தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 17, 2021

கொரோனாவால் இழப்பு யாருக்கு ?


கொரோனா வருகையால் பல நாடுகளின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல பல குடும்பங்களின் வாழ்வு சிதறிப்போனது. உண்மையே காரணம் உழைத்துமே வாழ்வாதாரத்தை முன்னேற்ற இயலாத வாழ்வில் மூன்று மாதங்களுக்கும் மேல் வேலை செய்யவில்லை என்றால் அன்றாடங் காய்ச்சியின் நிலைப்பாடு என்னாகும் ?  அரசு இவர்களைப்பற்றி நினைத்ததாக, நினைப்பதாக தெரியவில்லை.

கொரோனா வந்தது மக்களை உலுக்கி விட்டது சரி இதுவும்கூட சிலரது வாழ்வை சிறக்க வைக்கிறது ஆம் வட்டிக்கடை நடத்துபவர்களின் வாழ்வாதாரம் இன்னும் சிறப்பாக வளர்கிறது ஆம் அன்றாடங் காய்ச்சிகளின் அவசர உதவியே காதில், மூக்கில், கழுத்தில் போட்டு இருக்கும் நகைகளே... அவைகள் இப்பொழுது அடகுக்கடையில் தஞ்சம் புகுந்து விட்டன... இனி இவைகளை இவர்கள் திருப்ப முடியுமா ? 

நிச்சயமாக திருப்பதி சென்று வந்தாலும் முடியாது காரணம் உணவுக்கே பற்றாக்குறையான வாழ்க்கை இவர்களின் வாழ்க்கையை இனி உயர்வது கஷ்டமான காரியமே அதேநேரம் நடுத்தர வர்க்கங்களின் வாழ்வில் சிறிய முன்னேற்றம் தடைப்பட்டு இருக்கும். கையிருப்புகள் காலியாகி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். செல்வந்தர்களின் பெருங்கொண்ட வருமானம் இழப்பு என்பது உண்மையே ஆனால் இவைகளை வெகு சீக்கிரமே தொழிலாளர்களின் மூலம் நிலைபடுத்திக் கொள்வார்கள்.

அதேநேரம் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அதை சரி செய்வதற்கு மக்களின் மீது பாரத்தை போட்டு சரி செய்வார்கள் ஆட்சியாளர்கள் இது பல நாடுகளிலும் உண்டாகலாம் ஆனால் ஆட்சியாளர்களின் வாழ்வாதாரத்தில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது. எல்லா நாட்டு குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும், ஆளுனர்களும், முதல் அமைச்சர்களும், அமைச்சர் பெருமக்களும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் அதாவது தாழ்வும் இருக்காது வழக்கம் போலவே அரசு பணத்தில் அனைத்து சுகவாழ்வும் அனுபவிப்பார்கள். இது உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.

இவர்களின் குழந்தைகள் வழக்கம் போலவே வெளிநாடுகளில் படிப்பார்கள், இவர்களின் உணவு வகைகளில்கூட மாற்றம் வராது என்றும் போலவே உண்பார்கள். ஆனால் மக்களுக்கு அப்படியில்லை பொருளாதாரச் சிதைவு அவர்களின் உணவு முறையில் எளிமையில் கொண்டு வந்து நிறுத்தும். தங்களது குழந்தைகளின் பள்ளியைக்கூட மாற்றும் நிலையாகலாம்.

ஆக அரசியல்வாதிகளாக இருப்பவர்களை கொரோனாவோ, சுனாமியோ, பூகம்பமோ, மழை வெள்ளங்களோ, நிலநடுக்கமோ, இயற்கை பேரழிவுகளோ, ஒன்றும் செய்ய இயலாது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இதனால்தான் இன்று எல்லா தரப்பு மக்களும் அரசியலுக்குள் நுழைய ஆசைப்படுகிறார்களோ...

கில்லர்ஜி
தேவகோட்டை


சிவாதாமஸ்அலி-
நாம அரசிலுக்குள் நுழைந்தால் எவனாவது மதப்பிரச்சனையை கிளப்பி மக்களை குழப்பி விட்டு குளிர் காய்வாய்ங்களே....

சாம்பசிவம்-
உழைத்து வாழணும்னு ஆசைப்படுபவனுக்கு பிரச்சனை இல்லை. உழைக்காதவனுக்கு அரசியல்வாதி ஆகணும்னு ஆசை வந்தால் அவன் வாழ்ந்து எரிந்து சாம்பலாகி சிவனடி சேரும்வரை பதவி ஆசை விடாது.

35 கருத்துகள்:

  1. அரசியல்வாதிகளுக்கு மின்தடை கூட இருக்காது.  அவர்களுக்கென்ன..  இலவச எரிவாயு, இலவச டெலிபோன் சேவை, இலவச பயணங்கள்.. இப்போது கேட்கவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. அருமையான கண்ணோட்டம்
    எளிமையான மக்களிடமே கொரோனா சீண்டிப் பார்க்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கண்ணோட்டம். ஆனாலும் சிலவற்றை ஏற்கலாம், பலவற்றை ஏற்க முடியலை. பொருளாதாரப் பிரச்னைகள் என்பது அவரவர் குடும்ப நிலைக்கேற்ப அனைவருக்கும் இருந்தே தீரும். அரசியல்வாதிகள் உள்பட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அரசியல்வாதிகள் இழப்பை விரைவில் ஈடுகட்ட முடியும்.

      நீக்கு
  4. இதுதான் கொரோனா அரசியல்! நன்றாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. கொரோனாவோ சுனாமியோ பஞ்சமோ போரோ.... இவைகளால் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழைகள் மட்டுமே... பணக்காரனுக்கு லட்சம் கோடி லாபத்துக்குப் பதில் ஐம்பதாயிரம் கோடி லாபம். அரசியல்வாதிகள் எவரும் பாதிக்கப்படுவதில்லை. அரசு அலுவலர்கள், குறிப்பாக லஞ்சம் வாங்கும் துறைகளில் இருப்பவர்கள் கொழிப்பர். மருத்துவம், பார்மசி, போன்ற பலர் லாபம் அதிகமாக ஈட்டியுள்ளனர்.

    ஏழைகள் மற்றும் அன்னாடங்காய்ச்சிகளின் இழப்பு மீள முடியாத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பணக்காரர்களுக்கு லாபத்தில் நஷ்டமே... ஏழைகளுக்கு முதலுக்கே மோசம்.

      முககவசம் அணியாததால் காவல்துறையினருக்கு வருமானம்.

      அரசு ஊழியர்களுக்கு லஞ்ச வருமானம்.

      கொரோனாவின் பெயரால் நிறைய மனிதர்களின் கிட்னி பறிபோய் உடல் புதைக்கப்பட்டு இருக்கிறது.

      நீக்கு
  6. இறப்பு, நோயால் பாதிக்கப்படுவது அனைவருக்கும் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறப்பிலும் பலர் அரசியல் அதிகார பலத்தால் காப்பாற்றப்பட்டு இருப்பதும் சிறிது உண்மையே...

      நீக்கு
  7. நல்ல பதிவு.

    ஏழைகளின் நிலை மிகவும் கஷ்டம் தான்.
    வேலை இழந்தவர்கள் நிலை இன்னும் கஷ்டம்.

    சாம்பசிவம் சொல்வதும் சரிதான்.

    மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதிகள் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  8. பொதுவாக பலருக்கும் பிரச்சனை தான். பிரச்சனைகள் இல்லாதவர்கள் குறைவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தும் உண்மையே...

      நீக்கு
  9. என்ன ஜி, கொரோனா ஆட்சியே நடக்கும் போது...?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆமாம் எதையும் இங்கு கேட்க இயலாது.

      நீக்கு
    2. மீறி தொடர்ந்து கேட்டீங்கள் என்றால் உங்களுக்கு சமுக நலனில் அக்கறை இல்லை என்று சொல்லி உங்களை அன்பிரண்ட் செய்துவிடுவார்கள் ஹீஹி

      நீக்கு
    3. வருக தமிழரே.... ஐயய்யோ இதுவேறு உண்டா ?

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. ஏழைகளின் நிலை எந்த விதத்திலும் சிரமமே.. அதுவும் இந்த கொரோனா கால கட்டத்தில்.. நல்ல தெளிவான பகிர்வாக கூறியிருப்பதற்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. கொரோனா என்பது மாயை.
    செயற்கையாக உருவாக்கப்பட்ட மாயை.
    மாயைத்தவிர வேரு ஒன்ரும் இல்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் இதுவும் தொடக்கத்திலிருந்தே வந்த செய்திதான். தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  12. பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்களே

    பதிலளிநீக்கு
  13. கொரோனாவில் உயிரிழந்தவர்களிலும் ஏழைகளே அதிகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே பலரது கிட்னி விலை போய் இருக்கிறது.

      நீக்கு
  14. கரோனா பாதிப்பில் பாதிக்கப்பட்டும்..இந்த அரசும் இந்த ஆட்சியும் யாருக்காக இருக்கிறார்கள் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்களே! இவர்களை என்ன சொல்வது.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழக மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள் நண்பரே...

      நீக்கு
  15. ஆஆ இன்று அரசியலோ...அப்போ மீ போட்டு வாறேன் பின்பு:)).. கில்லர்ஜி நலம்தானே?

    பதிலளிநீக்கு
  16. இனிய காலை வணக்கம் அன்பு தேவ கோட்டைஜி.
    நேற்றுதான் பேசிக்கொண்டிருந்தோம்.

    தடுப்பூசி கூட இங்கே நிறைய பாதிக்கப் பட்ட
    ஒரு இனத்திற்கு மறுக்கப்
    படுகிறது என்பதை தைடியமாகத் தொலைக்காட்சியில் சொன்னார்கள்.

    எந்த பூமி அதிர்ச்சி ஏற்படட்டும், வெள்ளம் வரட்டும் ஒரு அரசியல்வாதி கூட
    பாதிக்கப் படுவதில்லை. அவர்கள் பத்திரிக்கைக் காரர்களுக்கு
    பேட்டி கொடுக்க மட்டும் வந்து விடுவார்கள்.

    மிகமிகச் சினம் கொடுக்கும் நிலை.

    பாதிக்கப் படும் ஏழை மக்கள் உணர்கிறார்களா.
    மீண்டும் அவர்கள் பேச்சில் மயங்கி அவர்களுக்கே ஓட்டுப்
    போடுகிறார்கள்.
    என்ன செய்யலாம்.
    மிக அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு