தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 08, 2019

மூஸாலி கோயில் (1)



வெள்ளிக்கிழமை அமாவாசை இருட்டு காட்டுப் பாதையில் சிவமணியும், தவசியும் தூரத்தில் தெரியும் இரவேசி மலையின் முகட்டில் இருக்கும் மூஸாலி கோயிலை நோக்கி கையில் அரிக்கேன் விளக்குடன் நடந்து சென்றார்கள் சிவமணி கையிலிருந்த தூக்குச் சட்டியில் கெட்டிச்சோறு இருந்தது

தவசி
என்னடா ?

பின்னாலே யாரோ வர்றது மாதிரியில்லை...
ச்சீ மூதேவி பேசாமல் வாடா..

சிவமணி மீண்டும் திரும்பிப் பார்த்து நடக்க தவசி கோபமாகி

பேசாமல் வரமாட்டே... பயந்தாங்கொள்ளி
என்று திட்டவும் தவசியை கொஞ்சம் முன்னே விட்டு பின் தொடர்ந்தான்..


தவசி பூசாரி இந்நேரம் வந்துருப்பாரா ?
அவரு சொன்னபடி வந்துருவாரு...

இன்னும் எவ்வளவு தூரம் ?
இன்னும் கழுமரமே வரலையே... அதுக்குள்ளேயா ?

நான் முதல் தடவையா வர்றேன் அதான் பயமா இருக்கு.
சரி இந்த விளக்கை புடிச்சுக்கிட்டு நீ முன்னாலே போ நான் பின்னாலேயே வர்றேன்...


சிறிது தூரம் நடந்ததும் கழுமரம் இந்த இருட்டில் பரந்து விரிந்து உட்கார்ந்து இருக்க.. மரத்தின் முகப்பே பயமுறுத்தியது ஆந்தைகளின் அலறல் சத்தமும் எங்கோ... நாய் ஊளையிடும் சத்தமும் கேட்டது மிரண்டு தவசி என்று அவனின் கையைப் பிடித்தான்.

போடா... போடா.. இன்னும் கொஞ்ச தூரம்தான் வந்துட்டோம்.
சிவமணி பயத்தை களைய பேசிக்கொண்டே முன் சென்றவன் திடுக்கிட்டவன் போல் நின்றான்.

என்னடா ?
அதோ... பாரு..
மாட்டுக் கன்று ஒன்று நின்றிருந்தது

அட மூதேவி அது கன்றுக்குட்டிடா இதுக்கெல்லாம் பயந்தால் என்னாகுறது பேசாமல் நட...
வளைவில் திரும்பும்போது தூரத்தில் மூஸாலி கோயிலின் மேற்கலசம் தெரிந்தது கோயிலின் முன்புறத்தில் சிறிய அளவில் நான்கு தீப்பந்தங்கள் நட்டு வைத்திருக்க...


அதோ தெரியுது பார் கோயில்...
அப்பாடா இப்பத்தான் எனக்கு நிம்மதி...

சரி சரி வேகமாக நட..
தவசி எத்தனை பேரு இருப்பாங்க... ?

பதில் வராததால் திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டான் தவசியை காணவில்லை.

தொடரும்...

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

    அட காலை வேளையில் ஒரு த்ரில்லர்! ஹாரர்!

    சூப்பர்! கில்லர்ஜி! ஏதோ அமானுஷ்யம் போல இருக்கிறது. எனக்கு த்ரில்லர் பிடிக்கும். இப்படி கரெக்ட்டா தொடரும் போட்டுருக்கீங்க.

    ஒரு வேளை தவசி அங்கிட்டு எங்காச்சும் இயற்கை அழைப்பிற்கு ஒதுங்கியிருப்பான் நீங்க அப்படியும் சொன்னாலும் சொல்லுவீங்க அடுத்ததுல...ஸோ யூகம் எதுவும் பண்ணாம தொடர்கிறேன். ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவசி போறவன் சிவமணியிடம் சொல்லி விட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே...

      நீக்கு
  2. குட்மார்னிங் கில்லர்ஜி..

    என்ன அதிகாலையில் படிக்க வந்தால் பயமுறுத்துகிறீர்கள்? அந்த மரமே திகிலாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மரம் கழுமரம் அப்படித்தானே இருக்கும் இதற்கு நானென்ன செய்வது ஜி ?

      நீக்கு
  3. அப்பா....டி... நல்லவேளை... காணொளி இல்லை!

    பதிலளிநீக்கு
  4. என்ன.. தவசி வேப்பிலைக் கொத்து எடுத்துச் செல்ல வில்லையா?..

    மலை முகட்டுக் கோயிலில் நல்லா விபூதி அடிச்சி கூட்டிட்டு வாங்க...

    என்னது?.. கில்லர் ஜி கூடப் போகலையா...

    அப்போ கதை எழுதுறது ஆரு?..

    ஆகா.. எனக்கே விபூதி போடணும் போல இருக்கே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி இடத்துக்கு நான் வரமாட்டேன் ஜி பயமாகீது...

      நீக்கு
  5. படங்கள் கொஞ்சம் பயம் காட்டுகிறது.
    மரம் படம் எங்கு தேர்ந்து எடுத்தீர்கள்?
    பயம் காட்ட நல்ல படத்தேர்வு.
    கதை தொடக்கமே அசத்தல்

    கெட்டி சோறு சிவமணி கையில் இருக்கிறது பின் தொடர்வது போல் உணர்ந்தவர் அவர்!
    தவசியை காணவில்லை ! அவருக்கு என்ன ஆச்சு ? தொடர்கிறேன்.
    இரவேசி மலை, மூஸாலி கோவில் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      கதையை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் நன்றி.

      நீக்கு
  6. நல்ல த்ரில்லர் கதை. தொடர்கிறேன் ஜி!

    பதிலளிநீக்கு
  7. மரத்தின் படம் அசத்தல் - பார்க்கும்போதே பயம் வந்து விடுமே!

    த்ரில்லர் கதை... காணாமல் போய்விட்டாரே - எங்கே போனார் எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கத் தான் வேண்டும் இந்தக் காட்டுக்குள் - வேறு வழியில்லை!

    பதிலளிநீக்கு
  8. தவசியைக் காணோமா
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. என்ன ஜி இப்படி பயமுறுத்துறீங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நானும் எப்பத்தான் வளருவது ?

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல திரில்லர் கதை. பகலிலேயே கொஞ்சம் பயமுறுத்துகிறது. அவர்கள் பகல் வெளிச்சத்தில் அந்த கோவிலுக்கு போகக் கூடாதா? கோவில் பேரும்,அது இருக்குற இடமுமே கொஞ்சம் பயமுறுத்தலுக்கு துணை வருகிறது. மரம் வேறு போதாகுறைக்கு...!சரி சரி.. கதாசிரியர் அவர்களை இரவு நேரத்தில் பயணப்பட வைக்கும் நோக்கத்திற்கு அவர்களை குறை சொல்ல கூடீது. ஹா. ஹா. ஹா. கதை அருமையாக செல்கிறது. தவசியை நாங்களும் தேடுகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவர்களை பூசாரி நள்ளிரவில் வரச்சொல்லி இருக்கிறார் என்றால் ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்.

      தவசியை வேறு திடீரென்று காணவில்லை நானும் ஆவலோடுதான் வருகிறேன் எல்லாம் அவன் (கில்லர்ஜி) செயல்.

      நீக்கு
  11. நல்லவேளையாப் "பேயார்" இங்கே வந்திருக்கார்! காணோமேனு தவிச்சுப் போயிட்டேன். அந்த மரம் நல்லா இருக்கு பார்க்க! என்ன திடீர்னு பார்த்தால் பயமுறுத்தும்! அது சரி! தவசி எங்கே போனார்? இயற்கை உபாதைக்கா? இல்லைனா கழுமரம் பிடிச்சு இழுத்துடுச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவசி என்ன ஆனாரோ... யாரு கண்டா... அந்த கழுமரம் இப்படியும் செய்யுமோ...?

      நீக்கு
  12. என்னதான் பூசாரி நள்ளிரவில் வரச் சொல்லி இருந்தாலும் இவங்க சாயங்காலமோ, மதியமோ கிளம்பி வந்திருக்கலாம்! அது என்னங்க பெயர் கூட இரவேசி மலை, மூஸாலி கோயில்னு! புதுசா இருக்கே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவேசி மலை, மூஸாலி கோயில் இதுவரை யாரும் சொல்லாத விசயமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.

      நீக்கு
  13. ஆந்தை அலற, நாய் ஊளையிட இருட்டான காட்டுக்குள் கோயில் பூசாரியைத் தேடி இரண்டு பயந்தாங்கொள்ளிகள் பயணம்...எதுக்குப் போறாங்க? என்னவாகப் போறாங்க? கதையின் ஆரம்பமே அச்சுறுத்துது.

    பெரு பெருசா ரெண்டு குழிவிழுந்த கறுத்த கண்களுக்குக் கீழே சிறுத்த வட்ட மூக்கு. அதுக்கும் கீழே “ஆ...”ன்னு, சிதைஞ்ச மேல் வரிசைப் பற்களோட திறந்த பெரிய வாய். சிவமணியும் தவசியும் மட்டுமல்ல, அந்தப் பேய் மரத்தைப் பார்த்து நானும் பயந்துட்டேன்.

    இதென்ன பேய்க்கதையா கில்லர்ஜி?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      எனக்கும்கூட அந்த மரம் பயமுறுத்ததான் செய்யிது.

      பார்ப்போம் என்ன நடக்கப்போகுதுனு.
      .

      நீக்கு
  14. தவசி பயத்தில் கீழே விழுந்துவிட்டாரா ? தொடர்கிறேன் நடந்ததை அறிய.

    பதிலளிநீக்கு
  15. கில்லர்ஜிக்கு வணக்கம். சுவாரசியமான பயணம், ம்ம்ம் தொடருங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  16. தவசி பாட்டுப்பாட போயிருப்பார்.... உடனே பயம் காட்டுறீங்களே தலைவரே..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு பாடுவதற்கு எங்கு போறார்... பாடிக்கொண்டே நடக்கலாமே...

      நீக்கு
  17. thriller கதையை ஆங்கிலத்தில் சொன்னால் இது ஒரு கில்லர் ஜி

    பதிலளிநீக்கு
  18. பெயருக்கு ஏற்றார்ப்போல க்ரைம் கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க. இனி வேப்பிலை கொத்தோடுதான் உங்களை பார்க்க வரணும் போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வேப்பிள்ளை கசாயம் உடலுக்கு நல்லது.

      நீக்கு
  19. இருட்டில் தனியே போகும்போது விசில் அடித்துப் போனால் பயம் தெரியாதாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா இந்த ஐடியா இந்தப் பயலுகளுக்கு தெரியவில்லை போல...

      நீக்கு