தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 06, 2019

கல்லல், கலக்கல் கண்ணன்



ண்ணழகி கண்ணே நீ வாயேன்டி
ல்லடித்து பகைக்க வேண்டாமடி
ண்ணடித்து நகைக்க வேணுமடி
ண்ணாலம்தான் கட்டிக்குவோமடி

ல்லல் கலக்கல் கண்ணனே
ண்ணாடி போட்ட மச்சானே
ண்ணடி எனக்கு வேண்டாம்னே
ல்லடியும் உனக்கு வேண்டாம்னே

ண்டனூரு சந்தைக்கு வாயேன்டி
ண்ணன் கல்கோனா தருவேன்டி
ள்ளச்சிருக்கியே உனக்கு நாந்தான்டி
ருவாயன் நாந்தான் மாமேன்டி

ருதறுக்கும் வேளையிலே கருவாயா
ள்ளத்தனம் செய்யத்தான் வந்தாயா
டுப்படிக்காம கழண்டு கிட்டு நீ போயா
ருப்பாயி அதோ வாறா ய்யேன் ஆயா

ண்ணு தெரியாத ஆயா கெழடி
ள்ளு நெஞ்சுக்காரி தொட விடடி
னைத்து நான் ஊதட்டுமா மகுடி
ட்டிப்புடிச்சு விளையாடுவோம் கபடி

ள்ளு குடிச்சுருக்கியா நீ கருவா
ழனித் தண்ணியத் நான் தரவா
ரும்புக் காட்டுக்குள்ளே அருவா
ட்டிப் போட்டுருவேன் படுவா

Chivas Regal சிவசம்போ-
மகனுக்கு கல்யாண நேரத்துல இவருக்கு ஏன் இந்தப்பாட்டு.... ?

68 கருத்துகள்:

  1. ￰கல்யாணம் கூடி வரும் ￰வேளையிலும் கலக்கலா பாட்டு வருதே .
    உங்கள் எழுத்தின் மீதான பற்று மிகவும் பாராட்ட தகுந்தது￰

    பதிலளிநீக்கு
  2. கல்கோனா என்றால் என்ன?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவொரு மிட்டாய் வகைதான் ஜி

      நீக்கு
    2. கில்லர்ஜி... என் 9ம் வகுப்பின்போது, கல்கோனா ஐஸ்க்ரீம் என்று எங்கள் ஹாஸ்டல் வாசலில் ஐஸ் பெட்டியில் வரும். 5 பைசா விலை. லெமன், ஆரஞ்சு என்று வேறு வேறு வாசனைகளில் வரும். அதுக்குப் பேர் 'கல்கோனா ஐஸ்'.

      கல்கோனா மிட்டாய் கேள்விப்பட்டதில்லையே..

      நீக்கு
    3. சர்க்கரைப்பாகுவில் நிலக்கடலையை அரைத்து சிறு, சிறு உருண்டையாக உருட்டி இருக்கும்.

      கடித்து தின்பதற்கு சற்றே கடினமாகவும் இருக்கும் நல்ல சுவையானது.

      நீக்கு
    4. கில்லர்ஜி... அது கம்மர்கட்டுன்னா. பாண்டிச்சேரி (புதுகை)ல நிறைய கடைகள் இப்போவும் கம்மர்கட்டுக்கு ரொம்ப ஃபேமஸ். ஆனா, தேங்காய் வெல்லப் பாகில் செஞ்சது, கடிப்பது கடினம்.

      நீக்கு
    5. ஆஆஆ எனக்கு தெரியும் கல்கோனா நான் சாப்பிட்டிருக்கிறேன்ன்ன்:)... உகண்டா சவுணில தாவுத்தர் கடையில விற்கிறார்கள்:) ஹா ஹா ஹா

      நீக்கு
    6. ஹையோ கல்கோனாவை எல்லாம் நினைவு படுத்திட்டீங்களே!!!!!! நிறைய சாப்பிட்டிருக்கேன். வாயில் வைத்து சப்பி சப்பி!!!

      கீதா

      நீக்கு
  3. ஹா... ஹா.... ஹா... அருமை. கடைசி கண்ணி புன்னகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி.

      நீக்கு
  4. ரசித்தேன் கில்லர்ஜி..... கல்யாண வேலைகள் நடுவிலும் பதிவு.... மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. மகனுக்கு கல்யாண நேரத்துல... - நான் நினைத்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இப்படியெல்லாம் நக்கல் பண்ணுவீங்கனு தெரிஞ்சுதான் இந்த சிவசம்போ ஏற்பாடு நண்பரே

      நீக்கு
  6. மகனுக்குத் திருமணமா
    வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முந்தைய பதிஸில் தகவல்கள் உள்ளது.

      நீக்கு
  7. கலக்கல்...

    எதற்கும் பாட்டிற்கு காப்பிரைட்ஸ் வாங்கி வையுங்கள் ஜி...

    பதிலளிநீக்கு
  8. கல்கோனா கடிக்காத பள்ளி நாட்களும் உளவோ?....

    நிலக்கடலையை வறுத்து அரைத்து சர்க்கரைப்பாகுடன் சேர்த்து செய்யப்பட்ட உருண்டைகள்.. எடுத்து அடித்தால் மண்டை உடைந்து விடும்...

    இன்னமும் நம்ம ஊர் பக்கம் கிடைக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எனக்கு பிடித்தமானது இரண்டாம் வகுப்பு படிக்கும்போது... இனியாவுக்கு அடிக்கடி வாங்கி கொடுப்பேன்.

      நெல்லைக்காரர்களுக்கு கல்கோனா தெரியாதாம்ல... ஐயோ... ஐயோ.

      நீக்கு
    2. அட... துரை செல்வராஜு சாரும் சொல்றாரே....

      சரி... உங்கள் இருவரில் யார் எனக்கு கல்கோனா வாங்கித்தரப் போகிறீர்கள்? அல்லது எங்கே கிடைக்கும் என்ற விவரமாவது சொல்லுங்கள்.

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் நான் விபரம் ஜொள்ளிட்டேன் மேலே

      நீக்கு
    4. தமிழரே தஞ்சை ஏரியாவில் கிடைக்கிறதாமே...

      நீக்கு
  9. அன்பின் ஜி..

    க க க!....

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன.. க க க!..?..

      நீங்க கேட்பீங்க.ந்னு நெனனச்சேன்...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இதுதால் பல்ப்பு வாங்கிறதென்பதோ துரை அண்ணன் ?:)

      நீக்கு
  10. மருமகள் வரும் நேரத்தில் இப்படி கவிதையா ! என்று கேட்க நினைத்தேன், சிவசம்போ கேட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சிவசம்போ வில்லங்க பார்ட்டிதான்.

      நீக்கு
  11. ///Chivas Regal சிவசம்போ-
    மகனுக்கு கல்யாண நேரத்துல இவருக்கு ஏன் இந்தப்பாட்டு.... ?///
    ஹா ஹா ஹா அதிரா நினைச்சதை சிவசம்போ அங்கிள் கேட்டிட்டார்ர்ர்ர்... அதானே கிளி ஏதும் மாட்டிடுச்சா கிக் கிக் கீஈஈஈஈ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அங்கிள் உங்களைப் போலவே இருக்கிறார்.

      நீக்கு
  12. கீழிருந்து மேலே 3 ம் பந்தி பிங்கி முதல் வரியில் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊ அது கருத்தரிக்கும் எனத்தானே வரும்..
    மீ க்கு டமில்ல டி எல்லோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே இப்படியும் எழுதலாமோ...

      நீக்கு
    2. அது கதிர் அறுக்கும் என நான் நினைச்சேன். கவி அமுதம் வேறே மாதிரிச் சொல்றாரே!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. கதிர் அறுக்கும் இதைத்தான் 'கருதறுக்கும்' என்று சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
      கதிர் + அறுக்கும் = கதிரறுக்கும்

      நீக்கு
    5. நிஜமாவே கவிஅமுதம் தமிழ்ல டி தானே!! சூப்பர் அதிரா!!!

      பாருங்க கில்லர்ஜி கரீக்டா பாயிண்டை பிடிச்சுட்டாங்க..

      அதிரா கருதறுக்க = கதிரறுக்க.....சரிதான் அதிரா அது நாட்டுப்புற இலக்கியம்...பாருங்க கில்லர்ஜி எழுதியிருப்பது நாட்டுப்புறப்பாடல்!!

      கீதா

      நீக்கு
  13. இன்றுபோல் என்றும் மகிழ்வில் திளைத்து எழுத வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  14. மகனுக்கு கல்யாண நேரத்துல//
    பழைய நினைப்புதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ, இது ஊமைக்குத்து இல்லையே...

      நீக்கு
  15. ஹாஹா சூப்பர் சகோ :)
    நேத்துதான் கோலி சோடாவே என்ற வாழ்வின் தத்துவார்த்தமான பாடல் வரிகளை படிச்சி பாதி மயங்கினேன் :) மேதையை உங்க கவிதை நிறைவேற்றிடுச்சி :)ஹாஹா ..ஆனா இப்படித்தான் எப்பவும் ஹாப்பியா இருக்கணும் :)
    எதுக்கும் கவிதைக்கு காப்பிரைட்ஸ் வாங்கி வச்சுக்கோங்க ..சினிமாக்காரங்க சுட்ருவாய்ங்க :)
    அப்புறம் அந்த கல்கோனாவை கண்ணில் காட்டுங்க ப்ளீஸ் .நான் பார்த்ததில்லை அந்த சுவீட்டை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே எனது பதிவுகளை நிறைய சுட்டுட்டாய்ங்கே...

      கல்கோனாவை கட்டாயம் தேடி படம் போடுகிறேன்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. சரி கில்லர்ஜி அந்த கண்ணழகி யாருன்னு என் கிட்ட மட்டும் ரகசியாம சொல்லிடுங்க ஒகேவா. ஆனா கற்பனை நாயகின்னு மட்டும் சொல்லிடாதீங்க அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இரண்டாவது படிக்கும்போது இனியாவை கரைக்ட் பண்ணினேன்.

      "அந்த" நினைவுகளே சங்கீதம்.

      நீக்கு
    2. பாருங்கள் நண்பரே எப்படி சமாளித்து விட்டார் என்று.
      மீசையை பெருசா வச்சுக்கிட்டு எல்லோரையும் பயமுறுத்துறாரே தவிர, இவர் உண்மையிலேயே பயந்த சுபாவம் உள்ளவர். பாருங்க அந்த கண்ணழகி யாருன்னு ரகசியமா கூட சொல்றதுக்கு பயப்பிடுறதை.

      நீக்கு
    3. ஹலோ, கல்யாண வேலையை பார்க்காம, இப்படி கண்ணழகின்னு படிக்கிட்டு இருக்கீங்க.
      இருந்தாலும் பாட்டு நல்ல இருக்கு

      நீக்கு
  17. காரைக்குடி கல்கோனா சென்னையில் கமர்கட். நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  18. அதானே, மகன் கல்யாண நேரத்தில் எதுக்கு இந்தப் பாட்டு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டுனு வரும்போது அர்த்தத்தை மட்டுமே ரசிக்கணும்.

      நீக்கு
    2. பாட்டும் நடனமுமா கலக்கல் கண்ணன். படமும் அழகு. வாழ்க மணமக்கள்.

      நீக்கு
    3. வாங்க அம்மா மிக்க நன்றி

      நீக்கு
  19. சிவ சம்போ கேள்விக்கு பதில் என்னான்னு தெரிய்யலைய்யே....!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    தங்கள் மகனின் திருமணம் நன்றாக நடந்தேறி இருக்கும். இன்று மணநாள் கண்ட தங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் என்னுடைய மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
    மணமக்கள் நீடுழி பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    தங்கள் கலக்கல் கவிதை பிரமாதம். தடங்கலில்லாத வரிகளை மிகவும் ரசித்தேன். கல்லல் கண்ணன் கலக்கி விட்டார். கல்கோனா இடிபர்பி என்ற பெயரில் அந்த காலத்தில் சாப்பிட்டதாய் நினைவு. (வெறும் 2 பைசாக்கள்தான்.) ஒரு வேளை இது வேறோ என்னவோ.!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ திருமணம் நலமுடன் நிகழ்ந்தது வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. கலக்கல் பா/கவிதை, கலக்குங்கள்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  22. அசத்துகின்றீர்கள் வழக்கம்போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. நாட்டுப்புறப் பாடல் வடிவில் கலக்கல் பாடல்

    பதிலளிநீக்கு
  24. கிராமத்து ஸ்டைலில் அழகான பாடல் கில்லர்ஜி!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  25. Play The Real Money Slot Machines - Trick-Taking Game - Trick-Taking
    How to Play. air jordan 18 retro men blue super site Play The Real Money Slot Machine. If you max88 are searching for a fun, exciting game jordan 18 white royal blue great site to play online, we 게임종류 have you air jordan 18 retro red from me covered.

    பதிலளிநீக்கு