தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 27, 2018

கமல்ஹாசன் அவர்களுக்கு...

மகளும், தந்தையும்.

 எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு உங்களுக்கு நினைவு இருக்காது 1983 இல் தாங்கள் டெல்லியிலிருந்து மூன்றாம் பிறைக்கு அவார்டு வாங்கி விட்டு சென்னை விமான நிலையத்தில் விமானத்திலிருந்து உள்ளே வரும்போது கண்ணாடி தடுப்புச்சுவர் அறைக்குள் நானும், இராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு சகோதரி இருவர் மட்டும் தவறுதலாக சிக்கி விட்டோம். உங்களைக் கண்டவுடன் அந்தச் சகோதரி ஓடிவந்து கையைப் பிடித்து குலுக்கி விட்டு மகிழ்ச்சியாக குதிக்க, நான் நின்று கொண்டு இருந்தேன். என்னிடம் சிரித்துக் கொண்டே கை கொடுக்கும்போது நான் தயக்கத்துடன் ஸார் நான் உங்கள் ரசிகர் கிடையாது என்று உண்மையை சொன்னேன். உடன் ரஜினி ரசிகரா ? என்று கேட்டீர்கள். நான் யாருக்குமே ரசிகர் கிடையாது என்றதும் இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்னிடம் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை. கீப் இட் அப் என்று எனது கன்னத்தை தட்டி விட்டு கடந்தீர்கள்.

அந்த நொடி முதல் உமது செய்கைகளை சில திரைப்படங்கள் வழியாக கவனித்தேன் சிறந்த கலைஞர் என்று நானென்ன தமிழகமே அறிந்த விடயமே... அதுவரை உமது படங்கள் மூன்றாம் பிறைகூட இன்றுவரை பார்த்ததில்லை. சரி அரசியலுக்கு வருவோம். விஸ்வரூபம் எடுத்தபோது தங்களுக்கு செல்வி. ஜெயலலிதா அரசு கொடுத்து குடைச்சல்தான் தாங்கள் அரசியல் களத்தில் குதிப்பதற்கு காரணமா ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது தாங்கள் விசயமுள்ள மனிதர் உலகஞானம் உள்ளவர். இது உலகறிந்தது ஆகவேதான் உங்களுக்கு உலக்கை நாயகன் மன்னிக்கவும் விரலின் தவறு உலக நாயகன் பட்டம்..

தங்களுக்கு இல்லாத பணமா ? இவ்வளவு பேரும் புகழும் பெற்ற தாங்களுக்கு தங்களது மகள்களை பக்குவமாக ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்க மனமில்லையா ? இல்லை பணமில்லையா ? உங்களுக்கு இந்த வயதிலும் துணை தேடும் பொழுது பருவப் பெண்ணைப்பற்றி நினையாதது முறையா ? கை வண்டி இழுப்பவர்கூட சரியான தருணத்தில் தனது மகளை கரையேற்றி விடுகிறார். சரி உமது நண்பர் கருடசித்தர் கேட்ட அதே கேள்விகள் எனக்கு கடந்த சில வருடங்களாகவே உங்களை கேட்க வேண்டும் என்று தோன்றியது. சமீபத்தில் கருடசித்தர் பொதுவெளியில் கேட்டு விட்டார். உங்களது மகளை கௌரவமாக வளர்க்க தாங்கள் விரும்பவில்லையா ? அல்லது பாரதியாரைப் போல் சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறேன் என்று சொல்கின்றீர்களா ? அல்லது உங்கள் மகள்கள் உங்களது பேச்சை மதிக்க வில்லையா ? ஒருக்கால் அப்படி மகள்களை கண்டிக்கத் தெரியாத உங்களால் தமிழக பெண் மக்களின் வாழ்வாதாரத்தை கௌரவமாக வழி நடத்திச் செல்ல இயலுமா ? உங்கள் மகள்கள் போலவே தமிழகத்தின் மகள்கள் எல்லாம் வாழ நினைத்தால் தமிழக கலாச்சாரம் சிதைந்து விடாதா ?

உலகஞானம் எல்லாம் பேசும் பெருமைக்குறிய பரமக்குடிக்குயாருக்கு தேவகோட்டையான் சொல்லித்தான் அறிய வேண்டுமா ? இதைக்கண்டால் ஜேம்ஸ் ஊரணியோரம் நிற்பவர்கள் தமது பிள்ளைகளை கிள்ளி விளையாடி, எள்ளி நகையாட மாட்டார்களா ? பொது வாழ்க்கைக்கு வரும் மனிதர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருத்தல் அவசியமில்லையா ? அல்லது கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்பவர்கள் இரண்டு, மூன்று திருமணம் செய்தவர்களும், திருமணம் செய்யாமல் முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுமே ஆகவே அத்தகைய தகுதி தமக்கு இருக்கிறது என்று தாங்கள் நினைப்பதாலா ? எத்தனை பெண்களை திருமணம் செய்தீர்கள் யாருடனாவது கௌரவமாக வாழ்ந்து காட்டினீர்களா ? உங்களது நண்பரும், திருமதி. ஏஞ்சலின் சித்தப்பாவுமான திரு. சிவாஜிராவ் கௌரவமாக வாழ்ந்து ஏதோ மகள்களை திருமணம் செய்து கொடுத்து விட்டாரே... உம்மால் மட்டும் இயலாதது ஏன் ? மாத்ருபூமியில் பதிந்து வைத்தால் போதுமே... இணைய முகவரி அறியவில்லையா ?

உமது தசாவதார புகைப்பட வேசங்களை பலமுறை அரேபியர்களிடம் இணையத்தில் காண்பித்து உம்மை பிறவிக் கலைஞன் என்று, நான் பெருமை படுத்தி இருக்கிறேன். ஏன் தெரியுமா ? நீர் எம்மினம் என்பதால். இருப்பினும் உம்மிடம் எமக்கு இன்னும்கூட நம்பிக்கை உண்டு உம்மால் நல்ல அரசு தரமுடியும் என்று காரணம். இன்றைய அரசியல்வாதிகள் யாரையுமே நம்ம இயலவில்லை மேலும், உம்மை நம்பலாம் அதேநேரம் உம்முடன் இருக்கும் மற்ற 233 சட்டமன்ற உறுப்பினர்களும் உம்மைப்போல் பெண்களை சகோதரியாக பாவிக்கும் யோக்கியர்களாக இருப்பார்களா ? நீர் விசயமுள்ள மனிதர் என்பதைவிட தமிழன் என்பது பெருமையே....

எல்லா விடயங்களிலும் புதுமையை கொடுப்பவர். பணம் உமக்கு இருக்கிறது. ஏதோ தமிழக வரலாற்று பாடப்புத்தகத்தில் உமது நாமத்தை பதித்து விடலாம் என்று ஆசைப்படுகிறீர். இது தவறல்ல பிழைக்க வந்த எவனெல்லாமோ ஆசைப்படும்போது உமக்கென்ன குறை ? நீரும் இம் மண்ணின் மைந்தரே ஒருக்கால் வந்தால் தமிழக மக்களுக்கு நாமத்தை போடமாட்டீர் என்று நம்புகிறே/றோ/ன்ம். இது நான் உமக்கு ஆதரவு கொடுப்பதாக அர்த்தமல்ல இருக்கும் திருடர்களில் ஏதோ பரவாயில்லை என்று நம்ப வேண்டிய காரணமேயன்றி வேறில்லை.. நீர் வெற்றி பெறுகிறீரோ இல்லையோ... உம்மை தமிழன் அல்லாதவன் தோற்கடித்தால் ? அது தமிழனுக்கு அவமானச் சின்னமே நான் உமக்கும் வாக்கு அளிக்க இயலாது காரணம் நான் நோட்டோ ஜாதி. மேலும் அரசியல் அறிந்த உம்மிடம் அரசியல் அறியாத எமக்கு உம்மை கேள்வி கேட்கும் பக்குவம் நிச்சயமாக இல்லை ஆகவே இத்துடன் நிறுத்துகிறேன்.

அன்புடன் தமிழக நலன் நாடும் உண்மைத்தமிழன்
தேவகோட்டை கில்லர்ஜி.

சாம்பசிவம்-
இது ஜால்ராவா... இல்லையா... முடிவில் கமல் மாதிரி குழப்புறாரே...?
Chivas Regal சிவசம்போ-
பரமக்குடியும், தேவகோட்டையும் பக்கம்தானே...

66 கருத்துகள்:

  1. பொழுது விடிஞ்சு பொழுது போனா
    இவிங்க தொல்லை தாங்க முடியலை...

    நட்டு எல்லாம் கழண்டு போன நேரத்தில
    இவிங்களுக்கு மட்டும் நாட்டைக் காப்பாத்துற வீரம் எங்கிட்டு இருந்து வருமோ தெரியலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வயசான காலத்தில ஹார்லிக்ஸ் குடிசிட்டாய்ங்களோ...

      நீக்கு
  2. பரமக்குடியும், தேவகோட்டையும் பக்கம் தானே..//சிவாஸ் ....இந்தாளுதான் பட்டைய போட்டாலும் தூள் கிளப்புறாரு...அதுக்கு பதிலும் அந்த சாம்பசிவம் சொல்லிப்புட்டாரே!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பட்டையிலே தூள் போட்டு அடிச்சுருச்சோ...

      நீக்கு
  3. ஆஹா.... தேவகோட்டைக்கார்ர் பரமக்குடிக்கு ஆதரவு தருகிறாரா? நடத்துங்க.. நடத்துங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே தங்களது கருத்து
      விளையாட்டாக இருந்தால் சரி ஆனால் உண்மையாக இருந்தால் எனக்கு வருத்தமளிக்கிறது.

      உங்களுக்கே தெரியும் எந்த நடிகனும் எனது சுயகௌரவத்தை மயக்கி விடமுடியாது.

      இன்றைய திருடர்களில் இவர் பரவாயில்லையோ என்ற கருத்தையே ஐயப்பாட்டுடன் முன் வைத்து இருக்கிறேன். அதேநேரம் எனது ஓட்டு கண்டிப்பாக கிடையாது.

      கொள்கைக்காக கவுண்சிலராக நின்று அமோக வெற்றி பெற்ற, மாமாவுக்கே ஓட்டுப்போட மறுத்தவன் நான் இருபது வருடங்களுக்கு முன்பு.

      நீக்கு
    2. உங்கள் நேர்மையில் நானோ, நெல்லையோ, ஏன் யாருமே சந்தேகப்பட மாட்டோம் ஜி.

      நீக்கு
    3. நம்பிக்கைக்கு நன்றி ஜி

      நீக்கு
    4. கில்லர்ஜி... இடுகையின் ஆரம்பத்திலிருந்தே கமலஹாசனைக் குறைகூறித்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்க கருத்தை எப்போதும் நேர்மையாச் சொல்லியிருக்கீங்க. அதுல சந்தேகம் இல்லை. என் பின்னூட்டம் ஜாலியானதுதான்.

      கமலஹாசனுக்கு மக்கள் ஆதரவு இருக்குமா, (இருக்காது என்பது என் அபிப்ராயம். அவர் என்ன சொல்லவரார் என்பது அவருக்கே புரியாது. ரஜினிக்கு அதிக ஆதரவு இருக்கும்னு தோணுது), யாருக்கு பொதுமக்கள் ஆதரவு என்பதெல்லாம் கேள்விக்குறியதுதான்.

      இன்றைய அரசியல் களத்தில் ஓரளவு நேர்மையாளர் யாருன்னுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். (கமல் அந்த லிஸ்ட்ல வரலை)

      நீக்கு
    5. உங்கள் கருத்தை ஏற்கிறேன் நண்பரே நான் கமலை முழுமையாக நம்பவில்லை.

      நீக்கு
    6. வாங்க ஜி நன்றி

      நீக்கு
  4. பாதி ஆதரவு தந்திருக்கிறீர்கள் போல! ஸோ... நாட்டில் தேர்தல் ஜுரம் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இதைக்கூட அரை மனதுடன் ஏற்கிறேன்.

      காரணம் பிறமொழிக்காரனிடம் தமிழன் தோற்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

      வேண்டுமானால் அனைத்து ஜாதிகளையும் அன்புடன் அரவணைத்து செல்லும் பா.ம.க.விடம் தோற்கட்டுமே...

      கமல் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் நான் காரணமாக மாட்டேன்.

      நீக்கு
    2. என்னுடைய கருத்து மொழியை வைத்து பிரிவினை எண்ணவேண்டாம் என்பது. என்னுடைய கருத்து அது. இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் கமல் ஜெயிக்க வேண்டுமா?

      நீக்கு
    3. இனிமேலாவது தமிழ்நாட்டை (காமராஜருக்குப் பிறகு) தமிழன் மட்டுமே ஆளவேண்டும் எனக்கு கமலின் வெற்றி, தோல்வி முக்கியமல்ல! கமலிடமும் தகுதி இல்லை என்பதை பட்டியலிட்டு இருக்கிறேனே...

      கமலைத் தவிர்த்து மற்றவர்கள் இல்லையா ?

      அரபு தேசங்களில் வாழ்பவர்களுக்கு தெரியும் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதை.

      ரஜினி கர்நாடகத்தில் கட்சி ஆரம்பிக்க கூடாதா ? ஏன் தமிழர்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்பதை அறிந்து கொண்டுதானே...?

      எனக்கு கமலும் முக்கியமல்ல! நல்லதொரு தமிழன் ஆளணும்....

      அவன் யாரு ???

      நீக்கு
    4. கில்லர்ஜி - பிரச்சனை நம்மிடம் (தமிழன்) தான் இருக்கிறது. நிறைய கம்பெனிகளில் இந்தியர்கள்தான் ஃபைனான்ஷியல் கண்ட்ரோலர்களாக இருப்பார்கள் (அரபு தேசங்களில்)

      நமக்கு தமிழந்தான் தலைமைதாங்கணும் என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை என்பது என் எண்ணம். யாராய் இருந்தால் என்ன, ஒழுங்கானவராக இருந்தால் போதாதா? ஒரு தமிழன் என்று வந்தால், அவன் எந்த ஜாதி, எந்த ஊர் என்றெல்லாம் அடுத்த கேள்வி வரும். காமராஜருக்கு அப்புறம் அரசியலில் எந்தத் தமிழன் ஒழுங்கு என்று சொல்லமுடியும்?

      நீக்கு
    5. இதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதைப்போல் மலையாளியும், கன்னடரும், தெலுங்கரும் நினைத்து தமிழனை ஒரேயொரு முறையாவது முதல்வராகட்டும்.

      இப்படியே போனால் கடைசியில் தூத்துக்குடியை காப்பாற்ற அவ்வூர் மக்கள் போராடுவது போல, ஈழத்தமிழர்கள் போல தமிழினமும் ஒருநாள் உரிமைக்காக போராடும் நிலை வருவது உறுதி.

      நீக்கு
  5. என்னோட அம்மாவுக்குப்பரமக்குடி தான் சொந்த ஊர். கமலஹாசன் குடும்பத்தை என் தாத்தாவுக்கு (அம்மாவின் அப்பா) நன்றாகத் தெரியும். ஹிஹிஹி! ஆனால் அதுக்காகவெலலம் ஓட்டுப் போட மாட்டேன்! வரட்டும் பார்க்கலாம். உல(க்)கை நாயகன் மேல் நீங்க வைச்சிருக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை. குழப்பவாதி! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நான் நம்பிக்கை வைக்கவில்லை. குழப்பவாதி என்பதை மறுக்கவில்லை, இருப்பவர்களில் பரவாயில்லை என்று குறிப்பிடுகிறேன்.

      இதோ இன்று கமல் வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறேன் மகனுக்கு பெண் பார்க்க வந்தோம். இன்னும் தீர்மானமாகவில்லை.

      நீக்கு
  6. ஆஹா ரஜினிக்கு அடுத்து கமலா.... உங்கள் கருத்துகளை சிறப்பாக பதிவிட்டு இருக்கிறீர்கள்.

    அரசியல் - மஹா கேவலமாக ஆகியிருக்கிறது தமிழகத்தில். ஏதோ ஒரு படத்தில் வரும் பாட்டு நினைவுக்கு வருகிறது - ”எல்லோருமே திருடங்க தான் சொல்லப்போனால்....”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சரியான பாட்டுதான் சொன்னீர்கள்.

      நீக்கு
  7. யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மக்கள் நினைத்தால் தாங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம், அதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு என்று சொல்லப்பட்டது,அந்த நம்பிக்கையும் முறிந்து போவதைத்தானே இப்போது பார்க்கிறோம். என்ன ஜனநாயகமோ? என்ன ஓட்டுறிமையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் ஓட்டுரிமையின் பவர் அறியாதவர்களாக தமிழர்களை ஆக்கி விட்டார்கள்.

      நீக்கு
  8. யார் ஆண்டாலும் நல் ஆட்சி தரட்டும்.
    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அந்த நல்ல ஆட்சிக்கு தமிழன் யாராவது வரட்டும்.

      நீக்கு
  9. எப்பப்ப எதை செய்யணுமோ அப்பப்ப அவர் செய்வார், சரியா நண்பரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே சரியே.

      இதை ஒழுங்காக செய்தால் நல்லது இப்போதைய செயல்கள் சற்றே நம்பிக்கை தருகிறது.

      நீக்கு
  10. அவர் தமிழன் என்பதற்காக மயிலிறகால் தடவியிருக்கிறீர்கள் கில்லர் ஜீ... அப்படிப்பார்த்தால் பொறி உருண்டை, டுமிழிசை போன்றோரும் தமிழர்கள் தானே? தமிழகத்திற்கு இவர் வந்தால் நாமத்தை போடுவாரா இல்லையா என்று தெரியாது.. ஆனால் ஓட்டுக்களைப்பிரித்து சங்கிகளின் துணையோடு சில டம்மிகள் வந்து, ஆட்டையை மட்டுமல்ல தூத்துக்குடி போல ஆளையே போட காரணமாகிவிடுவாரே தலைவரே...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன் என்ற ஒரே காரணத்தை வைத்து மட்டுமே ஆதரவு. மற்றபடி தகுதி இல்லை நண்பரே... எனது ஓட்டு நிச்சயமாக இல்ஸை.

      நீக்கு
    2. வாய்ப்பு மிகுதி

      நீக்கு
    3. நன்றி திரு. ஆதி

      நீக்கு
  11. மறுபடியும் நடிகர்கள் கையில் நாடா? தாங்காது சாமி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னால் கணிப்பு சரியே வேண்டாம் நண்பரே...

      நீக்கு
  12. எனக்குப் பிடிக்கவில்லைலைலைலைலைலைலைலைலை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அங்கிள் பிடிக்கவில்லையா ? ஆச்சர்யந்தேங்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அங்கிளைக் குறை ஜொன்னது பிடிக்கல்லே:)) அரசியல் எனில் எதுக்கு அதனுள் தகப்பன் மகள் உறவை உள்ளே இழுக்கோணும்.... நான் உண்ணாவிரதம் இருப்பேன்ன்ன்ன்ன்ன் கீசாக்கா ஜெல்ப்புக்கு வாங்கோஓஒ:))

      நீக்கு
    3. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் ஒழுக்க சீலராக இருத்தல் அவசியம்.

      இது உங்கள் அங்கிளிடம் கிடையாது மகளை கட்டிப்பிடிக்கும் விதம் சரிதானா ?

      இது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானதே...

      நீக்கு
  13. அவர் சொன்னதைக் கேட்டவரை ஏதோ நல்லது நினைக்கிறார் என்றேதோன்றுகிறது மற்றபடி கில்லர்ஜி நடிகர்கள் ஆட்டக் காரர்கள் பற்றி எழுதும் போது “வேண்டாத மருமகள்கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் : என்னும் சொல் வழக்கு ஏனோ நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கணிப்பு சரியே... எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. உண்மை நிலையை விவரித்தேன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு ரையும் அலசிய முறை கண்டு வியக்கி றேன்.. பாராட்டுகிறேன். இதே போல் நாட்டில் ஒவ்வொருவரும் அலசி ஆராய வேண்டுமே..செய்வார்களா? நாட்டின் தலைவிதி அவர்கள் செய்கையில்தான் உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அலசி ஆராய்ந்து ஓட்டளித்தால் அரிசி விலை இப்படி ஆகி இருக்குமா ?

      பணத்துக்கு ஓட்டளிக்கும் நிலை மாறவேண்டும்.

      நீக்கு
  15. /..மேலும் அரசியல் அறிந்த உம்மிடம்..//

    என்ன, இந்த ஆளைப்பற்றி இப்படி ஒரு இமேஜா! அரசியல்வாதியாக கறுப்புச்சட்டையில் காட்சி அளிப்பதா இல்லை, வெள்ளையே சரிதானா என்பதைக் கூட அவரால் இன்னும் முடிவுசெய்யமுடியவில்லையே ஐயா! ஏதோ சிலரை இம்ப்ரெஸ் செய்யும் நிலையில் பினராயி விஜயனில் ஆரம்பித்து, இப்போது அடுத்தவீட்டு குமாரசாமிக்குப் பக்கத்தில் நின்று போஸ் கொடுத்துவிட்ட பெருமிதத்தில் இருக்கிறார் மனுஷன்! இன்னும் வேல்முருகன், சீமான் போன்றோரே பாக்கி - ஃபோட்டோ செஷன் முடிக்க. சாயம்பூசிய மீசையோடு சாயப்போவது யார் பக்கமோ?

    கமல் நிற்கும் தொகுதியில் (அவர் நிற்பாரா என்பதே சந்தேகம்!) அவருடைய எதிரிகள் எத்தகைய போஸ்ட்டர் ஒட்டலாம் என்பதற்கு ஐடியா கொடுப்பதுபோலிருக்கிறது நீங்கள் போட்டிருக்கும் அதிரடி படம்.

    எப்படியிருப்பினும், அடுத்த தேர்தலில் எண்டர்ட்டெயின்மெண்ட்டிற்கு குறைவிருக்காது என்பதில் தமிழர்களாய் அகமகிழ்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கமலைப்பற்றி நிறைய குறைகளும், சற்றே நிறைகளை தேடிச் சொல்ல முயன்றேன். மற்றபடி எனக்கு நம்பிக்கை இல்லை.

      தமிழன் ஆண்டால் போதும். தமிழ் நாட்டில் ஒரு தமிழன்கூட நல்லவன் இல்லையா ?

      விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  16. மாமேதை கமலஹாசனுக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லையாம். சேர்ந்து வாழ்வதுதான் சரி என்றார். இப்போ அந்தம்மாவும் இவர் சுயநலவாதி என்பதாலோ என்னவோ ஓடிப் போய்விட்டது. அடுத்த பொன்ணூ ஒன்னை இன்னும் ஏன் தேர்த்தலைனு தெரியலை. ஏன் இப்படி தனியாக வாழ்ந்து கஷ்டப்படனூம். பொன்னா கிடைக்காது? அப்படியே யாரையும் வச்சிருந்தாலும் இச்சூழலில் அது தவறாகத் தெரியும் என்கிர பயமோ???

    இவரோட வாழ்ந்த மணந்த, இணந்த பெண்கள இவர் மதிக்கவில்லை. கறீவேப்பிலை போல் பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்கள்.

    ஆனால் ஊரில் உள்ள பெண்களூக்காக கண்ணீர் விட்டு அழுகிறார். இதெல்லாம் என்ன நாடகம்? தமிழனிடம் இன்னாடகம் வொர்க் அவுட் ஆகும். அவந்தான் அடிமுட்டாலாச்சே?

    மாட்டிடம் வீரம் காட்டுவது மூடத்தனம் என தெரியாத நாத்திக அடிமுட்டாள் கமலஹாசன்.

    படிப்பறீவென்பது சுத்தமாகக் கிடையாது. படித்தது ஏழாவது. ஆனால் எல்லாம் தெரியும் என்பதுபோல் முழு உளறல். க்ரியேட்டிவிட்டி இல்லை என்பதால் எதையும் திருடி தன் உடமையாக்கிக் கொள்தில் வெட்கமே கிடையாது (கட்சி கொடி முத்திரை வரை) ஆனால் ஹார்வேர்டில் இவரக்கூட்டி வச்சு அழகுபார்க்கிறார்கள் முட்டாள் தமிழர்கள்.

    தமிழனுக்கு சிந்திக்கத் தெரியாது. தமிழனுக்கு யாராவது வெள்ளயாக இருந்தால் போதும். தமிழனுக்கு கிட்டப் பார்வை. தமிழனுக்கு பார்ப்பன அடைமைத்தனம் மிகவும் பிடிக்கும். படிப்பறீவில்லாப் பார்ப்பனரையும் மதிப்பவன் தமிழன்>
    கில்லர்ஜி சுத்தமான நீங்களூம் சுத்தமான தமிழன் என்பது தெளீவுபடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு...
      நான் கமல் ரசிகன் கிடையாது என்பதை முதலில் அறிக.

      விரிவாக இவனைப்பற்றி சொன்னீர்கள். தமிழ் நாட்டில் இவ்வளவு தமிழன் இருக்கும்போது பிறரை ஏன் முதல்வராக்க வேண்டும் ?

      இருக்கும் திருடர்களில் சற்றே இவனை நம்பலாம் என்ற தொனியில்தான் சொன்னேன்.

      இது ஏற்கத்தக்கதல்ல! என்றால் வேண்டாம் வேறொரு தமிழனை தேர்ந்தெடுப்போம்.

      நீக்கு
    2. நானும் சுத்தமான தமிழனே என்னிடம் ஜாதி, மத பேதமில்லை.

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  17. தெரிந்தவர்களுக்குத்தான் மகளும் தந்தையும் என்று தெரியும்...தெரியாதவர்களுக்கு....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாதவர்கள் அப்படியும், இப்படியும், எப்படியும் நினைப்பார்கள் நண்பரே.

      நீக்கு
  18. கை இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது அதான் இத்தினி நாள் எங்கும் பதிவுகளை படிச்சாலும் பதில் டைப்ப முடியாம இருந்து ..பதிவைப்பற்றி சொல்லனும்னா நிறைய சொல்லலாம் .கொஞ்சமா சொல்லிடறேன் ..முதலில் திருமணம் ..கில்லர்ஜி இப்போல்லாம் அந்த காலப்பிள்ளைகள் போலில்லை .யாரையும் பெற்றோர் கட்டுபபித்த முடியாது .எல்லாம் கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஒரு பந்தத்தில் சிக்கிக்கொள்ள மறுக்கிறாரகள் இக்காலத்து பிள்ளைகள் .
    நம்மாலானது எல்லா பிள்ளைங்களும் நல்ல இருக்கட்டும்னு வேண்டிக்கறத தவிர ஒன்னும் செய்யமுடியாது . இன்னொன்னு கல்யாணமானாலும் இல்லைஅடுத்த மாதமே டைவர்ஸ் ஆனாலும் எல்லாவற்றையும் தாங்கும் மனா தைரியம் இவர்களுக்குண்டு .நிச்சயமாக இந்த பந்தம் காலமுழுதும் தொடரும் என்ற நம்பிக்கை வரும்வரை காத்திருக்கிறார்கள் இக்கால ஜெனரேஷன் .

    அப்புறம் தேர்தல் அரசியல் ..நம்ம மக்களுக்கு காசுப்பணம் குக்கர் டிவி மிக்சிலாம் அதிராவின் அங்கிளாலும் இல்லை எங்க சித்தப்பாவாலும் கொடுத்து கட்டுப்படியாகுமா ? அதுவும் சித்தப்பா மனைவி சித்தி இருக்காங்களே பாபா பட வெளியிடும் நேரம் அவங்க படத்தில் வந்த கத்தியை வச்சும் பிஸ்னஸ் செஞ்சதை நிறையபேர் மறந்திருக்க மாட்டாங்க .
    அடுத்தது யாராவது ஒருவர் சாதி மதம் இல்லாத அரசியல் செய்ய முன்வருவார்களா ? யார் வந்தாலும் அவங்க கொள்கைகளை மக்கள் மேல் திணிக்காமல் இருப்போர் வரட்டும் .
    கமல்ஹாசன் ஓரளவுக்கு தனது பேச்சால் மக்களை கட்டிப்போடலாம் ஆனால் ..அரசியலில் தாக்குபிடிப்பது கஷ்டமே ..அதேபோல்தான் சித்தப்பாவும் .


    யாரவது ஒரு தேற்றரவாளன் ஆபத்பாந்தவன் மக்களை நேர்மையான பாதையில் நல்வழியில் கூட்டி செல்வாரா என் மனம் ஏங்குது .
    அப்புறம் எனக்கும் கமல்ஹாசன் அவர்கள சில விஷயங்களில் பிடித்திருக்கு :)
    தமிழன் நடிகர் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு எதோ ஒரு சின்ன ஆறுதல் அவரது சமீப நடவடிக்கைகளில் தெரிகிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      கை வலி விரைவில் குணமாகட்டும்.
      அழகாக, விரிவாக கருத்துரை தந்தீர்கள் உங்களது சித்தியைப்பற்றியும் விபரம் அளித்தமை சிறப்பு.

      உங்களது கூற்றுப்படிதான் கமலிடம் சற்றே ஆறுதலான மாற்றம் கிடைக்கலாமோ என்று சொல்ல வந்தேன். ஆனால் பலரும் தவறு என்றே சொல்லி இருக்கின்றார்கள்.

      பார்ப்போம் நடக்கப்போவதை...

      நீக்கு
  19. அது யாருங்க கருட சித்தர்

    பதிலளிநீக்கு
  20. இப்போதுதான் படித்தேன் தமிழ்ப் பேப்பரில். உங்கள் நினைவு உடனே வந்தது!

    யாரோ..இயக்குனராம்..விக்னேஷ் சிவன் என்று பெயராம். அவரு சொல்லியிருக்காரு அல்லது நம்பளப் பாத்துக்கேக்குறாரு :
    தோனி என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படி இருக்கும்! ?

    எப்படில்லாம் நம்ம ஆட்களுக்கு ஏக்கம் பாருங்க! இதப்படிச்சிட்டு ஆமா நானும் இதத்தான் நெனச்சேன்..! -ன்னு சொல்றவன்களும் நெறயப்பேர் இருப்பானுங்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னமோ தெரியலை தமிழனுக்கு மட்டும் அடுத்தவனை ஏற்றி விட்டு பார்க்கும் வினோதமான ஆசைகள் பிறக்கும்.

      மதுரையில் ஒரு தெருவுக்கு பெயரே "டோணி தெரு" அவனுடைய மாநிலத்தில் வைக்கின்றார்களா ?

      கிரிக்கெட்டில் உழைத்து அவனுடைய குடும்பத்துக்கு சொத்து சேர்த்து விட்டான். அதற்காக பிரதமர் பதவியா ?

      நீக்கு
    2. நான் வெகு நாளாகவே ஏன் யாரும் தோணியை முதலமைச்சராக்குவோம் என் கிளம்பவில்லை என நினைத்தேன். ரஜினி+கமல் போன்ற நிழல் தலைவர்களை நம்புபவர்கள் ஏன் தோனியை தலைமையேற்க அழைக்கவில்லை என

      நீக்கு
  21. ரஜினிக்கு எழுதிய கடிதமும், கமலுக்கு எழுதிய கடிதமும் சரிதான். ஆனா, அவங்க மகள்களை பற்றி எழுதனுமாண்ணே?!

    ரஜினி இளைய மகள் விவாகரத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதேப்போலதான் கமலின் மகளுக்கு திருமணம் அமையாமல் போகவும் காரணம் இருக்கலாம்.

    கமல் நடத்தை பத்தி பேசலாம் அதும் தவறுன்னுதான் சொல்வேன். கமல் எதும் கற்பழிப்பு செய்தாரா?! இல்லையே! முறையாய் திருமணம் செய்தது இருமுறை. கவுதமி ஒப்புதலோடு லிவிங்க் டூகெதரா இருந்தது அவங்க தனிப்பட்ட விசயம். மத்தபடி ஒழுங்கா வரி கட்டுறார், ரசிகர் மன்றங்களை நற்பனி மன்றங்களாக்கி ரொம்ப வருசமாச்சுது.. நானும் கமல் ரசிகை கிடையாது. ஆனா, ரஜினியைவிட கமல் அரசியலுக்கு நூறு மடங்கு அதிகமா பொருந்துவார். அவர் யாருக்கும் கட்டுப்படாம நடந்தா நல்ல ஆட்சியை பிடிப்பார்ன்னு என் நினைப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அருமையாக விளக்கினீர்கள், உங்களுக்காக மகள்களைக் குறித்த விடயங்களை பின்வழிக்கிறேன்.

      சரி பொது வாழ்க்கைக்கு வருபவரின் வாழ்க்கை ஒழுக்கமானதாக இருத்தல் வேண்டாமா ?

      நமது முதல்வரே கௌதமியோடு சேர்ந்து வாழ்ந்தது தவறில்லை என்னும் வகையில் தொண்டர்களும் ஒரு சிம்ரனைத் தேடிப்போனால் கலாச்சார நிலை ?

      நானும் இதையே சொல்ல வந்தேன், ரஜினியைவிட கமல் விபரமானவர் மேலும் தமிழன் என்று இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு இருக்கட்டுமே... வேறு தமிழன் வரட்டும் அவன் நல்லவனாக இருந்தால் மகிழ்ச்சி.

      நீக்கு
  22. கமல் வெளிப்படையான மனிதர். குறைகள் உண்டு. என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இதைத்தானே நானும் சொல்ல வருகிறேன்.

      நீக்கு
  23. ரஜினிக்குச் சொல்வதை விட
    கமலுக்குச் சொல்வதை விட
    மக்களுக்குச் சொல்ல வேண்டும்
    பணம் வாங்கி வோட் போடாதீங்க என்று தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான்.
      இது மக்களுக்கு புரிகிறதா ?

      நீக்கு
  24. எவன் எவனோ தலைவனாகப் பார்க்கிறான். தமிழனைத் தமிழனே[அல்லது உண்மையான தமிழ் இன உணர்வுள்ளவன்] எப்போதும் ஆள வேண்டும் என்பது உங்கள் விருப்பம். இன உணர்வு உள்ள அனைவரின் விருப்பம்.

    பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது தமிழனின் பற்றே தவிர கமல் மீது உள்ள பற்றல்ல!

      நீக்கு