தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 19, 2019

உஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்



இப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக...

லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை கீழே வைத்து விட்டு வந்தவன் கேட்பான்... (வரவைத்தவன் பேசத்தெரியாத அப்பாவி அதிராவைப் போல் ஓரமாய் நின்று கொள்வான்)

அரபாப் அதா ஸூரா ஒயின் ரெக்கப் ?
முதலாளி இந்த படத்தை எங்கே வைக்க ?
அதா மக்கான் ஃபோக் ரெக்கப் மர்கஷ்
அந்த இடத்தில் மேல் மையமாக வை

ஜெயின் அரபாப் அதா மக்கான் ரெக்கப் அசல் மும்தாஜ் ஹயால் மால் இந்தே
நல்லது முதலாளி அந்த இடத்தில் வைத்தால் அழகாக இருக்கும் உங்களுடைய யோசனை அருமை முதல் பிட்டு.
ஸுக்ரான்
நன்றி

உடன் ஸூட்கேஷைத் திறந்து ட்ரிலிங் மிஷினில் பிட்டைப்போட்டு எக்ஸ்டென்சன் ஒயரை பக்கத்தில் இருக்கும் ப்ளக் பாய்ண்டில் சொருகி விட்டு ஏணியை அதன் கோணத்தில் நிறுத்தி விட்டு கதவை அடைக்கும் போது அரபி கேட்பான்.

லேஸ் ?
ஏன் ?
லா அரபாப் அனா சவி மிக்கீனா, ஈஜி அராரா தாக்கல் பீ சிக்கோ பாதின் முஸ்கில் மிஷான் ஊவா
இல்லை முதலாளி நான் மிஷினை ஓட்டவும் சப்தம் வரும் உள்ளே குழந்தைகள் இருந்தால் அவுங்களுக்கு கஷ்டம்
ஐவா, தமாம் அதா ஸகில்
ஆமா, நல்லது அது

உடன் மேலே ஏறிய மலையாளி சொல்வான் மலையாளியிடம் அரபியில் 
சதீக் ஹிம்ஸிக் சல்லம் சோய்ய
நண்பா, கொஞ்சம் ஏணியை பிடிங்க

உடன் அரபி சொல்வான்
தால் சவி முசாதா மிஷான் நஜார்
வா உதவி செய் கார்பெண்டருக்கு
இவனும் வந்து ஏணியைப் பிடித்துக் கொள்ள ட்ரிலிங் ராடு சுவற்றைத் துளைக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இந்த சப்தம் அரபிக்கு கேட்கப் பிடிக்காது கதவைத்திறந்து கொண்டு உள்ளே போய் விடுவார்..... கீழே ஏணியைப் பிடிக்கும் மலையாளி சொல்வான் கார்பெண்டர் மலையாளியை...

ஏடோ பட்டி அபிநயம் கூடுதலடோய் ஓவர் ஸ்மார்ட் வேண்டா கேட்டோ
ஏண்டா நாயே, ரொம்ப நடிக்கிறியடா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம்டா
பின்னே, ஈ மயிரான்டே பைசா எங்குனேயடோ மேடிக்க ?
பிறகு இவங்கெள்ட்ட பைசா எப்படி புடுங்குறது ?

ஒரு வழியாக மிஷினை அழுத்தி துளையிட்டு ஸ்க்ரூ போடும்போது அரபி மீண்டும் உள்ளே நுழைவான் அதுவரை சாதாரணமாக ஒரு கையில் ஸ்க்ரூ டிரைவ் திருகிக்கொண்டு இருந்தவன் இரண்டு கைகளையும் வைத்து முக்கிக் கொண்டு முறுக்குவான் கீழே இறங்கி ஸூட்கேஷில் இருந்த பழைய துணியை எடுத்து இல்லாத வியர்வையை துடைத்து விட்டு, (ஆல் ரெடி இன்சைட் ஏசி ஒர்க்கிங்) புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சொல்வான்.

அரபாப் ஜீப் பூத்தா அபியத்.
முதலாளி வெள்ளைத்துணி கொடுங்க
அரபி சொல்வான் மற்றவனிடம்...
ரோ ஜீப் பூத்தா அபியத்
போ வெள்ளைத்துணி எடுத்து கொடு
துண்டை வாங்கி புதுப் போட்டோவை அவசியமின்றி துடைக்கும்போது கேட்பான்
அரபாப் அதா மீன் சவசவ மிஷான் இந்தே ?  
முதலாளி உங்க கூட இருப்பது யாரு ?
அதா நபர் உஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்.
இந்த ஆள் கல்வித்துறை அமைச்சர் வடுகநாதன்
மாஷா அல்லாஹ் அரபாப் கபீர்ர்ர்ர்ர் இந்தே ஹா ஹா
அப்படியா... நீங்க பெரீய்ய்ய்ய்ய்ய்ய ஆளுதான் ஹா ஹா

ஏணியில் ஏறி மாட்டி விட்டு கீழிறங்கி வந்து மீண்டும் பார்ப்பான், உடன் மீண்டும் மேலேறி சரி செய்வான்
(அவன் வேண்டுமென்றே கோணலாக மாட்டியது இரு மலையாளிகளும் மட்டுமல்ல இதைப்படிக்கும் பதிவர்களும் அறிந்த விசயமே)

மீண்டும் கீழிறங்கி வந்து வடக்கு மூலையில் நின்று தமிழ் சினிமா டைரக்டர்கள் போல் இரண்டு ஆங்கிலில் பார்ப்பான் மீண்டும் மேலேறி ஒரு காலரைக்கால் இஞ்ச் சரி செய்து விட்டு கீழே வந்து நேர் கோட்டில் நின்று பார்த்து விட்டு சொல்வான்.

மும்தாஜ் அரபாப் மியாவுல் மியா ஸூப்.
முதலாளி பாருங்க, அருமை நூற்றுக்கு நூறு
ஐவா, மியாவுல் மியா மும்தாஜ் ஸுக்ரான்.
ஆமா நூற்றுக்கு நூறு அருமை நன்றி

உடன் தனது துணியை வைத்து புகைப்படத்திற்கு கீழே படிந்த சுண்ணாம்பு பொடிகளை துடைத்து தேவையில்லாமல் பக்கத்து ஷெல்பிலும் துடைத்து தனது சாமான்களை பொருக்கி ஸூட்கேஷை மூடும்போது அரபி சொல்வான்.

அலி ஜீப் அஸீர் மிஷான் நஜார்
அலி கார்பெண்டருக்கு ஜூஸ் கொடு
இதை செய்து முடிப்பதற்கு எப்படியும் 3 ½ மணி நேரமாகி கிளம்பும்போது...

கம் ரீத் இந்தே ?
உனக்கு எவ்வளவு வேணும் ?
ஹி ஹி இந்தே அரபாப் ஜீப்.
ஹி ஹி நீங்க முதலாளி கொடுங்க
நூறு திர்ஹாம்ஸ் கொடுத்து
பஸ் ?
போதுமா ?

தலையை சொரிந்து கொண்டு
அரபாப் அனா ஈஜி மின் பைத் ஸூகுல் ஷ்யாதா....
முதலாளி நான் ரொம்ப தூரத்திலிருந்து வர்றேன் வேலையும் கூடுதல்
மேலும் ஐம்பது திர்ஹாம்ஸ் கொடுக்க..
ஸுக்ரான் அரபாப் ஐ ஸுகுல் மவ்ஜூத் சவி மத்கர்ஹ் அனா ஈஜி அலத்தூல்
நன்றி முதலாளி, எந்த வேலையிருந்தாலும் மொபைல் செய்ங்க உடனே வர்றேன்
இன்ஷா அல்லாஹ்
மாஹ் அல் சஸாமாஹ்
மாஹ் அல் சஸாமாஹ்

ஸூட்கேஷை எடுத்துக்கொண்டு லேடரை மடித்து தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பியபோது நான்கு மலையாளக் கண்களும் நாளை பஜாருக்கு வரும்போது உன்னுடைய கமிஷனை வாங்கிக்கொள் என்று மௌனமொழி பேசியதை தங்களுக்கு நான் சொன்னால்தான் புரியுமா ?

கார்பெண்டர் அரபி வீட்டின் பின்புறம் உள்ள தனது கம்பெனியின் ஸ்டோருக்கு ஓடினான் சைட் ஸூப்பரேஷருக்கு தெரியாமல் எடுத்து வந்த ஏணியையும், ஸ்டூல் பாக்ஸையும் வைப்பதற்கு.

அன்பு நெஞ்சங்களே... இதில் நான் யாரையும் தாழ்வாக எழுதவில்லை சராசரி நடைமுறை வாழ்வில் நடந்து கொண்டு இருப்பதை எழுதினேன் பக்கத்தில் நின்று பார்த்ததைப்போல எழுதி இருக்கிறாயே... உனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா ?

நான் இவர்களுடன் (மலையாளி அரேபியர்) இருபது வருடங்களாக பழகி இருக்கிறேன் அவர்களுடன் பேசியதில், கேட்டதில், பார்த்ததில் எனது அலுவலகத்தில் இவர்களின் வேலைகளைப் பற்றி அறிந்ததை எனது பாணியில் எழுதினேன். மற்றபடி யார் மீதும் எனக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை.

குறிப்பு இப்படி வருடம் 2005 வரை நடந்தது ஆனால் இப்போது எல்லோரும் படிக்கத் தொடங்கி விட்டார்கள் எப்பொழுதும் கையில் Cell phone because 100 Durham’s to Indian Rupees 1,700 என்று தெரிந்து கொண்டார்கள்.

ஆகவே... இப்பொழுது ஸுவாஹா ஓதி விடுகிறார்கள் ஆனாலும் மற்ற விபரங்களில் மூளை வளர்ச்சி இல்லை ஆகவே அமெரிக்கன் மொத்தமாக தீட்டுகிறான்.

பின் குறிப்பு சரி இது வெளியிடங்களில் அலுவலகங்களில் இவர்கள்  எப்படி ? என்பதை பார்ப்போமே எமது அடுத்தடுத்த பதிவுகளில்....

///எங்கே போய் விடும் காலம் அது
என்னையும் எழுத வைக்கும்///
- கில்லர்ஜி

38 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் இங்கு இந்தியா, தமிழ்நாட்டிலும் நடப்பதுதானே ஜி? இதே கூட்டுச் சதியும் உண்டுதானே? நேற்றுகூட ஒரு சம்பவம்... அண்ணன் வீட்டில் ஏஸி பொறுத்த வேண்டும். மதுரையிலிருந்து குடி மாற்றி வந்திருக்கிறார். தெரிந்த நண்பர்தன். ஆனாலும் எங்கள் அவசரத்துக்கு கூப்பிட்டால் அவர்கள் செய்த வேலைகள்....!!!!! என்ன செய்ய! இட்ஸ் ஆல் இன் தி கேம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தெரிந்தவர்களை அழைப்பதே சகாயத்துக்காகத்தான் அவர்களே இப்படியென்றால் ???

      நீக்கு
  2. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பாடல் எனக்குமிகவும் பிடித்த பாடல் ஜி... "எங்கே போய்விடும் காலம்... அது என்னையும் வாழவைக்கும்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... "வாழ வைக்குமா"
      நான் எழுத வைக்கும் என்று நினைத்து விட்டேன் ஜி

      எழுத்து பிழையை பொறுத்தருள்க!

      நீக்கு
  3. காரைக்கால் இஞ்சி..

    அது எங்கேயிருந்து வந்தது?...

    ஓ.. காலரைக்கால் இஞ்ச்!...

    பதிலளிநீக்கு
  4. காலையிலேயே கலகலப்பாக்கி விட்டீர்கள்...

    அடுத்த பதிவுக்காக ஆவலுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அடுத்த பதிவு என்று சொல்லவில்லை எமது அடுத்ததடுத்த பதிவுகளில் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  5. இங்கும் சுவரில் துளையிட்டு படங்களை மாட்டி தருபவர்கள் இப்படித்தான் இறங்கி சரியாக இருக்கா என்று பார்ப்பார்கள், நம்மையும் பார்க்க சொல்வார்கள். வேலை எங்களுக்கு திருப்த்தியாக இருக்க வேண்டும் சார், அப்புறம் உங்களுக்கு பிடித்து இருக்க வேண்டும், அப்போதான் நீங்களும் அடுத்த முறை எங்களை கூப்பிடுவீர்கள் என்பார்கள்.

    பிழைக்க தெரிந்தவர்கள் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள் அப்பொழுதுதான் பிழைக்க இயலும்.

      நீக்கு
  6. உங்கள் எழுத்து பிழை பொறுத்தருள பட்டது.

    பதிலளிநீக்கு
  7. நியாயமாக வேலை பார்த்தால் 'ப்பூ இவ்வளவுதானா' என்று செய்த வேலையை மதிக்க மாட்டார்கள். அதனால்தான் நிறைய ஓவர் ஆக்டிங் செய்யவேண்டியிருக்கு. நீங்கள் சொன்ன மாதிரி, தொழில் செய்பவர்களைப் பற்றிக் குற்றம் சொல்ல ஏதுமில்லைதான்.

    நானே, இது மாதிரி கம்பெனிகளில் வேலை பார்க்கும் கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்களை வேலை நேரத்துக்கு அப்புறம் உபயோகித்திருக்கிறேன் (குறைவான செலவு என்பதால்..ஹாஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. என்ன சொல்ல!இம்மாதிரி நாங்க நிறைய ஏமாந்திருக்கோம். ஏமாளினு நம்ம மூஞ்சிலே எழுதி ஒட்டி இருக்கு போலனு நினைப்போம். எவ்வளவு வாக்குவாதம் செய்தாலும் மசிய மாட்டார்கள்! அதிலும் நீங்க சொல்றாப்போல் தச்சர்கள் மற்றும் எலக்ட்ரிஷியன் இருவரும் ஏமாற்றும் ஏமாற்றல்! :( ஒரு முறை ரசீதில் உள்ள பணத்துக்கு மேல் அதிகம் வாங்குவதைக் கண்டு பிடித்து அந்தக் கடைக்கே தொலைபேசியில் கேட்கப் போனதும் ரசீதில் உள்ள பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார் ஒரு எலக்ட்ரீஷியன்! கார்ப்பென்டரோ ஒரு ஆணி அடித்தால் 200 ரூபாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இதே போல சிலிண்டர் கொண்டு வருபவர்கள் கம்பெனி சம்பளம் போக சிலிண்டரை நமது வீட்டில் வைப்பதற்கு ஐம்பது ரூபாய் பில் போட்டது போலவே கேட்கின்றார்கள்.

      நான் பில் தந்தால் நூறு ரூபாய்கூட தருவேன் என்றதும் நீங்க விரும்பியதை கொடுங்க சார் என்கிறான்.

      நீக்கு
  9. எமாறுபவர் இருக்கும்போது ஏமாற்றுபவரும் இருக்க வேண்டும் அல்லவா

    பதிலளிநீக்கு
  10. இதில் யார் வடுகநாதன்

    பதிலளிநீக்கு
  11. புகைப்படத்தில் இருக்கும் (கமல்ஹாசன்) கல்வித்துறை அமைச்சர்தான் வடுகநாதன்.

    பதிலளிநீக்கு
  12. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்...!!!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அப்படியும் இப்படியுமாக நிறைய வேலை செய்வது போல் காட்டி வந்தவன் ஏமாற்றி விட்டானா?..இப்படி ஏமாற்றுபவனை தெய்வம் வேறு எவரிடமாவது ஏமாற்ற வைக்காதோ.. எனும் கோபம் வருகிறது.. ஆனால் அந்த தெய்வமே சிலசமயம் அவன் வாழ்நாள் முழுக்க கூட இருந்து உதவிகள் செய்யும். அடுத்தப் பிறவியில் அவனை வஞ்சிக்கும்...அப்போது நம்மால் பார்க்க முடியுமோ? என்னவோ உலகம்..! ஏமாளிகள் ஏமாறவே பிறந்திருக்கிறார்களோ என எண்ணும் படியான பதிவு. நன்றாக எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு அரபி மொழித்திறமையும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      நானும் பலமுறை நினைத்துப் பார்ப்பேன் இவர்களுக்கு இறைவன் இறுதி காலம்வரை துணை இருப்பதின் சூட்சுமம் எப்படி என்று ?

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  14. ஏமாற்று என்பதற்கு எல்லையே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இவர்களுக்கு வானம்வரை எல்லை கிடையாது.

      நீக்கு
  15. தமிழ்நாட்டில் இந்தீ படிக்கச் சொல்றாங்கே.....நீங்க...அரேபியும் மலையாளத்தையும் சொல்லி தமிழ்ல விளக்கம் தர்ர்ரீங்க....இதிலிருந்து என்ன தெரிவது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமொழியோடு இணைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பலமொழி அறிவதில் தவறில்லை நண்பரே...

      நீக்கு
  16. 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதையும் ஏமாளிகளை ஏமாற்றத் தெரிந்தால் எங்கும் பிழைக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. இப்படியுமா ஏமாற்றுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஏமாற்றுகள் பலவிதம் அதில் இதுவொரு விதம்.

      நீக்கு
  18. அசத்துங்கள் தோழர்

    பதிலளிநீக்கு
  19. அன்பு தேவகோட்டைஜி., கொத்தனார்களை விட்டு விட்டீர்களே.
    இந்த சாமர்த்தியங்கள் இருப்பதாலயே அவர்களால்
    நல்ல் பணம் பார்க்க முடிகிறது.
    இப்போது ஏமாறவில்லை என்றால்,

    பரவாயில்லை. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா என்று பாட யார் இருக்கிறார்கள்.
    ஏமாற்றுபனுக்கும் ஒரு எத்தன் வருவான்.

    எங்கள் வீட்டில் ஒரு அறை கட்டிக் கொடுத்தவர்
    கட்சி சார்ந்தவர்.
    பணம் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் சென்று விட்டார்.
    ஒரு வாரத்துக்கு வாயில் கதவு இல்லாமலயே
    இருந்தோம். வீட்டுக்காரர் கொடுத்த தைரியத்தில் நான் உறங்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      ஏமாற்றிப் பிழைப்பவர்கள் நிச்சயம் ஓர்நாள் பிறரிடம் ஏமாந்து போவார்கள்.

      நீக்கு
  20. வெள்ளிக்கிழமை ... மாலைநேரவேலை .... அதுபற்றி நீங்க இந்த பதிவில் சொல்லவே இல்லையே ... !!! ஹி...ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரையில் சொல்லி விட்டேன் நண்பரே...

      நீக்கு