தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 29, 2020

வெள்ளி, ஜூலை 24, 2020

வண்ணம் கொண்ட கொரோனாவே...


வணக்கம் நட்பூக்களே...
கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று இரட்டை ஆயுள் தண்டனை என்பார்களே அதனைப்போல் எனக்கு மட்டும் இரட்டை தனிமைச்சிறை முன்னதாகவே குடும்பம் என்னை தனிமை படுத்தி விட்டது தொடர்ந்து கொரோனாவும் தனது பங்கை நடைமுறைப்படுத்தி விட்டது. தேவகோட்டை பெரிய வீட்டில் நான் மட்டுமே கணினியும் இல்லை, தொல்லைக்காட்சி பெட்டியும் இல்லை, அலைபேசியும் கீழே விழுந்து தனது முகத்தை கோரப்படுத்திக் கொண்டது ஆகவே இணையமும் பிரச்சனையாகி அலைபேசி செத்துச் செத்து பிழைக்கும். பிறருடைய பதிவை படித்து வேகமாக கருத்துரை எழுதி வெளியிடும்போது அலைபேசி அணைந்து விடும் பிறகு மீண்டும் எழுதுவேன் ஆகவே சிறிய கருத்துரையாகவே இருக்கும்.

ஞாயிறு, ஜூலை 19, 2020

கள்ளுண்ணாமை

       ரடங்கு தவிர்க்கப்பட முடியாத மத்திய, மாநில அரசுகளின் செயல் இதில் டாஸ்மாக்கும் மூடப்பட்டது சுமார் இரண்டு மாதங்கள்வரை குடிகாரர்கள் குடிக்க முடியாமல், வழியில்லாமல் ஏதோ நாட்களை கடத்தி விட்டது உண்மைதான். பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்பதற்காக மீண்டும் திறந்தது மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல ஆள்பவர்கள் தங்களது சந்ததிகளுக்கு செய்யும் துரோகமும்கூட மக்களை குடிக்க வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டுமெனில் இந்த அரசு எதற்கு ? 

செவ்வாய், ஜூலை 14, 2020

மொழியின் அழகு


மொழிகளில் பல வகைகள் உண்டு அரபு மொழி எழுத பழகுவது மிகவும் கடினமானது என்று பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் வெகு சுலபமானது அரபு மொழியை தமிழர்கள் எழுத பழகி விடலாம் ஆனால் தமிழ் மொழியை அரேபியர்கள் எழுத பழகுவதுதான் கடினம். நான் ஒரு சில அரபிகளிடம் எழுதச் சொல்லி சவால் விட்டு இருக்கிறேன். அவர்களால் அவ்வளவு சுலபமாக எழுத முடியவில்லை. இதற்கு நான் தமிழில் தேர்ந்தெடுத்த எழுத்து என்ன தெரியுமா ?

வியாழன், ஜூலை 09, 2020

கண்டிக்காத குழந்தை தண்டிக்கப்படும்


    மீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருக்கும் இது பரம்பரை குணம் மட்டுமல்ல தற்கால மக்களின் மாற்றத்தால் தொற்றிக் கொண்ட வியாதி என்றே சொல்லலாம்.

ஞாயிறு, ஜூலை 05, 2020

மின்நூலில் கில்லர்ஜி


வணக்கம் நட்பூக்களே... மின்நூல் சமீப காலமாக பதிவர்களை அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் தீநுண்மி போல ஆகிவிட்டது சும்மா கிடந்த ஊதாங்குழலை எடுத்து புல்லாங்குழலாக்கி விட்டார் நமது திண்டுக்கல் சித்தர்-ஜி.

புதன், ஜூலை 01, 2020

ஆறுதல் மொழிகள் ஆறு



   கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடி மரணத்துக்கு அஞ்சாதவர் சிறந்த கவிஞரும்கூட அவரது மனைவியிடம் உணவு வேண்டும் என்பதைக்கூட கவிதை நடையில் சொல்லியே கேட்பார் மனைவி மங்குனியோ எல்லாம் விதி என்று வாழ்வைக் கழித்துக் கொண்டு இருக்கிறாள். இந்தச் சூழலில் அவரது நண்பர் சாபக்கேடு சாவக்கட்டி பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி சின்னா பின்னமாகி மாஞ்சாக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். அவரால் தற்சமயம் பார்க்கவும், கேட்கவும் மட்டுமே இயலும் அவரைக் காணச்சென்ற கொங்குமுடி அரளிப் பூச்செண்டு வாங்கிக் கொண்டு சென்றவர்.