தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 02, 2018

முரணாளிகள்



01. மீன்கடை பக்கத்திலேயே சாக்கடை ஓடுவதும், சாக்கடை மேலேயே பூக்கடை வச்சு இருப்பவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

02. கடவுள் இல்லை என்று சொன்ன தலைவனையே கடவுள் என்பவனும், அவனுக்கு சிலை வடித்து காலில் விழுபவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

03. எல்லோரையும் சில்லறை வச்சுக்கிற சொல்லி விட்டு, சில்லறை வச்சுக்கிறாமலேயே பேருந்துல போற நடத்துனர் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

04. மருத்துவமனைக்கு வர்ற நோயாளிகளை வாசல்லயே செருப்பை கழட்டி போடச் சொல்லிட்டு தான் மட்டும் செருப்பு போட்டு நடக்கிற செவிலியர்கள் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்காளுக.

05. தனது கடைக்கு ‘’கடன் அன்பை முறிக்கும்’’னு பதாகை எழுதச் சொல்லிட்டு எழுதுனவனுக்கே கடன் சொல்லி அனுப்புறவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

06. தங்கச்சி பென்சில் வாங்கி கேட்டால் பணமில்லை என்பவனும், கொழுந்தியாள் பென்ஸ் காரே வாங்கி கேட்டாலும் வாங்கித் தாரேன்னு சொல்றவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

07. தனது அப்பனை புதைத்த இடத்தை சுடுகாடுனு சொல்லி மறந்தவன், தலைவனை புதைத்த இடத்த கோயில்னு சொல்லிட்டு நள்ளிரவில் வணங்குறவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

08. நண்பனுடைய பெற்றோர்களை அம்மா, அப்பானு சொல்லிப்புட்டு, நண்பனை சகோதரன்னு சொல்லாமல் மச்சினு சொல்றவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

09. கல்யாணம் வந்தால் சந்தோஷத்துக்காக தண்ணியடிப்பவன், எலவு விழுந்தால் கவலைக்காக தண்ணியடிப்பவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

10. தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் வாங்கி, அவனை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிப்புட்டு அப்புறம் குத்துதே, குடையுதேன்னு சொல்றவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

11. நடிகனுடைய பதாகைக்கு பாலுத்துறதுக்கு மேலே ஏறிப்போயி கீழே விழுந்து தனக்கே பாலூத்திக்கிட்டு செத்தவனை பார்த்தும், அடுத்த படத்துக்கும் இதே மாதிரி செய்யிறவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

12. கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால், அவனை வாழ்க கோஷம் போட்டு விட்டு, தோற்று விட்டால் அவனை கொடும்பாவி எரிப்பவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.

(None of these is in Devakottai)

60 கருத்துகள்:

  1. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)..

    https://media.giphy.com/media/MPu4xRWPANiKY/giphy-downsized-large.gif

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பூஸார் இதை ஏற்க முடியாதுடூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....ராத்திரி ஜல் ஜல் கேட்கும் சத்தத்தில் எல்லாம் பதிவு வந்தா நாங்க வரமாட்டோம்....நோ மீ தான் காலையில் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஉ இந்திய நேரத்தில்..

      கில்லர்ஜி இந்தியாய்ல் இருந்து கொண்டு இந்த டயத்துக்கெல்லாம் பதிவு போட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      கீதா

      நீக்கு
    2. நம்மளோட டைம் செட்யூல்ட்.

      நீக்கு
    3. அதிரா மியாவ் ஸூப்பர்.

      நீக்கு
  2. ஹா ஹா ஹா அருமை.. இதுதானே நிஜம்.. அழகாக சொல்லிட்டீங்க.. ஆனா நம்ம ஊர்லதான் .. நம்ம ஊர்லதான்.. எனச் சொல்லிப்ப்போட்டு.. முடிவில தேவ கோட்டையில் இது எதுவும் இல்லை என முடிச்சால்.. இதில என்ன நியாயம்?:).. எனக்கு நீதி வேணும்.. அப்போ நீங்க சொன்ன நம்ம ஊர்.. எந்த ஊர்ர் ?.. நியூயோர்க்காஆஆஆஆஆ?:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தத்துவம் சொன்னால் ரசிக்கணும், அதை விட்டுட்டு இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்டு, கூட்டத்துல கட்டிச்சோற்றை அவிழ்க்ககூடாது.

      என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு ?

      நீக்கு
    2. யெஸ் யெஸ் நான் இப்பத்தான் அந்த லாஸ்ட் லைனைப் படிச்சேன்....யெஸ்ஸு யெஸ்ஸு....ஹா ஹா ஹா அதானே நீதி நியாயம் வேண்டும்....

      கீதா

      நீக்கு
    3. நீதி வேண்டுமென்றால் டொபேட்டா டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போயி இரண்டரை கிலோ வாங்கி கொள்ளவும்.
      (அதிரா பே பண்ணிடுவாங்க)

      நீக்கு
  3. கடவுள் இல்லயென்று சொஅஅன்ன..
    பிரமாதம். 'நம்ம ஊரு தான் யா' என்று பாட்டாகவும் பாடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸார் நானும் மெட்டு போட்டேன்...

      //இந்திரன் வந்ததும், சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்//

      என்ற பாணியில்...

      நீக்கு
  4. எல்லாமே அருமை. ரசித்தேன்.

    இப்பல்லாம் இப்படி மாற்றிச் சொல்லவேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது...

    "நம்ம ஊர்லயும்தான்யா இருக்காங்க...."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்ஜி எல்லாமே மாற்றமாகி கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி யெஸ்ஸூ யெஸ்ஸ்ஸூஊஊ அத்தனையும் என் மனதில் தோன்றும் அதுவும் குறிப்பா ஆஸ்பத்திரில செருப்பு போடக் கூடாதுனு அவங்க மட்டும் போடுவது...

    அப்புறம் இறைவன் இல்லை என்று விட்டு தலைவனைக் கொண்டாடுவது...

    ஒன்னு விட்டுப் போட்டீங்க முக்கியமான ஒன்று....நாமே பைசா கொடுத்தாத்தான் வேலை நடக்குதுனு கையூட்டு கொடுத்துட்டு (ஹோட்டல் ஊழியர், செக்யூரிட்டி, ஏரியாவுக்கு தண்ணி விடுபவர்...என்று பலதும் சொல்லலாம்...) அப்புறம் லஞ்சம் தலைவிரித்தாடுதுனு நாமே கூப்பாடு போடுகிறோம்...

    இந்த வாரம் ஆன்டி கரெப்ஷன் வாரமாம்....ஹா ஹா ஹா ஹா

    எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் இருந்தார்கள் இந்த வாரத்தில்?!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்தமைக்கு நன்றி.
      தலைவனை கொண்டாடுவது இல்லை வணங்குவது என்று சொல்லுங்கள்.

      இன்னும் சொல்லலாம் ஆனால் பனிரெண்டு மாதங்கள் மட்டுமே உள்ளதால் நிறுத்தினேன்.

      வேண்டுமானால் அடுத்து எழுதுவேன் 31 தினங்களுக்காக...

      நீக்கு
  6. கடைசி கிரிக்கெட்டுக்குச் சொன்னது வீட்டிலயே தொடங்குதே ஜி...

    குழந்தை மார்க் வாங்கி ஃபர்ஸ்ட் வந்தால் உடனே தலை மேல் வைச்சுக் கொண்டாடுவது....மார்க் குறைந்துவிட்டால் அல்லது தோற்றால் உடனே முட்டால் உதவாக்கரைனு சொல்லுவது....அப்புறம் தான் கிரிக்கெட்டெல்லாம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்த அரசியல் வீட்டிலும் உண்டுதான்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருக நண்பரே அதென்ன ? 10026

      நீக்கு
    2. அது வேறு ஒன்றும் இல்லை நண்பரே. My dear Marthandan படத்தில் குள்ள மணி கூறும் வசனம் தான் அது.

      நீக்கு
    3. ஓஹோ... மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  8. எல்லாமே உண்மைதான் என்னும்போது எதை மறுக்க முடியும்? நம்ம மனிதர்கள் எங்கேயுமே இப்படித்தானே, தேவகோட்டை உட்பட! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உங்களது கருத்தில் உள்பட என்று எழுதுவது நல்லா இல்லையே...

      நீக்கு
    2. :))))))))))) None of these is in Devakottai! இதுக்கு பதில்! :)))))))

      நீக்கு
    3. ஹி.. ஹி.. ஹி.. இப்படி எல்லாமா கேட்பீங்க...?

      நீக்கு
  9. அருமை
    உண்மை
    மனித வாழ்க்கையே முரண்களின் தொகுப்புதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. உண்மையா புட்டு புட்டு வைச்சிட்டீங்க ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனக்கு பொய் சொல்லும் பழக்கமில்லையே...

      நீக்கு
  11. இது ஒலக வழக்கமாக்கும்

    பதிலளிநீக்கு
  12. எனக்கு ஒன்னுந்தெரியாது..
    ஒன்னுந்தெரியாதுன்னு சொல்லிட்டு

    ஊர் நடப்பு எல்லாத்தையும்
    அக்கு வேற ஆணி வேறயா
    பிச்சிப் போடற ஆளு
    நம்ம தேவக்கோட்டையில தாங்க
    இருக்காருங்க!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தேவகோட்டையில் எமக்கு தெரியாமல் யாரு...?

      நீக்கு
  13. செவிலியர் ஆஸ்பத்திரி வந்து உடுப்பு மாற்றி செருப்பும் மாற்றுவார்கள். அவர்கள் வீட்டுக்கு போகும் போது உடுப்பு மாற்றி செருப்பை மாற்றி அணிந்து செல்கிறார்கள்.
    சில இடங்களில் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.
    மது அருந்துபவருக்கு ஏதாவது காரணம் வேண்டும். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாய் பார்ப்பவர்கள் அவர்கள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீங்கள் சொல்வதும் உண்டு. பல இடங்களில் நமது செருப்பைவிட கேவலமாக போட்டுக் கொண்டு நம்மை போடக்கூடாது என்று சொல்வது தவறுதானே ?

      குடிகாரர்களைக் குறித்து அழகாக சொன்னீர்கள்.

      நீக்கு
  14. முரண்பாடுகள் எல்லா இடங்களிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  15. அவர்கள் போட்டுக் கொண்டு நம்மை போடக்கூடாது என்பது தவறுதான்.

    பதிலளிநீக்கு
  16. முரண்பாடுகள் நிறைந்தது தானே உலகம்? இருந்தாலும் உங்கள் ஊர்ப்பாசம் என்னை அசத்துகிறது :))

    இதெல்லாம் கிராமங்களில் கிடையாது என்று எழுத நினைத்தேன். அந்த ஒன்பதாம் நம்பரில் எழுதியிருந்தது என்ன அப்படி எழுதுவதை தடை செய்து விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஒன்பதாம் நம்பர் விடயம் கிராமங்களில் அதிக சதவீதம் இல்லை எனலாம்தான்.

      நீக்கு
  17. முரண்களின் தொகுப்பையே வழங்கி விட்டீர்கள் எல்லா இடத்திலும் காண்பதுதானே பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  18. வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான். அதனை எதிர்கொள்வதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி... இன்னும் 365 நாளுக்கும் எழுதலாம். அவ்வளவு முரண் நம்ம எல்லார்கிட்டயும் இருக்கு.

    ஓட்டுக்கு துட்டு வாங்கி வாக்களிக்கிறார்கள்னு சொல்லிக்கிட்டே இலவசம் யார் கொடுக்கறாங்கன்னு பார்க்கிறோம். அரசியல்வாதிகள் சொல்லவே வேண்டாம். சொல்வது எல்லாமே முரண்தான்.

    பொய் சொல்லக்கூடாதுன்னு குழந்தைகள்ட சொல்லிக்கொடுத்துட்டு, உடம்பு சரியில்லைனு லீவு லெட்டர் எழுதிக்கொடுத்துட்டு வா, ஊரிக்குப் போகணும்னு சொல்றவங்களும் நாமதான். எழுத எழுத வந்துக்கிட்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே உண்மையே... நிறைய முரண்கள் உள்ளது.

      நீக்கு
  21. சாக்கடையாவும், மீன்கடையாவும் இருந்தா மூக்கடைச்சு செத்து போவோம். பூக்கடையாவே இருந்தாலும் தலைவலி வரும்.

    எல்லாருக்கும் கொடுக்க சில்லறைய வச்சுக்கனும்ன்னா கண்டக்டர் கோணிப்பைதான் கொண்டு வரனும்.

    தங்கச்சியை எப்ப வேணும்னாலும் ஐஸ் வச்சு வேலை வாங்கலாம். ஆனா, மச்சினிச்சியை அப்படி முடியாதே!

    புள்ளை பொறந்தாலும் தண்ணிதான். அதே புள்ளை வீட்டைவிட்டு துரத்தினாலும் தண்ணிதான்..

    இருங்க வேலைலாம் முடிச்சுட்டு வந்து மிச்சத்துக்கு பதில் சொல்றேன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அடியாத்தி இப்படி புட்டு, புட்டு வக்கிறியலே...

      வேலையை முடிச்சுட்டு வருவீங்களா ?
      (அவ்வ்வ்வ்வ்வ்வ்...)

      நீக்கு
  22. நம்மூர்ல இல்லாதவன்..ஒருவன் .. அவன் யாரு ? நண்பரே!..

    பதிலளிநீக்கு
  23. அனைத்தும் கலந்து நல்ல தொகுப்பு!

    பதிலளிநீக்கு
  24. முரண்பட்டவர்கள் பற்றிய சிந்தனை ரசிக்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் மகள், மருமகனுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ. உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  26. முரண்களால் சூழப்பட்டிருகிறோம் என்பது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு