தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 21, 2020

நான், நீ(நா)யாக...

 

உனக்கு கிடைத்த வாழ்க்கை
எனக்கு கிடைக்கவில்லை.
அடுத்த பிறவியிலாவது
நான் நீ(நா)யாகவும், நீ ஏதேனும்
பிறக்க வேண்டும். முக்கியமாக...
இதேபோல் அதிபருடன்...
 
- கில்லர்ஜி தேவகோட்டை

43 கருத்துகள்:

  1. ஆறு வரிகளில் ஆதங்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். "நீ ஏதேனும்" இதை சொல்லாமல் விட்டீர்களே நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பிறரைப்பற்றிய பிறப்பை நாம் சொல்லக்கூடாது.

      நீக்கு
  2. கில்லர்ஜி அதுவாச்சும் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே!!

    நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது.

    நம் சந்தோஷம் நம்ம மனதில்தானே ஜி. நம் வாழ்க்கையும் சிறந்த வாழ்க்கைதான். என்னன்னா நமக்கு நம் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆறுதல் கிடைக்கிறது. ஆனால் அந்த ஜீவன்களால் அதன் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாதே. இக்கரைக்கு அக்கரை பச்சை!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவைகள்கூட கடந்த பிறவியில் மனிதர்களாக பிறந்து கஷ்டப்பட்டு இருக்கலாமோ...?

      நீக்கு
    2. மற்றொன்று அன்று சொல்ல நினைத்து விட்டுப் போனது.

      நாய்களிலும் கூட எல்லாவற்றிற்கும் சிறந்த வாழ்க்கை கிடைக்கவில்லையே. நீங்களே பார்திருப்பீங்க எந்த்தனை ரோட்டில் வாழ்ந்து கஷ்டப்படுகின்றன பல ஏழைகளைப் போல...ஒரு சிலதுக்கு நல்ல காப்பாளர்கள் கிடைக்கிறார்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கும் அதிலும் கூட ஜாதி (breed) பார்த்து வாங்குபவர்கள்/வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். தெரு நாய் / மாங்க்ரல் எடுத்து வளர்ப்பவர்கள் என்றால் கொஞ்சம் .."ஓ" இந்த ஓ சத்தம் சாதாரண ஒலி. அந்த ஓ சத்தம் வெளியில் கேட்காது!!!....டாபர்மேன், கோல்டன் ரெட்ரைவர், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார் என்றால் "ஓ" இந்த தொனி மேல் தொனி ஆச்சரிய தொனி!!!!!! சத்தம் பலமாகக் கேட்கும்!

      கிட்டத்தட்ட அவற்றின் வாழ்க்கையும் மனித வாழ்க்கையும் ஒன்னுதான்!! அதில் எது பெட்டர்னு உங்களுக்கே புரியும் ஹா ஹா ஹாஅ ஹா

      கீதா

      நீக்கு
  3. நல்ல் வேளை நீ நானாகவும் என்று நினைக்க வில்லை

    பதிலளிநீக்கு
  4. இவற்றிலேயும் கஷ்டம் அனுபவிக்கும் ஜீவன்கள் உண்டே! எல்லாவற்றுக்குமா இப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது? ஏற்றத்தாழ்வு இல்லாமல் உலகம் இல்லை. சமீபத்தியத் திரைப்படம் ஒன்றில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரும் சமம் என்பதாகக் கருத்துடன் எடுத்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். அப்படி எனில் சிறிய வேலைகளைச் செய்ய யார் இருக்கிறார்கள்? அம்பேரிக்காவில் கூலி வேலைக்கு ஆட்களே கிடையாது. இப்போத்தான் சில காலமாக மெக்சிகோவிலிருந்து வந்தவர்கள்/மற்ற வெளிநாட்டு நபர்கள் இந்தச் சின்ன வேலைகளைச் செய்ய முன் வந்திருக்கிறார்கள். ஆக எங்கும் ஏற்றத் தாழ்வு இருந்தால் தான் உலகம் சமநிலையில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஏற்றத்தாழ்வு நிச்சயம் வேண்டும் எல்லோரும் செல்வந்தரானால் கழிவறையை சுத்தம் செய்வது யார் ?

      நீக்கு
    2. எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து எங்க வீட்டுக் கழிவறையை நாங்க தான் சுத்தம் செய்து கொண்டு வருகிறோம். யாரையும் அழைத்தது இல்லை. மொத்தமாக வீடு சுத்தம் செய்யும்போது மேலே ஏறி எல்லாம் சுத்தம் செய்ய எங்களால் முடியாது என்பதால் ஆட்களை அழைப்போம். மற்றபடி எங்க வீட்டு வேலைகளை நாங்களே செய்துப்போம்.

      நீக்கு
    3. ஆம் எனது கொள்கையும் இதுதான் எங்கள் வீட்டிலும் இப்படித்தான்.

      நீக்கு
  5. ஹா... ஹா...

    திருப்தி இல்லையென்றால்
    திருப்பதி போனாலும்
    திருப்தி வராது...!
    காரணம்
    பேதைமை
    புல்லறிவாண்மை
    கயமை

    பதிலளிநீக்கு
  6. மாறுதல் இல்லா உலகும் இல்லை
    மயக்கம் உறாத மனமும் இல்லை
    தேறுதல் அடையாத் தேவைகள் தொல்லை
    தெரிந்தால் மனதும் தேடுவ தில்லை !

    வாழ்வும் சாவும் வல்லவன் முடிச்சு
    வாழ்ந்திடும் வாழ்வில் வல்லமை நெகிழ்ச்சி
    ஊழ்வினை என்பது ஒருதுளி ஆகும்
    ஊக்கம் இலையேல் பலதுளி சாகும் !

    இன்றைய இருத்தல் நாளைய கேள்வி
    இயற்கையின் படைப்பில் இறைவனின் வேள்வி
    அன்றில் பறவையாய் அகிலம் பறப்போம்
    அனுதினம் புதிய நினைவாய்ப் பிறப்போம் !

    அருமை ஜி தொடர வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே நலமா ?
      தங்களது கவிதை வழி கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. நன்றி ஜி நலம் நலமே !
      எங்கே நமக்கு வலைப்பூ வர நேரம் கிடைக்குது கிடைத்தாலுமெத்தனை பதிவுகள் பார்க்கலாம்
      ஒன்றிரண்டுதான்

      நீக்கு
    3. சர்வ சாதாரணமா கவிதை உங்களுக்கு வருது. உயரப் பறக்க முயற்சி எடுக்கறீங்களா சீராளன்?

      நீக்கு
    4. வணக்கம் நெத!

      உயரப்பறப்பதா ம்கும் நடக்கவே முடியல்ல எல்லாம் பணிச்சுமை இருந்தும் முயற்சிக்கிறேன் !

      அப்புக்கு நன்றிகள்

      நீக்கு
  7. சிந்திக்க தெரிந்தவன் மனிதன் அந்த சிந்தனையின் பயனாகத்தான் மறுபிறப்பு என்ற ஒன்றை கற்பித்தான் நம்பினான்...மற்றவர்களை நம்ப வைத்தான்..என்னைத்தவிர...நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது நம்பிக்கை பலப்படட்டும் நன்றி நண்பரே

      நீக்கு
  8. கவிதையில் 'விரக்தி' தொனிக்கிறதே?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல வேண்டுதல் கவிதை. அதற்கு புரிந்தால் சரி.. அடுத்த பிறவி என்பது இந்தப் பிறவியின் அதிர்ஷ்டங்களால் வருவதோ என்னவோ என அதுவும் யோசித்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அந்த ஜீவனைக் கேட்டால், அதற்குப் பேசத்தெரிந்தால் அது சொல்லும் தன் சிரமங்களை...   பதிலுக்கு கவிதை பாடி இருக்கும்!

    வந்துவிடேன் என் இடத்துக்கு 
    எனக்கும் போர் அடிக்கிறது 
    சுதந்திரமில்லா இந்த
    தங்கச்சிறை வாழ்க்கை 
    வவ் வவ் 

    என்று சொல்லுமோ என்னவோ...!!

    பதிலளிநீக்கு
  11. எப்பொழுதுமே அக்கரைக்கு இக்கரை தான். அந்த நாய்ச் செல்லமும் அதன் உரிமையாளரும்
    அனுபவித்த சோதனைகள் அதிகம்.

    பட்டு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ஸ்ரீராம் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.

      நீக்கு
  12. எந்தப் பிறவிக்கும் அதற்கேற்ப கஷ்டங்கள் நிறைய உண்டு என்றே எனக்குத் தோன்றுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, அடடா தெரு நாய் மாதிரி சுதந்திரமா குப்பைத் தொட்டியில் வாழை இலையை மேய முடியலையே, நமக்கு ஏற்ற துணைலாம் தேடிக்க முடியலையே, வாரிசை பெற்றுக்கொள்ள/கொடுக்கக்கூட இந்தப் பிறவியில் வாய்ப்பில்லையே-இவன் மாத்திரம் பெட்ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிறான், நம் நேரமான இரவு நேரத்தில் சுற்ற முடியலையே, கிடைத்த இடத்தில் கக்கா கூட போக விடமாட்டேன் என்கிறார்களே என்று அவைகளும் வருத்தப்படுமோ என்னவோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. உண்மைதான் தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. கவிதை நன்றாக இருக்கிறது.

    கஷ்டங்கள் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கும் ஜி.

    இறைவனிடம் ஒருவன் என்னை அதுவாக படை , இதுவாக படை என்று கேட்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிரமம் இருப்பதை கண்டு கடைசியில் முன்பு போல் மனிதனாக ஆக்கிவிடு என்று சொல்வார் என்று ஒரு கதை சொல்வார்கள்.

    நல்லமனிதராகவே இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் இறுதிவரை மனிதத்தோடு வாழ்வேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. கில்லர்ஜி உங்கள் கவிதையில் ஏதோ ஒரு சோகத்தை உங்கள் மன பாரத்தை வெளிப்படுத்த நீங்கள் முயற்சி செய்வது தெரிகிறது.

    நாய் படாத பாடு என்று சொல்வது உண்டுதானே? எனவே இவ்வுலகில் எந்த ஒரு உயிருக்கும் சோதனைகள் உண்டுதான். இப்போதைய பிறப்பில் வருபவற்றைக் கடந்து செல்ல முயற்சிப்போம்..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சோகம் என்று சொல்லவதற்கில்லை.

      சில மனிதர்கள் சாக்கடையோரம் உறங்கி வாழ்கிறார்களே... என்ற ஆதங்கமே...

      நீக்கு
    2. எல்லாமே விதி வரைந்த பாதைதான் கில்லர்ஜி.. வேறு என்ன சொல்ல முடியும்...

      நீக்கு
  15. ஆஹா கில்லர்ஜி இருப்பதைவிட்டுப்போட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டுவிட்டீங்களே?:)) இது ஞாயமோ:))... ஆரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் எல்லாம் சைக்கியமே:)).. இது அந்த ஒபாமா அங்கிளின் டோக்கியாரிடம் கேட்டால்தான் தெரியும்.. அவர் ஆப்பியாக:)) இருக்கிறாரோ இல்லை மனம் நொந்து போயிருக்கிறாரோ என:))... தெருவிலே ஓடி ஆடிப் பிற நண்பர்களோடு விளையாட முடியாமல் இப்பூடி நடுங்கி நடுங்கிப் பிளேனில போவது அந்த டோக்கியாருக்குப் பிடிச்சிருக்குமெண்டோ நினைக்கிறீங்க ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...
      ஒபாமா இப்பவும் அங்கிள்தானா ?

      நமக்கு இப்ப ஓடுகிற வண்டி சரியாக ஓடினால் போதும். பெரிதாக ஆசை ஒன்றுமில்லை.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு