தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 01, 2018

பாலாபிஷேகம்


மானிடா ! இந்தக் குழந்தையைப் பார்த்தாயா ? பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் ? கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறாய் சினிமா நடிகனுக்கு வால்போஸ்ட் ஒட்டுகிறாய் நடிகைகளுக்கு கோயில் கட்டுகிறாய் மன்றங்கள் அமைத்து வாழ்க ! வாழ்க ! என்று கரகோஷம் செய்கிறாய் இது உமக்கு தேவையா ? உன்னைப் பெற்றெடுத்தவர்களை ஒரு நாளாவது மனதிற்குள்ளாவது வாழ்க ! என சொல்லி இருப்பாயா ? ஆனால் அவர்கள் தம்வாழ்நாள் முழுவதும் உன்னைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.


இறை படைப்பினிலேயே மிகப்பெரிய பொக்கிஷம் எது தெரியுமா ? அது நமது மானிட படைப்பு. அதையேன் பாழாக்குகின்றாய் ? இறைவன் உனக்கு மட்டுமில்லை, எல்லா மனிதருக்குமே மூளையைக் கொடுத்துள்ளான். ஆனால் அதை செயல் படுத்துவது, நமது செயல். உன்னை நம்பி உனது தாய், தந்தை சகோதர சகோதரிகள் மட்டுமில்லை இந்தப் பிறவிப்பயனை நீ அறிய நாளை உனக்கு மனைவி என்றொருவள் வரவிருக்கிறாள் உனது சந்ததியை தொடர மகன், மகள் வருவார்கள், அது மட்டுமில்லை மானிடா இந்த நாடு, ஏன் இந்த உலகமே உன்னை நம்பித்தான் இருக்கிறது அன்று. உன்னைப்போல் பொருப்பில்லாமல்...

THOMAS ALVA EDISON வாழாது இருந்திருந்தால் ?
இன்று உலகையே இயக்கி கொண்டிருக்கும் மின்சாரம் நமக்கு கிடைத்திருக்குமா ?

ORVILLE WRIGHT & WILBUR WRIGHT BRATHORS வாழாது இருந்திருந்தால் ?
நாம் நாடு விட்டு, நாடு பறந்திருக்க முடியுமா ?

ALEXANDER GRAHAM BELL வாழாது இருந்திருந்தால் ?
நாம் நினைத்த நொடியில் உலகின் எந்த மூலைக்கும் பேச முடிந்திருக்குமா ?

அக்னிப்பறவை ஐயா A. P. J. ABDUL KALAM அவர்கள் வாழாது இருந்திருந்தால் ?
இன்று நம் இந்தியா உலகறிய பேசப்பட்டிருக்க முடியுமா ?

சிந்திய வெண்மணிகளே ! சிந்தியுங்கள்.
இதுவரை சிந்தியது கனவாகட்டும்.
இனியெனும் சிந்திப்பது நனவாகட்டும்.

காணொளி
 மே தினமான இன்று உலகிற்கு உழைத்தவர்களை நினைவு கூர்வோம்

56 கருத்துகள்:

  1. ஆஜர்!! காலைவணக்கம் கில்லர்ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிவுரை சொல்லும் பதிவு. உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பொறுப்பான பதிவு ஜி! இளைஞர்களில் பலர் இப்போது பொறுப்புணர்வுடன் வருவதாகத்தான் தெரிகிறது ஜி. இளைஞர்கள் என்றில்லை பெரியவர்களிலும் கூட பாலாபிஷேகம் என்றில்லாமல் வேறு வகையில் பொறுப்பற்றும் இருக்கிறார்களே குடி என்று. ஒரு கூட்டம் எப்போதுமே பொறுப்பற்று இருப்பது என்பது எல்லாக்காலகட்டத்திலும் இருந்து வருகிறது. \

    இப்போது இளைஞர்கள் நல்லது செய்யும் குழுக்களும் உருவாகி வருகிறது என்று நாங்கள் இருவருமே நம்புகிறோம்.

    கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாகும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி இளைஞர்களே நாட்டின் அவலத்தை போக்க முடியும்.

      மாற்றம் வந்தால் மக்கள் நலமே...

      நீக்கு
  4. மேதின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மனிதர்களில் மிக மிகப் பெரும்பாலோருக்கு மரமண்டை. எத்தனை முறை சொன்னாலும் உறைக்காது.

    பெற்றெடுத்த பிள்ளையைக் குழியில் போட்டுவிட்டு, மண் தள்ள இயலாமல் மனம் வெம்பிப்போன தாய்.

    உலகம் பொல்லாதது நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பல லட்ச மரமண்டைகளால் சில ஆயிரம் பேருக்கு ராஜவாழ்க்கை அமைகிறது.

      நீக்கு
  6. நெஞ்சை உலுக்குகிறது படம்
    மலர்த்தரு முகநூல் பக்கத்திற்கு கடத்துகிறேன்

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வேண்டிய பகிர்வு ஜி...

    பதிலளிநீக்கு
  8. கடவுளுக்கு பாலாபிஷேகம் செஞ்சாலே எனக்கு பொறுக்காது. இதுல யார் கட் அவுட்டுக்காவது பாலாபிஷேகம் செஞ்சதை பார்த்தால் திட்டிட்டுதான் வருவேன்.

    பாவம் அந்த குழந்தை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்படி உலகம் முழுவதும் தினம் குழந்தைகள் இறந்து கொண்டுதான் இருக்கிறது.

      நீக்கு
  9. இல்லாதோருக்காக குரல் கொடுப்போம் அதற்காக இருப்பவர்களை தூற்ற வேண்டாமே சிலர் சொல்லித்திருந்துவதாக இல்லை இவ்வுலகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தற்கால சமூகம் அழிவை நோக்கியே செல்கிறது நாடு உருப்படும் என்ற நம்பிக்கை குறைகிறதே...

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது நண்பரே

      நீக்கு
  11. கில்லர்ஜி.. என்ன அந்தக்காலத்துல இருக்கீங்க. இப்போல்லாம் பாலாபிஷேகம் கட் அவுட்டுக்கு யார் பண்ணறா? பீராபிஷேகம் படங்கள்தான் பார்க்கிறேன்.

    ரசிகக் குஞ்சுகள் இருக்கும் வரை, நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ இப்படியா..... அதிராவின் அங்கிள் பி. எஸ். வீரப்பா அவர்கள் சொன்னதே நடக்கிறது.

      நீக்கு
  12. பதைக்க வைக்கிற படம்.

    பதிலளிநீக்கு
  13. அருமை நண்பரே மே தின வாழ்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  14. மே தின வாழ்த்துக்கள்.
    பதிவு நன்றாக இருக்கிறது.
    ரசிகர்களும், தொண்டர்களும் நாம் என்ன சொன்னாலும் கேட்க போவது இல்லை.
    அவர்களாய் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவர்கள் விழிக்ககூடாது என்பதால்தானே மதுக்கடைகளை மூடிவிடாமல் பாதுகாத்து அரசை நடத்துகின்றார்கள்.

      நீக்கு
  15. மூளையை கொடுத்த இறைவன்..எல்லோரும் வாழ வேணடும் என்ற சமத்துவ அறிவை கொடுக்கவில்லையே நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நாம்தான் பிரித்தறிதல் வேண்டும் நண்பரே

      நீக்கு
  16. ஒரு கணம் நெஞ்சை உறைய வைத்து விட்டது.. படத்தைப் பார்த்தவுடன் அடுத்த அடி நகர முடியாமல் பதைபதைத்து போனேன் நண்பரே. ஆனாலும் வெறும் இளைஞர்களை மட்டும் பொறுப்பில்லாதவர்கள் என்று எப்படிக்கூற இயலும்? தனிப்பட்ட பெரு முதலாளிகளின் பேராசையும் ஆதிக்க வர்க்கத்தின் எதேச்சதிகாரமும் தானே இந்நிலைக்கு முதல் காரணம்? கதிராமங்கலத்தில் நெடுவாசலில் நாளை இந்நிலை ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம் என்று இளைஞர்கள் உண்மையிலேயே சிந்திக்கத் தொடங்குவார்கள் என்றே நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய நிகழ்வுகளிலிருந்து நாம் நம்மை பாதுகாக்க பாடம் படிக்கவேண்டும் நண்பரே.

      அது நம்மிடம் குறைந்து போகிறதே என்ற ஆதங்கத்தையே நான் தொடர்ந்து வெளிப்படுத்துகிறேன்

      நீக்கு
  17. மேதினத்திற்கு சிறப்பாக ஒரு பகிர்வு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  18. மே தினக் கருத்துகள் அருமை. மே தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. முட்டாள்கள் பாலாபிசேகம் செய்க்கிறார்கள் கட் அவுட் வைக்கிறார்கள் ஆனால் நன்றாக சிந்திக்க தெரிந்தவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் அவர்களும் இப்படித்தானே உணவை வேட் செய்க்கிறார்கள் பெரிய பெரிய உணவங்களில் சென்று சுவையில்லாத உணவுகளுக்கு பணத்தை அள்லிக் கொடுத்து அதையும் முழுமையாக சாப்பிடாமல் குப்பை தொட்டியில் தூக்கிதானே போடுகிறார்கள் அது போல பண்ததை ஆடம்பர விஷயங்களுக்கு அள்ளி அள்ளிதானே செலவிடுகிறார்கள் ஏன் ப்ரு படம் வரும் போது ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து படத்தை முதல் வாரத்திலே பார்ப்பவர் அடுத்த வாரத்தில் அந்த படத்தை பார்த்தால் படத்தின் கதை என்ன மாறிவிடுமா என்ன? அது போல கிரிக்கெட் போன்ற விளையாட்டிறற்கு ஆயிரக்கணத்தில் பணம் செலவ்ழித்து செல்வது மட்டும் சரியா என்ன? அதற்கு செலவிடும் பண்த்தில் ஒரு பகுதியை இவ்ரகள் இப்படிபட்டு ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன அவர்கள் செல்வம் என்ன கரைந்துவிடுமா என்ன?

    இன்றைய உலகம் சுயனல உலகமாக மாறிவிட்டது அதனால் இப்படிபட்ட பட்ங்களை நிகழ்வுகளை பார்க்கும் போது அதை செய்தி ஆக்கிவிட்டு செல்கிறது... அவ்வளவுதான் இண்ரைய உலகில் நமக்கு கஷ்டம் வ்ராத வரை உலகம் மிக அழகானதாக்வே தோன்றுகிறது அவ்வளவுதான் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே

      கஷ்டம் தெரியாமல் வாழ்பவர்களுக்கு இப்படிப்பட்டவர்களின் வாழ்வுநிலை புரிவதில்லை. நான் சிறிய அகவைமுதல் இவர்களை கண்டு, இவர்களைப்பற்றி சிந்தித்தே வாழ்ந்தவன் ஆகவேதான் என்னால் இயன்றதை இன்றுவரை செய்து வருகிறேன்.

      விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  20. வேதனையினை உங்கள் பாணியில் எடுத்துக்காட்டிய விதம் மனதை நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    முதல் படம் மிகுந்த வேதனையை தந்தது. பசியால் வாடும் ஏழைகள் நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். சமுதாயத்தில் இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு வந்துள்ளது. நிறையபேர் ஏழைகளுக்கு உடை, உணவழித்தல், என்ற ரீதியில் சேவைகள் செய்து வருவதை பார்க்கிறோம். ஆனாலும் உங்கள் ஆதங்கங்களிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த நிலை விரைவில் ஏற்பட்டால் மிகவும் நன்று.. காலந்தான் மனிதர்களை மாற்ற வேண்டும். நானும் பிரார்த்திக்கிறேன்.

    உழைப்பாளர்கள் தினத்தில் சாதனை மனிதர்களை நினைவுபடுத்தி பதிவிட்டமைக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தாங்கள் சொல்வதுபோல் நடந்தால் சந்தோஷம்தான்.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. மேலே ஏறி கட் அவுட்டுக்குப் பால் கொட்டற பசங்க வீட்டிலே அம்மா ஒரு காரியம் செய்யச் சொன்னா செய்வாங்களோங்கிறது சந்தேகம்

    பதிலளிநீக்கு
  23. உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  24. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு வாவழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  25. நடிகர்களை விட அதிகமான பாலையும் உணவையும் கடவுள் தான் அபிஷேகத்தின் பெயரால் வீணடிக்கிறார். முதலில் அவர் தான் திருந்த வேண்டும்.

    நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இரண்டையுமே செய்வது மனிதன்தானே....?

      கடவுளும், கட்டவுட்டும் பாலாபிஷேகம் கேட்கவில்லையே...

      நீக்கு
  26. சிந்தனை தூண்டும் பதிவு பாராட்டுகள் வலைத்தளம் புதிதாக http://kavithaigal0510.com வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது ஒரு பார்வை பதித்து கருத்து வழங்கி ஊக்கம் தரு வேண்டுகிறேன் ஆதலால்தான் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே பாராட்டுகளுக்கு நன்றி வருகிறேன்.

      நீக்கு