இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 18, 2014

Emergency 2


ஜெயகுமார்
என் இனிய வலையுலக நண்பர்களுக்கு... கடந்த பத்து தினங்களாக நான் இவரை கவனித்துக்கொண்டே வந்ததில் மேற்கண்ட இந்த நண்பர் எனது பதிவுகளை காப்பி எடுத்து அவரது முகநூலில் போட்ட விசயங்களை எடுத்து விட்டார், மற்றவர்களுடையது இருக்கிறது, அது எனக்கு தேவை இல்லாதவிசயம் மேலும் எனது கில்லர்ஜீ வலைபதிவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார், ஒருதருணத்தில் அவருக்கு செய்தியனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவருக்கு நன்றி சொல்லி செய்தி அனுப்பி விட்டேன், இதையும் அவர் படிப்பார் என நம்புகிறேன் தவறு செய்வது மனிதஇயல்பு.
 மறப்போம் மன்னிப்போம் மனிதநேயம் காப்போம்.
எனக்கு ஒரு பிரட்சினை என்றதும் ஏதோ பொழுது போக்கிற்காக படிக்கிறோம், என்றில்லாமல் அபுதாபியின் ஒருஓரத்தில் வாழும் எனக்காக பலதேசங்களிலிருந்தும் கண்டனக்குரல் கொடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி.

குறிப்பு-நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு தங்களை பின் தொடர்வேன்.
 

26 கருத்துகள்:

  1. வணக்கம் கில்லர் ஜி
    தங்களின் ஆதங்கம் புரிகிறது. இந்த பதிவு இடுவதற்கு முன் அவரின் மின்னஞ்சல் மற்றும் முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை செய்தீர்களா? இனி அந்த நபர் அப்படி செய்ய மாட்டார் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் பாண்டியனுக்கு அவரைத்தொடர்பு கொள்ள எந்தவழி முறைகளும் இல்லை Facebook மூலமாககூட தகவல் அனுப்ப சாத்தியமில்லாதவாறு செய்திருக்கிறார் ஒன்று செய்யனும் Share அல்லது Like செய்யமுடியும்.தொலைபேசி இலக்கம் இருந்திருந்தால் கூட அழைத்திருப்பேன்.

      நீக்கு
  2. தங்கள் நிலைப்பாடு புரிகிறது.
    எத்தனை நாள்களுக்குத் தான் இப்படிச் செய்வார்கள்.
    பல நாள் கள்ளர் ஒரு நாள் பிடிபடுவரே!

    பதிலளிநீக்கு
  3. இது போன்ற இணையத் திருட்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கினறன.
    இவர்களை என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  4. இவர்களை எல்லாம் திருத்த முடியாது நண்பரே...

    // மலம் களித்து வாழாதே ! // சரியாக... மிகச்சரியாகச் சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரு வில்லத்தனம்!..
    இனியேனும் திருந்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. நண்பர் கில்லர் ஜி! இப்படிக் கூடச் செய்ய முடியுமா என்ன? அதில்லைங்க...காப்பி பேஸ்ட் இப்பலாம் ரொம்ப சர்வ சாதாரணம்ங்க....முனைவர் பட்டத்துக்கே கூட ரிசர்ச் பேப்பர்லாம் கூட காப்பி அடிக்கிறாங்க.....அப்படியே! ஆனா, முக நூல் வழியாகக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையா? அப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்ன? நம்ம DD கிட்ட டெக்னாலஜி கேளுங்க நண்பரே! சத்தியமாக வருந்தத் தக்க ஒரு செயல்தான் இது...நீங்கள் இங்கு பதிவு செய்திருப்பதை அவரும் பார்த்திருப்பார் என நம்புவோம்! இதைப் படித்துவிட்டாவது இனி அவர் செய்ய மாட்டார் என நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  7. நண்பர் கில்லர் ஜி! இப்படிக் கூடச் செய்ய முடியுமா என்ன? அதில்லைங்க...காப்பி பேஸ்ட் இப்பலாம் ரொம்ப சர்வ சாதாரணம்ங்க....முனைவர் பட்டத்துக்கே கூட ரிசர்ச் பேப்பர்லாம் கூட காப்பி அடிக்கிறாங்க.....அப்படியே! ஆனா, முக நூல் வழியாகக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையா? அப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா என்ன? நம்ம DD கிட்ட டெக்னாலஜி கேளுங்க நண்பரே! சத்தியமாக வருந்தத் தக்க ஒரு செயல்தான் இது...நீங்கள் இங்கு பதிவு செய்திருப்பதை அவரும் பார்த்திருப்பார் என நம்புவோம்! இதைப் படித்துவிட்டாவது இனி அவர் செய்ய மாட்டார் என நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  8. திருந்தாத ஜென்மங்கள்! வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் மனம் எவ்வளவு துடித்திருக்கும் என்று என்ன முடிகிறது நண்பரே. நாம் கஷ்டப்பட்டு வேலைப் பார்க்கும்போது அதை வேறு ஒருவன் அனுபவிக்கும்போது ஆத்திரம் தான் வரும் .

    ஆனால் இவையெல்லாம் தான் தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கங்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். இந்த பதிவை நீங்களும் உங்கள் முகநூலில் பகிர்ந்து மற்றவர்களையும் பகிரச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. இனிமேலும் அந்த ஆள் திருடினால் cyber crime புகார் செய்யுங்கள் கில்லர் ஜி !

    பதிலளிநீக்கு
  11. சுதிந்திரத்தில இருக்கிறதால..... சுதந்திரமா? திருடுகிறார்...முறை வழி ஒன்று இருக்கிறது. அந்த முறை வழியை பின்பற்றவில்லை என்றால்..தங்களின் கோடாலியை இப்படி பட்டவர்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு

  12. வணக்கம்!

    எங்கும் திருடா் இருந்து களிக்கின்றாள்
    பொங்கும் உணா்வால் பொசுக்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  13. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆதங்கம் புரிகிறது. எச்சரிக்கை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    பதிலளிநீக்கு
  14. நானும் இந்த வேதனையை அனுபவித்திருக்கிறேன் கில்லர்ஜி.

    வலைப்பக்கத்தின் Home Page இல் More என்பதைக் ‘கிளிக்’ செய்து Report Abuse ஐக் கிளிக் செய்தபின், உரிய ஒரு படிவத்தை நிறைவு செய்து அனுப்பினேன். திருடனின் வலைப்பக்கத்திலிருந்து திருடப்பட்ட என் பதிவுகளை பிளாக்கர் delete செய்தது.

    அதற்கப்புறம் அவன் திருடுவதை விட்டுவிட்டான்.

    முகநூலில் இந்த வசதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.

    தெரிந்த நண்பர்கள் வழிகாட்டினால் நல்லது.

    பதிலளிநீக்கு
  15. மலையாள மொழியில் கழிப்பது என்பதற்கு உண்பது என்னும் பொருளும் உண்டு, யார் என்ன என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எப்படியாவது தொடர்பு கொள்ளலாமே என் பூவையின் எண்ணங்கள் வலையில் உங்கள் கருத்து கண்டு வந்தேன் .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருக்கைக்கு நன்றி ஐயா, அவரைத்தொடர்பு கொள்ளும் வழிமுறைகளை தடுத்து வைத்திருக்கிறார் என்பதை நண்பர் பாண்டியன் அவர்களுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

      நீக்கு
  16. கவலைப்படாதீர்கள் கில்லர்!
    முகநூலில்தானே வெளியிடுகிறார்? போகட்டும். அதனால் எதுவும் பாதிப்பு இருக்காது. காரணம், வலைப்பூவின் வலிமையே வேறு. உங்களுக்கே தெரியும், எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பதிவுக்கு, வலைப்பூவுக்குப் பின்னிணைப்புகள் இருக்கின்றனவோ, அந்தளவுக்குத்தான் இணையத் தேடலில் அவை சிக்கும் என்பது. மேலும், முகநூலில் எத்தனை முறை ஒரு பதிவு பரப்பப்பட்டாலும் கூகுள் போன்ற தேடுபொறிகளில் வலைப்பூவின் இடுகைகள்தாம் முதன்மை பெறும். காரணம், வலைப்பூ எனத் தொடங்கிவிட்டால், அதற்கு எங்கெங்கிருந்தோ எத்தனையோ பின்னிணைப்புகள் கிடைக்கும். இன்றிருந்து நாளை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிற முகநூல் பதிவுகள் வலைப்பதிவுகளுக்கு ஒருநாளும் நிகராக முடியாது.

    பதிலளிநீக்கு
  17. பசிக்கு திருடும் பிக்பாக்கெட் திருடனை மன்னித்தாலும் இந்த மாதிரி அறிவு திருடர்களை தண்டிக்க வேண்டும்.

    மற்றவர்களின் வாந்தியை அள்ளி விழுங்குவதில் இவர்களுக்கு என்ன பெருமையோ தெரியவில்லை !

    கில்லர்ஜி அவர்களே,

    உங்களின் பதிப்புகளைதான் அவரால் திருட முடியுமே தவிர உங்களின் உயர்ந்த சிந்தனைகளை அல்ல !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  18. உங்கள் கோபம் நியாயமானதே. பிறருடைய பதிவுகளை திருடி தன் பெயரில் வெளியிடுவோர் இவர் போல் பலர் பதிவுலகில் உண்டு.என் செய்ய! இவருக்கு அந்த தாணுமாலயன் தான் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம். உங்கள் மனத்தின் வலி எனக்கு புரிகின்றது. காரணம் நானும் இது போன்ற ஆசாமிகளால் பாதிக்கப்பட்டவன்தான். நானும் உங்களைப் போலவே பதிவு ஒன்றும் எழுதி உள்ளேன்.

    எனது பதிவை காப்பி அடித்த பதிவர்
    http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_20.html

    தொடர்ந்து எழுதுங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. காபி அடிக்கும் அளவு நம் பதிவு நன்றாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்! இவர்களை வேறு என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
  21. பேச்சைத் திருடி பிழைக்கின்ற மூடர்கள்
    எச்சிலும் தாழ்ந்த இனம் !




    பதிலளிநீக்கு
  22. இவ்வாறாக உள்ளவர்களைத் திருத்தவே முடியாது. அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. அதற்கும் சாத்தியமில்லை. இருக்கட்டும், தாங்கள் தங்கள் பணியைத் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு