தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

அவள் நடந்து போனாளே...


அவள் நடந்து போனாளே
என்னை கடந்து போனாளே
நான் பார்க்கும் போது
அவள் பார்க்காமல் போனாளே

அவள் எனக்கா பகையானாள்
நான் அவளாள் புகையானேன்
அவள் அவனுக்கு தாரமானாள்
நான் எனக்கே பாரமானேன்

தேரோடும் வீதிக்கு நான்
அவளை தேடி போனேனே
எனை தேவையில்லை என்றாளே
நான் தேம்பி தேம்பி அழுதேனே

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
காரணம் அவள் இல்லை என்
வாழ்க்கை விளங்கவில்லை
இனி ஏதும் விளக்கமில்லை

அவள் நடந்து போனாளே
என்னை கடந்து போனாளே
நான் பார்க்கும் போது
அவள் பார்க்காமல் போனாளே


இதோ பாடலின் யூட்டியூப் இணைப்பு

45 கருத்துகள்:

  1. மீதான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:)...

    ஹா ஹா ஹா என்னாச்சு கில்லர்ஜி க்கு?:) நேற்றுவரை நல்லாத்தானே இருந்தார்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இன்றைக்கும் நல்லாத்தான் இருக்கிறேன்.

      நீக்கு
  2. ///அவள் எனக்கா பகையானாள்
    நான் அவளாள் புகையானேன்
    ///
    ஹா ஹா ஹா இது எந்தப் புகை என ஜொள்ளவே இல்லை:)... அதிசரி இந்தப் படம் எங்கு தேடி எடுத்தீங்க?:).. சிறீ சாம்பசிவம் அங்கிளைக் கேட்டிருந்தால் நல்ல படமா தந்திருப்பாரே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் ஜொள்ளிட்டோம்ல...
      படம் இணையத்தில் கிடைத்தது.

      நீக்கு
  3. அவள் யார் என்ரு சொன்னால் நாங்க உங்களை பற்றி எடுத்து சொல்லி இருப்போம்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி சொல்வீங்க... ?
      நல்லவரு, வல்லவரு பெண்டு எடுக்குறதுல அப்படினா...

      நீக்கு
  4. கில்லர்ஜி தேம்பி தேம்பி அழுகிறார் இந்த ஏஞ்சல் அதிரா கீதா எல்லோரும் என்ன பண்ணுறீங்க

    பதிலளிநீக்கு
  5. ஸூப்பர் ஜி. அழகா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.....

    என்ன ஒரு சோகம். போனால் போகட்டும் போடா நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா, நல்ல கற்பனை வளம்! யாருங்க அது? இப்போவா அல்லது எப்போவோ நடந்ததா? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, எங்கோ எப்போதோ யாருக்கோ நடந்தது, நடப்பதுதான்.

      நீக்கு
  8. ஹா.. ஹா.. // நான் அவளால் புகையானேன்// அட்டகாசமான வரிகள்... பின்னிபெடுத்தீட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. கிஷோர்குமார் சிவமூர்த்தி அவர்களின் முதல் வருகையை பூங்கொத்துடன் வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. நன்றி சகோதரமே..நன்றி

      நீக்கு
  9. ஜி!...

    இந்த மாதிரி எல்லாம் எழுதி வயித்து வலியக் கிளப்பி விடுறதுல....

    உங்களுக்கு நிகர் நீங்க தான்....

    பதிலளிநீக்கு
  10. யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க .....

    பதிலளிநீக்கு
  11. .. நான் தேம்பித் தேம்பி அழுதேனே //

    காவிரிக்கரைப்பக்கம்போயி தேம்பியிருந்தீங்கன்னா தண்ணீராவது கொஞ்சம் ஓடியிருக்குமே.. வேஸ்ட்டாப் போச்சே.

    மழைநீர் சேகரிப்புத் திட்டம்போல், நாட்டில் கண்ணீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவந்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மோடி அரசு ஆவணம் செய்யுமா ?

      நீக்கு
  12. நான் அவளால் புகையானேன்...மிக ரசித்தேன், வேதனையோடு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் இரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  13. இப்போது உள்ள பசங்கள்

    இப்படி பாடி விட்டு போனால் நல்லது.

    பாட்டு நன்றாக கட்ட வருது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஆசிட் அடிப்பவனைவிட இவன் மேல் இல்லையா...

      நீக்கு
  14. எத்தனை வாலிபர்களுக்கு இந்தக் கதியோ. எத்தனை தந்தைகளுக்கு இந்தக் கதையோ. முக்கால் வீசம் பெண்கள் புகையாகிறார்கள்.
    நீங்கள் சொன்ன ஆண் மரியாதைக் குரியவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    சூப்பர். வரிகள் பாட்டுக்கு ஏற்ற மாதிரி.. மிக அருமை. வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள். அந்த பா‌ட்டும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். தங்களால் அதையும் ஒருதடவை கேட்டேன்.

    /அவள் எனக்கா பகையானாள்
    நான் அவளாள் புகையானேன்
    அவள் அவனுக்கு தாரமானாள்
    நான் எனக்கே பாரமானேன்/

    நல்ல கற்பனை வளத்துடன் பாட்டை புனைந்திருக்கிறீர்கள்.

    /இந்த வீட்டுக்கு விளக்கில்லை
    காரணம் அவள் இல்லை என்
    வாழ்க்கை விளங்கவில்லை
    இனி ஏதும் விளக்கமில்லை/

    சோகத்தின் விளிம்பை தொட்ட வரிகள். படித்தவுடன் என் மனதுக்கும் வருத்தமாயிருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடல் வரிகளை உணர்ந்து இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  16. பார் மகளே பார் படத்தின் "அவள் பறந்து போனாளே" பாட்டு இங்கே உங்கள் வரிகளில். சோகம் வேண்டாம். "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற நெஞ்சில் ஓர் ஆலயம் பாட்டை பாசிட்டிவ் ஆகப் பாடி முடிக்கலாமே! ஏ.எல். இராகவன் குரலில் அருமையான பாடல். யூடுயூபில் கேட்டுப்பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதனாலென்ன உங்களுக்காக... எழுதி விடுவோம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. அருமையான கற்பனை வளம்
    இசையோடு இசைந்த வரிகள்
    தொடருங்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  18. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு..

    அதைப்போயி...

    பதிலளிநீக்கு
  19. அவள் பறந்து போனாளே பாடலின் தங்கள் பாணியில் சோகத்தை கலந்து எழுதிவிட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  20. இது முகாரி ரகமா, புகாரி ராகமா..? நண்பரே....

    பதிலளிநீக்கு
  21. பாட்டு செமையா எழுதிருக்கீங்க ஜி. ரசித்தோம்….நல்லாருக்கு…

    பேசாம நீங்க பாட்டெழுதப் போகலாம் ஜி. ஆனா என்ன நம்மை எல்லாம் கண்டுக்கிட மாட்டாங்க...நம் ராசி அப்படியோ...என்ன சொல்லறீங்க...

    இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு எழுதலாம்தான் ஆனால் சினிமாக்காரனுக்கு தமிழ் வார்த்தைகளில் எழுதினால் மட்டும் பிடிக்காதே!

      நீக்கு