தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 24, 2015

மண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி


தேவதையைப் போன்ற
அவளைப் பார்த்தேன்
என்னைப் பார்த்து
சிரித்தாள் என்னுள்
ஏதோ பாய்ந்தது போல்
இருந்தது ஏன் ? சிரித்தாள்
என்னைப் பார்த்து என்று பாட
வேண்டும் போலிருந்தது அவள் இடுப்பில்
மண் குடம் சம்மணமிட்டு உட்கார்ந்து என்னைப்
பார்த்து கேலி செய்கின்றதோ.. என்று எனக்கு தோன்றியது
ச்சே இந்தக் குடத்துக்கு வந்த வாழ்க்கை நமக்கு வராதா ? ச்சே
ஏன் ? என் மனம் இப்படி களி மண்ணாய் இருக்கிறது அதனால்தான்
நமது வீட்டில் உனக்கு மூளையே இல்லை உள்ளே களி மண்ணுதான்
இருக்கு என்று எல்லோருமே சொல்கிறார்களோ இவளிடம் பேசலாமா ?
கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு பக்கத்தில் சென்றேன்
என்ன ? என்பது போல் என்னை பார்க்கவும் எந்த ஊர் ? என்றேன் மண்டபம்
தான் என்றவள் உங்க பேரென்ன ? என்றாள் மண்ணை வளவன் என்றவன்
உங்கள் பேரு ? மண்டோதரி என்றவள் ஏன் ? இல்லை தாகமாக இருக்கு
 குடிக்க தண்ணி வேணும் என்றேன் சரி என்று பானையை கவிழ்த்தி
 குடி என்றாள் நான் குனிந்து குடிக்கும் பொழுது பொரை ஏறி இரும
அவள் சட்டென பானையை விட்டு எனது தலையில் தட்டி விட
பானை கீழே விழுந்ததில் சுக்கு 100 ஆகியது மண்ணிலிருந்து
 வந்த களி மண் பானை மீண்டும் மண்ணுக்கே போனது
இவளுக்கு நாம் பானை வாங்கி கொடுக்க வேண்டும்
சந்தைக்கு வர முடியுமா ? என்றேன் ஏன் ? உனக்கு
வேறு பானை வாங்கித் தருகிறேன் வாங்க
போகலாம் இப்படித் தொடங்கியது
எங்கள் காதல் இப்பொழுது
பானை போன்ற வயிறு
அவளுக்கு காரணம்
இது 8ம் மாதம்
ஹி... ஹி...


Chiwas Regal சிவசம்போ-
போங்கடா நீங்களும் உங்க காதலும்...
சாம்பசிவம்-
4 வார்த்தைகளில் கதை ஆகிப்போச்சே ?
சிவாதாமஸ்அலி-
இவங்களையெல்லாம் பித்தளைப் பானையாலேயே அடிக்கனும்.

குறிப்பு – முன்பு இலங்கை வாணொலியில் கதை சொல்வார்கள் கேட்டு இருப்பீர்கள் ஒரே நபர் இரண்டு விதமாக பேசுவது அதைப்போல நாமும் செய்தால் என்ன ? என்ற தோன்றியதின் விளைவு.

அடிக்குறிப்பு - இப்பதிவை பானை வடிவில் எழுதியமைத்தேன் சில கணினியில் வேறு மாதிரியாக தெரியலாம் அப்படி இருந்தால் கீ-போட்டில் Ctrl கண்ட்ரோல் பட்டனில் ஒரு விரலை அழுத்திக்கொண்டு எலியை சிறியதாக உருட்டுங்கள் பானையின் வடிவம் கிடைத்து விடும் விளக்கம் கொடுப்பதால் தவறாக கருதவேண்டாம் சிலருக்கு தெரியாமல் இருக்ககூடும் ஆகவே சொன்னேன் - கில்லர்ஜி

51 கருத்துகள்:

  1. பானை வடிவம் தெரிகிறது. ரசித்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு பானை வடிவம் தெரிந்தது சகோ. படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பானை வடிவம் இல்லை கூஜா (சுராய்) வடிவம் தான் தெரிகிறது எப்படியோ தமிழிலும் caligraphy உண்டாக்க முடியும் என்று காட்டி விட்டீர்கள். இனி ஒரு caligraphy தொடர் பதிவிற்கு பதிவுலக நண்பர்களை அழைத்தால் என்ன?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கூற்றுப்படி நான் தொடங்கியதாகவே இருக்கட்டுமே இதற்கு அழைப்பு எதற்கு ? இனி மன்ற பதிவர்கழும் முயற்சிப்பார்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. வித்தியாசமான முயற்சி
    பானை வடிவம் மட்டும் இல்லை
    கதையும்...

    பதிலளிநீக்கு
  5. எனக்கு கூஜா வடிவம் தான் தெரிந்தது. எப்படி இதை உருவாக்கினீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கதையை எழுதிய பிறகு அதை பானைக்குள் அடைப்பதற்க்கு மிகவும் சிரமப்பட்டேன் காரணம் கதையை குறைக்க வேண்டிய சூழல் முடிவைக் கொண்டு வந்து முடிவில் ஹி ஹி போடுவதற்கு மிகவும் யோசித்தேன் பிறகு இந்த அசடு வழியலும் பொருத்தமாக தோன்றியது.

      நீக்கு
  6. பானை பிடித்தவள்/வன் பாக்கியசாலி..

    சாமியேய்.. சதாசிவம்..

    பானை உடைத்தாலும் பாக்கியசாலி!..

    பலே.. பலே..

    அதுசரி..

    வேற பானை வாங்கியாச்சா.. இல்லையா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி குயவர்பாளையத்துக்கு ஆர்டர் சொல்லி இருக்கின்றது

      நீக்கு
  7. எளிய சிறு கதையானாலும் அழகான பானைக்கதை. தொடரட்டும் உமது கற்பனைத் திறன்

    பதிலளிநீக்கு
  8. பானைவடிவில் பானைக் கதை! நன்று

    பதிலளிநீக்கு
  9. யனையைப் பிடித்த் ஒரு பானைக்குள் அடைக்கும் வல்லவராயிற்றே தாங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா வாங்க ஐயா நான் யானைப்பாகன் இல்லை.

      நீக்கு
  10. நண்பரே,

    அருமை அருமை. கற்பனையும் களிமண்ணும்.

    யார் அந்த பாக்கியவதி?

    இப்படி எத்தனைபேருக்கு பானை வாங்கி கொடுத்திருக்கின்றீர்கள் நீங்கள், அட மண் பானையைதான்?
    .
    ஆமாம் பானையை எப்படி வடிவமைத்தீர்கள்? நான் கேட்பது மண் பானையை.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கற்பனை அருமை என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம் களிமண்ணும் என்று சொன்னது ஏதோ ஊமைக்குத்து போல இருக்கின்றது
      இப்படி எத்தனை பேருக்கு பானை வாங்கி கொடுத்து இருக்க்கின்றீர்கள் ?
      கேள்வியை தவறுதலாக என்னிடம் கேட்டு விட்டீர்கள் தாங்கள் மண்ணை வளவனிடம் கேட்க வேண்டிய கேள்வி இது
      மேலே நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு கொடுத்த மறுமொழியை படிக்கவும் நன்றி.

      நீக்கு
  11. அன்புள்ள ஜி,

    கணக்குப் பார்த்துக் காதல் வந்தது... கச்சிதமாய் ஜோடி சேர்ந்தது...!

    நந்தவனத்தில் ஒரு ஆண்டி
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டுவந்தான் ஒரு தோண்டி
    அதைக் கூத்தாடிக் கூத்தாடியே
    போட்டுடைத்தாண்டி!

    அருமையான தோண்டி...!

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே அழகான பாடலுடன் கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் ஜி !

    பானை உடைத்துப் படர்ந்த காதல்
    பருவம் என்றது - உன்
    பார்வை அவளில் பட்ட போதே
    பால்யம் வென்றது

    பூவை அவளைப் புலனால் உண்டாய்
    புரைக்க டித்தது - உன்
    தேவை அவளே ! தெரிந்த பானை
    தெறித்து டைந்தது


    வெற்றுப் பானை வேண்டிக் கொடுக்க
    விருப்பம் கேட்கிறாய் - அவள்
    பற்றுக் கொண்ட பானைக் குன்றன்
    பணத்தை நீட்டுறாய் !

    தாகம் போக்கத் தந்த நீரை
    தரையில் கொட்டினாய் - புதுச்
    சாக சத்தைச் செய்து காட்டி
    தாலி கட்டினாய் !

    துள்ளித் குதித்துச் சுழன்ற மானைத்
    துணையாய் ஆக்கினாய் - தினம்
    கள்ளம் இல்லாக் கா(வ)தல் செய்தே
    கவலை போக்கினாய் !

    நன்றி நன்றி கில்லர் ஜீ'க்கு
    நாமும் சொல்லுவோம் - அவர்
    வென்று விட்ட காதல் போற்றி
    வாழ்த்திக் கொள்ளுவோம் !


    தங்கள் பானைக் கதை என்னையும் பாடவைத்தது நன்றி ஜி
    மிகவும் ரசித்தேன் அதுதான் உடனே எழுதிட்டேன் .......தொடர வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் !
    தம +1


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே என்னால் ஒரு கவிதையையே எழுதி விட்டீர்களே.. வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. காவிரியை கமண்டலத்தில் அடைத்தார் அகத்தியர்
    கன்னித் தமிழை பானைக்குள் படைத்தாரோ கில்லர்ஜி!
    கில்லாடி கில்லர்ஜி கிரேட்!!!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  14. பானை வடிவில் பகிர்வு
    அசத்தல் நண்பரே
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  15. சிறிய கதை என்றாலும்
    பானை வடியில் அழகிய கதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பானை...பானை...பானை,,
    அருமை
    ஆணை இடுகிறேன் அனைவரும் படியுங்க்ள்..
    தமிழ்
    நாணை தொடருங்கள்...( ஏதோ சொல்ல வருது..ஹி..ஹி...உங்களிடமிருந்து தொத்திய ஹி..ஹி..)
    நன்று அங்கிள்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அங்கிள்..ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா நான் வரலை ல...விடாது துரத்துவேன்...இந்த பானை வடிவத்தை எப்படி கொண்டு வந்தீங்க..நோட்பேட்ல போட்டு கட் காப்பி பேஸ்ட் டா. அல்லது சாதாரண பெயிண்டிங்ல் ரூட்ஸா...ஆனா நல்லாருக்கு..வாழ்த்துக்கள்..( பாருங்க நண்டு சிண்டெல்லாம் வாழ்த்து சொல்ல வந்துருச்சு...இதானே உங்க மைண்ட் வாய்ஸ்) ஹஹ்ஹா.கேட்ச் பண்ணீட்டேனா????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தா, சின்ன மருமகளே... விடாது கருப்பு நல்லது
      ஆம் வேர்டில் எழுதி காப்பி பேஸ் செய்தேன் நீயும் முயற்சித்துப்பார் அதே நேரம் காட்டும் உருவத்தை சொல்லும் பொருளில் கொண்டு வர முயற்சி செய் வாழ்க வளமுடன்

      நீக்கு
  18. அட்டகாசம். கதையும் வடிவமைப்பும் வித்தியாசம் கில்லர்ஜியின் வித்தியாசமான சிந்ததனைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி
    எட்டுமாசம் பானைக் கதை அசத்தல்... படித்த போது சிரிப்பு... சிரிப்பு... தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 12
    எனது பக்கம் வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் அன்றே பதிவை படித்து விட்டேனே...

      நீக்கு
  20. ஹை! பானைக்குள் ஒரு பானையினால் விளைந்த காதல் கதை!!! செம ஜி! பானை அப்படியேதான் வந்துச்சு...உடையலை ஜி!! பானையை ரசித்தோம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வீக காதல் கதையை ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  21. பெயரில்லா12/28/2015 1:24 PM

    ஒரு கூஜா வடிவு வந்தது.
    அட எப்படியாக்கிளார் என்று எண்ணம் வந்தது.
    கதை ரசனை
    ஆதி கால புலவர் சித்தர் கதை போல..
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  22. பானைக்கு பதிவு,,,,, ம்ம்,
    உங்களால் மட்டும் தான் இது உடைக்க ச்சே இல்ல அடிக்க இல்ல டைப் அடிக்க முடியும்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ இப்படி கூடவா சிந்திப்பீர்கள். பானை வடிவில் பதிவு.. பானை சுக்கு 100 ஆகியதால் பானைபோல் அவள் வயிறும் ஆனது என்பதை ரசித்தேன்.

    காதலுக்கு பானையும் காரணம் என்பது புரிந்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  24. மன்னைவளவன் உடைந்த பானைக்கு பதிலாக வேறு பானை ஏற்றி விட்டாரே....நன்றி மறக்காதவர்..அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே வாங்கியதை திருப்பிக் கொடுப்பதுதானே தமிழன் பண்பாடு.

      நீக்கு
  25. பானைக் காதல் கதை அருமை
    பனையும் நன்கு தெரிகிறது.

    பதிலளிநீக்கு