தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 18, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ ? இதை கண்ட கோடரி வேந்தன்...
செந்து அச்சம் தவிர்த்தல் நலம் வதனம் மகிழ்ச்சி கொள்க.

திருமண விழா இனிதே சிறப்புற்று மணமக்கள் இல்லம் வந்தடைந்தனர் செந்துரட்டி, மற்றும் குடும்பத்தாரின் வாக்கை மீறமுடியாத கோடரி வேந்தன் மறுதினமே யாத்திரை கொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்டது.

பள்ளியறை செல்ல தயாரான செந்துரட்டியை, தனது சினேகிதர் கோடரிவேந்தன் கொடுத்த ஓவியம் பற்றிய நினைவுகள் அலைக்கழித்தது. இதை இருவரும் தனிமையில் திறந்து காணச்சொல்வதின் அர்த்தமென்ன ? பொதுவெளியில் பரிசை திறந்து கொடுக்காததின் காரணமென்ன ? முதலில் தனியாக இதை திறந்து பார்த்த பிறகு நமது துணையிடம் காண்பிக்கலாமா ? சினேகிதரின் வாக்கை மீறுவது முறையா ? நாளை அறிந்தால் அவரது மனம் வேதனைப்படுமே... இருப்பினும் கோடரியார் தற்பொழுது மனம் திருந்தி வாழ்வதாக.. இயம்பியது மெய்தானே... ஒருவேளை இதில் ஏதாவது கோடரியார் கோக்குமாக்கு வேலையை காண்பிக்க நினைக்கின்றாரோ ? இவரை நம்பலாமா ? பலவாறு சிந்தனைக்குப் பிறகு...

வேறு வழியின்றி மனக்குழப்பத்தை தவிர்க்க கோடரி வேந்தன் பரிசு தந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு மேல் மாடத்துக்கு சென்று அறையை தாழ்போட்டு விட்டு பிரித்து காண்கவும். இறைவா மனம் நிம்மதி கொண்டது மகிழ்ச்சியுடன் முதலில் நமது சினேகிதரின் திறமையை யாரிடம் உரைத்து பெருமை கொள்ளலாம் ? தந்தையாரிடம் அல்லது தாயாரிடம் அல்லது தாத்தா அல்லது அப்பத்தா அல்லது புதிய மணவாட்டி ? வேண்டாம் நாளை புலர்ச்சையில் குடும்ப உறவுகள் அனைவரையும் முத்தத்தில் அமர வைத்து காண வைப்போம் அதுவே நன்று.

மறுநாள் பொழுது புலர்ந்தது காலை உணவருந்திட அனைவரும் இல்லத்தின் முத்தத்தில் கூடியிருக்க மையத்தில் நின்ற செந்துரட்டி.

குடும்பத்தின் அனைவருக்கும் நமச்காரம் எமது உயிர் சினேகிதர் எமது விவாகத்தில் எங்களுக்கு அன்புப்பரிசு அருளியது தாங்கள் அனைவரும் அறிந்ததே இந்த ஓவியத்தை தீட்டியது இவரே இப்பொழுது தங்களது விழிகளுக்கு அன்பளிப்பு இதோ...

ஓ அருமை, அற்புதமாக இருக்கின்றது அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
பிறகு மதியம் விருந்து உண்டு செந்துரட்டியின் தந்தையார் ஒரு கூட்டு வண்டி அமர்த்தி ஊமையனார் கோட்டை குருகுலத்தில் விட்டு வரும்படி பணித்தார் செந்துரட்டியின் தாயார் யாத்திரைக்கு வேண்டிய உணவும், அதிரசம், முருக்குகள் நிரம்பிய துணி முடிச்சை குருநாதருக்கும், மற்ற மாணாக்கர்களுக்கும் தனித்தனியாக எடுத்து வைக்க அனைவரிடமும் ஆசி பெற்று செந்துரட்டியும், கோடரி வேந்தனும் கட்டிப்பிடித்து கலங்கிய விழிகளுடன் பிரியாவிடை பெற, கூட்டு வண்டி குருகுலத்தை நோக்கி பயணித்தது....

செந்துரட்டியாருக்கு, கோடரிவேந்தரின் பரிசு
வாழ்க மணமக்கள் நாளும் நலமுடன்.
முற்றும்.

கோடரிவேந்தன் போலவே கெட்ட சிந்தனை உள்ள மனிதர்கள் உலகம் தோன்றிய காலம்தொட்டு வாழ்ந்து வந்துதான் இருக்கின்றனர். இருப்பினும் தவறுகளை உணர்ந்து பார்த்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதே ஆறறிவு மானிடருக்கு அழகு.

இப்பதிவு எழுதியதில் சரித்திர நிகழ்வுகளை பழமை தமிழ் நடையில் எழுதுவதில், நான் முழுமையான வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். இதில் 55% நண்பர்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. மீதி 45% நண்பர்களுக்கு புரியும் விதத்தில் எழுதுவதில் தோல்வி கண்டுள்ளேன். விரைவில் அதன் காரணத்தை அறிந்து கொள்ள முயல்கிறேன். நான் நூறு வெற்றிகளை கண்டவன் அல்ல ஆயிரம் தோல்விகளை சந்தித்தவன் ஆகவே இதில் மனதளவில் பக்குவம் பெறும் வழிமுறைகள் அறிந்தவனும்கூட இப்பதிவு நான் எழுதியது 2016-ல் நான் எழுதிய கோடரிவேந்தன் என்ற பதிவில் நான்தான் மோகனரங்கம் என்றும், நான்தான் செந்துரட்டி என்றும் கருத்துரை தந்து தானாகவே வலையில் வந்து அமர்ந்தவர்கள் இரு பெரும் மலைகள் அந்த வார்த்தைகளை வைத்தே கதை பின்னி எழுதி வைத்து விட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு பகுதிகளையும் தமிழ் வார்த்தைகளால் செதுக்கி வைத்தேன். அதன் காரணமாகவே இப்பதிவை வெளியிட தாமதமானது மேலும் பதிவுலகில் பிரபலமானதும் வெளியிடலாம் என்ற அவநம்பிக்கையும் காரணமே...

அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு கடந்த பிறவியில் கோடரிவேந்தனாகிய நானும், செந்துரட்டியான தாங்களும் குருகுலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை பதிவாக்கினேன் செந்துரட்டியான தங்களைப்பற்றி எமது சிற்றறிவுக்கு எட்டியதை எழுதினேன் மேற்படி பதிவில் தங்களை குறைவாக ஏதும் மதிப்பிட்டு இருந்தால் ? ? ? இப்பதிவின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இத்தொடரில் உழுவனூர் நாட்டாமையாக வருகை தந்த ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கும், ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பனாக வருகை தந்த திரு. வெங்கட்ஜி அவர்களுக்கும், இவைகளை சகித்து படித்து கருத்து மழை பொழிந்து நம்பிக்கையூட்டிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். என்றும் நட்புடன் - தேவகோட்டை கில்லர்ஜி

இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

நன்றி இனியும் தொடர்வோம் வழக்கம் போல...

44 கருத்துகள்:

  1. ஆஆஆஆவ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ அதனால கல்யாணத்துக்குக் கிடைத்த பரிசெல்லாம் எனக்குத்தேன்ன்ன்ன்ன் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஓவியத்தை Copy எடுத்துக் கொள்ளுங்கள்

      நீக்கு
  2. ஹா ஹா ஹா தொடர் முடிந்து விட்டதோ? தேன் நிலவுக்கு எந்த நாட்டுக்குப் போனார்கள் என்ன ஃபிளைட்டில போனார்கள்.. இப்போ எத்தனை பிள்ளைகள் என்பதை சொல்லாமலே மறைச்சிட்டீங்களே கோடரிவேந்தரே:)..

    நீங்கள் கவலைப்படவேண்டாம் உங்கள் எழுத்து சிலருக்குப் புரியவில்லை என.. பிக்கோஸ் புரியாதவர்களில் நானும் ஒரு உருப்படி ஹா ஹா ஹா:)).. ஆனா என்ன தெரியுமொ.. நான் இந்தக் கதையில கொஞ்சம் ரியூப்லைட் அவ்ளோதேன்.. இன்றைய முடிவுத்தொடரில தான் முழுவதும் பிரிஞ்சிடுச்சூஊஊஊஊஊஊ.. லைட் இப்போ நல்ல பிறைட்டாப் பத்துது ஹா ஹா ஹா.. உங்கள் விடா முயற்சியாகப் போட்ட தொடர்தான் இதுக்குக் காரணம்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமக்கள் தேன்நிலவுக்கு கொடுவரட்டி நீர்வீழ்ச்சி சென்றார்களாம்.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  3. //அதன் காரணமாகவே இப்பதிவை வெளியிட தாமதமானது மேலும் பதிவுலகில் பிரபலமானதும் வெளியிடலாம் என்ற அவநம்பிக்கையும் காரணமே..//

    ஆவ்வ்வ் இதை இரண்டாம் தடவையாக இம்முறை சொல்லிட்டீங்க:)) இதில இருந்து என்ன தெரியுது???? நீங்க பிரபல்யமாகிட்டீங்க வலையுலகில் என்பது உங்களுக்கே புரியுது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது அவநம்பிக்கை என்றே சொல்லி இருக்கிறேன். ஆக நான் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பதே...

      நீக்கு
  4. அதுசரி முதல் படத்தில துரை அண்ணனுக்குக் குடுக்க்கிறீங்களோ? இல்ல அவரிடமிருந்து வாங்குறிங்களோ? உள்ளே என்ன இருக்குது? இது இந்தப்பிறவியில் எடுத்த படம்தானே?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பிறவியின் சித்திரத்தை கரையான் அரித்து விட்டது.

      நீக்கு
  5. நல்லதொரு ஓவியத்தை வழங்கி
    செந்துரட்டியாகிய எம் மணவாழ்வில் மலர்ச்சியை ஏற்றி வைத்த கோடாலியாருக்கு கோடானுகோடி நன்றிகள்...

    முற்பிறவியில் அன்றி வரும் பிறவியிலும் நம்முடைய நட்பு தொடரும் என்பதில் ஐயமும் உளதோ...

    குற்றங்களைக் களைவதற்கன்றோ கோடரி ....

    செல்லும் வழியெங்கும் நலம் விளைத்து வாழ்க.. வாழ்கவே!..

    ஊசி...

    தாம் தேசாந்திரம் கண்டு திரும்பும்போது பாலடைச் சங்கும் உரை மருந்து வகையறாக்களும் அவசியம் வாங்கி வரவும்...

    தங்கள் இல்லத்திலும் மங்கலமேளம் விரைவில் கேட்கும் என நம்புகிறோம்..

    ஏனைய செய்திகளுக்கு
    புறா விடு தூது.. நம்பகமான சேவை..

    வேணும் சுபம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      //தங்கள் இல்லத்திலும் மங்கலமேளம் விரைவில் கேட்கும் என நம்புகிறோம்.//

      ஜி விரைவில் மங்கலமேளம் ஒலிக்கத்தான் போகிறது வாழ்க நலம்.

      நீக்கு
  6. இனிமையாக முடிந்தது. மனம் மாறிய கோவே... வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. பொதுவாகச் சொல்வதானால் புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு

  8. கோடரிவேந்தன் போலவே கெட்ட சிந்தனை உள்ள மனிதர்கள் உலகம் தோன்றிய காலம்தொட்டு வாழ்ந்து வந்துதான் இருக்கின்றனர்./ கெட்ட சிந்த்னை எது என்றுதான் விளங்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அன்றைய மனிதர்களின் கெட்டசிந்தனை அப்பம் திருடுவது, மாங்காய் திருடுவது, அசிங்கமான படங்கள் வரைவது போன்ற அளவில் இருந்தது.

      இன்றைய விஞ்ஞான வளர்ச்சி வங்கிகளில் இணையம் வழியே கொள்ளையடிப்பது, பெண்களை ஆபாசமாக படங்கள் எடுத்து இணையத்தில் விடுவதாக சொல்லி மிரட்டி பணம் பறிப்பது இப்படி மாறிவிட்டது.

      நீக்கு
  9. வரவேற்கத்தக்க 'சுப' முடிவு.

    வித்தியாசமாகப் பெயர் சூட்டி, வித்தியாசமான குணங்களுடன் நட்புக்கு இலக்கணமாகக் கோடரி வேந்தனையும் செந்துரட்டியையும் முக்கிய கதைமாந்தர் ஆக்கியது.

    விறுவிறுப்பான கதையோட்டத்திற்குச் சுவையான உரையாடல் சேர்த்தது.

    மேற்கண்டவை, தங்களின் தொடர்கதைக்குச் சிறப்புச் சேர்த்தன.

    பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த தொடரில் வழக்கத்தைவிட அதிகமாக தாங்கள் கருத்துரை என்ற பெயரில் கதையின் சுருக்கத்தை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமளித்து வந்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

      இதற்காகவே எமது சிறப்பு நன்றிகள்,

      நீக்கு
  10. மகிழ்ச்சியான முடிவு....

    இரண்டு வருடங்கள்...! உங்களின் மனநிலையை அறிவேன் ஜி....

    மேலும் அடுத்து இது போல் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      என்னை அறிந்தவர்களில் தாங்களும் ஒருவர் நன்றி.

      மன்னிக்கவும் மீண்டும் இப்படியொரு பதிவு எழுதும் மனமில்லை எமக்கு வருகைக்கு நன்றி ஜி.

      நீக்கு
  11. தமிழ் எல்லாம் நல்லாவே புரிந்தது. ஆனால் கதாபாத்திரங்களின் குணாநலன்கள் புரியக் கொஞ்சம் நேரம் எடுத்தது. சுட்டியில் படிச்சதும் தெளிவு வந்தது. முடிவும் அருமை. ஓவியமும் அருமை! அனைவருக்கும் வாழ்த்துகள். விரைவில் கோடரியாருக்கும் நல்ல பெண்ணாக அமையப் பிரார்த்தனைகள். வெகுளியான கோடரிவேந்தன் திருமணம் மூலம் நலமாக வாழவும் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி

      நீக்கு
  12. கதை நன்றாகவே முடிந்தது கண்டு மகிழ்ச்சி! கோவே மனம் திருந்தி செந்துரட்டிக்கு அழகான ஓவியம் கொடுத்து அவரை நிம்மதியடைய வைத்து நல்லவிதமாகச் சுபம் போட்டு முடித்துவிட்டீர்கல்.

    கதையைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஒன்றுமில்லையே கில்லர்ஜி. கோவே கல்யாணம் எப்போது? ஹா ஹா ஹா ஹா

    கீதா : அதேகருத்துடன் கில்லர்ஜி கோக்குமாக்கு நு எல்லாம் அப்பவே பேசினாய்ங்களோ?!! ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது இருவரின் கருத்துரைக்கும் நன்றி

      கோக்குமாக்கு தமிழ் வார்த்தைதானே....?

      நீக்கு
  13. அன்பு நண்பருக்கு வணக்கம் ...!
    நெடுங்காலம் ஆகி விட்டது தங்கள்
    தளத்திற்கு வருகை தந்து,
    பள்ளிக்கூடம், கல்லூரிச் சீருடைகள் தைக்கும் பணிகள் இப்போதுதான் ஓய்ந்து வருகின்றது,
    இனி வழக்கம்போல் நண்பர்களின் தளங்களுக்கு
    உலா வரலாம் என மகிழ்ச்சியுடன் நான்,

    செந்துரட்டியும்,கோடரிவேந்தனும் கதை
    கலகலப்பாகவே இருக்கிறது,
    அருமை நண்பரே அருமை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கதையை எல்லா பாகமும் படித்து விட்டீர்களா ?

      நீக்கு
    2. ஆமாம் நண்பரே படித்தேன்

      அடுத்த கதையை சீக்கிரம் செதுக்குங்கள்...

      நீக்கு
    3. படித்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. செந்துரட்டியாருக்கு, கோடரிவேந்தரின் பரிசு
    மிக அழகு. தெய்வீகபரிசு.
    மணமக்கள் வாழ்க வளமுடன்.

    கோடரிவேந்தர் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டாரா?
    நல்ல பெண்ணாக அமைந்து நலமோடு வாழ வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  15. அருமையான முடிவுடன் அழகிய படம் கோவிச்சீங்காதீங்க படத்தை நகல் எடுத்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே இதை சொல்லி விட்டு எடுக்கும்போது தங்களது உயர்ந்த மனம் தெரிகிறது.

      நீக்கு
  16. ஒரு வரலாற்று தொடரை் முடிந்து விட்டதை படிக்கும்போது மனசு ஏதோ உதறல் எடுக்கிற மாதிரி இருக்கிறது..நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உதறல் கூடாது பதிவு முடிஞ்சுருச்சு.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அருமையான சுபமான முடிவு. செந்து தம்பதிகள் மனமொன்றி பலகாலம் அந்த ஓவியத்தில் உள்ளது போல் நேசமும். பாசமுமாக வாழ வாழ்த்துகிறேன்.
    அடுத்து கோ. வேந்தருக்கும் நல்ல பெண்ணாக அமைந்து அவர்களும் மனம் கோணாமல், நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். கதை அருமை.. ஓவியம் மிக அருமை..

    தாங்கள் வலைதளத்தில் எப்போதோ நல்லதொரு இடத்தை பிடித்து விட்டீர்கள். ஏன் இந்த அவநம்பிக்கை தங்களுக்கு? எப்போதுமே பாஸிடிவாக சிந்திக்கும் தங்களுக்கு இந்த ஐயம் வரலாமா? தங்களின் பிரபலத்திறகு தங்கள் பதிவுகளே சாட்சி.. வாழ்த்துக்கள்.

    கொஞ்சம் தாமதமாக வந்து கருத்திடுகிறேன். மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான ஊக்கமூட்டிய பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  18. ஆஹா அருமையான சுபமான முடிவு .எப்பவோ சிறு தவறு செய்ததல் செந்துவுக்கு மனம் ஒருநிலைப்படாமல் சந்தேகப்பட்டுட்டார் .சரி நெக்ஸ்ட் பார்ட் கோடரிவேந்தரின் வீட்டு சுப நிகழ்வா .
    கதை எனக்கு ஆரம்முதல் நல்லாவே புரிந்தது .ஆனா நடுவில் வலைப்பக்கம் விடுப்பு எடுத்ததால் கன்டின்யூட்டி புரிய தாமதம் ஆச்சு .
    செந்துவின் தாயார் மாதிரி நமக்கு ப்ரெண்ட்ஸுங்க அம்மாங்க இருக்கணும் :) தனி மூட்டை முடிச்சில் அதிரசம் முறுக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. கில்லர்ஜி... சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். எழுத எழுதத்தான் எழுத்து நன்றாக வரும்.

    இந்தத் தொடரே நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி இரண்டு பாகங்களைத் தவிர, நான் கோடரிவேந்தன் உங்கள் நண்பர் என்றும் நீங்கள்தான் செந்துரட்டி என்றும் புரிந்துகொண்டிருந்தேன். நேரம் இருக்கும்போது மீண்டும் படித்துப்பார்த்து செப்பனிட்டீர்களென்றால், நாளை ஒரு தொகுப்பு வெளியிடும்போது இதனையும் சேர்க்கமுடியும்.

    பொதுவா நிஜ ஆட்களை தொடர்கதையில் சேர்த்தால், தொடர்கதை ரசம் குறையும், இல்லைனா, ஆட்களுக்காக, கதை/நடையை மாற்றவேண்டியிருக்கும். அந்தத் தடுமாற்றம் கதையில் தெரிகிறது. பொதுவா கோடரி, நண்பனாக இருந்தாலும், அவ்வப்போது இடைஞ்சல்கள் செய்பவராகவும், செந்து, நட்பை மதிப்பவராகவும், அவ்வப்போது அதனால் அல்லல் படுபவராகவும், இருந்தாலும் நட்பைத் தொடர்பவராகவும் சித்தரித்துள்ளீர்கள். அதே லைனில் முழுக் கதையும் சென்றால் இன்னும் உயரத்தை எட்டியிருக்கும்.

    உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான தகவலுக்கு நன்றி.
      இதில் கோடரி நான்தான் செந்து அன்பின் ஜி துரை அவர்கள்.
      தாங்கள் சொன்னதை பரிசீலிக்கிறேன் நன்றி

      நீக்கு
  20. ஒவ்வொரு மனிதருள்ளும் இரண்டு குணங்கள் உண்டு. சிலருக்கு நல்ல குணங்கள் வெளிப்பட நாளாகலாம். அதுதான் கோடாரியாருக்கும் நடந்திருக்கிறது. எல்லாம் சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சியே. மிகவும் முயற்சி செய்து பழைய நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  21. விடுபட்ட பகுதிகளை இன்று தான் படிக்க முடிந்தது.

    எல்லாம் நல்லதாகவே முடிந்தது. மகிழ்ச்சி.

    நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு