இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 26, 2018

உலகம் அழியுமா ?

அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால் மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வெள்ளி, டிசம்பர் 21, 2018

திருப்புவனம், திருவாளர். திலீப்



முந்தைய பகுதியை படிக்க... Honey என்ற அனிதா

தினேஷுக்கு வேலையில் கவனம் சிதறியது...
இது நடந்தது கடந்த வருடமாக...
இன்று...
இதை இப்படியே தொடர விடுவது தவறு மாற்றுத்தீர்வு காணவேண்டும்.

ஞாயிறு, டிசம்பர் 16, 2018

Honey என்ற அனிதா



தினேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதால் அடிக்கடி பக்கத்து நாடுகளான ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள ஃப்ராஞ்களுக்கு போக வேண்டியதிருக்கும், சில நேரங்களில் அங்கேயே தங்கி விட்டு மறுநாள்கூட வரவேண்டியதிருக்கும் தினேஷுக்கு காலேஜில் படிக்கும் காலம் தொட்டே பலவகையான கலை ஆர்வம் உண்டு இங்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் ஆனாலும் பலமுறை கச்சேரிகளில் கலந்து கொண்டுதான் இருக்கிறான் ஓரளவு நன்றாக பாடவும் செய்வான் இன்னும் குழந்தை இல்லையே என்ற குறையே தவிர வேறொன்றுமில்லை அனிதாவும் இவன் ஊரில் இல்லாவிட்டால் கணினியில் மூழ்கி கில்லர்ஜியின் வலைப்பதிவுகளை படிப்பாள், வதனநூல் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கடத்துவாள் அல்லது பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் தமிழ் ஃபேமிலி வீட்டியிருக்கும், அஞ்சு வயது அஞ்சுவை அழைத்து வந்து கொஞ்சிக் கொண்டு இருப்பாள் குழந்தை என்றால் இவளுக்கு இஷ்டம். வாழ்க்கை அழகாக நகர்ந்து போய்க் கொண்டு இருந்தது....

செவ்வாய், டிசம்பர் 11, 2018

வீழ்வேன் என்று நினைத்தாயோ...


வீழ்வேன் என்று நினைத்தாயோ...

இவரது சந்ததி வளரட்டும்

உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை

மொச்சக்கொட்டை குழம்பு இனி சாப்பிடக்கூடாது

வியாழன், டிசம்பர் 06, 2018

கோவிந்த ஹரிமேலி




நான் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’அது’’ எனது கண்ணில் பட எழுந்து அதனருகே போன என்னை அந்த அதிகாரி வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அந்த புகார்ப்பெட்டி அருகே போய் அதன் மேலிருந்த படிவங்களை எடுத்து படித்துப்பார்த்தேன் இதை அங்கிருந்த அதிகாரிகள் மட்டுமல்ல, அனைத்து பயணிகளும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் படிவத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி இந்த மூன்று மொழிகளிலும் எழுதலாம் என்று இருந்தது இதில் எழுதி பொய்யானவர்களின் முகத்திரையை கிழித்தால் என்ன ?

சனி, டிசம்பர் 01, 2018

விமான நிலையத்தில், கில்லர்ஜி



தமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம்

பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சுமைகள் குறைவாகவே இருக்கும், நானும் எனது சுமையை லக்கேஜில் சேர்த்து விட்டு வழக்கம்போல் எனது கைக்குழந்தை எனது கழுத்தில் தொங்கி கொண்டு இருந்தது, சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்து, கடவட்டையில் முத்திரை குத்தி, விமானச்சீட்டை பரிசோதித்து இருக்கை எண் அட்டையும் வழங்கி விட்டார்கள் அனைத்தும் முடிந்தது அடுத்து செல்ல வேண்டியது விமானத்தின் உள்ளேதான் ஒரு அதிகாரி என்னை நிறுத்தினார் கடவட்டையை கேட்க கொடுத்தேன்.