தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 14, 2019

மூஸாலி கோயில் (3)



முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

ண் விழித்த சிவமணிக்கு கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந்து விட்டது திறந்த வெளியில் தன்னை தரையில் பரப்பி படுக்க வைத்து கை கால்களை கட்டியிருந்தார்கள் உடம்பு முழுவதும் கருப்பு நிறத்தில் மையை தடவி இருந்தார்கள் எதிரே பார்த்தான் இதுதான் மூஸாலி கோயிலோ கையெடுத்து வணங்கி வேண்ட வேண்டும் போல் இருந்தது கைகள் கட்டப்பட்டு இருக்கிறதே.. பக்கத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவன் ஏதோ செய்து கொண்டிருந்தான் சூழ்நிலையை பார்க்கும் பொழுது இரவு முழுவதும் ஏதோ பூஜை நடந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது நேற்றிரவு நமது குருதியைக் குடிக்க சண்டை போட்டவர்களில் ஒருவனைக் காணோமே ஒருவேளை அவனை இவன் கொன்று விட்டானோ ?


அப்படியானால்... இவன் நமது குருதியைக் குடிப்பானோ ? தவசி எங்கே ? இவர்கள் யார் ? பெண்களும் இருக்கின்றார்களே இந்தப் பெண்களின் பார்வையே சரியில்லையே வாயில் எச்சில் ஒழுகுவதைப் பார்த்தால் குருதி குடிக்க துடித்துக் கொண்டு இருப்பவர்கள் போல இருக்கின்றதே... ஒவ்வொருவரும் சைத்தான்களைப் போல் இருப்பவர்கள் சட்டென நொடிப் பொழுதில் மனிதர்களைப் போலவும் முகம் மாறுவதை கண்டான் இவர்கள் மனிதர்களா ? இல்லை... நினைவோட்டம் சட்டென கலைந்தது காரணம்...

மூஸாலி மஹாபடுங்கி... தப்பறாகூ....
மூஸாலி மஹாபடுங்கி... தப்பறாகூ....
மூஸாலி மஹாபடுங்கி... தப்பறாகூ....


மூன்று முறை கேட்டது இவர்கள் என்ன மொழியில் சொல்கின்றார்கள் ? நேற்றிரவு தமிழில் பேசியது ? ஒருவேளை இது பூசை செய்யும் பொழுது பேசும் மொழியோ ? சட்டென எல்லோரும் இயந்திரம் போல் வரிசையில் நிற்க... எதிரே கோயிலின் கருவறைக்குள் சிவப்பு நிறத்தில் ஒளி அதனுள்ளிருந்து வௌவாலைப்போல் இறக்கையை விரித்தபடி ஒரு உருவம் தெரிந்தது சிவமணி நினைத்தான் ச்சே நாமலும் நேற்று இரவே தவசியைப்போல செத்துப் போயிருக்க கூடாதா ? இப்படியா... நொடிக்கு நொடி பயந்தே சாவது தவசி உயிருடன் இருக்கின்றானா ? புதையலுக்கு ஆசைப்பட்டு அவனது பேச்சைக்கேட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு அந்த வௌவால் உருவம் மெதுவாக வெளியே வந்ததும் சிவமணிக்குக்கு முன்னால் அமர பின்புறம் காவல் வீரர்கள் போல் இருவர் தலைப்பாகை கட்டி நின்றனர் அந்த உருவத்தின் இறக்கை சுருண்டு கொள்ள அது மொட்டையடித்து தலையில் இருந்தது சிவமணியை உக்கிரமாக பார்த்து..


ஹூதாங்கி மாசாஸி
என்று கூவியதுதான் தாமதம் சரச்சரவென நான்கு பேர் சிவமணியைச் சுற்றி ஐந்தரையடி இடைவெளியில் விறகு குச்சிகளால் வேலி அமைத்து ஏதோ திரவியம் போல் அதனைச்சுற்றி ஊற்றினார்கள் நல்ல நறுமணம் காற்றில் மிதந்து வந்தது மேலும் பெண்கள் (?) அனைவரும் சுற்றி நின்று குலவி பாடினார்கள் சிவமணிக்கு அந்த ஒலியே மனதில் கிலியாக்கியது....

தொடரும்...

32 கருத்துகள்:

  1. என்னத்தைச் சொல்றது?..

    புதையலுக்கு ஆசப்பட்டுப் போய்
    இப்போ பொழச்சு வந்தா போதும்..ந்னு ஆயிடுச்சே!...

    மூஸாலிக்கு நாஷ்டா தயாராகுது போல இருக்கு!...

    நமக்கெதுக்கு வம்பு...

    வந்தோமா..கருத்தைச் சொன்னோமா.. ந்னு போயிடனும்....

    சைத்தான் சாயா குடிக்கிற எடத்துல
    நமக்கு என்ன வேலை?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      புதையலுக்கு ஆசைப்படுறவங்கே உழைக்காத சோம்பேறிகளாகத்தான் இருக்கும்

      நீக்கு
  2. ஏற்பாடுகள் பலமாக இருக்கிறது! சாகும் தருவாயிலும் நறுமணத்தை ரசிக்கத் தவறாத நாசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே சிவமணி ஃபெர்ப்யூம் நிறைய யூஸ் பண்ணுவானோ...

      நீக்கு
  3. விறகுக் குச்சிகளைப் பற்றவைத்துச் சடுதியில் தவமணியை எரித்துக் கொன்றுவிடமாட்டார்கள். மெல்ல மெல்ல அணுஅணுவாக.....நினச்சாலே குலை நடுங்குது.

    கில்லர்ஜி, படங்களெல்லாம் எங்கே தேடி எடுக்குறீங்க? அடிவயிறு கலங்குதே!பதிவர்களில் யாரும் இதுவரை இப்படியெல்லாம் பயமுறுத்தியது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      தேடுங்கள் கிடைக்கும் என்றார்
      கூகுள் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...

      நீக்கு
  4. கடைசியில இது கனவுன்னு சொல்லிருவீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீங்க வேற வழியில் வர்றீங்களே...

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    கடைசியில் (இல்லை.. இல்லை. முதலிலிருந்தே) புதையலுக்காகத்தான் ஆசைப்பட்டு சிவமணியும், தவசியும் செல்கிறார்களா? ஆசை, அதிலும் பேராசை என்றுமே அழிவில்தானே கொண்டு விடும். மர்ம தொடர் சுவாரஸ்யமாக செல்கிறது. கருப்பு மை தடவப்பட்ட படமும், வெளவால் படமும், காட்சிகளை உண்மையாக தருகிறது. சுற்றிலும் நடப்பட்ட விற்கு குச்சிகள் அவன் தேவை முடிந்த பின் எரியூட்டவா? சிவமணியை பற்றிய பயத்துடன் காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      பூசாரி நள்ளிரவில் வரச்சொன்னதின் அர்த்தம் புதையல்தான்.

      சிவமணிக்காக பிரார்த்திப்போம் வேறு வழி ?

      பதிவை ரசித்து படிப்பதற்கு நன்றி

      நீக்கு
  6. இப்போத் தான் சின்னச்சின்னப் பேய்க்கதைகளைப் படிச்சுட்டு வரேன். இங்கே வந்தா மூஸாலியின் பயமுறுத்தல்! இதுக்கெல்லாம் பயப்படமாட்டோமே! தவசி என்ன ஆனான் என்று சொல்லவே இல்லை. அதுக்குள்ளே சிவமணிக்கு ஆப்பு அடிச்சாச்சு! படங்கள் எல்லாம் நல்லா அழகாய்ப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்களை பயமுறுத்த முடியுமா ?
      பதிவு போட்டதிலிருந்து நான்தான் பயந்து கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  7. என்ன நடக்கப் போகிறதோ...?

    ஆவலுடன் + சற்று பயத்துடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் எழுதிய (விதிப்)படி நடக்கும் ஜி

      நீக்கு
  8. கில்லர்ஜி நல்லா பூச்சாண்டி காட்டறீங்க ஹா ஹாஹ் ஆஹ் ஆ...

    நாங்க ஆரும் பயப்பட மாட்டோமாக்கும். 7.5 க்கே பயப்படாத நாங்க இதுக்கெல்லாம் பயந்துருவோமாக்கும்..ஹா ஹாஹ் ஆ

    தவசி என்ன ஆனார்?

    சரி அடுத்த பகுதில சிவமணி மணியா எழுறாரா இல்லை அவருக்கு மணி அடிக்கப் போறாங்களானு தெரிஞ்சுருமே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிவமணிக்கு நேரம் சரியில்லை போல... பார்க்கலாம்.

      நீக்கு
  9. மனதில் பயத்தோடு காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. பெண்கள் எல்லோரும் பாடிய குலவை சத்தம் கிலியை கொடுக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களாக இருந்து குலவை பாடினால் தேவலையே...

      நீக்கு
  11. நானும் ஆசை படுகிறேன் நண்பரே.
    எல்லாம் கனவோ ..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது நனவு கனவாகட்டும்.

      நீக்கு
  12. முதலிலிருந்து படிக்க வேண்டும்.
    புது பயங்கர சினிமாவைப் பார்த்த மாதிரி இருக்கிறது, உங்கள் படங்களும் அந்த சிவப்பு
    வண்ணமும். அருமையான வர்ணனையும் .கோரம் தான் .ஆனால் சுவாரஸ்யம்.
    வாழ்த்துகள் தேவ கோட்டைஜி.

    பதிலளிநீக்கு
  13. முதலி படிக்க விலை கிலி தொடர் என்று புரிந்தது பயமேதும் வரவில்லை கதைதானே என்று தேற்றிக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... பயப்படுவதற்கு நீங்கள் என்ன குழந்தையா ?

      நீக்கு
  14. ஏதோ வில்லங்கம் நடக்கப்போகிறது என்பது தெரிகிறது. அது என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடப்பது நாராயணன் செயல்.

      நீக்கு
  15. பயமுறுத்துரீங்க....ம்ஃம்ஃ தொடரட்டும்..தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  16. என்ன நடக்கப்போகிறது எனத் தெரிந்து கொள்ள இதோ அடுத்த பகுதிக்கும் செல்கிறேன்! சில நாட்கள் வலைப்பக்கம் வர இயலாததால் தொடர்ந்து மூன்று பகுதிகளையும் படிக்க வாய்ப்பு! :)

    பதிலளிநீக்கு