தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 07, 2019

நாங்குநேரி, நாயனம் நாராயணன்


01. பாசி விற்க வந்த பெண் பசி பொறுக்க முடியாமல் உணவு கேட்டாள்.

02. ராசியானவன் என்று காசியை கடையில் சேர்க்க அன்றே சீல் வைத்தனர்.

03. பிளைட்டில் கொடுத்த சாப்பாட்டு பிளேட்டை சுட்டு வந்தாள் பட்டு மாமி

04. மாடி ஏறி வந்த மங்கையர்க்கரசி படி தவறி பல்டி அடித்து கீழே விழுந்தாள்.

05. தேன் வாங்கப்போன பொன்முடி தேவாங்கு கடித்து மருத்துவமனை போனான்.

06. பாம்பூர் போன மொக்கைராசு மகன் ஆம்பூர் பிரியாணி கேட்டான்.

07. செல்பி எடுத்துக் கொண்டே நடந்த செல்வி வழியில் உள்ள குழியில் விழுந்தாள்.

08. வாடிப்பட்டி இடத்தை விற்ற கலியமுத்து போடிநாயக்கனூரில் வீடு வாங்கினான்.

09. பருப்பு குழம்பு வைத்தாள் பாவனா கணவன் கருப்பு ராஜாவுக்கு பிடிக்குமென்று.

10. அம்மா கட்டாயமாக பெண் பார்க்க அழைத்துப் போனா(ல்)ள் அங்கே தனது காதலி கண்மணி.

11. வாட்சுமேன் வடிவேலு வணக்கம் சொல்ல சுணக்கம் ஆனதால் வேலை போனது.

12. நாயனம் வாசித்த நாராயணன் நாணயமானவர் கூலியாக குவாட்டர் கேட்டார்.

Chivas Regal சிவசம்போ-
அடடே நம்ம சகலை மேட்டரு...

சிவதாமஸ்அலி-
நாயனம் வாசிக்கிறவரும் குவாட்டரிலே குளிச்சவர்தான் போலயே...

48 கருத்துகள்:

  1. படத்துல இருக்கறவரா நாங்குனேரி நாயனக்காரரு? ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓ ரைமிங்கா சொல்லியிருக்கீங்க..சிலது பெயரின் அர்த்தத்துடன் ...இல்லையா கில்லர்ஜி..

    பாசி, பசி, ராசி காசி

    நல்லாருக்கு கில்லர்ஜி. சிலதுல மட்டும் கொஞ்சம் ரைமிங்க் ஆகலைனாலும் நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 டீடா:)... மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)

      நீக்கு
    2. ரசித்து பாராட்டியமைக்கு நன்றி

      நீக்கு
    3. அதிராவின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. எழுத்தகளோடு எழுத்துகளை வைத்து சித்து வேலை செய்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. ஏனோ சின்னக்குட்டி நாத்தனார் பாடல் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்தது.
    அழகான சொற்கள்.அருமை. தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
  5. இஃகி,இஃகி, ஃப்ளைட்டில் கொடுக்கும் சாப்பாடில் சாப்பிடமுடியாதவற்றை நாங்கல்லாம் எடுத்து வைச்சுப்போம். (வீணாகப் போகாது என்பனவற்றை மட்டும். பிஸ்கட், சாக்லேட், ஸ்வீட் இப்படி) இம்முறை பிஸ்ஸாவையும், கேக்கையும் எடுத்து வந்தோம். இறங்க 2 மணி நேரம் முன்னர் தான் கொடுத்தாங்க. அதனால் எடுத்து வைத்துக் கொண்டோம். பையர் தூக்கிப் போட்டுவிட்டார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நானும் இப்படித்தான் குழந்தைகளுக்கு கொண்டு வந்து கொடுப்பேன். நான் எவ்வளவோ தின்பண்டங்கள் வாங்கி வந்தாலும் எனக்கு அதில் ஒரு சந்தோஷம்.

      நீக்கு
    2. நான் பஹ்ரைன் துபாய் போகும்போதெல்லாம் உணவாக பேக்கரி ஐட்டம் கொடுப்பாங்க (பெரும்பாலும் நான் வெஜ். சில சமயம் வெஜ்). நான் அதை அப்படியே என் ஆபீஸ் நண்பனுக்கு (ஏர்போர்ட் வருபவருக்கு) கொடுத்துடுவேன்.

      நீக்கு
    3. நல்லதொரு பழக்கம் நண்பரே... பிறரை உண்ண வைத்து பார்ப்பதற்கு அழகிய மனம் வேண்டும்.

      நீக்கு
  6. பா னாவுக்கு பானா, கா னாவுக்கு கானா என்று தமிழ் வாத்தியார் போல முயன்றிருக்கீங்க. ஆர்வம் பாராட்டுக்குறியது.

    எப்போவும் கிராபிக்ஸோட படம் போடுவீங்க. இந்தத் தடவை அது மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி. அவசரமாக ஸெட்யூல்ட் செய்தேன் ஆகவே கவனக்குறைவு.

      நீக்கு
    2. உங்க கிராபிக்ஸை நான் ரசிப்பேன். அதுக்கு ஒரு திறமையும் உழைப்பும் வேணும். காணொளிகூட யாரோ ஃபார்வர்ட் பண்ணினதை நீங்க வெளியிடமாட்டீங்க, உங்க மாற்றம் இல்லாம.

      நீக்கு
    3. நான் கிராஃபிக்ஸ் செய்கிறேன் என்பதைவிட இப்படியே படித்துக் கொள்கிறேன் என்பதே உண்மை நண்பரே... காரணம் எனக்கு கணினி பயன்பாட்டுக்கு ஆசிரியரே கிடையாது நானே உள்ளே நுழைந்து ஏதோவொரு வழியில் போய் வெளியேறி விடுவேன்.

      நீக்கு
  7. ‘எதுகை மோனை’ அணி பதிவுக்கு அழகு சேர்த்திருக்கிறது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. ///நாங்குநேரி//
    ஓ தேவகோட்டை city இல் இருக்கும் ஒரு town ஆ இருக்கும்போல:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).... மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

    பதிலளிநீக்கு
  9. ///03. பிளைட்டில் கொடுத்த சாப்பாட்டு பிளேட்டை சுட்டு வந்தாள் பட்டு மாமி///

    ஹா ஹா ஹா நானும் முன்பு பிளைட்டில் தரும் கப், கரண்டி பிளேட் என எடுத்து வருவேன் புதிசில்:).. இப்போ அலுத்துவிட்டது.

    ஆனா அதை அவர்களும் ரீசைக்கிள் தானே பண்ணுகிறார்கள் அதனால நாம் எடுத்து வரலாம்:)... அதுக்குப் பெயர் “சுடுவதில்லையாக்கும்”:) கர்ர்ர்ர்ர்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு கொடுப்பதை நாம் எடுத்து வரலாம்

      நீக்கு
  10. //
    04. மாடி ஏறி வந்த மங்கையர்க்கரசி படி தவறி பல்டி அடித்து கீழே விழுந்தாள்.///
    கர்ர்ர்ர்ர்ர்:)... ஓடிப்போய்த் தூக்கிவிடாமல்:), அதைப் பல்டி எனச் சொன்ன கில்லர்ஜிக்கு என் வன்மையான கண்டனங்கள்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கிவிடத்தான் நினைத்தேன் ஆனால் மங்கையர்க்கரசியின் கணவன் கையில் இருந்ததை பார்த்ததும் தாக்கி விடுவானோ என்று கருதி ஒதுங்கி விட்டேன்.

      நீக்கு
  11. அனைத்தும் நல்ல எதுகை மோனையாக இருக்கு:)...
    சிறீ அங்கிளை இப்போ அடிக்கடி பார்ப்பதால் மகிச்ழ்ழி.

    பதிலளிநீக்கு
  12. தமிழ்  விளையாடுகிறது.  ரசனை.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. வார்த்தை விளையாடல்கள் நன்றாக உள்ளது. மிகவும் ரசித்தேன்.

    நாயனம் வாசித்தவருக்கு கூலியாக கொடுத்த நாணயம் போறாததால், அதிக கூலியாக அதையும் கேட்டாரோ? நாணயமானவர் என்பதினால் நாணயத்தையே அதிகமாக கூட்டி கேட்க தயக்கம் போலும். ஹா.ஹா.ஹா.

    எல்லாமே மிகவும் ரசித்து மகிழும்படி இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நாணயமான, நாயனக்காரரைப்பற்றி நா'நயமாக எடுத்து வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. அதெல்லாம் சரி..

    நாங்குநேரி இங்கே இருக்கு!..
    அந்த நான்கு நரியும் எங்கே போச்சு?...

    நீங்க தொரத்தி விட்டீங்களா?..
    நீங்க தொரத்தி விட்டீங்களா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      உங்களது குலதெய்வக்கோவிலுக்கு போகும்போது இந்த ஊர் வழியாகத்தானே போவீர்கள்.

      நரியை நான் பார்க்கவேயில்லை ஜி

      நீக்கு
    2. இல்லையில்லை...

      உவரிக்குச் செல்லும் போது பேருந்து என்றால் தூத்துக்குடி திருச்செந்தூர் வழியாகச் சென்று அங்கிருந்து
      திசையன் விளை, நான்குநரி நெல்லை வழியாகத் தஞ்சைக்குத் திரும்புவோம்!...

      அது சரி..
      நரிய நீங்க பார்க்கலையா?... அப்போ நரியெல்லாம் எங்கே போச்சு!?..

      நீக்கு
    3. ஓஹோ அப்படியா ?
      நரிகள் ஒருவேளை சாயல்குடி பக்கமுள்ள நரிப்பையூர் போயிருக்கலாம் ஜி.

      நீக்கு
  15. வார்த்தை ஜாலம். சூப்பர் வழக்கம் போலவே.

    பதிலளிநீக்கு
  16. வழக்கம் போல அருமை அண்ணா...
    என் கணிப்பொறியில் இருந்து கருத்துக்கள் இட முடிவதில்லை...
    உங்கள் பதிவுகளை வாசித்துவிடுவேன்,.
    அலுவலகத்தில் இருந்து கருத்து இட முடியும்...
    அப்படியான ஒரு வேலை இன்று... அதான் கருத்து வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  17. இவையெல்லாம் என்ன? கேட்டு வாங்கி போட்ட கதைக்கான ஒன் லயங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இது கதையே இல்லை. ரசிக்க வைக்க முயன்ற வாக்கியங்கள்.

      நீக்கு
  18. சொற்சிலம்பம் ஆடி சொக்கவைத்துவிட்டீர்கள்! அந்த சொற்களுக்குள் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயன்றுகொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. வருக நண்பரே ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  19. ரசிக்க வைத்த வாக்கியங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  20. ஏனய்யா உங்கள் தலைப்பிற்கு எங்கள் நடிகர் திலகமா கிடைத்தார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. எனக்கு மட்டும் நடிகர் திலகம் உரிமை இல்லையா ?

      நீக்கு