறையவே நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் வாங்கி வந்த வரம் ஜி.
    மனைவியிடம் அம்மாவை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர், அம்மாவிடம் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர் உயர்ந்தவர். இருவரையும் நன்றாக வைத்துக் கொள்வார்.
    பெண் அமைவதும் (மருமகள்) , வந்த பெண் குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவதும்,
    ஆண்மகன் (மருமகன்)
    பெண் வீட்டாரிடம் ந்ல்ல பெயர் வாங்குவதும் முன்வினைபலன் என்று தான் சொல்வேன்.

    வேறு சொல்வதற்கு இல்லை.

    கீதாரங்கன் சொல்வது போல் இப்போது நடைமுறை இருக்கிறது என்று தினம் கேள்வி படுகிறோம்.

    மனைவி, கணவன் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், மருமகள், மருமகன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தொடக்கத்தில் சொன்னீர்களே அதைக் கடைப்பிடித்து சரியான மகனாக, சரியான கணவனாக வாழ நினைத்து கிடைத்த சொச்ச வாழ்வையும் இழந்தவன் நான்.

      உண்மைதான் எல்லாவற்றுக்கும் வரம் வாங்கி வரவேண்டும்.

      நீக்கு
  9. சமுதாயத்தை எங்கேயோ திசை திருப்பி விட்டுட்டாங்க!..

    நாம சும்மா கூவிட்டுப் போக வேண்டியது தான்..

    இதுக்கிடையில கச்சா மாங்கா வாங்கித் தின்னா எதிலயோ ஜெயிக்கலாம்..ன்னு டீவி விளம்பரத்துல கத்துறான் ஒருத்தன்!...

    என்ன ஆவுது..ன்னு பாக்கலாம்!...

    பதிலளிநீக்கு
  10. /வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:

    தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
    என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
    ’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும் சொலவார்கள்.

    இப்படி அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன வாழ்வியல் உண்மை தந்தமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  11. திருமணங்கள் ஒரு லாட்டரிஆகிப் போவதுபற்றி ஒருபதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன் யாரையும்குறை சொல்வதற் கில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா காலத்தோடு கலாச்சாரமும் மாறுகிறது.

      தங்களது பதிவு விரைவில் வரட்டும்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    முன்பெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பெண்ணோ, பையனோ எடுத்தால், குடும்பத்துக்கு அனுசரணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது. தற்சமயம் தொந்தரவுகள் இல்லாத இடமாகத்தான் தேடுகிறார்கள். காலம் அப்படி மாறி விட்டது..மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.என்றால், அப்போ கணவன் அமைவதெல்லாம் இறைவி கொடுத்த வரமா? என அப்போதெல்லாம் கிண்டலாக கேட்பதுண்டு. ஆனால் இல்லறம் பொதுவாக இனிதாக அமைவதற்கே ஒரு கொடுப்பிணை நம்முடன் பிறந்து வளர்ந்து நம் காலமுடிவு வரை நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் ஒருவிதமான துன்பந்தான்! மதமோ ஜாதியோ மாறி மனமுவந்து மணமுடிந்து கொண்டாலும் சரி,அந்த அதிருஷ்டம் கூடவே வர வேண்டும்.வரும் பட்சத்தில் நாட்கள் சுமூகமாக நகர்ந்து கொண்டிருக்கும்.நல்லதொரு பிரச்சனையை எடுத்து அலசி உள்ளீர்கள்.எதற்குமே "நம்நேரம்" என்ற ஒன்று உள்ளது என நம்புகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சிறப்பாக சொன்னீர்கள்.
      விரிவான அழகான கருத்துரையை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  13. பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக ​இருக்கிறது. என் மச்சானுக்கு மட்டுமல்ல, என் ​அன்னான் மகன் இல்லை, அண்ணன் மகனுக்கு, என் அலுவலகத் தோழியின் தம்பிக்கு.. எல்லோரும் முப்பதைத் தாண்டி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் எல்லா சமூகத்திலும் இப்பொழுது பெண்கள் கிடைப்பதில்லை. இதனால் வரதட்சிணை குறைந்து போனதும் உண்மைதான் ஜி

      நீக்கு
  14. இது போன்ற சந்தர்ப்பங்களில் யாரைக் குறை சொல்வது? பெண்ணைப்பெற்றவர்கள் உஷாராக இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      உஷார் என்பதற்காக உஷாவை தனிக்குடித்தனம் வைக்க முயல்கின்றார்களே...

      நீக்கு
  15. ///கிளியை வளர்த்து பூனைக்கிட்டே....////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
    பாருங்கோ ஆர் பாவம் என:))..

    https://www.youtube.com/watch?v=UWxEvwivhL0

    பதிலளிநீக்கு
  16. உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீங்க.. எதுக்கு பெரிய குடும்பம் தேவை என பாடுபட்டு அலைந்து தன் பிள்ளையை தாமே பாழும் கிணற்றில் தள்ளி விடோணும்.. குணத்தை பார்த்து தனியே இருக்கும் மாப்பிள்ளையாயினும் செய்து குடுத்தால்.. மகள் ஹப்பியா இருப்பா என நினைக்க மாட்டாங்களா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிக்குடித்தனம் ஹேப்பிதான்.

      ஆனால் கூட்டு குடும்பமே நல்ல பாதுகாப்பை, அனுபவங்களை, நிரந்தர சந்தோஷத்தை தரும்.

      இனி கூட்டு குடும்பம் பார்க்க முடியாது.

      நீக்கு
  17. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை இதை குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து நடந்தால் பிரச்சினை வராது .ஆனால் இப்போல்லாம் கல்யாணம் நிறையபேருக்கு எட்டாக்கனவா இருக்கு வசதி பணம் அழகு எல்லாம் இருந்தாலும் .ஒரே பெண் உள்ள குடும்பங்களில் சிலர் பெண் எடுக்க சிலர் தங்கள் ஒரே பெண்ணை கூட்டு குடும்பத்தில் கொடுக்க தயங்கறாங்க .இப்படி எத்தனையோ இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மகள் சொகுசாக வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம். பாதுகாப்பு இரண்டாம்பட்சமே...

      நீக்கு
  18. கிளி பூனை விஷயத்தில் ஒன்று நினைவுக்கு வருது எங்க வீட்டில் கிளிகள் ரெண்டு இருந்தது அதுங்க எங்க வீட்டு பூனைங்களை படுத்தும்பாடு ஹையோ வாலை இழுத்தல் காதை கடித்தல்னு அமர்க்களம் பண்ணுங்க .கோழிக்குஞ்சுகளும் அப்படிதான் பூனைகளை வம்புக்கிழுக்குங்க :)
    அதனால் பழமொழியை இப்படி சொல்வோம் எங்க வீட்டில் பூனையை வளர்த்து பொல்லாத கிளிகள்கிட்ட விட்ட கதை :)

    பதிலளிநீக்கு
  19. எல்லாமே இறைவன் கொடுத்த வரம் தான். எத்தனையோ பொருத்தம் பார்த்து குலம் கோத்ரம் பார்த்து செய்யும் திருமணம் ஒரு வாரத்தில் முறிந்தது.
    யார் குறை என்பதில்லை வருத்தம். முன்பு கூட்டியே யோசிக்காமல் , பணத்தை வளைக்க நினைத்தார்கள். வில் ஒடிந்ததுதான் மிச்சம்.
    20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலை கூட இப்போ இல்லை.
    பொறுமையோ விட்டுக் கொடுப்பதோ மிகக் குறைந்துவிட்டது.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள் உண்மையை. மிக நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா அழகான கருத்துரையை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  20. என் மாமனார் சொல்லுவார்... பெண்ணைக் கட்டிக் கொடுத்தாகிவிட்டால், அவள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிறாள். பெண், அந்தக் குடும்பத்தையே தன் குடும்பமாக நினைக்கவேண்டும், வீட்டுக்கு வருவதென்றாலும் கணவனுடந்தான் வரணும் என்பார்.

    அந்த பிரின்சிபிள் எல்லாம் இந்த ஜெனெரேஷனில் இல்லை அல்லது குறைந்து வருகிறது. என்ன செய்ய. வாழ்க்கைக்கு எது நல்லது என்ற அறிவு குறைந்துவருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மாமனார் சொன்னது 100க்கு100 சரியான வாழ்வியல் தத்துவம்.

      நான் எனது மகளுக்கு சொல்ல விரும்புவதும் இதுவே...

      நீக்கு
  21. இலங்கையில், மருமகன், வீட்டோடு மாப்பிள்ளை. அப்பா, தன் பெண்ணுக்கு வீடு கட்டித் தருவார் (அதிலேயே அவர், மனைவி ஆகியோர் இருப்பர். இரண்டு பெண்கள் என்றால், இரண்டு வீடுகளைக் கட்டி, இரண்டிலும் தாங்கள் இருப்பர்). பையன் என்றால், இன்னொரு குடும்பத்துக்கு கட்டிக் கொடுத்துவிடுவர். இப்படிப்பட்ட முறையால், பெண்கள் கஷ்டப்படுவது பெரும்பாலும் நடக்காது. நீங்கள் இந்த முறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டுக்கு நாடு செயல்பாடுகள் மாறுகிறது அதை நாம் குறை சொல்ல இயலாது.

      என்னைப் பொருத்தவரை மருமகன் மாமனார் வீட்டுக்கு போவதற்கு ஒரு "கெத்து" வேண்டும் அது கடைசிவரை இருக்க வேண்டும்.

      நீக்கு
  22. உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம்
    உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. இந்தவகையான சிக்கல் பல குடும்பங்களில் காணப்படுகிறது. நிதானமாக இருவரும் ஒத்துப்போனால் வாழ்க்கையில் நிம்மதியை காணமுடியும, அது கணவனாக இருந்ததாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  24. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. என் நண்பரின் அனுபவம் இன்னும் ஒரு படி மேலே. அவர் உறவினர் பையனுக்கு பெண் தேடியபோது, பெண் வீட்டார் ஒருவருக்கு போன் செய்தபோது, அவர்கள் நேரடியாகவே, "பையனின் அப்பா அம்மாவுக்கு வயசு அதிகம். என் பொண்ணு அங்க வந்தா எப்பவும் அவங்களுக்கே சேவகம் செய்ய வேண்டியிருக்கும். அதனால இந்த சம்பந்தம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டர்களாம். இத்தனைக்கும் பெண் வீட்டார் வசதியனவர்களோ பெண் பெரிய படிப்பு படித்தவளோ கிடையாதாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிவரும் காலங்கள் ஆண்களுக்கு கஷ்டமே...

      நீக்கு
  26. விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை இல்லாதவாய்யில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. ஆம் நண்பரே உண்மையான வார்த்தை.

    பதிலளிநீக்கு