தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 26, 2021

மதுக்கரை, மருத்துவர் மது


எமன்
உயிரை விடமாட்டேன் என்றது உடம்பு
காப்பாற்றி விடுவேன் என்றார் மருத்துவர்
Titan கடிகாரத்தில் நேரம் பார்த்தார் எமன்

பணம்
பூவுக்கு விலையை குறைத்து கேட்டதால்
பூவின் நெருக்கத்தை விரித்து கட்டினான்
Money சேமிக்கிறார்களாம் இவர்களிருவரும்

கதவு
வங்கியில் நுழைந்தனர் கொள்ளையர்கள்
வாங்கி அடைத்தனர் பணத்தை பெட்டியில்
Alarm அடித்ததும் வாயிற்கதவு தானே மூடியது

குழம்பு
பருப்பு சொன்னது என்னால் சாம்பார் சுவை
முருங்கைக்காய் என்னால்தான் என்றது
Salt நானில்லையேல் நீர் குப்பை என்றது.

தாமதம்
சிவன் உலகை வலம் வரத்தயாரானார்
பார்வதியும் உடனே வந்து தயார் என்றார்
Toilet போயிருந்த நாகம் இன்னும் வரவில்லை

தாலி
தாலியை கட்டத் தயாரானான் மாப்பிள்ளை
கழுத்தை நீட்ட சம்மதமானாள் அவளும்
Cut Cut என்றார் இயக்குனர் அபசகுனமாக

சகுனம்
டெல்லிக்கு அவசரமாக கிளம்பினார் தலைவர்
வாசலுக்கு வந்து வழியனுப்பினாள் மனைவி
Cat குறுக்கே ஓடியதால் கலங்கினர் தம்பதிகள்

மை
கோடு போட்டு வாழ்ந்தான் கோவலன்
கோட்டை தாண்டாது நடந்தாள் மாதவி
Pen க்கு இன்று மையும், கோடும் இல்லை

காவல்
நடுரோட்டில் போதையோடு சத்தமிட்டான் சூரி
ஒரு வண்டியும் ஓடக்கூடாது என்னை மீறி
Urine விட்டான் எதிரில் காவல்ஆணையர் பாரி

மகிழ்ச்சி
இன்று அறுவை சிகிச்சை அண்ணாமலைக்கு
உண்ணாமலிருந்தாள் மனைவி உண்ணாமலை
Amount கிடைத்த மகிழ்ச்சியில் மருத்துவர் மது

ChavasRegal சிவசம்போ-
English படிச்சா எனக்கு முதுகு வலி வரும்.

38 கருத்துகள்:

  1. வித்தியாசமாய் யோசித்திருக்கிறீர்கள். ரசனை..  ரசனை...   எல்லாமே அருமை.  சில எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து விடுங்கள்!  ஹைக்கூ பாணியில் ரசிக்கும்படி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ரசித்தமைக்கு நன்றி.
      ஒரேயொரு பிழை சரி செய்தேன் மற்றவை ???

      நீக்கு
    2. அபச குணமாக என்று வேண்டுமென்றே எழுதி இருக்கிறீர்களோ?  அபசகுனமாக என்று இருக்க வேண்டும்.

      நீக்கு
    3. ஆமாம் ஜி அடுத்த விடயம் சகுனம் சரியாக இருக்கிறது. குணம் ஊனமானால் அபசகு'ன'ம்தானே...

      நீக்கு
  2. நல்லா இருக்கு. யோசித்து எழுதி இருக்கீங்க. "பென்"னுக்கு மையும் கோடும் இல்லை. என்பதை நன்கு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்பை குறிப்பிட்ட'மை'க்கு நன்றி.

      நீக்கு
  3. வித்தியாசமாக யோசித்து யோசித்து எழுதுறீங்க.. குட்

    பதிலளிநீக்கு
  4. உங்கள் எண்ணங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. கவிதை நன்று. ஒரு கவிதையில்,

    பகுத்தறிவு மாநாட்டுக்கு உரையாற்றக் கிளம்பினார் தலைவர்
    வாசலுக்கு...

    பூனை குறிக்கிடக் கலங்கினார்கள் இருவரும்

    என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களுடைய கோணமும் அழகு நான் வாக்கியங்களின் அளவு ஒரேபோல் வருவதற்காக வார்த்தைகளை அடிக்கடி மாற்றி எழுதி தீர்மானிப்பேன். அதன் முடிவில் இவை வந்தது.

      தங்களது வரிகளும் அருமை.

      நீக்கு
  6. பகவான்ஜீ இல்லா குறை.அவர் போலவே எழுதிவிட்டீர்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இல்லை நான் எப்பொழுதுமே எனது பாணியில்தான் எழுதுகிறேன்.

      அதேபோல் எல்லா விடயங்களையும் எழுதுகிறேன் அவர் நகைச்சுவை மட்டுமே எழுதுவார்.

      இப்பதிவு நகைச்சுவையும் கிடையாது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. அனைத்தும் வித்தியாசமான சிந்தனை ஜி...

    வங்கிற்கு ஒரு நல்லதோர் யோசனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வருகைக்கு நன்றி
      ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதற்காக நம்மாலான சிறிய அணில் உதவி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்களின் பதிவு அருமை. மூன்று வரிகளில் ஏராளமான விஷயங்களை உணர்த்தி விட்டீர்கள்.

    எமன்,பணம்,குழம்பு,கதவு,தாலி,மை என குறிப்பிட்டவைகளை வெகுவாக ரசித்தேன். நல்ல சிந்தனையோடு சுருக்கித்தந்த பதிவு நன்றாக உள்ளது. தொடருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை விரிவாக இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  9. கில்லர்ஜி செம...நல்ல கற்பனை.

    ரசித்தேன்..!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எமன் செம...

    குழம்பு, தாமதம் செம


    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஹைக்கூ கவிதைகள் சுருக் காரம்.
    ஆங்கில வார்த்தை இல்லாமல் யாரும் எழுதுவதில்லை என்று குறிப்பிட
    வந்தீர்களா தேவகோட்டை ஜி,.?

    வார்த்தைகளைச் சுருக்கிப் பொருளைப் பெருக்கிக் கொடுத்துவிட்டீர்கள்.
    பூ,மை,சகுனம் வெகு சிறப்பு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இப்பொழுது யாரும் தமிழில் முழுமையாக எழுதுவதில்லை.

      ஆகவே நான் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினேன். மற்றபடி நான் தமிழ் வார்த்தைகளில்தான் எழுதுகிறேன்.

      வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  12. உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாய்ந்தவை.

    யமன் டைட்டான் கடிகாரம் பார்த்தானா!? ஹ...ஹ...ஹ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே டைட்டான் கம்பெனியிடமிரூந்து விளம்பரத்துக்கு பணம் வந்தது என்று நினைத்து விடாதீர்கள்.

      நீக்கு
  13. வித்தியாசத்திலும் வித்தியாசம் நண்பரே

    பதிலளிநீக்கு
  14. கில்லர்ஜி உங்களுக்கு அசாத்தியமான கற்பனை வளம்!

    வித்தியாசமான சிந்தனை. மிகவும் ரசித்தேன் கில்லர்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நலமா ? தங்களது வரவு நல்வரவாகட்டும்.

      தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.

      நீக்கு
  15. மாறுபட்ட பதிவை நன்கு ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  16. தாலி கவிதை சிறப்பு.

    நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க தல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை கவிதை என்ற கவிஞருக்கு நன்றி. இதோ வருகிறேன்...

      நீக்கு
  17. மாத்தி ரைமாக யோசித்து இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  18. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைத் தருகிறது. அபார சிந்தனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு