இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 15, 2015

நான் வேற மா3


சிம்பு - அனிருத் இவங்கே யாரு ? நேற்றுப் பிறந்த பொடிப்பசங்க.. இவங்களைக் குறித்து நான் பதிவெழுதையே மானக்கேடாக கருதுகின்றேன் காரணம் இதுவும் கூட இந்த சித்தாந்தவாதிகளை மேலும் உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் நிறுத்தி விடும் என்பதே எனது பொதுநல கவலை இருப்பினும் நானும் எழுத காரணம் எங்கும் இவர்களின் பாடல் வரிகளைக் குறித்து சர்ச்சை இது எதில் கொண்டு போய்விடும் மேலும் இந்த பாடலை உலக அளவில் அறிவிக்கும் பிறகு இந்த அலை ஓயும் அதற்க்குள் இவர்களின் பலன் முழுமை பெற்று விடும் இதுதானே காலங்காலமாய் நடக்கின்றது.

பால்குடி மறக்காத பாலகன் மாதிரி இருக்கின்றான் இவனெல்லாம் இசையமைப்பாளராம் இவன் அதற்குள் அப்படியென்ன ? இசை ஞானம் பெற்று விட்டான் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் இசை ஒரு பெருங்கடல் என்பது சங்கீதஞானம் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும் இருப்பினும் இவர்கள் எப்படித்தான் இவ்வளவு புகழ் பெற்றார்கள் என்பது எனக்கு இன்னும் பிடிபடவில்லை நல்லவேளை இசை வேந்தர்கள் திரு. நவ்ஸாத், திரு .கே.வி.மகாதேவன், திரு. டி.ஆர்.பாப்பா, திரு. சுதர்சனம், திரு. வி.குமார், திரு. டி.கே.ராமமூர்த்தி, திரு. எம்.எஸ்.விஸ்வநாதன், திரு. புகழேந்தி போன்ற மாமேதைகள் போய்ச்சேர்ந்து விட்டார்கள் இல்லையெனில் இவர்களால் அவர்கள் தற்கொலை செய்திருப்பார்கள் காத்தான் காலன்.

இவனுகள் எழுதுவதெல்லாம் பாடல் என்றால் ? கிராமங்களில் மாடு மேய்க்கும் பள்ளி செல்லாத சிறுவன் சுயசிந்தனையில் உதித்ததை பாடிக்கொண்டு இருக்கின்றானே... அது என்ன ? சமீபத்தில் ஒரு பாடல் உலகப்புகழ் பெற்றது //ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி// நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இதில் என்ன தத்துவம் இருக்கின்றது உண்மையிலேயே சொல்கிறேன் பிண்ணனி பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் கண்டிப்பாக இதனைக்குறித்து பேசி மனம் நொந்து இருப்பார்கள் நாம் எவ்வளவு பாடல்கள் இசை ஞானத்தோடு பாடி இருக்கிறோம் இந்த அளவுக்கு உலக அளவில் பெயர் வாங்கியதில்லையே என்று. இன்று இந்த அரைவேக்காடு பசங்க ஒரு பாடலை பாடியதற்காக ஊடகங்கள் எழுதுகின்றார்கள், மாதர் சங்கங்கள் கொடி பிடிக்கின்றார்கள் இந்த தவறுகளின் தொடக்கம் எங்கு காரணம் யார் ? என்பதை அனைவருமே சிந்தித்து பார்க்க மறுக்கின்றோம் அல்லது மறக்கின்றோம் ஆம் அன்று //மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க// (1973) என்று எழுதினானே அன்றே நமது முன்னோர் தடுத்திருக்க வேண்டும் பிறகு சகலகலா வல்லவன் திரைப்படத்தில் நிலாக்காயுது என்ற பாடலில் முக்கல் முணகல் வரும் பொழுதே நாமாவது தடுத்திருக்க வேண்டும் அதில் வரும் //தண்ணீர் கேட்கும் நேர் கண்டேன் தாகம் தணிந்ததா// (1982) என்று இவ்வளவு பட்டவர்த்தனமாக தைரியமாக எழுதினானே அதில் ஆபாசம் இல்லையா ? பிறகு எழுதினானே //சக்கரை வள்ளிக்கிழங்கே நீ சமைஞ்சது எப்படி// (1994) இதையும் தடுக்க வில்லை கேட்டால் வாலிபக்கவிஞர் வாலி என்று பட்டம் சூட்டி சூடம் காட்டுகிறோம் பெரிய மனிதர் என்பதாலும், சிறந்த கவிஞர் என்பதாலும் அவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியுமா ? இன்னும் எவ்வளவோ பாடல் வரிகளை நான் ஆதாரமாக சொல்லமுடியும் வேண்டாம் கில்லர்ஜி தளத்தின் புனிதம் கெட்டு விடும் என்று அஞ்சுகின்றேன் என்னைப் பொருத்தவரை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே யாராக இருந்தால் என்ன ? தடுக்காதது நமது குற்றமே இப்பொழுது மட்டும் என்ன பட்டுக்கிருச்சு ? அதற்காக இந்தப்பாடலை நான் ஆதரிப்பவன் என்று அர்த்தமல்ல ! உங்கள் அனைவரையும் விட ஒரு மடங்கு அதிகமே எதிர்ப்பவன் என்னைப்பொருத்தவரை இவனெல்லாம் நடிகனும் அல்ல ! அவனும் இசை கலைஞனும் அல்ல ! பின்புலத்தின் பலனில் பிரபலமானவர்கள் அதற்க்கு ஒத்து ஊதிய கலையை ரசிக்கத் தெரிந்தவர்கள் எல்லாத் தவறுகளுக்கும் உரமிட்டு வளர்த்து விட்ட பிறகு குத்துதே, குடையுதே என்றால் அர்த்தமென்ன ? எவையெல்லாம் சமூக நலக்கேடோ... எவையெல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டுமோ... அதை அனைவரும் உரமிட்டு வளர்த்த பிறகு யார் யாரை நோவது ? இந்த வட்டத்துக்குள் நானும் இருந்திருக்கின்றேன் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றேன் இருப்பினும் இவைகளை உலகறிந்த நாள் முதல் நான் மனதால் வெறுத்தவன் ஒரு கை ஓசை பெறுமா ?

இதை தடுப்பதற்க்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றது அரபு நாடுகளைப்போல இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன் அது எப்பொழுதுமே நமது நாட்டில் நடக்க சாத்தியமில்லை காரணம் அந்த சட்டத்தை இயற்ற வைத்தாலும் முடியாது காரணம் இதை இயற்றுபவர்கள்தான் இதில் குற்றவாளிகளாக முதல் வரிசையில் நிற்பார்கள் ஆகவே அவ்வழி அடைப்பாகிறது இனியெனும் இந்த வகையான பாடல்கள் எழுத ஒவ்வொருவனும் அஞ்சவேண்டும் அதற்க்கு ஒரேயொரு வழி இருக்கின்றது பெண்ணினத்தை இந்த பாடல் வரிகள் கேவலப்படுத்துகிறது என்று இன்றைய பெண்கள் நினைப்பது உண்மையானால் ? கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே இவன் நடித்த திரைப்படத்தையும், அவன் இசையமைத்த திரைப்படத்தையும் தியேட்டரில் போய்ப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் செய்வீர்களா ? செய்வீர்களா ? இப்படிச் செய்தால் இனி எந்த நாய்களும் இப்படி கேவலமான வார்த்தைகளை எழுதி சமூகத்தை கெடுக்க மாட்டார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து ஆனால் செய்ய மாட்டீர்களே... காரணம் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் உலகமே இருண்டு விடும் இதுதானே உங்களது வாழ்வியல் தத்துவம் தொப்புள்கொடி என்பது தாய்க்கும், சேய்க்கும் உள்ள புனிதமான உறவு இவங்கே அதிலேயே பம்பரம் விட்டு, ஆம்லெட் போட்டவங்கேதானே... அதையும்தானே ரசித்தோம் நான் இதுவரை இவங்கே மட்டுமல்ல இந்த வகை அரைவேக்காடுகளின் திரைப்படங்கள் பார்த்ததில்லை இனி என் தமிழினத்துக்காக கடைசிவரை பார்க்க மாட்டேன் இன்றாவது இதனை எதிர்க்கும் எண்ணம் என் தமிழினத்துக்கு வந்ததே அதற்கு எமது ராயல் சல்யூட் இது தொடர வேண்டும் தமிழன் வாழும் வரை அப்பொழுதுதான் நம் தமிழ் வாழும்.

பேரிடரில் மக்களின் துயரத்துக்கு எல்லோரும் அரசாங்கமே காரணம் என்று எழுதியபோது நான் இதற்கான ஆரம்ப காரணம் மக்கள்தான் என்று எழுதினேன் அதைப்போல இந்த வகை நாதாரிகளின் பாடல்களுக்கு அவர்கள் காரணமல்ல ! கேட்டு ரசித்த சமூக அங்கத்தினராகிய மக்களே காரணம் என்றே சொல்வேன் ஏனெனில் நான் வேற மாதிரி ஏமாற்றி விட்டான் என்று சொல்வதை மறப்போம் ஏமாந்து விட்டோம் என்று நினைப்போம் அப்பொழுதுதான் நமக்குள் உரைக்கும் மனதுள் எதிர்ப்பு சக்தி உருவாகும் இது சினிமாக்காரனுக்கு மட்டுமல்ல ! அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
தமிழா ! இனியெனும் விழித்தெழுவோம்.

ஒருவன் ஒருமுறை ஏமாந்தால் ஏமாளி
.மீண்டும் ஏமாந்தால் முட்டாள்
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஆனால் நாம் மீண்டும், மீண்டும்..... எத்தனை முறை... ஏன் ?

குறிப்பு - எனது பதிவுக்கு வந்து தங்களது கோடரியை பாட்டெழுதும் அதிமேதாவிகள் மீது வீசுங்களேன் சகோ என்று சொல்லிச் சென்ற கவிஞர் திருமதி. தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களால் எழுதியது.
காணொளி
தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

55 கருத்துகள்:

  1. நண்பர்களே.... இப்பொழுதுதான் முதன் முதலாக இந்த இழவுப்பாடலை YouTube பில் கேட்டு தொலைந்தேன் மனம் கொதித்து விட்டது காரணம் நானும் சமூகத்தின் மீது அக்கரை உள்ளவன் ஆகவே இதனைக்குறித்து மீண்டும் நான் விரிவாக எழுதுவேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. இதற்கு நிச்சயமாக மக்களே காரணம் ஜி.

    பேரிடருக்கு அல்ல பேரிடருக்கு மக்கள் ஒரு சின்ன வகையில் மட்டுமே காரணம்....அவர்களுக்கு நல்ல தலைமை இல்லை. அதனால் தடுமாற்றம். அதனால் அரசின் மீதுதான் % கூடுதல். லா என்ஃபோர்ஸ்மென்ட். இது அரசுதான் செய்ய முடியும்.

    அதைப்போல கேளிக்கைகளுக்கும் சில சட்டங்கள் வர வேண்டும். அது சோசியல் மீடியாக்களிலிருந்து எல்லா பொதுஇடங்களுக்கும்...ஆனால் முதலில் மக்கள் இதைக் கேட்காமல் இருந்தால் யாரும் எழுதப் போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் முதலில் மக்கள் இதைக் கேட்காமல் இருந்தால் யாரும் எழுதப் போவதில்லை

      கரெக்ட். இது தான் என்கருத்தும். படைபடையாய் எதிர்க்கப்புறப்பட்டு பட்டிதொட்டியெல்லாம் இந்தப்பாடல் பரவ வேண்டுமா ! அனைவரும் வாய் கூசாது இதை பேச வேண்டுமா என யோசிங்கப்பா?


      எ6திர்க்கின்றோம் எனும் பெயரில்யூரியுப்பில் இப்பாடலை தேடி பார்ப்பதும் லைக் செய்வதும், அன் லைக் செய்வதும் கூட நம் நேரத்தினை வேஸ்ட் செய்யும் ஒன்றுதான். அப்படி நாம் எதிர்ப்பை காட்ட வேண்டுமெனில் இணையத்தில் வைரலாய் பரவி இருக்கும் தமிழ் உறவுகளை தட்டச்சிட்டு தேடினால் கிடைக்கும் வக்கிரமான பதிவுகளை நீக்க சொல்லிஎதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவனெல்லா ஒரு பாடகன் என சொல்லி இதையெல்லாம் தூக்கிப்பிடித்து இவர்களை பெரியாள் ரேஞ்சுக்கு கொண்டு வருவதே நாம் தான். கண்டுக்காதிங்க. விட்டுத்தள்ளுங்க.. தானால் அமுங்கி விடும்.

      நீக்கு
    2. ஆம் மக்கள்தான் இவர்களை மனதால் ஒதுக்கி வைக்கவேண்டும் இதுதான் எனது கோரிக்கை.

      நீக்கு
  3. ஹாஹா! நான் கேட்கவும் இல்லை கேட்க முயற்சிக்கவும் இல்லை கில்லர்ஜி சார்! எனக்கு என்னதோன்றுகின்றது எனில் இது கூட இவர்களின் இந்த பாடலை ஹிட்ஸ் செய்ய செய்யும் விளம்பர யுக்தியோ என! அதனால் நான் பாடலை கேட்கவும் இல்லை அதைக்குறித்து எழுதவும் இல்லை. எழுதப்போவதும் இல்லை. எனிவே! இவர்கள் நல்ல நடிகர்களும் இல்லை இசைமேதைகளும் இல்லை என்பது நிஜமே பின்புலத்தில் பிஞ்சில் பழுத்தவர்கள். சிறுவயதிலிருந்தே பெரியவர்களையும் மரியாதைக்குறைவாய் சினிமா நடிப்பானாலும் அந்த விரல் நீட்டி பேசும் சிலம்பரசனை எனக்கு பிடிக்காது.எப்போதுமே சினிமாவையும் அரசியலையும் நான் தூரவே நிறுத்தி இருந்தாலும் அவை அறியாமல் நாம் சமுதாயத்தில் ஜீவிக்க முடியாது என்பதனால் அனைத்தினையும் படித்தறிவதுண்டே தவிர இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதுல்லை.

    நீங்கள் சொன்னது போல் பெண்களை அவமானப்படுத்தும் கேலி செய்யும் வரிகளுக்காக் பெண்கள் தான் குரல் எழுப்ப வேண்டும்.ஆனால் சிம்புவின் படங்களை காலேஜ் பெண்கள் புறக்கணிப்பார்கள் என்பதெல்லாம் நடக்கும் விடயமா? அவர்கள் தங்கள் அங்கங்களை பாகம் பாகமாக வர்ணித்து எழுதினாலும் ரசிப்பார்கள். அந்தளவு நம் சமூகம் மாறி இருக்கின்றது.

    என் பங்களிப்பாய் குரல் எழுப்பி மேலும் பப்ளிசிட்டி கொடுப்பதை விட அறவே ஒதுக்கிதள்ளி குப்பைக்குள் போக வைத்து விட்டேன். இனியும் இதை குறித்து பேசாமல் நாம் ஒதுங்கி விட்டால் இப்பாடல் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்து இப்பாடலில் ஹிட்ஸ் குறையும் என்பது என் கருத்து. நமக்கு பிடித்தமில்லாதவை நடக்கும் போது கண்டும் கானாது செல்ல பலவிடயங்களும், பொங்கி எழுந்து ஆர்ப்பரிக்க பல விடயங்களும் உண்டு. என்னளவில் இது கண்டும் காணாமல் செல்லப்பட வேண்டியதொன்றே!

    எதிர்க்கின்றோம் எனும் போர்வையில் அப்படி என்ன தான் அப்பாடலில் இருக்கின்றது என இப்பாடல் குறித்து அறியாமல் அப்பாவியாய் இருக்கும் பலரையும் கூட ஆர்வமூட்ட வைத்து பாடலை கேட்க வைக்கும் காரணியாய் நாம் இருக்காமல் இருப்பதே இந்த சமுதாயத்துக்கு செய்யக்கூடியதொன்றாய் இருக்கும்.

    துஷ்டனை கண்டால் தூர விலகு! முட்டாளுடன் விவாதம் செய்யாதே! இப்படியெல்லாம் பொன் மொழிகள் உண்டல்லவா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி பெரும்பாலான விடயங்கள் எனது கருத்துடன் ஒத்துப்போகின்றது.
      இதை நாம் எழுதி மேலும் விளம்பரப்படுத்தக்கூடாது இருப்பினும் இவர்களை தண்டிக்க வேண்டியது நமது கடமை காரணம் இவர்களால் நமது குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் பாதிக்கப்படுகிறதே....
      இந்த எதிப்பலைகள் நமது வலைத்தள நண்பர்களுக்கு தேவையில்லை அவர்கள் உணர்ந்தவர்களே... ஆனால் ரசிகன் என்ற படித்த சில பாமரன்களுக்கு விளங்க வைப்பதற்க்குதான் மற்றபடி எனக்கு இவர்களைப்பற்றி புகழ்ந்து எழுத வேண்டிய அவசியமில்லை ஆகவேதான் அவர்களின் புகைப்படத்தைக்கூட போடாமல் வேற மா3 புகைப்படமே உருவாக்கினேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. நிச்சயமாக நம் எதிர்கால சமுதாயம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் தான். ஆனால் எதிர்கால சமுதாயம் குறித்து நாம் சிந்திப்பதற்கு இந்த பாடலை மட்டும்எதிர்ப்பு தெரிவிப்பதால் என்னாகி விடும் என புரியவே இல்லை.

      நான் 25 வருடம் சுவிஸில் இருக்கின்றேன் சார். வெளியில் இருந்து ஒரு நாட்டைகுறித்து கேட்பதற்கும் அதுள்ளே வாழ்வதன் மூலம் வரும் புரிதலுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அதில் முக்கியமானது இம்மாதிரி வக்கிரமான கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னும் தீவிரவாதம் ஏன் அகால மரணம் என எது நடந்தாலும் அதைக்குறித்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியிட்டு பப்ளிசிட்டி செய்து எது எதனால் எப்படி நடந்ததென விபரணம் கொடுத்து இன்னும் நான்கு பேர் அச்செய்கையை பின்பற்றும் படி நடக்க மாட்டார்கள். காரணம் சமுதாயத்தில் அச்செய்தி குறித்து பேசி பீதியை கிளப்பாமலும் விளம்பரப்படுத்தாமலும் அப்படியே அமுங்கி போய்விடும் படிவிட்டு விடுவார்கள்.ஆனால் நாம்? நம் சமூகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை.னம்மிடம் எதிர்மறை கருத்துக்கள் தான் நிரம்ப உண்டு.

      வளர்ச்சியடைந்த நாடுகளை பார்த்து நாம் இம்மாதிரி விடயங்களை கற்க வேண்டும் சார். நான் வலைத்தளத்துக்கு புதிதே தவிர இணையத்துக்கு புதிதல்ல. இந்த சமுதாயம் குறித்து மட்டும் அல்ல எதிர்கால சமுதாயம் குறித்தும் எனக்கான கடமைகளை நான் அறிவேன்.
      நம் பிள்ளைகள் குறித்து சொன்னீர்கள்!அன்னிய மொழியில் இருக்கும் ஆபாசவார்த்தைகளையோ தாய் மொழியில் இருக்கும் ஆபாச வார்த்தைகளையோ அவர்கள் அறியாத வகையில் நாம் வளர்க்கும் படி நம் சமூகம் இல்லை. அவர்கள் வாழும் சமூகத்தில் நூத்துக்கு பத்து பேர் வாயில் சரளமாக புகுந்து வெளிப்படும் வார்த்தைகளை ஒரு பாடலில் இருப்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என விளம்பரம் செய்கின்றோமே என உணர்வதில்லை.அதே நேரம் நல்லதை புரிந்து நல்லதல்லதை தானே விட்டு வில்கும் படி நம் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கணும் என்பது என் கருத்து.

      என் பிள்ளைகள் இம்மாதிரி பாடல்களை கேட்க கூடாது என சொல்ல முன் அம்மாதிரி வார்த்தைகளை அவர்கள் பேசாமலும் அப்படியான சூழலை விட்டு அவர்களே தம்மை விலக்கி கொள்ளும் படியான வளர்ப்பும் நம்மிடம் இருக்க வேண்டும்.
      இவ்வார்த்தை பேசக்கூடாது, கேட்கக்கூடாது எனில் முதலில் ஏன் பேசகூடாது எனும் புரிதலை பிள்ளைக்கும் நாம் தான் சொல்லி புரிய வைக்க வேண்டும்.பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டதாகி விடுமா சார்?

      ஒரு பாடலை எதிர்ப்பதால் நம் சமுதாயம் சுத்தமாகி விடுமா? இதை விட இன்னும் ஆபாசவக்கிரங்கள் தமிழில் பரவி கிடக்கின்றதே! அவைகளுக்கு எதிராக அவைகளை நீக்கும் படி முதலில் எதிர்ப்பை காட்ட வேண்டும்.

      உங்க பதிவில் இருக்கும் பின்னூட்டம் பாருங்கள். இப்ப்படி ஒரு பாடல் வந்ததே என அறியாத பலருக்கு அப்படி என்ன பாடல் எனும் ஆர்வத்தினை ஊட்டும் படியாகி இருக்கின்றது. செந்தில்குமார் அவர்கள் பத்திரிகைதுறையில் இருந்து கொண்டு அவரே அறியேன் என்கின்றார். இப்படித்தான் சார். நாமே பிள்ளையை கிள்ளி விடுகின்றோம்?


      நீக்கு
    3. அழகான விளக்கவுரைக்கு முதற்கண் நன்றி
      என்னாலும் கொஞ்சம் இந்தப்பாடல் பிரபலமாகிறது என்பதை நான் மறுக்கவில்லை அதே நேரம் இவர்களை நாம் கண்டிக்கவில்லையெனில் அடுத்து இதையும் விட உண்மையிலே இதற்குமேல் வார்த்தைகள் இல்லையே ஆனால் தொடர்ந்து பாடல்கள் வரும் இது போல் 150 பாடல்கள் இருக்கிறது என்றும் சொல்கின்றான் இந்ந சைக்கோ.

      நீக்கு
  4. அந்த எழவுப்பாடலை இன்னும் கேட்காத பாவியாகி விட்டேனே நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கேட்பவர்கள்தான் பாவி தாங்கள் கேட்காதவரை நல்லது.

      நீக்கு
  5. எலந்தப் பழம் எலந்தப் பழம் உள்ளிட்ட இதே போன்று பாடல் வரிகளை நானும் முக நூலில் சுட்டிக் காட்டியபோது அதெல்லாம் இரண்டு அர்த்தம், இது நேரடியாக ஒஎ அர்த்தத்தில் ஆபாசம் என்றார் ஒருவர்! நீங்கள் சொல்வது போல எதிர்ப்பு எதிர்ப்பு என்று இதைச் சுட்டிக் காட்டி எழுதியே பிரபலப் படுத்துகிறோம் என்றும் தோன்றுகிறது. இதுவரை தெரியாத இன்னும் இரண்டு பேர்களுக்கு இதன் மூலம் தெரியப் படுத்துகிறோம். இவர்களை எல்லாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், ஆனால் ரசிகர்கள் செய்ய மாட்டார்கள் என்னும் உங்கள் ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே பதிவை மிகவும் தெளிவாக புரிந்து எழுதியமைக்கு மிக்க நன்றி எனக்கு உடன்பாடில்லை இருப்பினும் ஆதங்கம் இன்னும் இருக்கின்றது இப்பொழுது பாடலைக்கேட்டதால் மீண்டும் பதிவு எழுதுவோமா ? வேண்டாமா ? என்று யோசிக்கின்றேன் நண்பரே..

      நீக்கு
  6. இவனையெல்லாம் நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவனை அடிப்பதற்க்கு முன் இதுவரை சரி இனிமேலும் இவனுக்கு ரசிகன் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஜந்துக்களை அடிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    உண்மையைச் சொன்னீர்கள்...காணொளியில் சொன்னது சரிதான்.
    தமிழ் மணம் அஞ்சாத சிங்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே நான் என்றுமே உண்மையை மட்டுமே பேசுபவன்.

      நீக்கு
  8. தமிழ் மக்களது கவனம் இன்று சென்னை மக்கள் படும் துயரிலிருந்து திரும்பி, பிரிந்து போய் ,
    மற்றொரு திசையில் தள்ளப்பட்டு இருக்கிறது என்றால் எனக்குப் புரிவதெல்லாம்
    எந்த அளவுக்கு இந்தப் பாடல் நல் மக்கள் மனதைத் துன்புறுத்தி இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.



    சமூக வலைத் தளங்கள் மக்கள் மன வளத்தை மேம்படுத்தவேண்டும். தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டியது அவற்றினை ஆள்பவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா சரியாக சொன்னீர்கள் ஊடகங்கள் வியாபாரிகள் எதையாவது எழுதி பணமாக்க வேண்டும் என்பதே அவர்களின் முதல் குறிக்கோள் ஆனால் வலைப்பூ நண்பர்கள் பணத்துக்காக எழுதுவதில்லை என்பது உலகறிந்த விடயம் ஆம் ஒவ்வொருவரும் தங்களது பொருப்பை உணர்ந்து பதிவுகள் எழுதவேண்டும் அதில் தீயவைகளை கண்டிப்பாக சுட்டிக்காட்ட தயங்ககூடாது விரிவான கருத்துரைக்கு நன்றி தாத்தா.

      நீக்கு
  9. சும்மா கிடந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதைப் போல உள்ளது எதிர்ப்போரின் பதிவுகள் !இதைதான் அந்த பொடிப் பயலுங்க எதிர்ப்பார்க்கிறார்கள் .கண்டும் காணாமல் விட்டாலே இவர்கள் காணாமல் போய்விடுவார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துடன் உடன் படுகிறேன் ஜி இதுதான் உண்மை.

      நீக்கு
  10. இந்த மானங்கெட்டப் பாட்டைப்பற்றி சமூக வலைதளங்கள் எழுதாமல் இருந்திருந்தால் எனக்கு தெரியாமலே போயிருக்கும். ஏதாவது எழுதி எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்பதுதானே அவர்கள் நோக்கம். அது நிறைவேறிவிட்டது.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனி இவர்களை ஓரங்கட்ட வேண்டும் அதுதான் இவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை

      நீக்கு
  11. பல பாடல்கள் இருக்கின்றன, தடுத்திருக்கலாம்தான். இப்பொழுதாவது செய்வோம். கண்டும் காணாமல் விட்டிருக்கலாம் தான்.. ஆனால் எத்தனை மாணவர்கள் சிறார்கள் கூட கேட்க நேருமோ!! ..அப்படியே மீதியிருக்கும் 150உம் வரும்,.. தேவையா சகோ? எங்கோ என் பிள்ளையும் கேட்க நேருமோ என்று ஒவ்வொரு தாயும் பதைக்கவேண்டுமா? சாக்கடையில் இருந்து தள்ளித்தள்ளி அழைத்துச் செல்லப் பார்த்தால் சாக்கடை விரிந்து படர்கிரதே.. இனித் தள்ளிச் செல்வதில் பயன் இல்லை.. சுத்தம் செய்யவேண்டும்
    தவறு தான்,, இப்பொழுதேனும் திருத்தாவிட்டால் வருங்காலச் சமுதாயம் நம்மையும் தூற்றும்.
    நான் கோபத்தில் சொல்லிச்சென்றதை மதித்து, படிவிட்டதற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நாம் சமூகத்தை காப்பது நாளைய நமது சந்ததிகளுக்காகத்தானே... இதைக்கூட நம்மால் செய்ய முடியவில்லை எனில் ஐந்தறிவுக்கும் நமக்கும் வித்தியாசம் என்ன ?

      சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியொன்று சொல்கிறேன்.
      //இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்க்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள் இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்//

      எத்தனை சத்தியமான நாடி நரம்புகளை சுண்டி விடக்கூடிய வார்த்தைகள் நான் கற்களாக இருக்க விரும்பவில்லை சகோ வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. உண்மை சகோ..
      கண்டிப்பாக ஏதேனும் செய்தே ஆகவேண்டும்.

      நீக்கு
  12. அடுத்தப் பதிவிற்குக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ மீண்டுமா ? இருப்பினும் நான் இந்த பாடலைக் கேட்டுத் தொலைந்ததால் எனது கோபம் அதிகமாகி விட்டதே... எழுதாமல் இருக்க முடியாதோ...

      நீக்கு
    2. இங்கு உங்கள் முதல் பின்னூட்டம் பார்த்துதான் சொன்னேன் சகோ.

      நீக்கு
    3. எழுதிக்கொண்டு இருக்கிறேன் சகோ

      நீக்கு
  13. ஒருவன் ஒருமுறை ஏமாந்தால் ஏமாளி
    .மீண்டும் ஏமாந்தால் முட்டாள்
    - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தியசோதனை எழுதியவரின் சத்தியமான வார்த்தைதானே நண்பரே...

      நீக்கு
  14. கேள்வியும் கேட்டு பதிலையும் சொல்லிவிட்டீர்களே நண்பரே(அவர்களின் படத்தை பார்க்காமல் இருப்பது).
    ஆனால் உண்மையில் சிம்பு நடித்து வெளிவருகிற ஒரு படத்தை மட்டும் ஒருவர் கூட பார்க்காமல் இருந்தால் போதும்., திரையுலகில் இருப்பவர்களுக்கு ஒரு பயம் வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையானவரே உண்மைதானே சொன்னது இதுதான் மக்களுக்கு செலவில்லாத,
      நேரவிரயம் இல்லாத,
      கட்டவுட்களுக்கு பால் வீணாகாத,
      சாலையில் பாலாறு ஓடாத,
      சொந்த வேலை கெடாத,
      போராட்டம் செய்யாத,
      அஹிம்சை வழியில் சரியான தண்டனை நன்றி வருகைக்கு.

      நீக்கு
  15. தங்களின்சமூகஅக்கறைக்கு சல்யூட் நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படி தகப்பனுக்கு பிறந்து விட்டேனே ?

      நீக்கு
  16. எந்தப்பாடல் பற்றி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது போல் YOU GET WHAT YOU DESERVE. நானும் வேற மாதிரிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சமீபத்தில் சிம்பு என்ற தறுதலை எழுதி, பாடி, வெளியிட்ட ஆபாசமான வரிகள் அடங்கிய பாடல் தமிழ் நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கின்றதே... அதுதான் ஐயா.
      அவர்கள் பலன் அடைந்து விட்டார்கள்

      நீக்கு
  17. அந்த பாடல் என்ன பாடல் என்று பார்க்க நினைக்கிறது. ஆனால் எப்பவும் போல் நேரம் இல்லை என்று,
    நாம் தானே சகோ, அவர்களுக்கு பால் அபிஷேகம் செய்கிறோமே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்காமல் இருப்பதே நன்று சகோ பாலாபிஷேகத்துக்கான பலன் நமக்கு இதுதான்.

      நீக்கு
  18. நானும் திரு பகவான்ஜி சொன்னதை ஆமோதிக்கிறேன். இவர்களுக்கு முக்கியத்துவம் எதுவும் தராமல் இருந்தாலே போதும். இல்லாவிடில் நாமே இவர்களுக்கு விளம்பரம் தந்தது போல் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே இவர்களின் திரைப்படங்களை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும்

      நீக்கு
  19. கில்லர்ஜி இவனுகளை எல்லாம் கண்டுக்காமல் விடுவதுதான் நல்லது. "Ignore these idiots"

    பதிலளிநீக்கு
  20. பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டீர்கள்..

    நாற்றம் பிடித்த குப்பை என்று தெரிந்திருந்தும் அதை ஏன் கிளறிக் கொண்டு!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி குப்பையை அவர்கள் வீட்டுக்குள் போட்டால் நல்லது நமது வீட்டிலும் போடுறாங்களே.... ஜி

      நீக்கு
  21. அன்று தடுக்காமல் விட்டது தவறுதான். இன்று செய்கிறார்கள், பாராட்டுவோமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இதை தடுத்தே ஆக வேண்டும் நண்பரே...

      நீக்கு
  22. இவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது நல்லது. இவர்களது படங்களைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவர்களை படங்களை புறக்கணிக்க வேண்டும்

      நீக்கு
  23. அடுத்த பதிவிற்கு செல்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
  24. நியாயமான கொதிப்பு. மழை வெள்ள நிவாரணப் பணி ஒருங்கிணைப்பில் சமூக வலைத்தளங்களின் பணி மகத்தானது அதே சமூக வலை தளங்கள்தான். இந்த நாராசப் பாட்டையும் பிரபலப் படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  25. ஹூம், இப்படி எல்லாம் பாடல்கள் இருக்கின்றன என்பதே இப்போத் தான் தெரியும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தவறுகளுக்கு நாம்தானே காரணம் சகோ.

      நீக்கு