இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 26, 2014

மோகனாவின், மோகினியாட்டம்

27.10.1986
வெட்டுட்டையாள் காளி துணை. 
 
மோகனா எழுதுரேன் யேய்யா ஒனக்கு இப்பத்தான் நாபகம் வருதா  ஒனக்கு புள்ல நாபகம்குட வரலயா  மூனுமாச புள்லயா துக்கிட்டு வந்தென் போன வாரந்தேன் ஒரு வயசு முடிஞ்சிருச்சு எம் புள்லைக்கு பெரந்த நாளுக்கு ஒரு சட்டை எடுத்துக் குடுக்க தோனுச்சா ஒனக்கு முத்தமா குடுக்கிர முத்தம்நா நாண்  வர்ரேன் மொத்தமா குடுக்க எம் புள்ல  பெரந்த நாளுக்கூட பக்கத்து வீட்டு பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளைதான் சட்டை எடுத்து குடுத்தாரு வந்த எடத்துல யேன்ஆத்தாவையும் போயிலை வித்ததுக்கு கஞ்சா வித்தேன்னு சொல்லி போலிசுக்காரனுக கூட்டிட்டு போயிட்டானுக நானும் எம்புள்லயும் சோத்துக்கு என்ன செய்றது பக்கத்துவீட்டு பருவதம் அக்காதான் ஆறுவருசமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா கெடக்கே அதுதான் வீட்ல சோரு பொங்கிபோடு வீட்டப் பெருக்குன்னு சொல்லிடுச்சு வாடகை கொடுக்க முடியலே பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளை நல்லவரு அவருதான் எங்க வீடுதான் கடல்போல கெடக்கே ஒரு ஓரமா நீயும் ஒம்புள்லயும் இருந்துகங்கன்னு சொல்லிட்டாரு அந்த வீட்லதான் புள்லயா குட்டியா நானும் சரின்னுட்டேன் போன மாசம்கூட அவுங்க கல்யான நாலுன்னு எம்புள்லைக்கு சட்டை எடுத்து குடுத்தாரு அப்புடியே எனக்கும் ஒரு பட்டுப்பொடவை குடுத்தாரு பீரோவுல நகையெல்லாம் சும்மா கெடந்தா துருப்புடிச்சு போகும்னு ரெட்டவடம் செயினக்கூட போட்டுக்கன்னுட்டாரு அவரு ரொம்ப நல்லவரு எத்தனேவாட்டி கேட்டுப்பேன் ஒருகம்மலு வாங்கி குடுத்தியா நீ பத்து நாலுக்கு முன்னெ மதுரை மாட்டுதாவனி பஸ்டான்ட்ல பக்கத்து வீட்டு பவானி ஒங்கலப்பாத்து பேசுனாலாம் மோகனா கைப்புள்லய வச்சுகிட்டு கஸ்டப்படுறா இப்பகூட மூனு மாசம் முழுகாம இருக்கான்னு சொன்னாலாம் இதக்கேட்டு கூட எங்கல பாக்கனும்னு தோனலயா ஒன்னச் சொல்லி குத்தமில்லே ஒம்பொறப்பு அப்புடி உன்ஆத்தா கள்ள புருசன்கூட சேந்துகிட்டு உன்அப்பனை வெசம்வச்சு கொன்னதுக்குத்தானே ஆயுள் தன்டனையிலே கெடக்குரா உன் அக்காகூட சக்களத்திகள் சன்டைய வெளக்கப்போனவ அவளுகல தொரத்திட்டு தாலி கட்டாமயே தாசில்தாரோட வாளுரால்ல வெக்கங்கெட்ட வேசி சிருக்கி அவகூடப் பொரந்த நீ எப்பிடி இருப்பே நான் எதுக்கு யென்ஆத்தா வீட்டுக்கு வந்தேன் புள்லப் பெத்தவல்ல பச்ச ஒடம்புக்காரின்னு விட்டா வச்ச ஒந்தொந்தரவு தாங்கம ஆத்தா வீட்ல கொஞ்சநாலு இருப்பொமுன்னு வந்தா எங்கலை அம்போனு விட்டுட்டு நீ அந்த தூத்துக்குடிக்காரி தூ.......................ட்டு கெடகியா நான் வந்த ஒம்போது மாசத்துல அவலுக்கு அடுத்தது பத்து மாசமா ஏன்டா நாசமாப் போரவனெ இந்த லெச்சனத்துல அவலுக்கு பிரசவம் பாக்க நான் வரனுமா யேன்வயிரு பத்திகிட்டு எரியுதுடா இத்தனை நாளா ஒரு கடுதாசிகூட பொடாத நீ துபாய்க்கரன் 18 ந் தேதி வரவும் நான் ஒனக்கு 19 ந் தேதி வரனுமா அப்பன் இல்லாதவ ரென்டாவது வரைக்கும் படிச்சவதனெ அவலுக்கு ஒன்னும் தேரியாதுன்னு நெனைச்சிட்டியா சுப்ரிம்கோட்டு வரை போவென்டா யேந்தம்பி தாண்டவமுத்தி அடுத்தா வரம் பாலையங்கோட்டை இலேருந்து வந்துருவான் அவன் வரட்டும் நீ 19 ந் தேதி காலையிலே ரயில்வே டேசன்ல நிப்பியா அதே தேதி காலையியே ஒன்னை போலீஸ் டேசன்ல வச்சு ஒங்காலை ஒடிக்கலேயேன்ஆத்தா பவழவல்ளி யேன்அ அப்பன் அல்போன்சுக்கு முந்தி விரிக்கலைடா... 
 
சாம்பசிவம்-
ச்சே என்னங்கடா இது... குடும்பமா என்ன ? மொள்ளமாரிப் பயலுக்கும், முடிச்சவிச்ச சிரிக்கிக்கும் கல்யாணம் செஞ்சுவச்சு இருக்காங்கே, பாவம்டா கதுபாய்க்காரன் உங்க சண்டையிலே அவன் தலைய உருட்டிடாதீங்க, எப்படிப் பார்த்தாலும் எல்லாக் குழந்தைக்கும், இன்ஷியல் M தான் வரும் போலயே...

ஞாயிறு, மே 18, 2014

மோகனின் மோகம், மோகனாவுடன்

20.10.1986

தொட்டிச்சியம்மன் துணை.
 
     என் மோகப்பசி மோகனாவுக்கு, உன் மோகமுள் மோகன் மோகத்துடன் எழுதுவது, நான் உன் நினைவால் வாடுகிறேன், நீ உன் அம்மா வீட்டுக்கு சென்று, இன்றோடு ஒன்பது மாதங்களாகி விட்டது, இதுவரை ஒரு லட்டர்கூட போடவில்லை, நானும் ஆபீஸில் வேலை கூடிவிட்டதால், போடலாமென இருந்து விட்டேன், அடுத்த அபார்ட்மெண்ட் அபர்ணாதான், எனக்கு சோறு சமைத்து வைக்கிறாள், அடுத்த மாதம் அவளுக்கு பிரசவமாம், மேலும் மூன்று வருடங்களாக லீவு கிடைக்காத அவளுடைய கணவன் மருதகாசிக்கு, லீவு கிடைத்து விட்டதாம் அதனால் அடுத்த மாதம் 18 ம் தேதி துபாயிலிருந்து வருகிறாறாம், ஆகையால் அடுத்த மாதம் முதல் சமைத்துப் போட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று வருத்தப்பட்டு, உனக்கு கடிதம் போட்டு, 19 ம் தேதி உன்னை வரச்சொல்லச் சொன்னாள், காரணம் 20 அல்லது 21 ம் தேதி குழந்தை பிறக்கலாமென, நமது குடும்ப டாக்டர் காமினி சொன்னார், மேலும் அபர்ணாவுக்கும் உன்னை பார்க்க வேண்டுமென ஆவலாக இருக்கிறதாம், பாவம் அவளும் என்ன செய்வாள், அவள் அம்மா அலமேலுவையும், அடுத்ததெரு அழகர்சாமி கூட்டிட்டு ஓடிட்டான், துணைக்கு இருந்த அவள் தங்கச்சி சீமாவும் சீரியல்ல நடிக்கப்போயி சீரழிஞ்சு போயிட்டா, அவள் அப்பாவும் வேலூரிலிருந்து வர இன்னும் ரெண்டு மாசம் இருக்காம், அவளுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா... நம் அன்பு மகன் அன்பரசன், எப்படி இருக்கிறான் ? அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை, அதனால நீ கண்டிப்பா அடுத்த மாதம் 19 ம் தேதி வரவும், என் அன்பு மகனுக்கும், உனக்கும் என் ஆசை முத்தம்.19 ம் தேதி காலை, நான் ரயில்வே ஸ்டேஷனில் உனக்காக காத்திருப்பேன்.
 
                                  இப்படிக்கு
உன் ஆசை, மோகனாவின் மோகன்.
 
சாம்பசிவம்-
துபாய்க்காரன், எதுக்கு வர்றானாம்  புள்ளைக்கு பேர் வைக்கவா ? வச்சுட்டு, அப்படியே அவனை பாதயாத்திரையா, காசிக்கு போகச் சொல்லுஞங்க, அவன் கர்மமெல்லாம் தொலையட்டும், 
இன்ஷியல்ல கூட பிரச்சனை இல்லை போலயே !
 
குறிப்பு- 19 ம் தேதி மோகனா வருவாளா... அல்லது கடிதம் ஏதும் வருமா ? எப்படியும், அடுத்த வாரம் நமக்கு தெரிந்து விடும், நல்லதே நடக்கட்டுமென, நல்ல பெருமாளை பிரார்த்திப்போம்

திங்கள், மே 12, 2014

கதை சொல்லவா ?


நான்,
கீதையைப்பற்றி போதிக்க வந்த அருணகிரி நாதரும் அல்ல !   
பைபிளை பற்றி சோதிக்க வந்த வேளாங்கண்ணி பாதரும் அல்ல !  
குர்ஆனைப்பற்றி வாதிக்க வந்த நாகூர் மார்க்க தூதரும் அல்ல !    
Just you’re Brother.

மனிதன் மதம் தந்த, கதை சொல்லவா ?
இல்லை,
மனிதனை மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானைக்கு மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானை மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் தந்த பலனால், மனிதன் பதம் பார்த்த, கதை சொல்லவா ?
இல்லை,
பதம் தந்த விளைவால் மனிதன் மதம் கோர்த்த, கதை சொல்லவா ? 
இல்லை,
மதம் வந்ததால் மனிதன் ரதம் இழுத்த, கதை சொல்லவா ? 
இல்லை,
ரதம் கூட மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் கொடுமையால் வாக்கு வாதம் வந்த, கதை சொல்லவா ?   
இல்லை,
வாதம் முற்றி பாதம் தொட்டு மன்னிப்பு கேட்ட கதை சொல்லவா ?   
இல்லை,
மன்னிப்பு கேட்கும் முறைக்கு நாதம் மீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
ஆதம் காலத்து மதம் தீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மக்கள் தொகையில் சதம் அடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
தாமதம் செய்து வந்த புதுமதம் செய்த, கதை சொல்லவா ?   
இல்லை,
சம்மதம் சொல்ல வந்தது எம்மதம் என்ற, கதை சொல்லவா ?   
இல்லை,
மதம் இல்லை என்று சொன்ன மானிட, கதை சொல்லவா ? 
இல்லை,
மலம் கழிக்கும் மானிடனேயே மதம் போற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
உலகுக்கு எம்மதம் தொண்டு ஆற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மனதை குழைத்து மதம் மாற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை, 
உணர்ந்து உருகி மதம் மாறிய, கதை சொல்லவா ?   
இல்லை,
சதாம் கொண்டு வந்த ஆரிய(ர்), கதை சொல்லவா ?   
இல்லை,
பேதம் இன்றி சாதம் ஊட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
நெஞ்சு பதைக்கின்ற மனதை வதைக்கின்ற, கதை சொல்லவா ? 
 
CHIVAS REGAL சிவசம்போ-
இவரு, கதை சொல்லவான்னு கேட்கிறாரா ? இல்லை கதை சொல்ல, வா ! ன்னு கூப்புடுறாரான்னு புரியலையே ? விளக்கம் கேட்டா நம்மளை டியூப்லைட்னு சொல்வாரு...

ஞாயிறு, மே 04, 2014

காமக்கொடூரன்கள்


1958 ல், S.S.L.C படித்தவர்கள் என்றால், இப்பொழுது இவர்களுக்கு வயது 70 ஆகி இருக்கும் திரிஷா வயதில் இவர்களுக்கு கண்டிப்பாக பேத்தி இருப்பார்கள், ஆக இவர்கள் பேத்தியை சைட் அடிக்கிறார்கள் அப்படித்தானே ? 
அப்படியானால் இவர்களின் பேரன்கள் யாரை சைட் அடிப்பது ? இது நான் நகைச்சுவைக்காக கேட்கவில்லை. 

சிந்திக்க வேண்டிய உண்மை புதைந்து கிடக்கின்றது, இவர்கள், தங்களது சந்ததிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் கொடுக்கும் பாடம் இதுதானா ? நாட்டில் ஐந்து வயது குழந்தையை கற்பழிக்கும் காமக்கயவர்களை நாம் குறை சொல்கிறோம் இவர்கள்தான் உண்மையிலேயே காமக்கொடூரன்கள் இவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுதான் இந்தச் செயல்பாடுகள்.

இவர்களை பிடித்து பொடாவில் போட்டால் என்ன ? ஆனால் அரசாங்கம் அதை செய்ய மாட்டார்கள், ஏனெனில் இந்த மாதிரியான அறிவுஜீவிகள்தான் இவர்களின் எதிர் காலத்திற்கு தேவை.

நாம் எல்லோருமே சமூக பொருப்புணர்வு இல்லாமல் இந்த பேனர்களை பார்த்து சிரித்து விட்டு போவதால்தான் இந்த மாதிரியான தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது, இந்த வயதில் இவர்கள் இப்படியிருந்தால் இன்றைய மாணவர்களை நாம் என்ன சொல்ல முடியும் ? இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மரியாதை அந்தந்த இடத்தில், அவர்களுக்கு இழக்கப்படுகிறது, இது இந்த ஜென்மங்களுக்கு தெரிவதில்லை.

வெட்டியாக தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என வாய்ச்சவடால் பேசுவதை நிறுத்தி விட்டு, செயல்பாட்டில் என்று களம் இறங்குகிறோமோ, அன்றுதான் உண்மையிலேயே தமிழன் தலைநிமிர முடியும்.

அதுவரை....
தமிழன் எனசொல்லாதடா,
தலைநிமிர முடியலடா.
சாம்பசிவம்-
அன்னை தெரசாவுக்கு மன்றம் அமைகிற வயசுல இப்படி திரிஷாவுக்கு மன்றமா ?

CHIVAS REGAL சிவசம்போ-
இந்தலெட்சனத்துல, சொல்றாங்கே அந்தக்கால S.S.L.C இந்தக்கால, B.A வுக்கு சமம்னு, நம்ம சொன்னா குடிகாரப்பய, உளர்ர்ர்ரனான்னு சொல்வாங்கே.