இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

தமிழுக்கு அஞ்சலி


திருச்சி என்றால் வலைப்பதிவர்களுக்கு நினைவில் வருவது புகைப்படச்சித்தர் திருமிகு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்தான் இன்று (02.02.2020) அவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினம். அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்.


பழகுவதற்கு இனிமையானவர் மதுரை பதிவர் மாநாட்டில் முதன்முறையாக அவராகவே வந்து கில்லர்ஜி நலமா ? என்றதுடன் என்னை பலரிடமும் அழைத்து சென்று அறிமுகப் படுத்தி விட்டவர். பதிவர் விழா எங்கு நடந்தாலும் கண்டிப்பாக இடம் பெறுபவர் 18.12.2016 புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் நடந்த கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்டது அவரை நான் சந்தித்த கடைசி சந்திப்பு அவருக்கு நான் எழுதிய தேவகோட்டை தேவதை தேவகி நூலை வழங்கினேன் அதனைப் படித்து உடன் விமர்சனம் எழுதி சிறப்பித்தவர்.


கடந்த ஆண்டு அவர் இறந்த இதே தினங்களில் நான் எனது மகன் திருமண வேலைப்பளு காரணமாக சுழன்று கொண்டு இருந்தேன். பலரும் இறப்பு குறித்து பதிவு இட்டு இருந்தாலும் நான் யாருடைய பதிவுக்கும் சென்று இரங்கல் தெரிவிக்கவில்லை, அவருடைய மகன் திரு. அரவிந்தன் அவர்களின் அலைபேசி எண் கிடைத்து இருந்தாலும் நான் அழைத்து கேட்கவில்லை காரணம் திருமண நேரத்தில் இதில் கலந்து கொள்வது, பேசிக்கொள்வது தவறான மரபு.

அடுத்த மாதம் அழைத்து பேசுவோம் என்று என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும். மறுமாதம் இதைக் கேட்டு அவர் மனதை மீண்டும் கிளற வேண்டாம் என்று தீர்மானித்தேன். ஆகவே அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக முதலாம் ஆண்டு நினைவஞ்சலியாக பதிவிட முடிவு செய்தேன் அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறும் என்று ஆத்ம திருப்தி கொள்வோம்.

அவருடைய மனைவியாருக்கும், மகனுக்கும் இப்பதிவின் வாயிலாக ஆறுதல் சொல்வோம் வலையுகம் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்.

திரு. கில்லர்ஜி முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் திரு. தி. தமிழ் இளங்கோ

தேவகோட்டை கில்லர்ஜி
தேதி - 02.02.2020

இது எமது 800-வது பதிவு.

25 கருத்துகள்:

  1. மனதில் நிற்கும் நண்பர்.  எல்லோரையும் அரவணைத்துச் செல்பவர். 

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு நண்பர். எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். பதிவர் சந்திப்பின் போது பார்த்திருக்கிறேன். அதைத் தவிரவும் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் வீட்டுப் பதிவர் சந்திப்பின் போதும் கலந்து கொண்டார். இனிமையான பழகும் தன்மை. ஆனால் உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தால் ஒருவேளை இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருப்பார் என்னும் நினைப்பு எனக்கு அடிக்கடி வரும்.

    பதிலளிநீக்கு
  3. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்...

    அனைவருக்கும் இனிய நண்பர்...

    நேரிலும், தொடர்பு கொண்டு பேசியதெல்லாம் ஞாபகம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  4. அதிர்ச்சியாக உள்ளது. எனக்கும் இபாபோதுதான் தெரிந்தது. என் பதிவுகளில் தவறாமல் வந்து கருத்துரை இடுவார். ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  5. பொருத்தமான காரணங்கள் சொல்லி தமிழ் இளங்கோ சாரின் வருட நினைவு இரங்கல்களைப் பதிவு செய்திருக்கீங்க.

    நான் ஒரு சில பதிவர்களை ஏன் இடுகைகள் வெளியிடலை, மறுமொழி காணோமே எனத் துரத்துவேன். இளங்கோ சார் இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு அவரிடம் முதல் முறையாக நீண்ட பேச்சு அலைபேசியில் பேசினேன். அவருடைய மறைவை மிகுந்த அழுகையோடு திருச்சி வலைப்பதிவர் வை கோபாலகிருஷ்ணன் சார் என்னிடம் தெரிவித்தார்.

    நாம் அனேகமாகச் செல்லும் தளங்களின் பதிவர்கள் நம் மனதுக்கு நெருக்கமாகி விடுவார்கள். அதிலும் அவர்கள் நல்லவர்களாக இருந்துவிட்டால், நல்ல பழகும் தன்மையோடு இருந்தால் நம் மனதில் தங்கிவிடுவார்கள். வலையுலகின் அதிசயமாக நான் நினைப்பது இதனைத்தான்.

    வாழ்வில் சந்திக்கும் வாய்ப்பு குறைவான பலர் வலையுலகின் மூலம்தான் என் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கின்றனர். வெறும் மறைவோ, இல்லை சந்திக்கவே முடியாத நிலைமையோ அவர்களை என் மனதிலிருந்து பிரிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் தமிழ் இளங்கோ சாரும் முனைவர் கந்தசாமி சாரும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

    தமிழ் இளங்கோ அவர்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். நம் எல்மலோர்ன தில் அவர் எப்போதும் இருப்பார்

    பதிலளிநீக்கு
  6. ஒரு முறை அவருடன் அவரின் பதிவு குறித்து விவாதித்திருக்கிறேன். மறந்தும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாதவர்; நற்பண்பாளர்; என்றும் நினைவில் நிற்பவர்.

    அவரை நினைவுகூர்ந்தமை மிகவும் வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  7. நட்பு, அன்பு, சுமுகமான பண்பு, அறிவுத்தேடல், புகைப்படப்பதிவு என்ற பல நிலைகளில் தம் பதிவுகள் மூலமாக நம்மைக் கட்டிப்போட்டவர், நம்மை விட்டுச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. பௌத்தம் தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டிருந்தபோது, அவருக்குத் தெரிவித்திருந்தேன். விழா நிகழ்வில் கலந்துகொண்டு, ஒரு நூலினை அன்பளிப்பாக வழங்கியதோடு, அதனை முழு பதிவாக தன் வலைத்தளத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தினார். நினைவுகளால் என்றும் நம்முடன் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல நண்பர். வெகு நாட்கள் கழித்தே எனக்கு விவரம் தெரிந்தது.
    பண்பு மிக்கவர். இப்பொழுதும் பழைய பதிவுகளில் அவர் மறு மொழியைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
    நன்றி தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
  9. தமிழ் இளங்கோ அவர்களுக்கு இரங்கல் பதிவை படிக்கும் போது தான் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற நினைவு வருகிறது. அவர் எப்போதும் இருப்பது போல் தான் எனக்கு நினைவு.
    அவரின் பழைய பதிவுகள், அவர் பின்னூட்டங்கள் எல்லாம் அடிக்கடி படிப்பேன்.
    தன் தந்தையை நன்கு கவனித்துக் கொண்டவர்.

    திருச்சியில் பதிவர் சந்திப்பில் எல்லாம் இருப்பர்.
    நம் வை.கோ சாரை ஜனவரி 1ம் தேதி சந்தித்தும், நிறைய பதிவர்களை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று உரையாடி மகிழ்வார்.

    ஒரு முறை அவரை "சகோ சிவ இளங்க்கோ" என்று அழைத்து பின்னூட்டத்திற்கு பதில் போட்டேன். அவர் சகோதரி என் பேர் தமிழ் இளங்கோ , நீங்கள் மிகவும் பிரபலமானவர் சிவ இளங்கோ என்று என்னை அழைத்தது விட்டீர்கள் என்று பதில் அளித்து இருந்தார்.

    அவர் சொந்த ஊரை பற்றி பதிவு போட்ட போது இரண்டு மூன்று முறை பின்னூட்டம் அளித்தார் அந்த பதிவுக்கு.

    நினைவில் என்று இருப்பார்.

    உங்கள் பதிவில் அவரின் படங்களை பார்த்தது நெகிழ்வு.

    பதிலளிநீக்கு

  10. எந்த ஒரு நிகழ்வையும் அவர் எடுக்கும் போட்டோக்களின் மூலம் நங்கு அறிந்து கொள்ளலாம் சில நேரங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளை வர்ணிக்க முடியாதவைகளை போட்டோக்கள் மூலம் அழகாக் சொல்லலாம்..... இதை அவர் செய்தார். நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்த மனிதர்களில் இவரும் ஒருவர் ஆனால் சந்திக்காமலே சென்றுவிட்டார் ஆனால் என்ன ஒரு நாள் அவர் இப்போது இருக்கும் இடத்திற்கு ஒரு நாள் நானும் செல்வேன் அப்போது அவரை சந்திக்க செய்வவேன்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    நான் அவரின் பதிவுகளுக்கோ, இல்லை அவர் என் பதிவுகளுக்கோ வந்ததில்லை என்றாலும், பதிவர் சந்திப்புகளில் அவரைப்பற்றி நீங்கள் அனைவரும் பேசி கேள்விப்பட்டுள்ளேன். சென்ற வருடம் அவர் மறைவு செய்தி வெளியிட்டிருந்த இடங்களில் சென்று நானும் இரங்கல்களும் தெரிவித்திருப்பதாக நினைவு.

    நல்லதொரு மூத்த பதிவர் நம்மை விட்டு பிரிந்தது வருந்த தக்க நிகழ்வே..! அவருடன் ஏற்பட்ட பழக்கத்தை மறக்க இயலாமல் நீங்கள் ஒரு வருட முடிவில் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது மனதை நெகிழச் செய்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. மறக்க முடியாத நண்பர். திருச்சி செல்லும்போதும், சில பதிவர் நிகழ்வுகளிலும் அவருடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. புதுக்கோட்டை நிகழ்வொன்றில் அவரும் நானும் கலந்து கொண்டு ஒன்றாக திருச்சி திரும்பினோம்.

    அவர் மறைந்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை உணர மறுக்கிறது மனம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    தங்களுடைய 800ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இன்னமும் நிறைய அருமையான பதிவுகளை எழுதி, 800, விரைவில்,8000 மாக வலைப்பூக்களுடன் சேர்ந்து மலர்ந்து மணம் வீச வேண்டுமென இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. திரு தமிழ் இளங்கோ மறைந்து ஓராண்டு காலம் ஓடிவிட்டதா இதைத்தான் டைம் அண்ட் டைட் வெயிட்ஸ் ஃபார் நோ ஒன் என்கிறார்களோ

    பதிலளிநீக்கு
  15. அதற்குள் ஒருவருடம் ஓடி விட்டதே... எல்லாம் நேற்று நடந்தது போலவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. மறைந்த சகோதரர். தமிழ் இளங்கோ அவர்களுக்கு தாங்கள் அஞ்சலி செய்த விதம் மனதை நெகிழ்த்தியது.
    என் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு நான் அழைத்தபோது, மறுக்காது அன்புடன் வருகை தந்து பரிசும் தந்தார். அந்த நிமிடங்கள் இன்னும் மனதில் இருக்கின்றன.

    அவரின் தந்தை இறந்த செய்தி அறிந்த போது, இங்கிருந்து கூப்பிட்டு நிறைய நேரம் பேசினேன். தந்தை மறைந்த வேதனை மிகுந்திருந்த அவரின் குரல் மறக்க முடியாதது. அதற்கு சில தினங்கள் முன்பு தான் தன் தந்தையை மிகவும் கஷ்டப்பட்டு பராமரிப்பதையும் முதியவர்களின் சிரமங்களைப்பற்றியும் முதியோர் இல்லங்கள் பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். அதனால் தான் தானும் அதிக கஷ்டப்படாமல் சென்று விட்டாரோ என்னவோ?

    அவர் என்றும் நம் ம‌னங்களில் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  17. 800வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் மேலும் சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. 800 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. //800 ஆவது பதிவு...// சாதனைக்குப் பாராட்டுகள். சாதனைகள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. இளங்கோ சாரின் மறைவுக்கு அஞ்சலிகள். பொருத்தமான நேரத்தில் அஞ்சலி செலித்தி உள்ளீர்கள். அதை அவரும் புரிந்துகொள்வார். கவலற்க சகோ.

    பதிலளிநீக்கு
  21. அன்னாருக்கு எமது அஞ்சலிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். அத்துடன், வலையுலகம் சிறக்க இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகளை நீங்கள் எழுதவும் வாழ்த்துகிறேன்.

    Please visit: https://sigaramclick.blogspot.com/

    பதிலளிநீக்கு
  22. தங்களின் அஞ்சலி பதிவு மூலம் திரு. தமிழ் இளங்கோவின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. மிகவும் மாறுபட்ட முறையில் அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள் நண்பரே. பாராட்டுக்கள்.
    இவரை போன்ற மனிதர்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. அருமை நண்பர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்ப இயலவில்லை. இன்னும் அவர் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. நேரில் பார்க்காமலேயே என்னோடு நட்பு கொண்டவர். திருச்சி வந்தால் என்னை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வீட்டிற்கும், திரு ஜோசப் விஜூ அவர்கள் வீட்டிற்கும் அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார். புத்தகப்பிரியர். ஒவ்வொரு புத்தக கண்காட்சிக்கும் சென்று புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உள்ளவர். அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் மாறுபட்டவையாக இருக்கும். அவரது மறைவு பதிவுலகிற்கு ஒரு இழப்பே. அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு