தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூன் 09, 2019

பணயம் வைத்த பயணம்


நான் இரண்டு குதிரைகள் பூட்டிய ஸாரட் வண்டியில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்பவன் இரண்டு குதிரைகளையும் வெவ்வேறு திசைகளை நோக்கி செலுத்துவேன், ஆயினும் எனது பயணம் நான் போகின்ற இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.

இதன் மூலம் நானொரு மிகப்பெரிய குழப்பவாதி பிறரின் கண்களுக்கு...

ஆனால் எனக்குள் நான் மிக மிகத் தெளிவானவன் காரணம் அப்பொழுதுதான் எமது கண்ணின் மணிகள் பாமா-ருக்மணியை சமாளித்து வாழ முடியும்.

சாம்பசிவம்-
இரண்டு குதிரை வேண்டும் தரகரிடம் கேட்டேன்
வீட்டில் வளர்க்க ஒன்று... கூட்டில் வளர்க்க ஒன்று

Chivas Regal சிவசம்போ-
அது சரி டபுள்ஸ் வாலாவா ?  

67 கருத்துகள்:

  1. ஆஆஆஆ மீதான் 1ச்ட்டூஊஊஊஊ:)...
    என்னை முந்தி ஆராவது இங்கின வந்திருந்தால் அவர்களின் மூக்கில மூன்று நாளைக்கு நுளம்பு கடிக்கும்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நெல்லைய்ஹ்தமிழன் தப்பிfட்டார்:)

      நீக்கு
    2. அதிராவுக்கு வாத்துகால்.

      நீக்கு
    3. //வாத்துகால்// - இயல்பான நகைச்சுவை கில்லர்ஜி... நகைத்தேன். (அவரது எழுத்துப்பிழைகளைச் சுட்டிக் காண்பிக்கும் விதமாக...ஹாஹா)

      நீக்கு
    4. நண்பரே நான் அதிராவுக்கு வாழ்த்துகள்தான் சொன்னேன். விரலின் தவறு வார்த்தை மாறிவிட்டது

      நீங்கள் தேவையில்லாமல் பிரச்சனை ஆக்கி விடாதீர்கள்.

      அதிரா அவசரப்பட்டு ஜேம்ஸ் ஊரணியில் குதித்து விடப்போகிறார்கள்...

      நீக்கு
    5. யாரது இங்கன தமிழ்ல டி வாங்கிய எங்கட கம்ப பாரதி கவிதாயினியை நகைப்பது!!

      கில்லர்ஜி நீங்களே, எங்கட கவிதாயினியை வாத்துகால் தானே அப்ப தேம்ஸ் ல தள்ளிவிட்டாலும் நீஞ்சி வந்துருவாங்கனு தள்ளிவிடப் பார்க்கறீங்களோ....எதிர்நீச்சல் போட்டு வந்து பொயிங்குவாங்களாக்கும்!!!

      கீதா

      நீக்கு
    6. அதூஊஊஊஊஊஉ ரெண்டு குதிரைக்காலைப் பார்த்ததால கில்லர்ஜிக்கு டங்கு ஸ்லிப்பாஅகி வாத்துக்கால் ஆச்சு:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  2. என்னாதூஊஊஉ பாமா -ருக்மணியோ?:) எனக்கு வடிவேல் அங்கிள் கொமெடி வாய் நுனி வரை வந்திட்டுது:) ஆனாலும் அடக்கிட்டேனாக்கும் கர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை நீங்கள் பாமா-ருக்மணியை கவனித்து விட்டீர்கள்.

      நீக்கு
  3. வெள்ளைக்குதிரையா கில்லர்ஜி:)))... உகண்டாவோ கறுப்பு:)... சிவப்பு பற்றிய பிரச்சனை நமக்கெதுக்கு:)
    எங்கிருந்தாலும் வாழ்க:)
    இரண்டு குதிரையுடன் வாழ்க:)
    வெவ்வேறு திசையில் செலுத்தி வாழ்க.....

    இரண்டு குதிரைகளில் ஒரு மனிதன் போவதென்ன?... ஒரு ஆஆஅதாரத்திலே சில மனிதர் வாழ்வதென்ன...
    இப்ப பார்த்து சிட்டுவேசன் சோங்காப் போகுதே பிபிசியில்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி
      பாடல் சரியில்லையே....

      நீக்கு
  4. குதிரை இரண்டும்
    இரண்டு வழியில போனால்
    பயணம் என்னாகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மரக்குதிரை நண்பரே நின்ற இடத்திலேயே ஓடும்.

      நீக்கு
  5. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சு!?...

    பதிலளிநீக்கு
  6. நேக்கு ஒண்ணும் புரியலை கேட்டேளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே சகோ கோமதி அரசு அவர்களுக்கு மறுமொழி கொடுத்துள்ளேன்.

      நீக்கு
  7. குதிரையை எப்படிக் கூட்டில் வளர்க்க முடியும்? குதிரை என்பது குறியீடா? வெவ்வேறு திசையில் சென்றால் கப்பை கிழிந்து விடாதோ? இலக்கை எப்படி அடைவீர்கள்? மேடைக்கு வாங்க நெல்லைத்தமிழன், துரை ஸார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கப்பை கிழிந்து விடாதோ ?//

      ஹா.. ஹா.. இது நிஜக்குதிரைக்குதானே...

      அல்வாக்காரரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க...?

      நீக்கு
    2. ஸ்ரீராம் முதலில் நான் கீழே கருத்து போடப் போனேன் அதற்குள் உங்க கருத்து கண்ணில் பட்டுவிட இங்கே ஹால்ட் ஹாஹாஹா..

      என்ன குழப்பம் ஆஹா என்ன குழப்பம்!! ஸ்ரீராம் நான் முதல்ல பொண்ணு பையன் மருமகள் குறியீடு என்று நினைத்தேன்...அதுல இரண்டில் தான் பயணம்..செய்யவும் முடியும்....கடைசில பார்த்தா பாமா ருக்மணினு பார்த்ததும் சரி ட்ராக்கு வேறனு புரிஞ்சு போச்சு. ரெண்டையும் வேற வேற திசைல வைச்சாத்தானே ஒயிங்கா போக முடியும் ஹா ஹா ஹா...ஒன்னு பேக் டோர் ஒன்னு ஃப்ரன்ட் டோர்...சரியா கில்லர்ஜி? அது சரி இது யாருக்கு இப்படி ரெண்டு குதிரை...அதுல நீங்க ஏன் குழம்பனும் யார் ரெண்டு குதிரை வைச்சுருக்காங்களோ அவங்கதானே குழம்பனும் ரெண்டு ஒரே டயத்துல உள்ள வந்தா என்னாகும்னு?!!!!!!!!!!

      ஹையோ யாராவது இங்க வாங்களேன் நானும் குயம்பிட்டேன்...கன்ஃப்யூஷன் தீர்க்கணுமே எண்டெ கன்ஃப்யூஷன் தீர்க்கணமே...இந்த மலையாளப் பாட்டுத்தான் செம சிச்சுவேஷன் சாங்க்...

      அதிரா உங்க பிபிஸிக்கு இந்தப் பாட்டெல்லாம் தெரியாதாக்கும்!!!

      கீதா
      என் குதிரை இன்றுமிக மிக மிக ஸ்லோவாகப் பயணம் அதான் இப்ப லேட்டு..காலையிலேயே குதிரைய பார்த்துவிட்டேனாக்கும்

      நீக்கு
    3. சரி தெளிவாக விளக்கம் கொடுத்துக்கிட்டே வந்தீங்க மகிழ்ச்சி.

      கடைசியில் கன்ப்பியூசன் ஏன் வந்தது ?

      இதைக்கேட்டு நானும் கன்ப்யூசன் ஆகிட்டேன்.

      நீக்கு
    4. ஸ்ரீராம் , கீதா கொயம்பாதீங்கோ.. மீ ரொம்பத் தெலிவா:)) இருக்கேன்ன்ன்ன்:))..அதாவது ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கோ:))[ஹையோ நான் அந்த குதிரைப்பொண்ணுங்களைச் சொன்னேன்:)).. நீங்க டப்புத்தப்பா நினைச்சால் அதுக்கு மீ பொறுப்பல்ல கர்ர்ர்]..

      இருவரும் மாமா.. நீ இல்லாமல் நானில்லை என்கினமாம்:)).. இருவரையும் ஜமாளிக்கலாம் என ஓசிச்சால்ல்:)).. ஒவ்வொருவரும் வெவ்வேறு குணாதிசயமாம்:)).. கலரைக் கவனிச்சாலே புரியுமே:)) அப்போ எப்பூடி ஒற்றுமையாக இருக்க முடியும்?:) அதுதான் கில்லர்ஜி நம்மை ஐடியாக் கேட்கிறார்ர்.. உகண்டாவா[கறுப்பு].. நியூயோர்க்கா[சிவபு]? எதில் காலை வைக்க என?:))..

      கூட்டில் என்றால்.. வீட்டில் மட்டும்.. வீட்டில் என்றால் காரில சுத்த மட்டும்.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே குதிரை வண்டிலில் போக என ஜொன்னேன்ன்ன்.. சே..சே.. கொஞ்சம் கை ஸ்லிப்பானாலே அடிராவைத்தப்பா நினைச்சிடப்போகினம் கர்ர்:))..

      இப்போ புரிஞ்சுதோ கீதா அண்ட் ஸ்ரீராம்?:) இன்னும் டவுட் வந்தா என் வட்சப்பில் கேளுங்கோ:))

      நீக்கு
    5. அதிரா பதிவை அழகாக விவரிச்சுட்டீங்க... ஆச்சர்யமாக இருக்கிறது.

      இதை இந்த நோக்கத்தில்தான் சொல்ல வந்தேன் சொன்ன விதத்தில் குழப்பம் இருக்கிறதோ... என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி.

      நீக்கு
    6. அதிரா...

      புரிஞ்சு...............



      போயிடுச்சு!

      நீக்கு
    7. கில்லர்ஜி...: "இதை இந்த நோக்கத்திலதான்சொல்ல வந்தேன்..."

      ஆ..................!

      நீக்கு
    8. நன்றி ஜி

      ஏன்...... ஆ...... ?

      நீக்கு
    9. "ஆ...." என்றால் அதிர்ச்சி அடைகிறேன் என்று பொருள்.

      அதிரா சரியாததான் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் சொல்லியிருப்பதால் வந்த அதிர்ச்சி!!!!!!

      நீக்கு
    10. ஹா.. ஹா... நன்றி ஜி

      நீக்கு
    11. ஹா ஹா ஹா கில்லர்ஜி.. போஸ்ட் பார்த்ததும் இதைத்தான் நினைச்சேன்ன்.. ஆனா தப்பாகிடுமோ எனும் பயத்தில மாத்திக் கொயப்பினேன்:)..

      பாருங்கோ ஸ்ரீராம் அதிர்ச்சியில இன்னும் வாய் மூடவில்லை:)) 101 க்கு அடியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)). ஹா ஹா ஹா..

      நீக்கு
    12. ம்.. ம்.. மிக்க நன்றி
      இங்கு 108 தான் அடிக்கோணும். என்னிடம் மொபைல் பேலன்ஸ் இல்லை.

      நீக்கு
  8. தெளிவாக குழப்புவது என்பது இது தானோ!
    இரண்டு குதிரைகளை வெவ்வேறு திசைகளை நோக்கி எப்படி செலுத்தி பயண இலக்கை அடைய முடியும்?
    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரை என்ற குறிப்பை வாழ்க்கைப்பயணம் என்று கருதக்கூடாதா ?

      இரண்டு மனைவிகளையும் சந்திக்க விடாமல் பிரச்சனைகளை தவிர்த்து வாழ்க்கையை நகர்த்துபவர்களும் உண்டு

      இரண்டு பொண்டாட்டிக்காரனின் மனநிலையை நகைச்சுவைக்காக எழுதினேன் ஆனால் பலரும் பாமா-ருக்மணியை மறந்து விட்டனர்...

      இது எனது வாழ்க்கை பந்தப்பட்டதே அல்ல யாரோவொரு கற்பனை மனிதனே...

      உண்மையிலேயே தற்போது பயணத்தில் (குதிரையில் அல்ல)பிறகு வருகிறேன்.

      நீக்கு
  9. என்ன மனக்குழப்பம் புதிதாக? எதுவாக இருந்தாலும் விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள். குதிரைகள் இரண்டும் ஒரே திசையில் உங்கள் மனதுக்கு ஏற்றவாறு செல்லப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒன்றுமில்லை சகோ மேலே கொடுத்துள்ள மறுமொழியே அனைவருக்கும்.

      பிரார்த்தனைகளுக்கு நன்றி

      நீக்கு
  10. ஏதோ மன அழுத்தம் என்பது புரிகிறது
    ஆனால் அதையெல்லாம் கடந்து பயணிப்பவர் அல்லவா தாங்கள்
    இதுவும் கடந்து போகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மன அழுத்தமெல்லாம் இல்லை.

      கமலஹாசன் மாதிரி எழுதிப்பார்ப்போமே என்று நினைத்தேன் அவ்வளவே...

      நீக்கு
  11. இரட்டை குதிரை பயணம் கடினம் தான். அன்பு தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இரண்டு மனைவிகளோடு வாழ்பவனின் நிலையும் இப்படித்தான்.

      நீக்கு
    2. கில்லர்ஜி....உண்மையைச் சொல்லுங்கள்... ரெண்டு குழ்ந்தைகளோடு வாழ்வதும் அப்படித்தானே. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு திசையில் இழுக்கும், அடுத்தவர்களை கம்பேர் பண்ணும்....

      நீக்கு
    3. வருக நண்பரே இப்படியும் அர்த்தம் கொள்ளலாம்.

      நீக்கு
  12. குதிரைகள்தான் இரண்டு,வண்டி ஒன்றுதானே,வெவ்வேறு திசையில் எப்படி,,,,?
    மனதளவில்வேண்டுமானால் சாத்தியம் கொள்ளலாம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான கேள்வி வண்டி ஒரே இடத்தில் நிற்கிறது குதிரைகளை விரட்டுவதே குறிக்கோள்.

      நீக்கு
  13. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    நானும் ஐந்தை (5) இரண்டாக்கி விட்டேன் ஜி... ஆனால்...

    பதிலளிநீக்கு
  14. ஆனால்...

    திருமூலரின் திருமந்திரத்தில் 2883-வது பாடலில்...

    பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு...
    மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன...
    மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்...
    பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே...!

    இப்படியும் இருக்கு...! அதனால்...

    பதிலளிநீக்கு
  15. அதனால்...

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்...

    அப்படின்னு வாழ முயற்சிக்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
  16. அப்புறம் பாட்டு இல்லையென்றால்... (!)

    இதோ :-

    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்...
    நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று...

    இரவும் பகலும் இரண்டானால்...
    இன்பம் துன்பம் இரண்டானால்...
    உறவும் பிரிவும் இரண்டானால்...
    உள்ளம் ஒன்று போதாதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்... விளக்கத்திற்கும், பாடல் வரிகளை தந்தமைக்கும் நன்றி ஜி

      நீக்கு
  17. எனக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை ..விளக்கம் பார்த்தேன். கொஞ்சம் மாடர்னாக காலத்துக்கேத்த மாதிரி ரெண்டு பென்ஸ் கார் ரெண்டு ஹம்மர் கார் அப்படின்னு யோசிச்சிருக்கலாமே குதிரையை எல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நீங்க நவீன காலத்துக்கு வந்துட்டீங்க....

      நான் இன்னும் பழைய சோறுதான்.

      நீக்கு
  18. கில்லர்ஜி....இன்றைய இடுகை சரியாக வரவில்லை.

    முதலில் நீங்கள், நம் இரு கண்களைப் பற்றி எழுதியிருக்கீங்களான்னு நினைத்தேன்.

    கோமதி அரசு மேடத்துக்குக் கொடுத்த விளக்கத்துக்குப் பிறகு இன்னும் குழம்பியது. எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தன் இரு மனைவிகளோடு ஒரே வீட்டில் வாழ்ந்தவரல்லவா? நமக்குத் தெரிந்த அரசியல்வாதிதான் ஒருத்தருக்கு இன்னொர்வரை மறைத்து பல காலம் தன் மனைவிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து வாழ்ந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்... புரிகிறது யாரென்று...

      கமல் பதிவு எழுதினால் எப்படியிருக்கும் என்று நினைத்து எழுதினேன் ஆனால் இந்தக்குறிப்பை நான் கொடுத்திருக்கவேண்டும்.

      தயங்கி விட்டேன் மனதில் பட்டதை சொல்வதே உண்மையான விமர்சனம் நன்றி.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இரண்டு குதிரைகளையும், வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைக்க தங்களுக்கு இருக்கும் ஆற்றலை முதலில் பாராட்டுகிறேன். ஆனால் சமயம் என்பது எப்போதும் சாத்தியமாக இருக்குமா? அவை முன் பின் மாறுபடும் இயல்புடையது அல்லவா?

    இரண்டு குதிரைகளையும் ஒரே திசையில் சேர்ந்து பயணிக்கும் ஒத்துழைப்பு எண்ணத்தை அவைகளை வளர்க்கும் போதே அவைகளின் உணவுடன் சேர்த்து ஊட்டி விட்டால், பாமா, ருக்மணி போல் அவைகளும், புரிந்து கொண்டு எப்போதும் தாங்கள் நினைத்த இலக்கை அடைய ஒத்துழைக்கும் அல்லவா? அது சரி... பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பான்மையை கண்ணன் அறியாததா? பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது விளக்கமும் நன்றாக இருக்கிறது ரசித்தேன்... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. இரண்டு குதிரைகள்>>>இரண்டு மனங்கள்[''இரண்டு மனம் வேண்டும்'' -கண்ணதாசன்].

    இரண்டு மனக்குதிரைகளும் வேறு வேறு திசையில்[விருப்பங்கள்] பயணிக்கின்றன. ஒரு உதாரணம்[எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை].....

    ''எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்'' -ஒரு மனம். ''இந்தியைத் திணிப்பதால் எனக்கு இந்தியாவைப் பிடிக்காது'' -இன்னொரு மனம்.

    சரியா கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தின் கோணமும் நன்றாக இருக்கிறது. வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. இரண்டு மனம் வேண்டும்.... :)

    படத்தில் மூன்று குதிரைகள்.... இன்னும் ஆபத்தானது!

    பதிலளிநீக்கு

  22. உங்கள் மனக்குதிரையை ஒடவிட்டு இங்கு உள்ளவர்களை குழப்பிவீட்டீர்கள் போல...

    பதிலளிநீக்கு
  23. இலக்கை நோக்கிய பயணம் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. இரு குதிரைகளில் பயணிப்பது கடினம். அப்படி இருக்கும்போது வெவ்வேறு திசைகளில் பயணிப்பது என்பது நடவாத காரியம். வேண்டுமெனில் மனதுக்குள் பயணித்து மகிழலாம். மனதை கட்டுப்படுத்தினால் எதுவும் சாத்தியம் என சொல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாமா-ருக்மணியை சொன்னேன்.

      நீக்கு
  25. நான் .. சிவாஜி கணெசன் நடித்த வசந்த மாளிகை படத்தை நினைத்தேன்.. திண்டுக்கல் தனபாலன் பாடலை பதிவு செய்துவிட்டார். பெரும்பாலானவர்கள் இரண்டு மனதுடன்தான் வாழ்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்த பாடலையே சொன்னேன் நண்பரே...

      நீக்கு
  26. killergee... ஐயா உங்கள் பதிவுகளை பார்க்கும் போது நீங்கள் மிகவும் ''துடிப்பான'' இளைஞராக இருப்பீர்கள் போல் தோன்றுகிறதே !!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது மனது முதுமையாகி மாமாங்கங்கள் கடந்து விட்டது.

      நீக்கு