இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 07, 2018

துபாய் விசா Dubai Visa


வணக்கம் நட்பூக்களே இவர்கள் உண்மையிலேயே வாழ்த்துகின்றார்களா ? இல்லை நக்கலடிக்கின்றார்களா ? என்று எனக்கும் குழப்பம் உண்டு அதன் மேலே எழுதியுள்ளதை பாருங்கள் உண்மை உழைப்பு உயர்வு இதுல, உண்மையாக உழைத்தது யாரு ? கீழே ஒரு அறிவுச்சுடர் சொல்லி இருக்கின்றார் பாருங்கள் அமெரிக்க அதிபர் நமீதா வாழ்க ! என்று ஏண்டா டோய் அதிராவோட அங்கிள் பராக் ஒபாமாவுக்கு மட்டும் தமிழ் படிக்கத் தெரிஞ்சுச்சு முதல்ல நமீதாவைத்தான் தூக்கிட்டுப் போவாரு.. தெரிஞ்சுக்க உன்னோட அபிமான நடிகையை வாழ்த்துறேன்னு பேருல ஆப்பு வச்சிடாதே... பாவம் அந்தப்புள்ள (?) ஏதோ வயித்துக்கு கஞ்சி ஊத்துறதுக்காக வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்துக்குள்ளே காலை விட்டுருச்சு.

இவங்களுக்கு இந்த வேலைகள் சரியென்று தோன்றுகின்றதா ? சிலர் சொல்வார்கள் வயசுப்பசங்க நாளைக்கு திருமணம் நடந்து குழந்தை, குட்டி ஆனால் திருந்தி விடுவார்கள் என்று திருமணம் ஆன ஜடங்களும் இப்படி திரிகின்றதே... ரசிகன் என்பதின் தொடக்கம் தொண்டன் என்ற வட்டத்துக்குள் வந்து நிற்கின்றது உனது அபிமான நடிகன் உன்னுடைய கரகோசங்களால் ஈர்க்கப்பட்டு நாற்காலி ஆசையில் மூழ்கி அவன் ஆட்சியைப் பிடிக்கின்றான் என்றால் மேலும் சுகவாசி, இல்லையெனில் லாபத்தில் நஷ்டம் ஆனால் உமது நிலை ? காலம் முழுவதும் கோஷம் போட்டே சாகின்றாய் நீ யாருக்குத்தான் கோஷம் போடவில்லை ? ஒரு காலத்தில் பாக்கியராஜின் பிறப்பு இந்தியாவின் சிறப்பு என்றாய் இன்று என்வாயிற்று உன் பேச்சைக்கேட்டு இறங்கியதில் இன்று ஈமு கோழி விற்கும் நிலைக்கு தள்ளி விட்டு அதிலும் ஏதோ பிரச்சனை வந்து விட்டதாக சமீபத்தில் படித்தேன். இதே வழியில் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இப்பொழுது கமல்ஹாசன் பிழைக்க வந்த ரஜினிகாந்த் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பழமை வாய்ந்த ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று என்றால் தமிழனும் பழமை வாய்ந்தவன் என்பதுதானே அர்த்தமாகின்றது உலகிற்கே வாழ்வியல் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த தமிழ் பெருமான்கள் உண்டு இன்று திரைப்படத்துறையிலும் சரி, அதன் வழியாய் அரசியலிலும் சரி பிற மொழிக்காரர்களின் சாம்ராஜ்யமே நடக்கின்றது இது உலகத்தின் பார்வையில், விமர்சனத்தில் தமிழனுக்கு பெருமையா ? இழுக்கா ? என்பதை நீ என்றாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா ? உனது செயல்களால் நீ மட்டும் பாதித்தால் நான் இப்பதிவை எழுத மாட்டேன் நண்பா உன்னால் தமிழ் இனமும் பாதிக்கப்படுகின்றது அந்த வட்டத்துக்குள் தமிழன் என்பதால் நானும் அவமானப்பட்டு இருக்கின்றேன் அரபு தேசங்களில் வாழும் பல தமிழர்களுக்கும் இந்த அவமானங்கள் நிகழும் விடுமுறை நாட்களில் அறையில் நண்பர்களோடு ஒரு சினிமா பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் கன்னடன் சொல்கின்றான், மலையாளி சொல்கின்றான், தெலுங்கன் சொல்கின்றான் என்ன தெரியுமா ? எங்கள் ஆளை பார்த்தாயா ? என்று காரணம் அந்த திரைப்படங்களில் நாயகன் தமிழன் இல்லை, நாயகி தமிழச்சி இல்லை, வில்லன் தமிழன் இல்லை, ஆனால் ஒரேயொரு தமிழன் நிச்சயம் உண்டு அவன்தான் காமெடியன் அதாவது கோமாளி அர்த்தம் புரிகின்றதா ? அதாவது 90 சதவீதம் திரைப்படங்களும் இப்படித்தானே இருக்கின்றது இதற்கு நீ விளக்கம் சொல்லலாம் வந்தாரை வாழ வைத்தோம் என்று எங்கே ஒரு தமிழனை பிற மாநிலத்தில் நாயகனாக வேண்டாம் ஒரு காமெடியனாக வாய்ப்பு கொடுக்கச்சொல் பார்க்கலாம் நிச்சயமாக நடக்காது வேண்டுமானால் நாயகி அவள் அழகியாக இருந்தால் ? அவர்கள் ‘’பயன்படுத்தி’’ இருக்கலாம் நண்பா இது தமிழனுக்கு அவமானமில்லையா ? மலையாளியான எம்ஜிஆர் கன்னடனான ரஜினிகாந்தை கோயம்புத்தூரில் ஆள் வைத்து அடித்த பழைய சம்பவம் தெரியுமா ? அதன் காரணம் தெரியுமா ? நடிகை லதா யாருக்கு சொந்தம் என்பதே... இன்று இவளும்கூட சந்தர்ப்பவாத அரசியல் பேசுகின்றாள், காலக்கெரகமடி கருமாரி. பிழைக்க வந்தவர்கள் தைரியமாக தமிழச்சியை பங்கு போடுகின்றார்கள் இதற்கு அடியாள் கூட்டம் தமிழன் மானக்கேடு தமிழனுக்கு இது உரைக்கணும் உரைக்கும். கன்னடன் பிரகாஷ்ராஜ்கூட சமீபத்தில் கர்நாடாகாவை கன்னடனே ஆளணும் என்று சொல்லி இருக்கிறான் இது தவறில்லை அதேவேளையில் தமிழ்நாட்டில் யாரும் ஆளலாம் என்று சொல்லி இருக்கின்றானே காரணம் என்ன ? தமிழனின் லட்சணம் அறிந்தவன் தொடக்க காலத்தில் பிட்டு படங்களில் நடித்துக் கொண்டு இருந்த மூதேவி இதெல்லாம் தமிழக அரசியலை நிர்ணயம் செய்கிறது.

இந்த கோமாளிகளின் செயலை தடுப்பதற்கு அரசோ, சமூகமோ முன்வருவதில்லை அரசு வராது காரணம் இந்த வகையான கூமுட்டைகளால்தான் இன்றைய ஆட்சியாளர்கள் நாற்காலிகளை பிடித்தார்கள் இவர்கள் இதே நிலைப்பாட்டுடன் இருந்தால்தான் நமது வாழ்க்கை இப்படியே போவதோடு நமது வாரிசுகளும் இதையே தொடர்ந்து செல்லும், மக்கள் வரமாட்டார்கள் காரணம் இன்றைக்கு நாம் வேலைக்கு சென்றால்தான் நாளை நமது வீட்டில் உலை வைக்க முடியும் அதேநேரம் ஊரில் மதச்சண்டைகள், திரைப்பட ஸூட்டிங்குகள் நடந்தால் இவைகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் நமது தமிழ்நாடு நாசமாகப் போனதற்கு அடிப்படை காரணங்கள் இவைகள்தான் இவர்களுக்கு வாழ்வியல் உண்மையை புரியவைக்க கூடிய பக்குவமான யோசனைகள் எம்மிடம் நிறைய இருக்கின்றது ஆனால் அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் எனக்கில்லை ஒருக்கால் இருந்தால் ?


இவர்களுக்கு இந்த வட்டத்துக்குள் எனது மகன் இருந்தாலும் அரசு செலவில் துபாய் விசா எடுத்து (பிறகு இந்த செலவை மாதசம்பளத்திலிருந்து சிறிய தொகையாக திருப்பி வசூல் செய்யப்படும்) இவர்களுக்கு கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கம்பெனியில் வேலை கொடுத்து காலை 4:00 மணிக்கு எழுந்து வேலை முடிந்து மாலை 7:00 மணிக்கு கேம்ப்’’க்கு திரும்பி உணவு சமைத்து, குளித்து முடித்து சாப்பிட்டு மீண்டும் காலை 4:00 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று வந்தால் ? அதுவும் வெயில் கால மே, ஜூன், ஜூலை மாதங்களில் சென்று வந்தால் ? வாழ்வியல் உண்மை விளங்கும் சோறு என்றால் என்ன ? என்பது விளங்கும், குழம்பு என்றால் என்ன ? என்பது விளங்கும், அவைகள் நமக்கு இவ்வளவு நாட்களும் எப்படி கிடைத்தது ? என்பது விளங்கும் அப்பாவின் உழைப்பு விளங்கும், அம்மாவின் கையால் உணவருந்திய இன்பம் விளங்கும், தங்கை தனக்கு உடை துவைத்துக் கொடுத்த பணியின் தன்மை விளங்கும், தலைவலி வந்தபோது அருகில் அமர்ந்து தைலம் தடவி விட்ட அப்பத்தாவின் பாசம் விளங்கும், வாழ்வியல் உண்மைகள் அனைத்தும் விளங்கும் நண்பா இவைகள் உங்களை பழி வாங்குவதற்கு அல்ல ! உங்களை நெறிபடுத்தி மனிதனாக்கவே உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.
 
கண்டிப்பாக இந்தியர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள் உங்கள் தந்தையோ, சகோதரர்களோ இப்படித்தான் வாழ்கின்றார்கள் ஒரு காலத்தில் நானும் இந்த வகைதான் கயிற்றில் தொங்கி வேலை செய்த அனுபவம் எமக்கும் உண்டு கரணம் தப்பினால் மரணம் எமது முயற்சியால் நான் இதிலிருந்து விடுபட்டு பிறகு அரசு அலுவலகத்தில் Filing Clerk ஆக வேலை செய்தேன் இறைவனுக்கு நன்றி.


Chivas Regal சிவசம்போ-
அதிராவின் அங்கிள் சொன்னதுதான் நடக்குமோ...?

91 கருத்துகள்:

  1. கடைசி குறிப்பு "ஏன் அப்படி"
    அதிர அக்காவா பல நாள் கணமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் தேடிக்கொண்டு இருக்கிறோம் நண்பரே

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆ நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் தம்பி மொகமட்:).. கடசிக் குறிப்பு குழம்பாதீங்க ஹா ஹா ஹா:)) சிவாஸ் றீகல் சிவசம்போ “அவர்களை” ...அங்கிள் என நான் சொல்லத்தொடங்கியதிலிருந்தே அவருக்கு எல்லோரும் மதிப்புக் குடுக்கினம்.. இன்குளூடிங் கில்லர்ஜி:))...

      ஆங்ங்ங்ங் டொல்ல மறந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:))

      நீக்கு
    3. வாங்க நான் உங்களது அங்கிள்னு சொன்னது பி.எஸ்.வீரப்பா அவர்களைத்தான்.

      நீக்கு
  2. கில்லர்ஜி ! நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னா, மே மாதம் நல்லா வெயில் அடிக்கும் என்று சொன்ன மாதிரி இருக்கும் !
    தொடர்ந்து வாசித்து வந்தாலும் இன்றுதான் கருத்திட மனமும் நேரமும் அமைந்தது.
    நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. ரமேஷ் அவர்களின் முதல் வருகையை பூங்கொத்துடன் வரவேற்கிறேன்.

      தொடர்ந்து கருத்துரையை பதியுங்கள் அது எதிர்பதமாக இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள உதவும் நண்பா.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. கோபத்திலுள்ள நியாயம் தெளிவாய்ப் புரிகிறது அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  4. அரபு நாடுகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் உண்மையிலே வாழும் தெய்வங்கள்தான்.. ஒரு முறை துபாய் சென்றேன் அதுவும் மாலை நேரத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாராண்டுக்கு சாப்பிட நடந்து சென்றோம் 100 அல்லது 200 அடிகள்தாம் நடந்து இருப்போம் அப்பப்பா என்னா சூடு தாங்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தமிழா!

      இதைவிட கொடுமையானது சொல்லவா கிரேடரில் நூறு மாடி கட்டிடத்துக்கு வெளியே தொங்கி கொண்டு முழுவதுமே கண்ணாடி சுவர்கள் அதை சுத்தம் செய்து கழுவவேண்டும்.

      சூரியஒளி கண்ணாடியில் பட்டு அதன் பிம்பம் கண்ணில் அடிக்கும் எங்கு போவது ?

      பொருத்துக் கொண்டு கழுவவேண்டும் இதனால் விரைவில் பார்வை இழந்தவர்களும் உண்டு.

      இத்தனைக்கும் இதற்கு அடிமட்ட சம்பளமே...

      நீக்கு
    2. கில்லர்ஜி.. இதில் சொல்ல விட்டது, அப்படி ரிஸ்க் எடுத்து வெளிக் கண்ணாடியைச் சுத்தம் செய்பவர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் 8500 ரூபாய். விழுந்தாலோ ஆக்சிடன்ட் ஆனாலோ ஒரு காம்பன்சேஷனும் கிடையாது. இந்த ஊரில் 50 தினார் இதற்காக வாங்கிக்கொள்பவர்கள் வேலை அயர்ச்சியில் அதை குடிக்கு உபயோகப் படுத்துகிறார்கள் (பெரும்பாலும் ஆந்திர மக்கள்)

      நீக்கு
    3. ஆம் நண்பரே நானும் பார்த்து இருக்கிறேன் இப்படி உழைத்த பலரும் குடிகாரர்களாக இருப்பது வேதனையே...

      நீக்கு
  5. நல்ல விழிப்புணர்வுப் பதிவு ஜி.

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி உங்கள் கருத்துகள் ஆதங்கம் சரிதான். ஆனால் பாருங்கள் இதில் சமூகம் என்று சொல்லும் போது அதில் நாமும் அடங்குகிறோம்...எதற்காகச் சமூகத்தையும் அரசையும் புத்திமதிக்கு நாட வேண்டும்? இது அவரவராகத் திருந்தினால்தான் உண்டு நாம் புத்தி சொன்னாலும் அது அவர்களுக்கு உரைத்தால் மட்டுமே. இல்லையேல் வீண். நாம் திருத்த வேண்டும் என்று நினைப்பது அந்த எண்ணம் அவர்களுக்குள் தோன்ற வேண்டும். அல்லாமல் நாம் யாரையும் மாற்ற முடியாது ஜி. செல்ஃப் ரியலைசேஷன் என்பது மிக மிக முக்கியம். அது அடிபட்டு அவர்களே புரிந்து கொள்வார்கள்.

    நாம் செய்ய நினைப்பதற்கு எந்த அதிகாரமும் தேவையில்லை. சத்தமே இல்லாமல் சைலன்டாக நாம் செய்ய நினைப்பதைச் செய்ய முடியும். நமக்கு அந்த எண்ணம் இருந்தால். நாம் எழுதுவதோ, மேடையில் பேசுவதோ நிச்சயமாக எடுபடாது. அச்செயலில் நாம் இறங்கினால் மட்டுமே. அதுவும் அவர்களுக்குள்ளும் அந்த எண்ணம் வர வேண்டும். இதைச் செய்வதற்கு அரசோ அல்லது சமூக அமைபுகளோ அதிகாரமோ தேவையே இல்லை ஜி. நாம் சைலண்டாக நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே போகலாம். அது என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக இந்த நிலத்திலோ அல்லது வேறு நிலத்திலோ கண்டிபபக மரமாக வளர்ந்து நல்லது விளைவிக்கும். ஒரு வேளை நாம் அதைப் பார்க்க இருக்க மாட்டோமாக இருக்கலாம் ஆனாலும் நல்லது தொடரும். எனவே சைலண்டாக நாம் செய்ய நினைப்பதைச் செய்யலாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      உண்மையை அழகாக சொன்னீர்கள் நம்மால் இந்த சமூகத்துக்கு இயன்றவரை நன்மையை கருதி விதைத்து வைப்போம் அவ்வளவே...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்களது ஆதங்கங்களும், வேதனைகளும் புரிகிறது. அனைவரின் சிந்தனைகளை தூண்டும் பதிவு. அனைவருமே மாறி உணர்ந்து கொள்ள வேண்டும். அது நடந்தால் மிகவும் நல்லது. அக்காலங்கள் விரைவில் வரட்டும். வேண்டுவோம்.. வேறென்ன செய்வது?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வரும் என்று நம்புவோம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. உங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த வெறி 60 வருடமாக வளர்ந்த மரம். வெட்டிச் சாய்ப்பது எளிதில்லை.
    வெளியிலிருந்து சொல்பவர்கள் அக்கறை இல்லாதவர்கள். தமிழன் வெளியே படும்பாடு தெரியாதவர்கள்.
    கீதா சொல்வது போல நல்ல வார்த்தைகளைத் தூவித்தான் நல்ல மனங்களாய் வளர்க்க வேண்டும். நிறைய வருடங்கள் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தாங்கள் பல இடங்களிலும் தமிழர்களின் நிலைப்பாட்டை கண்டவர்கள் ஆகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. நம்மால் இயன்றதை முயல்வோம். வருகைக்கு நன்றிமா.

      நீக்கு
  9. >>> இளம் வயதிலையே <<<

    >>> திரை துரையில் <<<

    >>> தன்னை இனைத்து <<<

    >>> வாழ்துகிறோம் <<<

    ஏதோ ஒரு கூமுட்டை - எழுத்துப் பிழைகளோடு இந்த விளம்பரத்தை அச்சிட்டுக் கொடுக்க,

    அதை சரி பார்க்கத் தெரியாமல்
    தெருவில் வைத்து காசைக் கரியாக்குகின்ற கசடுகள்....

    அருமையான விஷயத்தைச் சொன்னாலும் - பலன்?...

    கிண்கிணி ஓலியைக் கேட்குமா கிழிந்து போன காதுகள்!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அழகாக தங்களது பாணியில் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. ஹா ஹா ஹா துரை அண்ணன்.. காதுதானே கிழிஞ்சிருக்கு:) செவிப்பறை இல்லையே?:).. அப்போ கேட்கும்தானே?:))

      நீக்கு
    3. ஆஹா உங்கள் கண்டுபிடிப்பு கண்டு நான் வியக்கேன்.

      நீக்கு
  10. இத்த இடுகைக்கு அப்புறம் பின்னூட்டம் போடறேன். காவிரிக்காக ஐபிஎல்லைத் துரத்தியவர்கள், பூனாவில் ஐபிஎல்லைக் கண்டுகளிக்க இரயிலில் சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றி கண்எடுகொள்ழுளாத்தைப்த பற்றி எழுதலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதை நான் அறிந்திருக்கவில்லை மன்னிக்கவும்.

      நீக்கு
    2. ஆஆஆங் கில்லர்ஜி தப்பப்பார்க்கிறார் விடாதீங்கோ நெ.தமிழன்:).. என் கணவரிடம் நான் ஏதும் ஏடாகூட மெடிக்கல் சம்பந்தக் கேள்வி கேட்ட்டால்ல். “அந்த வகுப்புக்கு மட்டும் நான் அப்செண்ட் அதிரா:).. அதால எனக்கு தெரியல்ல எனச் சொல்லித் தப்பி ஓடுவார்ர்”.. அப்பூடி இருக்குது இதூஊஊ:)) ஹா ஹா ஹா..

      அது என்னமோ தெரியல்ல சினிமா என்றாலே கில்லர்ஜிக்கு பிளட்டு சூடாகிடுது ஹா ஹா ஹா:)).. ஹார்ட்தான் முக்கியம் கில்லர்ஜி:).. கவனம்:).

      நீக்கு
    3. தெரியாததை தெரியவில்லை என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்ததை தெரியாது என்று சொல்வதில் தவறு இருக்கிறது இது உங்களுக்கு தெரியவில்லை என்பது எனக்கு தெரிகிறது அதிரா

      நீக்கு
    4. ஆஷாபோஸ்லே அதிரா - உங்களை நம்பி கில்லர்ஜிகிட்ட கேள்வி மேல் கேள்வி கேட்டால், இராமனாதபுரம் மாவட்டத்திலேயே நான் கால் வைக்கமுடியாதபடி செய்துடுவார். எதுக்கு வம்பு.. ஹா ஹா ஹா

      நீக்கு
    5. நண்பரே நான் சிவகங்கை மாவட்டம். மீள் வருகைக்கு நன்றி

      //சிவாய நமஹ//

      நீக்கு
    6. ஆஷா போஸ்லே அதிரா////
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் நான் காணாமல் போய் வந்தாலும் மீ பாடுபட்டுப் பெற்ற பட்டம் மட்டும் காணாமல் போயிடாது என்பதால் மீக்கு மிக்க ஆப்பி:))..

      அதென்ன கில்லர்ஜி க்கு திடீர்ப் பக்தி வந்திட்டுதூஊஊஊஊஉ:) ஹையோ அவரின் ஜேம்ஸ் ஊரணியில குதிச்சு:) வெரி சொறி குளிச்சிருப்பாரோ:))

      நீக்கு
    7. சிவனின் கங்கையில் குளித்தால் "சிவாய நமஹ" சொல்லணும்.

      நீக்கு
  11. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    அரபு நாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் குடும்பமே உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் போது என்ன செய்வது?
    கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை உறவினருக்கு கொடுத்து ஏமாந்த கதைகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இங்கிருக்கும் குடும்பத்தினர் பலர் அவசிமில்லாத ஆடம்பர செலவு செய்வதை நானும் பார்த்து இருக்கிறேன்.

      நீக்கு
  12. அருமையாகச் சொன்னீர்கள் ஜி... உழைப்பே உயர்வைத் தரும்...

    பதிலளிநீக்கு
  13. உங்களுடைய கோபத்தில் நியாயம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர்கள் திருந்த வாய்ப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  14. கில்லர்ஜி... ரசிகர்களைப் பற்றி உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.

    இதற்கே இவ்வளவு பொங்குகிற நீங்கள், காங்கிரசின் பொதுச் செயலாளர் (மகளிர் காங்கிரஸ்) நக்மா, காங்கிரசின் தேசிய ஊடகப் பேச்சாளர் குஷ்பு இவர்களைப் பற்றி (இவர்களின் ரசிகர்களைப்பற்றி) என்ன எழுதுவீங்களோ.

    ஃப்ளெக்ஸ் வந்தாலும் வந்தது... எல்லோரும் போஸ்டர் அடித்து அதில் தங்கள் தங்கள் படங்களைப் போட்டுக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள், காசைச் செலவு செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே குஷ்புவுக்கு கோயில் கட்டிய காலத்திலிருந்தே கிழித்துக்கொண்டுதான் இருக்கிறேன்...

      சூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போன்ற நிலைதான். என்ன செய்வது ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா குஸ்பு அக்காவுக்குக் கோயில் கட்டிப்போட்டினமே என கில்லர்ஜிக்குப் பொறாமை:)) ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊ:)) என்னைக் காப்பாத்த அந்த ட்றம்ப் அங்கிளாலும் முடியாமல் போகப்போகுதே:))..

      நீக்கு
    3. எல்லோரையும் அங்கிள் என்ற ஆங்கிலில் அழைக்கும் தாங்கள் குஷ்புவை 'ஆண்டி' என்று அழைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      நீக்கு
  15. ஹா ஹா ஹா கில்லர்ஜி.. ஒபாமா அங்கிளால, நமீதாவை எப்பூடித்தூக்கிக்கொண்டு போக முடியும்?:).. கடத்திட்டுப் போவார் என ஜொள்ளுங்கோ:))...

    இருப்பினும் என் தொழிலில மண் அள்ளிப் போடப் பார்க்கிறீங்க:) கர்ர்ர்ர்:)).. இப்போ எல்லோருக்கும் மீ தானே டமில் ஜொள்ளித்தாறேன் என்கிறேன்.. ஆரும் வருகினம் இல்லை:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்களது தமிழ் வருங்கால சந்ததிகளுக்கு உதவும்.

      நீக்கு
  16. எனக்கு உண்மையில் நமீதாவைப் பிடிக்கும்.. பிக்பொஸ் பார்க்கும்வரை. பிக்பொக்ஸில் நமீதாவை நேரில் பார்த்ததிலிருந்து வெறுத்தே விட்டது... நாம் திரையில், பேட்டிகளில் பார்த்த நமீதா.. ரொம்ப நல்லவராக எல்லோரையும் மதிப்பவராக இருந்தா, பிக்பொஸ் இல்தான் உண்மை முகம் தெரிஞ்சது.. வெறுத்து விட்டது...

    ஆனா அவவை பிக்பொக்ஸ் இல் பார்த்தபின்புதானே அவவையே திருமணம் முடிக்கோணும் என.. நினைச்சு உடனே முடிச்சாராமே அந்த மாப்பிள்ளை.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிக்கும் பொழுது எல்லா நாயகிகளும் நல்லவர்களே.
      எனக்கு நமீதாவை பிடிக்கும் என்று சொல்வதில் உடன்பாடில்லை காரணம் இது எமது சகலைக்கு பிடிக்காது. (ஹஸ்பெண்ட் ஆஃப் நமீதா)

      நீக்கு
    2. அதிரா... பிக் பாஸில், நமீதா என்னதான் தெய்வபக்தி உள்ளவராக இருந்தாலும் அவரது மன அழுக்கு வெளிவந்துவிட்டது. (பொதுவா பிக் பாஸில் இருந்த எல்லாப் பெண்களுமே.... என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்தாலும் வரும்)

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே எல்லோருடைய உண்மையான குணமும் வெளியாகியதே....

      அதேநேரம் நமீதா டாய்லெட் கழுவதில் மும்முரமாக இருந்தது எனக்கு ஆச்சர்யப்படுத்தியது.

      ஓவியா யாரையுமே மதிக்காமல் கடைசிவரை மண்டைக்கனமாக நடந்து கொண்டாள் ஆனாலும் மக்கள் அவளையே உண்மையானவள் என்று சொல்வது எனக்கு இன்றுவரை புரியவில்லை.

      இவ்வகையான முடிவுகளே இன்றைய தலைமுறையினரை திரைப்பட மோகத்தில் கட்டிப்போட வைக்கிறது அதன் விளைவாய் அரசியலிலும்.

      நீக்கு
    4. க.க.கா.வி.போ.இ! எதுவும் புரியலை!

      நீக்கு
    5. க..க.கா.வி.போ.இ.
      இதுதான் எனக்கும் புரியவில்லை சகோ.

      நீக்கு
    6. ஹாஹாஹா, ஶ்ரீராமோ. நெ.த.வோ வந்து சொல்வாங்க! :))))))

      நீக்கு
    7. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கு!!!!

      நீக்கு
    8. ஆஹா இதுதான் விசயமா ?

      நீக்கு
    9. ஸ்ரீராம் தேறிட்டார். :))))

      நீக்கு
    10. நெல்லைத்தமிழன்.. பெண்களைக் குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது எண்டெல்லாம் இல்லை.. பெண்ணோ ஆணோ தவறெனில் தவறுதான்.

      ஆனா பிக்பொஸ் விசயத்தில் நாம் 100 வீதம் கணக்கெடுக்கக்கூடாது, 75 வீதம் நல்லவர்களாக இருந்தாலே நல்லவர்கள்தான் எனத்தான் கணக்கெடுக்கோணும். தவறே செய்யாத அல்லது அனைவருக்குமே பிடித்த ஒருவர் என ஒராள் இருக்க முடியாதுதானே.

      அங்கு இருந்த யாரையுமே எனக்கு பிடிக்கவில்லை.. ஓவியா உட்பட.. ஏற்ற இறக்கம் இருந்ததே தவிர மற்றும்படி ஒவ்வொருவரும்... மரியாதை கொடுக்காமலும் கோள் மூட்டியும் இப்படித்தான் இருந்தார்கள்..

      ஆண்களில் கணேஷ் மட்டும் கொஞ்சம் நல்லபிள்ளை எனச் சொல்லுவேன்... எந்தச் சோலிக்கும் போகவில்லை கோபிக்கவில்லை...லெவல் காட்டவில்லை.. எல்லோரோடும் ஒரேமாதிரிப் பழகியதுபோல ஒரு உணர்வு..

      கீசாக்கா எங்கிருந்து ஜம்ப் ஆனா?:) அவ அம்பேரிக்கா போயிட்டாபோல எண்டெல்லோ நினைச்சிருந்தேன்:).

      நீக்கு
    11. சரியாக கணித்து இருக்கிறீர்கள் ஓவியா கடைசிவரை தலைக்கனமுடன் யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டாள் என்பது உண்மையே..

      நீக்கு
  17. இன்னொன்று கில்லர்ஜி.. உழைப்பாளிகளோடு சினிமாக் காரரை ஒப்பிடும் உங்களைத்தான் முதலில் தேம்ச்ல தள்ளோணும் கர்ர்ர்:).. அப்படி எப்படி ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்?.. உழைப்பாளிகளின் உடல்.. மன உழைச்சலைப் போக்க வந்தவர்களே சினிமாக் காரர்கள் என எடுத்துக்கொள்ளோனும்...

    ஆகவும் திட்டக்கூடா:).. சினிமா வால் பலநேரம் மைண்ட் றிலாக்ஸ் ஆகுதெல்லோ.. முக்கியமா தனிமையில் இருந்து வேலை பார்ப்போருக்கு கைகொடுக்குதெல்லோ:)).. சரி தப்பெனில் முறைக்காதீங்க.. மீ ஓடிடுறேன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இந்த வடிகால் தேடி ஓடியதின் விளைவுதான் இன்று தெருக்களில் பாலாறு ஓடுகிறது. இன்று அரிசி விலை உயர்வின் காரணமும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

      மனிதனுக்கு ரசனை வேண்டும் அதில் நமது சுயசிந்தனை அடகு போககூடாது.

      நீக்கு
    2. >>> நமது சுய சிந்தனை அடகு போகக்கூடாது.. <<<

      அப்படி அடகு போனால் தான் என்றைக்காவது ஒருநாள் திருப்பி விடலாமே...

      குப்பைக்குப் போன தகரம் மாதிரி
      அழிந்தல்லவா போகின்றது!...

      நீக்கு
    3. வாங்க ஜி உங்களது கோணமும் சரியே மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து விழிப்புணர்வுப் பதிவுகளை எழுதுங்கள். சினிமாப் பித்தர்கள் கொஞ்சம் காலம் கழித்தேனும் நிச்சயம் திருந்துவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்றாவது மாறும் என்ற நப்பாசை எனக்கு உண்டு.

      நீக்கு
  19. இந்த கத்திரி வெயிலில் இப்படி சூடாக ஒரு பதிவு போடவேண்டுமென்றால் நீங்கள் எத்தனை வேதனை பட்டிருக்க வேண்டும் என்று புரிகிறது.
    ஓமானில் இருந்த பொழுது தோட்ட வேலை செய்யும் இந்தியர்களும், பங்களாதேஷிகளும் மேம்பாலங்கள் அடியில் உறங்குவதை பார்த்தால் மனது கனக்கும். "சித்திர சோலைகளே உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்பு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே.." என்னும் பாரதி தாசன் வரிகள்தான் நினைவுக்கு வரும்.
    கவலைப் படாதீர்கள் சகோ, இளைய தலைமுறையினர் பலர் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.
    இந்த நாடும், நாட்டு மக்களும்....... போகட்டும் என்னும் சாபங்கள்
    உங்களைப் போன்றவர்கள் வாயில் ஏன் மனதில் கூட வரக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரையில் பாரதிதாசனின் உயிரோட்டமான வரிகள் சிறப்பு.

      அந்த வரிகள் பி.எஸ்.வீரப்பா அவர்கள் சொன்னதே... நான் அப்படி இந்த சமூகத்தை நினைக்கவில்லை நவமே போற்றுவேன் ஆகவே எனது கருத்துகளை ஆணித்தரமாக முன் வைப்பேன் இறுதி மூச்சுவரை. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. வளைகுடா வலியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சகோ
    கத்தாரில் கூட அதே நிலைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. ரவி அவர்களின் முதல் வருகைக்கு பூங்கொத்து.
      அரபு நாடுகள் அனைத்தும் இதேநிலைதான் நண்பரே

      நீக்கு
  21. யாரும் திருந்தப் போவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இயன்றவரை முயல்வோம் பிறகு இறைவனின் விதி வழி.

      நீக்கு
    2. அடுத்தவர்களைத் திருத்த முயல்வது தவறு.. நம்மை நாமே திருத்திக் கொள்ளோணும்..

      நீக்கு
    3. இப்போ நான் ஏதாவது ஊரணியோரம் நடந்து போகிறேன்... யாராவது ஊரணியில் குதிக்கப் போவதைக் கண்டால் தடுக்கோணும். இல்லையேல் இறைவன் நாளை எ(ன்னை)ண்ணைக் கொப்பறையில் போடுவார்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா.. ஆராவது உண்ணாவிரதம் இருந்தாலும் தடுத்து நிறுத்தி மங்கோ லஷி.. கொத்துரொட்டி வாங்கிக் குடுக்கோணும்:)..

      நீக்கு
    5. ஊரணியோரம் உண்ணாவிரதம் எதற்கு ?

      நீக்கு
  22. வலியை மனதிற்குள் அடக்கி தம் உறவுகளின் மகிழ்சசிக்கான வழியை தேடி வெயிலின் கொடுமையையும் சுகமாய் ஏற்றுக்கொள்ளும் வளைகுடா தொழிலாளர்களை கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.

      நண்பரே தங்களது தளத்தில் நான் தொடர்ந்து இடும் கருத்துகளை வெளியிடுவதில்லையே ஏன் ?

      நீக்கு
    2. தடங்கலுக்கு வருந்துகிறேன் நண்பரே நேற்றே வெளிட்டுவிட்டேன் உங்கள் மேலான கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்

      நீக்கு
    3. நன்று நன்றி நண்பா, தொடர்கிறேன்...

      நீக்கு

  23. இதுபோன்றப் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
    இனறைய இளம் தலைமுறையினர் தங்களின் உண்மைநிலையினை உணரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதிவரை தொடர்ந்து எழுதுவேன் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  24. எத்தனை வலி? எத்தனை வேதனை?!

    பதிலளிநீக்கு
  25. சொல்லித் திருந்தாதோர்
    சுட்டுத் (நெருப்பாலே) திருந்தாதோர்
    துபாய் போய்
    பட்டுத் திருந்தி வரலாம் தான்!
    ஆனால்,
    குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு
    துபாய்க்குப் போய் காய்ந்து கருப்பாகி
    உழைத்து அனுப்பும் கடவுளரைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே துபாய் வாழ்க்கை மனிதனை நெறிபடுத்தும்.

      நீக்கு
  26. என்னாாது இந்த நாடும் மக்களும் நாசமா போகட்டும்மாவா...?? அப்ப.. எம்ஜியார்காலத்திலிருந்து ஊத்தி கொடுத்த உத்தமியின் அடிமைகள் ஆண்டது வரை நாசமா போனதை எந்த வகையில் சேர்ப்பது...

    பதிலளிநீக்கு
  27. வலியையும் வேதனையையும் இந்தப் பதிவில் வெளிப்படுத்தியவிதம் பாராட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
  28. Thank you for sharing such valuable information with us. Click here to know more UK tourist visa

    பதிலளிநீக்கு