தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

எழுச்சியோடு, எழுந்திடு பெண்ணே...


 எழுச்சியோடு விழித்திடு பெண்ணே
இது வேலு நாச்சியார் பிறந்த மண்ணே
லட்சியக் கனவுகள் உனக்கும் பெண்ணே
நிச்சயம் நிறைவேறும் புறப்படு முன்னே

வஞ்சக உலகமடி பெண்ணே
வஞ்சகர்கள் கவ்வட்டும் மண்ணே
வலையை வீசுவார்கள் முன்னே
வலையை கிழித்து எறி பெண்ணே

காமுக கயவர்கள் கூட்டம் பின்னே
வேர் அறுக்க விரைந்திடு பெண்ணே
வேங்கையென பாய்ந்திடு முன்னே
இது ஜான்சி ராணி பிறந்த மண்ணே

புலியென பாய்ந்திடு முன்னே
படைகள் உண்டு உனக்கும் பின்னே
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
பாவிகளை அழித்துவிடு நின்னே

விண்ணில் பறந்திடு பெண்ணே
வீர முழக்கம் இடு முன்னே
இது வீரம் விளைந்த மண்ணே
நீ வீரத்தாய் பெற்ற பெண்ணே

புரட்சிகள் செய்திடு பெண்ணே
புதுமைகள் பிறக்கட்டும் மண்ணே
எதிலும் கலங்கி விடாதே கண்ணே
எட்டுத் திசையும் நமது மண்ணே

எதிலும் நிலை கொண்டு பெண்ணே
எதிரிகளை துரத்தி விடு பின்னே
எண்ணம் சரியெனில் கண்ணே
வெற்றிகள் உமது காலடி முன்னே

வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது நிதி வழங்குவோர் கவனத்திற்க்கு அந்தக் கணக்கு விவரம் வருமாறு’’

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 3) பெண்களுக்கான எழுச்சிக் கவிதை 50 லட்சம் பொற்காசுகள் உங்களுக்கே பரிசு என அறிவித்து இருந்தார்கள் நான் புத்தரின் பேரனா ? எனக்கும் ஆசை உண்டு ஆகவே நானும் கோதாவில் குதித்தேன் பரிசு கிடைத்தால் வீட்டுக்கு கிடைக்கா விட்டால் நாட்டுக்கு எனவே ‘’புதுக்கவிதை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டை
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

84 கருத்துகள்:

  1. அருமையான எழுச்சிக்கவிதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் ஜி!!! "ணே " அருமையான கவிதை! தங்களுக்கு நிச்சயம் பொற்காசு கிடைக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே... பரிசு கிடைத்தால் தங்களுக்கொரு சுலைமாணி பார்சல் அபுதாபியிலிருந்து...

      நீக்கு
  3. அருமை

    சொக்கா ஆயிரமும் பொன்னாச்சே...............

    பதிலளிநீக்கு
  4. என்னால் முடிந்தவரை ட்ரை பண்ணீனேன் உங்கள மாதுரி முடியல அன்பரே

    கீல்லர்ஜீ பிறந்த மண்ணே
    கவலை உனக்கு எதற்கு பின்னே
    செல்வார் எங்கள் அண்ணன் முன்னே
    செழித்திடம் அவையாவும் பின்னே

    இதற்கு நம்ப பகவான்ஜீ தான் கருத்து சொல்லனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே இப்படியே தொடங்குங்கள் நண்பரே இதுவே முதல்படி என்று எப்பொழுதும் நினையுங்கள் வெற்றி நிச்சயம்.

      நீக்கு

  5. மீசையில் நார் எடுத்து தொடுத்தாய்
    ஆசையில் தமிழ் மாலை கில்லர்ஜி
    தமிழ் அன்னை மனம் மகிழ்வாள்
    தம்கையால் வெற்றிவேல் தருவாள்

    அருமை நண்பா!
    வாழ்த்துகள்
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா மீசையில நாரா ? இதுவும் நல்லாத்தான் இருக்கு.

      நீக்கு
  6. எழுச்சியோடு எழுந்திடு பெண்ணே என்று
    எழுதிய தங்கள் பாவினில் - இன்று
    எழுந்து நிற்கும் எழுச்சி வரிகள்
    எழுச்சிகொள் பெண்களே என்று உணர்வூட்டுகிறதே!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. எழுச்சிக் கவிதை அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அட கவிதையிலும் கலக்குகிறீர்கள் ஜீ ம்..ம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நலம்தானே ? வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. //எண்ணம் சரியெனில் கண்ணே
    வெற்றிகள் உமது காலடி முன்னே //

    முத்தாய்ப்பான வரிகள் முழுக்கவிதையின் சாரத்தையும் சொல்லிவிட்டது. வாழ்த்துக்கள். கடைசி வரி ‘வெற்றிகள் உந்தன் காலடி முன்னே’ என்றிருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும் என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வரிகளும் சிறப்பு நன்றி
      ஆனால், நான் சாதாரணமாக வெளியிட்டு இருந்தால் உடன் மாற்றி இருப்பேன் இது தற்போது போட்டிக்குள் நுழைந்து விட்டபடியால் மாற்றுவதற்க்கு யோசிக்கிறேன் காரணம் நேற்று மற்றொரு பதிவரின் வரிகளுக்கு விழாக்குழுவினர் விளக்கம் கேட்டு பின்னூட்டம் இட்டு இருந்தார்கள் அந்த அளவுக்கு நுண்ணியமாக கவனிக்கின்றார்கள் ஆகவே மாற்றினாலும் ஏதும் கேள்விகள் வருமோ என்றே யோசிக்கின்றேன் மாற்ற இயலாமைக்கு வருந்துகிறேன் நண்பரே... நன்றி.

      நீக்கு
  10. அருமை. பாராட்டுகள்....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வீரம் விளையாடுகின்றது - வார்த்தைகளில்!..

    வெற்றி பெற நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. அன்புள்ள ஜி,

    பெண்ணைப் பற்றி எழுச்சியோடு கவிதையாகவே எழுதியது நன்று. வாழ்த்துகள்.

    த.ம.8.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மணவையாரே... தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. தாக்ள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  15. வெற்றி பெற வாழ்த்துகள்! நண்பரே........

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே,

    எழுச்சிக் கவிதை அட்டகாசமாக எழுதிபிருக்கிறீர்கள். அது போட்டியிலும் இடம் பெறுவதை அறிந்து மகிழ்ந்தேன். கண்டிப்பாக இக்கவிதை பரிசைப் பெற்று தங்களுக்கு புகழையும் பெற்றுத்தரும். தாங்கள்பரிசும் புகழும் பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ...

    நன்றியுடன்,
    கமலாஹரிஹரன்
    ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துமடல் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  17. படிக்கும் பெண்களுக்கு எல்லாம் வீரம் விதைக்கும் கவிதை!!! வெற்றிபெற விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  18. உங்க பாட்டுக்கு பங்குக்கு
    நீங்க பாடி(தி) விட்டீங்க
    நானும்
    என் பங்கா பாட்டுக்கு
    பரிச மட்டும் (உங்க சார்பா) வாங்கிக்குறேன்.

    ஏன்னா பாட்டெழுதுறது பெரிய விஷயமில்லை!!?

    பதிவர் சந்திப்பில் உங்க சார்பா நின்னு பரிசு வாங்கிக்கறதுதான் (ரொம்ப கஷ்டமான வேலை)

    அதற்காகத்தான் நான் என்னையே தங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.(இதை நம்ம நாட்டு அரசியல் வாதிகள் குரலில் வாசித்து கொள்ளவும்... )

    சரீஈஈஈ பரிசு கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.. வேறேதாவது கொடுத்தால்?.. அப்டீன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதியெல்லாம் கேட்கமாட்டேன். என்ன நம்புங்க.. வெற்றி நமதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே பரிசு கிடைத்தால் வாங்கி கொள்ளுங்கள் நண்பரே நமக்குள் யாரிடம் இருந்தாலென்ன ?

      நீக்கு
  19. சகோ,
    இது தேவையா? (என்னப்பாத்துப்பா) அருமை வாழ்த்துக்கள்,
    வேலுநாச்சியார் பிறந்த மண்ணே,,
    அருமை சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் வேலு நாச்சியார்தானா ? வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  20. அருமை ஜி! வெற்றிபெற வாழ்த்துக்கள்! புதுகைக்கு செல்ல முடியும் என்று தோன்றவில்லை! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  21. கவிதை அருமை சகோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  22. விழாக் குழுவினரிடம் சொல்லி வையுங்கள் ,உங்கள் சார்பில் பரிசினை என்னிடம் வழங்குமாறு :)

    பதிலளிநீக்கு
  23. கவிதையைப் படிக்கும் எந்தப் பெண்ணையுமே எழுச்சி கொள்ளச் செய்யும் வரிகள்! பாராட்டுக்கள் கில்லர்ஜி சார்! பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரையே பரிசு கிடைத்தது போல் இருக்கிறது சகோ.

      நீக்கு
  24. நிச்சயம் நிறைவேறும் அண்ணே அஞ்சுலட்சம் பொற்காசும் உங்கள் முன்னே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலர் பொன். கருப்பையா பொன்னையா அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  25. பரிசு உங்களுக்குத்தான்வாழ்த்துக்கள்சகோ.

    பதிலளிநீக்கு
  26. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  28. பாட்டாவே பாடலாம் போல சகோ. அசத்தல் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பு தாத்தா நினைத்தால் பாடலாம் நன்றி சகோ

      நீக்கு
  29. சரியான நேரத்தில்தான் உங்களின் கவிதைமூலம் பெண்மையை போற்றி அவர்களுக்கு வீர உணர்வை வழங்கியிருக்கிறீர்கள்..... பாராட்டுக்கள்

    "மகன்:- இறுதிக்கடன் செய்து சொர்கத்திற்கு அனுப்பிவைபதாக நம்பப்படுகிறது.
    மகளோ:- வாழும்போதே வீட்டை சொர்கமாக்குகிறாள்.
    "பெண்ணைப் போற்றிடுவீர் ...பெண் மகவை பெற்றிடுவீர்"
    நன்றிகளுடன் ...கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  30. ஜி....வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  31. கில்லர்ஜியின் முத்திரை தெரியும் பதிவு பாராட்டுக்கள். வாழ்த்துகள் வெற்றி அடைவீர்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்
    ஜி
    கவிதை அமர்க்கலம்.. வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபனின் கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  33. நல்லாருக்கு கில்லர்ஜி !! வெற்றி பெற வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
  34. எழுச்சி கொள் பெண்ணே என்று எங்கள் சகோதரரும்
    அற்புதமாக எழுச்சிக் கவி பாடி அசத்திவிட்டீர்கள்!

    சந்தேகமின்றி வெற்றி நிச்சயம்!.
    உளமார வாழ்த்துகிறேன் சகோதரரே!

    நலக்குன்றல் வேகத்தடையாயிற்று தாமதமாக
    வந்தமையைப் பொறுத்திட வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் வரவை எதிர் பார்த்திருந்தேன் நன்றி..

      நீக்கு
  35. எழுச்சி கொண்டேன் சகோ உங்கள் கவிகண்டு
    வீறுகொண்டேன் சகோ உங்கள் வரிகள் கண்டு
    கவிதை மிக்க அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்!

    சகோ, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறேன்... வகை 3 பெண்கள் முன்னேற்றக் கட்டுரை, வகை 4 புதுக்கவிதை , பண்பாட்டின் தேவை பற்றி. விழாக்குழுவினரிடம் பேசி சரியான வகையில் சேர்த்துவிடுங்கள் சகோ..பரிசு பெரும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாமல்.. :)
    த.ம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விளக்கவுரைக்கும், வெற்றி வாய்ப்பை மழுவ விடாதீர்கள் என்று சொன்னமைக்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  36. பதிவு பகிர்ந்த அன்றே பார்த்தேன் அண்ணா...
    கவிதையில் கலக்கியிருக்கீங்க...
    வெற்றி உங்களுக்கே.... இப்பவே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. அருமை தோழர்
    வாழ்த்துகள்

    தம +

    பதிலளிநீக்கு
  38. எழுச்சிமிகு வரிகள்.. சந்தநயமும் கவிதைக்கு வலுகூட்டுகிறது. பாராட்டுகள். வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு.

      நீக்கு
  39. எழுதிவிட்டீர் கவி - எனக்கு முன்னே!
    கவியிலும் நீர் சிங்கத்தின் 'சன்'னே!
    வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே!
    அன்புடன்
    ரவிஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டை அருவியாய் பொழிந்த கவிஞர் ரவி அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  40. பதில்கள்
    1. நண்பர் திரு. அப்பாத்துரை அவர்களின் முதல் வரவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறேன்

      நீக்கு