இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 08, 2014

எனக்குள் ஒருவன்


வாழ்க்கையில, தெரியாத விசயங்களும், முடியாத காரியங்களும் என்னை அனுகவே கூடாதுன்னு ஒரு லட்சியத்தோட வாழ்ந்து கிட்டு இருந்தேன் இதையொரு, அகம்பாவம் என்றுகூட சொல்லலாம்.

முடிவு ?

தெரியாத விசயங்களில் முக்கால் தோல்வியும், முடியாத காரியங்களில் முழுத் தோல்வியும் அடைந்திருக்கிறேன். இதனால் பல நேரங்களில் என்னை, எனக்கே பிடிக்கவில்லை.

இதன் அடிப்படை காரணம் என்ன ?

இதை எனக்குத் சொல்லத் தெரியவில்லையா அல்லது, சொல்ல முடியவில்லையா ? அல்லது காரணம் எனக்கே புரியவில்லையா ?

நண்பா, மனிதனின் வெற்றிக்கு காரணம் அவனது 99 சதவீத உழைப்பும், இறைவனின் ஒரு சதவீத ஆசியுமே.

உனது தோல்விக்கு காரணம் நீ 99 சதவீதமும் முழுமையாக உழைக்கவில்லை. That’s All, Just You Will Try Again. 

உனக்கு மனஅமைதி வேண்டுமெனில், தனிமையில் உட்கார்ந்து, சிறிது நேரம் அழுதுபார் கண்ணீர் மனஅமைதிக்கு தலை சிறந்தமருந்து.

அழுவது ஆண்களுக்கு அழகல்ல என்பதெல்லாம், மூடர்களின் வாக்கு.
அழுவது தவறென்றால், இறைவன் ஆண்களுக்கு கண்ணீரை கொடுத்து இருக்கவே மாட்டான். வாழ்வில், அழாத மனிதர்கள் உலகில் இதுவரை பிறக்கவில்லை.

கவியரசு, கண்ணதாசன் சொன்னதைப் போல,
அழும்போது, தனிமையில் அழு
சிரிக்கும்போது, நாலு பேரோடு சேர்ந்து சிரி.
தனியாய் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.

நீ இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கை உள்ளவன் அதனால் நீ வேதனைப்பட்டே தீரவேண்டும். இது உனது FILE லில் எழுதப்பட்டு விட்டது.

அதற்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கொள்கையை எடுத்துக் கொள்ளச் சொல்வதாய் அர்த்தமல்ல,

உனது அன்றாட வாழ்வில் வேலைப்பளு உன்னை உடல்ரீதியாய் ஒருபோதும் சலனப்படுத்தியதில்லை,

உன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களால், சொந்த பந்தங்களால், நண்பர்களால், மனரீதியாய் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்.

இவர்கள் எல்லோருமே உன்னை புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்துதான் ஆகவேண்டுமென நீ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

பலரது வாழ்வில், தன்னில் பாதியாய மனைவியரே கணவனை புரிந்து கொள்வதில்லை, ஏன் உனக்குகூட அந்தவகை, ஜாதிதானே கடைசிவரை.
  
மற்றவர்கள், உன்னை புரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் உனது கோபத்தை குறைக்க முயற்சி செய்.

ஒரு விசயம் தெரியுமா ? நியாயமானவனுக்குத்தான் கோபம் வரும், அதற்காக கோபம் வராதவர்கள் எல்லாம் நியாயமற்றவர்கள் என்றும் அர்த்தமல்ல.

உனக்கு கோபம் வரஇன்னொரு காரணமும் உண்டு, உனது உடல்ரீதியான பிரச்சனைகள், அது உன் வாழ்க்கை சம்மந்தப்பட்டது உனக்கே தெரியும்,

மேலும், வாழ்க்கை வாழ்வதற்கே இதையும் நீ மனதில்கொள். புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

நியாய, தர்மப்படி வாழ நினைக்கின்றவன் இந்தச் சமூகத்தில் சந்தோஷமாய் வாழவே முடியாது அதற்காக அந்த வழியிலிருந்து விலகு என்று சொல்வதாய் அர்த்தமல்ல.

நியாயமான உணர்வு உள்ளவன் மனதை இறைவன் SCANNING செய்கிறான், இதை கடைசி மூச்சுவரை மறவாதே.

இறைவனுக்கு பயந்து வாழ் இதற்கு அர்த்தம், இறைவனைக் கண்டால் ? பயந்து அலற வேண்டுமென்பதல்ல, உனது மனசாட்சிக்கு பயந்து நியாயமுடன் வாழ்வது.

இறைவணக்கம் செய்யலாமென்று நினைக்கலாம் இறைவன் உன்னிடம் எதிர்பார்ப்பது மனிதனாய் படைக்கப்பட்ட நீ மனிதனாய் வாழ்கிறாயா ? என்பதுதான். அதற்காக இறைவணக்கம் வேண்டாமென சொல்வதாயும் அர்த்தமல்ல,
 
இறைபயம், இல்லாத இறைவணக்கம். தொகை நிரப்பப்பட்டு கையெழுத்து போடப்படாத காசோலை போன்றது.

ஆகவே, எந்த நிலையிலும் நியாய நிலையை விட்டு விலகாதே உனது ACCOUNTS  நாளை இறைவன் என்ற AUDITOR ரால் பார்க்கப்படுகிறது,

அந்தநாள் உனது மரணநாள்.
அந்தநாளை
மரணமடைந்தோமோ ? என்று எண்ணாதே,
சரணமடைந்தோமே என்று எண்ணிப்பார்.
மரணம் கூட சுகமாகும்.

காணொளி

F.P-17 Oct 2011

56 கருத்துகள்:

  1. வணக்கம்
    நல்ல கருத்துக்கள் நிறைந்த பதிவு படிக்க படிக்க திகட்ட வில்லை. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர் மன அமைதிக்கு
    தலை சிறந்த மருந்து// என்ற வாசகத்துடன் புகைப்படம் அருமை. இயற்கையுடன் அமர்ந்து இருப்பதும், தனிமையும்,கண்ணீரும் விட்டு நாம் இயற்கையுடன் இசைந்து,கரைந்தோமானால் புதிய சக்தியும்,மன ஆறுதலும்,தெளிவும் நிச்சயமாக கிடைக்கும். பயம் அற்று நாம் நம் வழியில் வாழலாம்.

    // ஆகவே, எந்தநிலையிலும் நியாய நிலையை விட்டுவிலகாதே உனது ACCOUNTS நாளை இறைவன் என்ற AUDITOR ரால் பார்க்கப்படுகிறது,// நன்றாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தோடு ஒன்றியமைக்கு நன்றி சகோதரியே... தொடர்ந்தால் சந்தோசமே.

      நீக்கு
  3. அருமை அருமை!!! அனைத்து வரிகளும்.....பதியப்படவேண்டியவை!!!!அதுவும் இறுதி வரிகள் பஞ்ச்!! அக்கௌன்ட்ஸ்....இறைவன் எனும் ஆடிட்டர்.....மரணம் அடைந்தோமா.....சரணடைந்தோ என்று எண்ணிப்பார்//.....சூப்பர்!!! வாழ்வியல் தத்துவம் முழுவதும் பிழியப்பட்டுள்ளது!

    வாழ்த்துக்கள் கில்லர் ஜி!!!!!

    பதிலளிநீக்கு
  4. தற்போது நாங்கள் உபயோகிக்கும் கணினியில் ram மிகவும் குறைவு என்பதால்...virtual memory பிரச்சினை.... நீங்கள் கொடுத்திருக்கும் வீடியோ பார்க்க முடியவில்லை....ஸாரி! கில்லர் ஜி!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த வழிகாட்டல்
    உண்மையில்
    உளநிறைவைத் தந்த பதிவு!

    பதிலளிநீக்கு
  6. நியாயமானவனுக்குத் தான் கோபம் வரும்!...
    சிந்தனையைத் தூண்டும் பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும், அதற்காக கோபம் வராதவர்களெல்லாம் நியாயமற்றவர்கள் என்றும் அர்த்தமல்ல.... ஐயா

      நீக்கு
  7. அருமையா உணர்வுபூர்வமா எழுதியிருக்கீங்க. சில இடங்களில் கண்ணீரை வரவழைத்தது. நீங்கள் கூறியுள்ளதைப்போலவே நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது எழுத்து தங்களுக்கு கண்ணீர் வரவழைத்தது உண்மையெனில் எனக்கு சந்தோசமே... ஏனெனில் எனக்கு அதுதான் உண்மையான வெற்றி ஐயா

      மீண்டும் வருவேன், கண்ணீர் வடிக்கவைக்க ... ஆகஸ்ட் 30

      நீக்கு
  8. என்ன நண்பரே, இந்த பதிவு ஒரே தத்துவமழை பொழிகிறது.

    சிந்திக்கவைக்க கூடிய பதிவாக இருக்கிறது. எங்கே அழ வேண்டும், எங்கே சிரிக்க வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    மனசாட்சி சொல்கிறபடி நடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள், எல்லா விஷயத்திலும் அதன்படி நடக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுதாபியிலே வெயில் மண்டையை பொழக்குது நண்பரே... அதான் இப்படி வேர்த்து மழையாயிடுச்சு....

      நீக்கு
  9. குழப்பம் இப்போது தான் ஆரம்பித்து உள்ளதா....?

    தெளிவு ஒரு நாள் பிறக்கும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெளிவு பிறந்தால் ? நல்லதுதான் நண்பரே... வழி பிறக்கும்.

      நீக்கு
  10. சிந்தனைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே!

    உனக்குள் ஒலித்த ஒருவனின் கூற்று!
    தினந்தினம் கேட்கச் சிறப்பு!

    வாழ்க்கையில் நாம் காண்கின்ற நிகழ்வுகளை
    யதார்த்தமாகக் கூறினீர்கள்.
    எம்மை நாமே ஆராய்தல் வேண்டும்.

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் ஒன்றி ஆராய்ந்து படித்தமைக்கு நன்றி சகோதரியாரே.... தொடர்ந்தால் சந்தோசம்.

      நீக்கு
  12. அருமை அருமை
    சிறந்த கருத்துக்கள் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. கண்ணீர் மன அமைதிக்கு மருந்தா இல்லையான்னு ,ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது பார்த்துட்டு சொல்றேன் கில்லர் ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப எதற்கு ? தேவையில்லாமல் அழனும் ?

      நீக்கு
  14. //மரணமடைந்தோமா ? என்று எண்ணாதே,
    சரணமடைந்தோமே என்று எண்ணிப்பார்.
    மரணம் கூட சுகமாகும் //

    அருமையான சுயதேடலுக்கு முத்தாய்ப்பான வரிகள். வாழ்த்துக்கள்!
    உங்கள் பதிவும் பிடிக்கும் ஆனால் உங்கள் குரலைக்கேட்டதும் உங்களை எங்களுக்கு இன்னும் பிடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. தங்களது வாழ்த்துரை எனது மனதை கணக்க செய்து விட்டது ஐயா, நன்றி சொல்ல தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  16. சகோ சுயபரிசோதனை செய்துகொள்வது போல் படிப்பவர்க்கு வழங்கும் ஆலோசனைகள் ஜென் தத்துவம் போல் இருக்கிறதே!! அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், அடுத்தடுத்த வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  17. இயற்கையில் தோன்றியவை அழிவதில்லை நண்பா... ஒரு பொருள் மற்றொரு பொருளாக மாறுகின்றதே உண்மை. ஒவ்வொருத்தரின் துன்பத்துக்கும் காரணம் நிலவும் சமூக அமைப்புதான். அதற்க்காக மனிதர்கள் காரணமில்லை என்றும் சொல்லிவிட முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகம் என்பது என்ன ? நண்பா, நாம் தானே....

      நீக்கு
  18. ஒரு நல்ல பயனுள்ள பகிர்வு. பள்ளிக்காலத்தில் நீதி வகுப்பிற்குச் சென்றுவந்ததை இப்பதிவு நினைவூட்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா, தங்களை போன்றவர்களின் வருகைதான் என்னை இன்னும் எழுததூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  20. இப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. உங்கள் படத்தைதான் பேகவான்ஜீ பதிவில் இருந்தது.

    பதிலளிநீக்கு
  21. சிந்திக்க வேண்டிய -மனதில் கொள்ள வேண்டிய கருத்துகள்.
    இரண்டு வரிகள் என்றாலும் படியதுனன்றாக இருந்தது. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும், பாடலை ரசித்தமைக்கும், நன்றி ஐயா.

      நீக்கு
  22. நண்பரே,

    பல நேரங்களில் உங்கள் வலைப்பூவில் எனது பின்னோட்டம் நகைச்சுவை கலந்ததாக இருக்கும் ஆனால் இந்த பதிவை படித்தபோது ஒரு மென்சோகத்தை உணர்ந்தேன் ! காரணம் இதில் குறிப்பிட்ட பல உணர்வுகளை நான் வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்துகொண்டும் இருக்கிறேன்...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது பதிவில் நீங்கள் கொடுத்த விளக்கத்துக்கு நான் இட்ட பின்னூட்டம் :

    ஏன் அப்படி நினைச்சீங்கன்னு தெரியல... 80 அல்ல 100 சதவிகிதம் எனக்கு ஹிந்தி தெரியாது !!!!!!!!!!!!!! ஆனால் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருப்பது உணமை !

    நிச்சயமாக திட்டியிருக்கமாட்டீர்கள் என தெரியும் ! அதே நேரத்தில் புரியவில்லை என்பதால்தான் கேட்டேன்.

    சாமானியன்

    பதிலளிநீக்கு
  23. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா கருத்துரை கொடுத்திருக்கிறீர்கள் நன்றி. நான் 80 என்றது சதவீதம் அல்ல, தெரியுமென்பது என்பதைத்தான் 80 என்றேன், எனது வித்தியாசமான எண்ணங்களை வார்தைகளிலும் புகுத்துபவன். என்னைப்போலவே தாங்களும் அதை சதவீதமாக்கி வித்தியாசமானவர் என்பதை தெளிவு படுத்தியுள்ளீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  25. கட்டுரையும் கவிதையும் தத்துவமும் கலந்து அருமையான பதிவொன்றை அளித்திருக்கிறீர்கள் கில்லர்ஜி!
    உங்களைப் போல் எழுத முயற்சிக்க வேண்டும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டலாம் தப்பில்லை ஆனா, கடைசிவரிகள் கொஞ்சம் ஓவர்ர்ர்ர்ர்ரரு....

      நீக்கு
  26. வாழ்க்கையை மிக அழகாக அமைதியானதாக புரிதலுடையதாக மாற்றும் அற்புதமான வழிமுறைகள். பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி சகோதரி கீதமஞ்சரி அவர்களே... தொடந்தால் சந்தோசமே.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே!
    மிகவும் யதார்த்தமான பதிவு! மரணம் ௬ட சுகமாக தோன்றும் அளவுக்கு,வார்த்தைகளின் விளக்கங்களை,சுவையாக, சுவாரஸ்யமாக, மனதில் பதியும்படியாக, மறக்க முடியாத பதிவாக, பதிந்திருக்கிறீர்கள்.பகிர்விற்கு நன்றி!
    வாழ்த்துகளுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நம்மாழ்வாரே....

      நீக்கு
  29. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. தோல்வியில் இருந்து தான் மனிதன் எழவும் வாழவும்... தான் எடுத்து வைக்கும் அடுத்த அடியை இன்னும் அதி ஜாக்கிரதையோடு எடுத்து வைக்கிறான் என்பதையும் மிகவும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.. அதற்கு உங்கள் வாழ்க்கையையே உதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள்... சிறப்பான வரிகள்..மனிதன் கோபப்படும்போது தான் சொல்ல நினைப்பதை தன் மனதில் இருப்பதை ஆணித்தரமாய் வெளிப்படுத்த நினைப்பதை தடுத்துவிடுகிறது இந்த கோபம்... கோபத்தை கட்டுப்படுத்தவும்... தோல்வி அடைந்துவிட்டோமே என்று சுருண்டு முடங்கி விடாமல் எழவும் மிக அருமையான வழிகளை சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே... உண்மையே... கோபத்தில் மனிதன் தன்னை மறக்கிறான்.. நல்லவைகள் மட்டுமல்ல.... நம்மை நாடி வருவோரும் நம் கோபத்தை பார்க்கும்போது பயத்தில் விலகி சென்றுவிடுகிறார்கள்... வயது ஏற ஏற மனம் பக்குவப்பட ஆரம்பிக்கிறது... அந்த பக்குவம் நம் கோபத்தை மட்டுப்படுத்தி விடுகிறது...

    வாழ்க்கையில் எது தேவை, எப்படி இருக்கவேண்டும் என்று அழகாய் எளிய நடையில் சொல்லி இருக்கிறீர்கள்.

    உங்களுக்குள் இருக்கும் அந்த ஒருவன் மூலமாய் சொல்ல வந்ததை சிறப்பாக பகிர்ந்து...

    ஆடியோவில் பாடி பகிர்ந்து இனிமை.

    வாழ்வில் எல்லா மேன்மையும் பெற்று வெற்றிகளை அடைய மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஜீ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா தங்களது நீண்ட கருத்துரையும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி...

      நீக்கு
  31. உங்களை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்..தன்னையறிதல் என்பது வரமே...வாழ்த்துகள் சகோ..

    பதிலளிநீக்கு