தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

சத்தியமா எனக்கு தெரியாதுங்கோ...



நட்புகளே... நேற்றைய மனசு’’டன் சுற்றுவோமா ? பதிவின் தொடர்ச்சி...

நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்கள் கேட்டதற்காக அரேபியர்கள் வாழும் வில்லாக்கள் இப்படித்தான் அவர்கள் விரும்புவார்கள் சிட்டியில் வசிப்பது பிறநாட்டினர் ஊருக்கு வெளியே வசிப்பது தொழிலாளர்கள்.

புகைப்படத்தை பெரிதாக காண மையத்தில் ஒருமுறை எலியால் சொடுக்குக..
நம்மூரு அருச்சியல்வாதிகள் வரும்போது இந்த சின்னோண்டு கலப்புக்கடையிலதான் தங்குவாங்கோ...
சாம்பசிவம் – போட்டீங்கள்ள ஓட்டு ஒங்களுக்கு வேணும்...
நம்மூரூ சின்னிமா சாருகள் வந்தாலும் இங்கேதான் தங்குவாங்கோ...
சிவாதாமஸ்அலி – ப்ளாக்ல டிக்கெட் எடுத்து படம் பார்த்தீகள்ல ஒங்களுக்கு வேணும்.
நம்மூரூ கிக்கிகெட்டு (போர்) வீரருகள் வந்தாலும் இங்கேதான் தங்குவாங்கோ...

Chivas Regal சிவசம்போ - வெயில்ல ஒக்காந்து கூட்டத்துல சிக்கிகிட்டு, சிச்சுகிட்டு, கிக்கிகெட்டு பாத்தீயல்ல ஒங்களுக்கு வேணும்...
 எப்பூடி ? ? ?
ஒக்காந்து வயிறு முட்ட கொட்டிக்குவாங்கோ...
சாம்பசிவம் – ஓட்டுக்கு 500 ஓவா வாங்குனீங்கள்ல ஒங்களுக்கு வேணும்...
கூட்டமா வந்தா இதுல ஒக்காருவாங்கோ...
அப்பொறம் கையே கழுவுவாங்க...
மறுபடியும் வந்து புருட்டு திம்பாங்கோ...
இல்லாட்டி காப்பித்தண்ணி குடிப்பாங்கோ..
அப்பொறம் பீடி, சுருட்டு குடிப்பாங்கோ...
கொஞ்சம் ஒக்காந்து ரெஸ்ஸுட்டு எடுப்பாங்கோ...
பொழுதுசாய காலார.... நடந்து வருவாங்கோ...
வெளியில வந்து ‘’போட்டு’’ல போயிட்டு வருவாங்கோ...
  செலபேரு (கிக்கிகெட்டு வீரருகள்) எக்குசைசு செய்வாங்கோ...
அப்பொறம் இந்தப் கோரைப்பாய்லதான் படுத்து தூங்குவாங்கோ...
இவங்கே வர்றதுக்கு முன்னாலயே விசாக்கொடுத்து நம்மூரு முண்ணுனி, பிண்ணுனி நட்டிகைங்க வந்து இருப்பாங்களா ? இல்லையானு ? அபுதாபி அகிலாண்டேஷ்வரி மேல சத்தியமா எனக்கு தெரியாதுங்கோ....
காலையில யெந்திருச்சு குளிப்பாங்கோ...
காசை வேங்கிட்டு ஓட்டுப் போட்டீங்கள்ல இந்த இடத்துலயே நின்னு பாத்துக்கிறனும் எட்டிப்பார்த்தீங்க கண்ணை நோண்டிப்புருவாங்கே...Take care.
அப்பொறம் ‘’ஜொள்ள’’ மறந்துட்டேனே... கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சதாலே, ஊருப்பய காசெடுத்து உம்மாவுக்கு பாத்தியா ஓதுனதுனால கட்டவுள்ளு கோவப்பட்டு திட்டீர்னு ஹாட்டு அட்டாக்கு கொடுத்துப்புட்டாருனா ? ? ?
 சட்டக்குனு போலீச்சு வந்து நெல்லிக்காப்பட்டருல தூக்கிட்டுப்போயி ஆச்சுப்பெட்டலுல சேத்துடுவாங்கோ...
அங்கே அவுரு பொட்டுனு போயிட்டாருனா...
படக்குனு பொணத்தை... பெலைட்டுல ஏத்தி நாட்டுக்கு அனுப்பிடுவாங்கோ....
வெசயத்தை கேட்ட பொருபுள்ள தொ(கு)ண்டர்கள் சும்மா நின்னுக்கிட்டு இருந்த ஆண்டியப்பன் காரையும், மருதமுத்துவோட பைக்கையும் தீ வெப்பாங்கோ...
வாயில்லா ஜீவன் பஸ்ஸு கண்ணாடியை ஒடைச்சு வீரத்தைக் காண்பிப்பாங்கோ...
(இவர்களை கொண்டு போய் நாட்டின் எல்லையில் விட்டால் எத்தனை எதிரிகளை கல்லை வீசியே கொல்வார்கள் அரசு செவி சாய்க்குமா ? ஹூம் ஊமையன் சொல்வது செவிடன் காதில் கேட்கவா போகிறது)
மரத்தை வெட்டி ரோட்டுல போட்டு வப்பாங்கோ...
பஸ்ஸுகளை டிப்போவுல குண்டக்க மண்டக்க நிப்பாட்டி வப்பாங்கோ...
  ரயிலைக்கூட அப்படியே.. நிப்பாட்டி ரோடெல்லாம் வெறிசோடி கெடக்க வப்பாங்கோ...
கொழந்தைங்ககூட மலர் அஞ்சலி சொய்வாங்கோ...
எல்லா மதத்துக்காரவுங்களும் பிரேயர் செய்வாங்கோ...
 
நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்கள் கேட்டதற்கிணங்கி இறுதி ஊர்வல புகைப்படம் அரை மனதுடன் நீக்கப்பட்டது.
 
கடைசியா சுடு(ம்)காடு கொண்டு போவாங்கோ...
மறுநாள் மக்கள் வெள்ளத்தைப் பாரீர் அப்படினு நண்பர் S.P. செந்தில்குமார் பேப்பருல போடுவாருங்கோ...
கடைசியா, அவரு ஆண்மா சாந்திக்கிட்டே (மூத்த தாரம்) போகனும்னு கோயில்ல வெளக்கு பூசை செய்வாங்கோ...

இம்பூட்டு.... வெசயமும் யெனக்கு ஊரைச்சுத்தி சுத்தி காம்பிக்கும்போது நண்பரு மனசு ச்சே கொமாருதான் சொன்னாருங்கோ.... ந்நான் அப்பாவி சத்தியமா யெனக்கு ஒண்ணும் தெரியாதுங்ங்ங்ங்கோ.....ஓஓஓஓஓஓஓ

ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கு என்னோட எழுத்துல தப்பு கண்டு புடிக்க முடியாதே.... ஹை.....யா.....

மேற்கண்ட புகைப்படங்கள் அனைத்தும் அபுதாபியிலுள்ள இடங்கள் மட்டுமே

64 கருத்துகள்:

  1. நல்லா சொன்னீங்களே,,,,
    உங்களுக்கு இரண்டு தெரியுமா

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுபோட வழி இல்ல சகோ,,,,,நல்ல ஓட்டுப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகளுக்கு மட்டும் போடுங்கோ...

      நீக்கு
  3. என்னென்ன அக்கிரம ம் எல்லாம் நடக்குது ஒலகத்தில.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்பதற்க்குத்தான் நாதியில்லை ஐயா.

      நீக்கு
  4. நான் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வில்லாக்களை வெளியிட்டு வாயை பிளக்க வைத்தமைக்கு நன்றி! படங்கள் அருமை. அது சரி ,அந்த கடைசி படத்திற்கு முந்தைய படத்தில் தங்கள் படத்தை அந்த ஊர்தியில் ஏன் போட்டீர்கள். தயை செய்து அதை எடுத்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அன்புக்கு கட்டுப்பட்டு தாங்கள் குறிப்பிட்ட புகைப்படத்தை நீக்கி விட்டேன் அதிக வேலை செய்து புகுத்தினேன்.....

      நீக்கு
  5. வணக்கம் ஜி! புகப்படத்துக்கு நீங்க குடுக்கற நகப்பற செமயா இருக்கு ஜி! ரெண்டுமே அழகு!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே.

    நேற்றைய பதிவின் தொடர்ச்சி அருமை. படங்களுக்கேற்ற வார்த்தைகளை தொகுத்தளித்து எழுதி அசத்தி விட்டீர்கள். நிறையவே ரசித்துப் படித்தேன்.

    இன்றைய பதிவின் நீளமும் எனக்கு இப்போதுதான் திருப்தியை தருகிறது. பின்னே “என்” கண்களையே உறுத்திவிட்டதே.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் நீளத்தில் உங்களது தளத்தையும் மிஞ்சி விட்டதோ.....

      நீக்கு
    2. வணக்கம சகோதரரே

      நான் வெறும் நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் .என் பதிவுகளில் நான் சொல்ல வரும் கருத்துக்களை விபரமாக பதியும் போது ஆர்வத்தில் நீளங்களின் குறை என் கண்களுககு சற்றே படாமல் விலகித்தான் செல்கிறது்.என்ன செய்வது.?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சகோ நான் எது சொன்னாலும் நகைச்சுவைக்காகத்தான் சொல்வேன் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. அட்டகாசமான வர்ணனையுடன் ஆர்ப்பாட்டப் படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  8. கொமாரு சொன்னதா ,நீங்க அங்கே தானே இருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
  9. இவ்வளோ விசயம் இருக்குதா?
    அருமை!.. அருமை!!

    நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இருக்கு வெளியில் சொன்னால் ஓட்டுப் போட்டவங்களுக்கு வெட்ககேடு சகோ.

      நீக்கு
  10. வணக்கம்
    ஜி
    நீங்கள் விடயத்தை சொல்லிப்போட்டு தெரியது என்றால் எப்படி....சொல்ல வேண்டியவிடயத்தை சொல்லி விட்டீங்கள்..த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே நாளைப்பின்னே அரசியல்வாதிகளின் பிரட்சினை வந்தால் எனக்குத் தெரியாதுனு தப்பிச்சுடலாமே.... குமார்தானே மாட்டுவாரு...

      நீக்கு
  11. ஒரு வாரமாக வலைப்பக்கம் வரலைன்னா என்னென்னவோ நடக்குதே... கில்லர்ஜி அண்ணா நம்ம குடும்பம் வந்தப்போ ஊரைச் சுத்திக் காட்டிட்டு இப்போ இந்தக் கொமரை தூக்கி வச்சிருக்காரே...

    அது சரி...

    எதையுமே மனசு வைச்சிச் செஞ்சாத்தானே சந்தோஷம் கிட்டும்... அதான் மனசோடு எடுத்த போட்டோவை பகிர்ந்திருக்கிறார்... அதுதான் அம்புட்டும் ஜொலிக்கிது...

    அண்ணே... இங்க பக்கிக தின்னே தீக்குதுகள்ல அந்தப் படங்கள் கொஞ்சம் இறக்குங்க...

    ரெண்டு பதிவும் பாத்தாச்சு...
    ரெண்டுக்கும் ஓட்டும் போட்டாச்சு...

    இப்ப "மனசு" சந்தோஷம்தானே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. எல்லாமே சரிதான். உம்ம வீட்டுக்கு வராட்டி மட்டும் உரிமையா விசாரிக்கேளே நீரு எம்ம வீட்ட எப்ப எட்டி பாக்க போறீரு? வராட்டி இனி உம்ம பேச்சு கா பதிவர் சந்திப்புலகூட உம்ம கூட பேசுவதாய் இல்ல (மைன்ட் வாய்ஸ்ல வந்தாதானே அப்டின்னு சொன்னது கேட்டுச்சு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தவறு உங்கள் மீதே இருக்கிறது காரணம் தாங்கள் பதிவிடுவது எனக்கு தெரியவில்லை காரணத்தை விளக்கி இருக்கிறேன் தகவலுக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  13. கோவமா ஒரு குத்து குத்தலாம்னு பாத்தா எங்க அந்த ஓட்டு மிசினக்காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் பெட்டி காணாமல் போய் விடுகிறது நண்பரே...

      நீக்கு
  14. ஓட்டலு ரெம்ப இத்துண்டா இருக்கு... இதிலா எம் குடி பெருமையை காக்குபவர்கள் தங்குகிறார்கள்.. சே..எனக்கு அவு மானமா இருக்கு நண்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் சிக்கனம் நண்பரே இதுக்கு ஏன் அவமானம்.

      நீக்கு
  15. அட கில்லர் ஜி! செம படங்கள்....விளக்கங்களும், கமென்டும் சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  16. வணக்கம் கில்லர் ஜி !

    வழமை போல் அசத்தல் ஆமா அந்த சினிமா நடிகைங்க பத்தி சொன்னீங்களே விசா கொடுத்து வந்திருப்பாங்களோ இல்லையோன்னு உங்களுக்கு தெரியாத மாதிரி ம்ம்ம் அங்கேதான் இடிக்குது ! ...உண்மையை சொல்லி இருக்கலாமே ஜி ( கல்லெறிதானே வாங்கிடுவோம் ) நல்ல சுவாரசியம் ஜி தொடர வாழ்த்துக்கள் அருமை அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே... தங்களின் கருத்துரைக்கு நன்றி கல்லெறியெல்லாம் நாட்டில் இருந்தால்.....

      நீக்கு
  17. சத்தியமாக எனக்கும் தெரியாதுங்க
    படங்களும் கருத்துகளும்
    நல்ல பாடம் சொல்லித் தருவதாக
    நான் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் தெரியாதா நண்பரே.... நீங்களும் என்னைப்போல்தான்

      நீக்கு
  18. குதூகலப் படங்களும், குறும்பு கருத்துக்களும் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள ஜி,

    அபுதாபி புகைப்படங்களைப் போட்டு தாக்கிட்டீங்க... அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேன்...! பிரமாண்டங்களின் பிரதிபலிப்பாக ஜொலிக்கிறது...! கொடுத்து வைத்தவர்கள்... அனுபவி ராஜா அனுபவி...!

    த.ம. 11.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மணவையாரே அனுபவிப்போம் அபுதாபி....

      நீக்கு
  20. எதுவும் தெரியாது என்றுகூறிவிட்டு பல செய்திகளையும், புகைப்படங்களையும் நுணுக்கமாகப் பகிர்ந்துகொள்ளும் தங்களது பாணி பாராட்டத்தக்கது. எங்களால் நேரில் பார்க்கமுடியாததை புகைப்படக்ள் மூலமாக வழங்கிவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே... சில விடயங்களை தெரியாத மா3 சொல்லிப்போகனும் காரணம் இது அரசியல் வினையாட்டு வினையாகி விட்டால்....

      நீக்கு
  21. படங்களும் தகுந்த உங்க வர்ணனையும் அசத்தலுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றிங்கோ...

      நீக்கு
  22. ஜி..

    உங்கள மாதிரி சுற்றுலா வழிகாட்டி கிடைப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..

    இவ்வளவு தூரம் சுத்துனதுக்கு - அவிங்க திங்கிற வகையறாக்கள காட்டினீங்களே தவிர -

    நமக்குன்னு. ஒரு கட்டஞ்சாயா கூட வாங்கித் தரலை!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைவசம் தொழில் இருக்குனு சொல்றீங்களா ? ஜி அடுத்தொரு முறை ஒட்டக பிரியாணி விருந்து வச்சுடுவோம்..

      நீக்கு
  23. அழகிய படங்கள். உங்களுடைய கலக்கலான கருத்துகள்....

    அனைத்தையும் ரசித்தேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  24. நான் என்ன தவறு செய்தேன் ஜி.என்பெயரைப் போட்டு.... மரத்தை வெட்டி ரோட்டுல போட்டு வைப்பாங்கொ பஸ்ஸுகளை டிப்போவில் குண்டக்க மண்டக்கா என்று நிறுத்துவாங்கொ. இதெல்லாம் அபு தாபியிலா. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இவையெல்லாம் நம்மூரில் என்றுதானே சொல்லி வந்தேன்...

      நீக்கு
  25. படங்களும், வர்ணனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  26. ஓட்டும், மைதான டிக்கட்டும் இதுக்குத்தானா!! ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே எதுக்கு ? நாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்க வேண்டியதுதான்....

      நீக்கு
  27. மேற்கண் ட படங்கள் அனைத்துமே அபுதாபியில் மட்டுமே என்று எழுதி இருக்கிறீர்களே. வர வர என்னால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  28. வருக ஐயா U.A.E என்பது இந்த நாட்டின் பெயர் அதில் அபுதாபி, துபாய் போன்றவை ஊர்கள் இந்த விடயத்தை கடந்த பதிவில் தெளிவாக விளக்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. ஐயா நான் துபாய் அபுதாபி ஷார்ஜா எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று உங்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன் மரத்தை வெட்டி ரோடிலே போடுவாங்கோ பஸ்ஸுகளை குண்டக்கா மண்டக்கா என்று நிறுத்துவார்கள் என்று எழுதி படமும் போட்டு படங்கள் அபுதாபியில் எடுத்தவை என்றால் எப்படித்தான் புரிந்து கொள்வதுதப்பு கண்டு பிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் தப்பு தெரிந்தால் சொல்லி விடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா அவையெல்லாம் நம் இந்தியாவில் நடப்பவை என்றுதானே.. சொல்லி வந்தேன் இங்கு அதற்கெல்லாம் வேலையில்லை தங்களின் கருத்தில் நான் எப்பொழுதுமே வருத்தப்பட மாட்டேன் ஐயா மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  30. அசத்தல் படங்கள்.பிரம்மாண்டமான கட்டிடங்கள்.அதற்கு உங்க வர்ணனை இரண்டு ஒப்பீடு உட்பட சூப்பர். நன்றி.

    பதிலளிநீக்கு