தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 16, 2015

இவங்கே வேற மாதிரி


நண்பர்களே... அந்தப்பாடல் வரிகளை நான் வேற மா3 பதிவை வெளியிட்டதும் யதார்த்தமாக நண்பரின் கணினியில் நானும் கேட்டுத் தொலைந்தேன் தமிழனாய் இருப்பவனுக்கு ரத்தம் கொதிக்கும், கொதிக்க வேண்டும் இல்லையெனில் அவன் தமிழனில்லை இப்பொழுது எனது கோபம் என்னவென்றால் இதையும் ஆதரித்து பேசும் ஐந்தறிவு மனிதர்கள் மீதுதான் ஆம் ஆடு மாடுகளுக்குதானே உறவுகளின் புனிதம் தெரியாது ஆகவே இவர்களுக்கு ஐந்தறிவு என்றே கணக்கிடுவோம் இந்த வரிகளை பாடி, இசையமைத்து வெளியுலகத்துக்கு இவனுகள் அனுப்பி இருக்கின்றானுங்க என்றால்  இது அறிவு வளர்ச்சி இல்லையா ? அல்லது நம்மை யாரு கேட்க முடியும்  என்ற மண்டைக்கணமா ? என்பதுதான் எனது கேள்வி முதலில் இவன் சொல்லியது கேட்க பிடிக்க வில்லையென்றால் ? கேட்காதே என்பது பிறகு சொன்னது நான் பாடினேன் அனிருத் இசையமைத்தார் என்று இதிலிருந்து இது இவர்களின் வேலை என்று ஊர்ஜிதமாகி விட்டது இப்படி பிரட்சினை வரவும் நான் பாடவில்லை எனக்கு தெரியாமல் எவனோ திருடி இந்த மாதிரி செய்து விட்டான் என்றும் மற்றவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு நான் இசையமைக்கவில்லை என்பது மக்களை இந்த ரெண்டும் எவ்வளவு முட்டாளாக நினைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதையே காட்டுகிறது இவனுகளின் வேலையில்லை என்றால் ? முதலிலேயே காவல்துறையினரிடம் புகார் செய்திருக்க வேண்டும். அடுத்த விடயத்துக்கு வருகிறேன் இதை நாரதர் வேலை என்று ஆஸ்திரேலியாவிலிருந்து வில்லங்கத்தார் மாதிரி யாராவது சொன்னால் ? மீண்டும் கோடரியை எடுத்து பந்தை அடிக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கிறேன்.

திரைப்படங்களில் கண்ணியமிக்கவராக, கடமை தவறாதவராக, நடித்துக் காண்பித்து அதன் மூலம் முதல்வராகி விடலாம் என்று கனவு காணும் (எல்லோரையும் சொல்லவில்லை) திருவாளர்கள். சூர்யா, அஜித், விஜய், தனுஷ், ஆர்யா, விஜய சேதுபதி, சந்தானம், சிவகார்த்திகேயன், புரோட்டா சூரி, ஜெயம் ரவி, வடிவேல், பிரபுதேவா, மதன் அமரன், இவர்களெல்லாம் உண்மையானவர்கள் என்றால் ? உடனடியாக இவர்கள் அனைவரும் சேர்ந்து சிம்பு, அனிருத் இருவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடுக்க வேண்டும் ஆம் அதையும் உடனடியாக செய்ய வேண்டும் காரணம் என்ன தெரியுமா ? நண்பர்களே... இந்த பாடலுக்கு காணொளிகள் இந்த நடிகர்கள் நடித்திருந்த காலத்தால் அழிக்க முடியாத பல உன்னதமான காவியங்களிலிருந்து நடனக்காட்சி ஒளிகள் மட்டும் வெட்டி எடுத்து இவர்களின் ஒலியை இணைத்திருக்கின்றார்கள் இதைக்காணும் அறியாமைவாதிகள் இதை அவர்கள்தான் பாடினார்கள் என்று நினைக்க சாத்தியமுண்டு நம் நாட்டில் அறியாமைகளுக்கு பஞ்சமா ? ஏனென்றால் மறைந்த திரு. சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திரு. டி.எம். சௌந்தரராஜன் இவர்கள் பாடியதை சிவாஜி பாட்டு, எம்.ஜி.ஆர் பாட்டு என்று சொன்னவர்கள்தானே நாம் ஆனால் ? இவனுகள் செய்வார்களா ? என்பது ஐயமே காரணம் இவர்களுக்கும் சங்கம் அது இது என்று ஏதாவது இருக்கும் அதன் மூலம் மூடி மறைப்பார்கள் நாமென்ன திறந்து பார்க்கவேண்டும் என்று சொல்லவா போகிறோம் இல்லையே இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் இவர்களும் தாங்கள் மூளைக்காரர்கள் என்பதை தெளிவாக காய் நகர்த்தி இருக்கின்றார்கள் ஆம் இந்த பாடல் காட்சிகளை எடுத்துக் கொண்டவர்கள் பெரிய நடிகர்கள் என்று சொல்லப்படும் கமலஹாசன், விஜயகாந்த், ரஜினிகாந்த் இவர்களின் படக்காட்சிகளை எடுத்துக் கொள்ளாதது ஏன் ? காரணம் அவர்களின் பலம் தெரியும் அப்படினாக்கா மற்றவனெல்லாம் இளிச்சவாயனா ? அப்படினு என்னிடம் கேட்ககூடாது தேவையென்றால் சென்னையில் போய் கேளுங்கள்.

எல்லோருக்குமே தங்களது பிள்ளைகள் மீது பாசம் இருக்கத்தான் செய்யும் அதேநேரம் தறுதலை என்று அறிந்தும் அதற்காக நியாயம் தெரிந்த மனிதர் நியாயத்தை புதைத்து பேசலாமா ? என் தங்கை கல்யாணி திரைப்படம் வெற்றி அடைந்ததற்காக 100 சகோதரிகளுக்கு சொந்த பணத்தில் தாலிச்செலவுடன் திருமணம் செய்து வைத்த நல்ல மனிதர்தானே இவர் அப்படிப்பட்ட வெசய. டி.ராஜேந்தர் அவர்தான் அது தனது மகன் பாடியது இல்லை என்கிறார் ஒருகாலத்தில் இவரின் பாடல் வரிகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது ரசிக்காதவர்களை ரசனையில்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் நல்ல வித்தியாசமான இசையமைப்பாளரும் கூட திரையில் பெண்களை தொடாமல் கண்ணியமாக நடித்து சாதனை படைத்தவர் என்றும் சொல்லலாம் இவர் கொடி கட்டி பறந்த காலத்தில் இவர் நினைத்திருந்தால் ? எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம் என்பதும் நாம் அறிந்ததே காரணம் A to Z என்று சொல்வார்களே அப்படி அனைத்தும் இவர் கையில் அப்படிப்பட்டவருக்கு பிறந்த மகன் இப்படியா ? இதைப்பார்க்கும் பொழுது எனக்கு சமீபத்திய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் அபுதாபி விமான நிலையத்தில் எனது மகன் தமிழ் வாணனிடம் சொல்லிய வாசகமே அது இன்னும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது
//தமிழ் உனது அப்பா பெயரை எடுக்கணும், அப்பா பெயரை எடுத்து விடக்கூடாது புரிஞ்சுதா//
இங்கு இவன் எடுத்தானா ? எடுத்து விட்டானா ?

இவங்கே குடுப்ப பிரட்சினை நமக்கு வேண்டாம் இந்த பாடல் வரிகளில் தவறு இல்லை என்றால் திருமதி. உஷா ராஜேந்தரும், இவரின் மகன் குறளரசனும், மகள் தமிழ் இலக்கியாவும் உட்கார்ந்து கை தட்ட திரு. வெஜய. டி. ராஜேந்தர் டண்டணக்கும், டணக்கும் ணக்கும் என்று ஆட இவன் பாடி யூட்யூப்பில் வெளியிடட்டும் பார்ப்போம் ஒன்று மட்டும் நிச்சயம் இவன் கைது ஆவானோ ? இல்லையோ ? இதுக்குப் பிறகும் நான் இவனுக்கு ரசிகனாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக்கிட்டு எவனாவது திரிஞ்சீங்க... உங்களுக்கு பெயர் என்னவென்று பிறகு பதிவில் சொல்வேன்டா.
காரணம் நான் தமிழன்டா.
காணொளி 01
காணொளி 02
குறிப்பு - வலைப்பதிவர்களாகிய நாமே இப்படி பதிவெழுதியே இவர்களை வளர்த்து விடுவோமோ ? வேண்டாம் ஆகவே போதும் எழுத வைத்த சகோ.கவிஞர். திருமதி. தேன் மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நன்றி

54 கருத்துகள்:

  1. பதில்கள்

    1. நம்பள்கி சொல்வது போல இந்த பாடலுக்காக சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது, நாட்டில் நடக்கும் “வெள்ளக் கூத்துகள்” பற்றிய செய்திகளை திசை திருப்பலாம் என்றே தோன்றுகிறது.


      நீக்கு
    2. வருக நண்பரே.. தாங்கள் சொல்வது போல இதுவும் அரசியல் பிண்ணனியாக இருக்குமோ...

      நீக்கு
  2. முதலில் உ'மக்கு' வடிவேலுவின் இரண்டு விடுகதைகளை சொல்லிவிடுகிறேன்.

    1) பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை...!

    2) தட்டானுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பயல் கட்டையால் அடிப்பான் என்று முடியும் 'முதல்வரி'கள் மறந்து விட்டன.

    இதுதான் கில்லரே மணித தந்திரமென்பது

    ஒரு பிரச்சினை வருபோது அதை தீர்க்க முயல்வது ஒரு வழி.

    பிரச்சினையை ஆறவிட்டு பார்ப்பது இன்னொரு வழி.

    இருக்கும் பிரச்சினையை விட்டுவிட்டு அதைவிட புதிதாக இன்னொரு பிரச்சினையை காண்பித்து மணித மனங்களை மறக்கடிக்க முயல்வது மிகவும் சாமர்தியமான ராஜ தந்திரம். இதில்போய் சிக்கிட்டீரே எம் அருமை மீசைக்காரரே..!?

    இப்ப அந்த ஜந்துக்கு பதில் தருகிறேன்.

    சில்லறைப் பயலே ச்சீ'லம்பு'அரசா
    நீ உன் அப்பன் எங்களுக்கு தந்த பரிசா

    உன்னை பெற்றவர் உண்மையிலேயே கண்ணியவானாய்தான் எங்கள் கண்களுக்கு தெரிந்து வந்தார். நீ அவர் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை வேண்டுமானால் உன் மனம் போன போக்கில் அழிக்கலாம். ஆனால் அவர் நற்பெயரையும் மரியாதையும் கெடுக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நேரமில்லை ஒரு அவசர வேலை. பிறகு விரிவாக பிண்ணூட்டம் தருகிறேன். நண்பரே. நிச்சயம் இதில் பெரிய தந்திரம் இருக்கிறது..

    உருப்படியாக ஒன்று சொல்கிறேன்.

    மணிகண்டன் எனும் மாமணிதர் தனியொரு மணிதனாய் தன் நட்புகள் உதவியுடன் 'நிசப்தமாய்' மக்கள் பணியாற்றி வருகிறார்... அவர் போன்ற 'மணி'களை கண்டெடுத்து கோர்பதை விடுத்து வெட்டிப்பயல்களுக்கெல்லாம் பதிவு போட்டு உம்ம நேரத்தையும்..., எங்க நேரத்தையும் வீணடிக்கும் உம்மை...!

    எங்கே அந்த கோடரியக்காணோம்..?! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே வருத்தமுடன்தான் எழுதினேன் இனி இந்த சாக்கடையில் கால் வைக்க மாட்டேன் நன்றி.

      நீக்கு
  3. சொன்னால் நம்ப மாட்டீங்க, அந்தப் பாட்டை இன்னும் நான் கேட்கவில்லை. இனிமேலும் கேட்பதா ஒரு எண்ணம் இல்லை. ஆனால் சிம்பு ஒரு ஈனப்பிறவினு தெரியும். அவன் அப்பன் ஒரு வீணாப் போனவன். அநிருத் பத்தி தெரியாது. அநிருத தான் "இன்னொசண்ட்"னு சொல்வதை நம்பலாமா என்னணு தெரியலை. இவ்னும் ஒரு மாதிரினுதான் தோணுது..

    சிம்புவின் சமாளிப்பு, அப்படி ஒரு பாடல் இருக்கு, அதை எவனோ திருடி வெளியிட்டுவிட்டான். அது எங்க பர்சனல் சாங் என்று சொல்லிவிட்டதால், இனிமேல் அதை மறுக்க முடியாது.

    ஒரு பெண்கூட இவனோட அடுத்த படத்தை பார்க்கவில்லைனு வச்சுக்கோங்க, இவனுக்கு சங்குதான். பெண்களால் அதை செய்ய முடியும்! செய்வார்களா?

    நான் எல்லாம் சிம்பு படத்தை ஃப்ரியா டிக்கட் கொடுத்தாலும் பார்ப்பதில்லை. அத்னால் இவன் படத்தை புறக்கணிப்பது எனக்கு எளிது. ஆனால் சில மாதர்குல மாணிக்கங்கள் இவன் படத்தை இனிமேலும் பார்த்தாலும் ஆச்சர்ய பட ஒண்ணுமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண் அழகாக சொன்னீர்கள் தாங்கள் சொன்ன இவர்களின் படத்தை பார்ப்பதை புறக்கணித்தால் மட்டும் போதும் இவர்களை மட்டுமல்ல இனியும் எவனும் இப்படி எழுத மாட்டான் இதையே வலியுறுத்தி கடந்த பதிவில் எழுதினேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. ஏற்கெனவே ஒரு முறை இதைப் பற்றி எழுதி இருந்ததே போதும். இதுவே அதிகம். இவர்களை மதிக்க வேண்டாம் கில்லர்ஜி. விட்டு விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இனி இந்த கழிசடைகளைக்கு குறித்து எழுதமாட்டேன் நன்றி

      நீக்கு
  5. அன்புள்ள ஜி,

    நினைத்ததை எல்லாம் எழுதலாம் என்று எண்ணிவிட்டால்... ஆடையில்லாமல்கூட அலைவேன்... உன்னை யார் பார்க்கச் சொன்னது என்று கேட்பார்கள் போலிருக்கே...!

    ‘ஆளும் வளரணும்... அறிவும் வளரணும்...?’ அப்படி வளர்ந்த மாதரி தெரியல...!

    மகன் அப்பன் பெயரை எடுத்து விட்டான்...! கெடுத்தும் விட்டான்!

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே.. இவன் தந்தையின் பெயரை எடுத்தே விட்டான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. அருமை நண்பரே
    இப்பாடலில் த்வறு இல்லை என்றால்
    டிஆரும் அவர் மனைவியும்இப்பாடலுக்கு ஆடலாம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் அவர்கள் இருவரும் ஆடக்கூடிய கூத்தாடிகள்தானே சொந்த மக்களுடன் ஆடவேண்டும் அதுதான் தண்டனை.

      நீக்கு
  7. சாட்டையடி வரிகள் 18ம் தேதி புதுகை அதிரும் போராட்ட அதிர்வு இன்னும் ம் அதிகமாக்கும் .....விட்டால் எம் பெண்கள் அவர்களை ஒரு வழிசெய்து விடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாதர் சங்கம் இவனை ஜெயிலில் தள்ளாமல் விடக்கூடாது அப்பொழுதுதான் இனி இவ்வகை தவறுகள் நிகழாது.

      நீக்கு
  8. இவர்கள் எப்படி திருந்தப்போகின்றார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே திருந்துவதற்கு வழி இவர்களின் படங்களை புறக்கணிப்பதே.. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. குவைத் மன்னர் சொன்னது அருமை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவர் பேசக்கேட்டு எனது மண்டையில் மட்டும் 2 GB பதிவாகியது, நண்பர் குமாருக்கு 8 GBயும் பதிவாகி இருக்கும்.

      நீக்கு
  10. தயை செய்து இதுபற்றி இனி எழுதவேண்டாம். ஏனெனில் நீங்களே சொல்வதுபோல் வீணே இவர்களுக்கு இது இலவச விளம்பரம் ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க வேண்டும் நண்பரே பாடலைக் கேட்டதால் எனது கோபத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது இனி எழுத மாட்டேன்.

      நீக்கு
  11. தமிழனாயிருந்தால் கோவம் வந்திருக்க வேண்டும் தான்..புதுகை விடாது ...அவனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கு கோபம் வந்தது ஆகவே எழுதினேன் இவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டுவோம்.

      நீக்கு
  12. இவனுங்க மூளை என்ன மாதிரி வேலை செய்யுது பார்த்தீர்களா!..

    வேற ஒன்னும் சொல்லலாம்..
    ஆனால் - விடியற்காலையாக இருக்கின்றது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி சாக்கடைகளை மறக்க வேண்டும்.

      நீக்கு
  13. ம்ம்ம்.... என்னத்த சொல்ல! :(

    இதைப் பற்றி இனிமேலும் எழுதி பாடலை பிரபலம் செய்ய வேண்டாம் நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் இனி இவர்களை குறித்து எழுத மாட்டேன் ஜி

      நீக்கு
  14. நான் இன்னும் பாடலை கேட்க வில்லை. ஏதோ ஒரு பதிவில் முதல் வரியை மட்டும் நட்சத்திர குறியோடு பார்த்தேன். அப்போதே பற்றிக்கொண்டு வந்தது. எதுவோமே தப்பில்லை என்ற ஒரு நிலையை நோக்கி வெகு வேகமாய் இளைஞர் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனி இவர்களைப்பற்றி எழுதக் கூடாது

      நீக்கு
  15. சகோதரர் துரை.செல்வராஜ் உங்கள் மகனுக்கு வழங்கிய அறிவுரை அருமை!!இந்த மாதிரி அறுவுரைகளில் வளராத வாலிபர்களின் போக்கு பற்றி இனியும் நாம் கவலைப்படத்தேவையில்லை. அதை சமூகம் பார்த்துக்கொள்ளும். தமிழகத்தில் அங்கங்கே பெண்கள் துடைப்பத்துடன் போராட்டங்கள் நடத்துவதைப்பார்த்தீர்கள் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதுவரை இந்த தறுதலையின் அப்பனும்கூட மன்னிப்பு கோறாமல் மேலும் திமிராக பேட்டி கொடுக்கின்றார்கள் இவர்களுக்கு தண்டனை கொடுக்க சட்டம் தேவையில்லை நாமே போதும் அதையே முந்தைய பதிவில் எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. அசிங்கம் பிடித்த அந்த ' பீ 'ப் பாடலை விட்டு தொலைங்க கில்லர் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி இந்த நாற்றம் வராது நன்றி ஜி

      நீக்கு
  17. கோபம் சரியே! இந்த விளம்பரம் இவர்களை விளம்பரம் இல்லாமல் செய்யப்போகிறது.

    சகோ, கோபம் வந்து எழுதுனீங்க , சரி! எழுதப்போறேன் என்று சொல்லியதால் காத்திருக்கிறேன் என்று சொன்னேன்.. இப்படி வருந்தலாமா சகோ? விருப்பமில்லாமல் எழுதத் தள்ளியிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதில் மன்னிப்பு எதற்கு ? எனது கோபத்தை தாங்கள் மேலும் தூண்டி விட்டீர்கள் என்ற ரீதியில் சொன்னேன் வேறொன்றுமில்லை ஆகவே என்னால் இப்படி எழுத முடிந்தது அதற்காக நான்தான் நன்றி சொல்ல வேண்டும் எனது மனதின் ஓரத்தில் இதுவும் விளம்பரமாகிறதே... என்ற வருத்தம் இருந்தாலும் இவர்களை நாம் தானே கண்டிக்க வேண்டும் இவர்கள் குப்பையை அவர்கள் வீட்டுக்குள் கொட்டினால் யாரும் கேட்க மாட்டோம் நமது வீட்டுக்குள்ளும் கொட்டும் பொழுது கேட்காமல் இருக்க முடியுமா ? இவர்களுக்கான தண்டனையை கொடுத்தே தீரணும் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
    2. மகிழ்ச்சி சகோ..
      ஆமாம், விளம்பரம் என்று நாம் அமைதியாய் இருந்தால் குப்பைகள் அதிகமாகிவிடும்.
      நன்றி

      நீக்கு
  18. பதில்கள்
    1. வாங்க ஐயா மனதில் உள்ளதை கொட்டினேன் வேறொன்றுமில்லை நன்றி ஐயா.

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி

    குற்றம் செய்தவன் தண்டனையில் இருந்து தப்பிக்கமுடியாது மனிதனின் தண்டனையில் இருந்து தப்பினாலும்.இறைவனின் தண்டனையில் இருந்து தப்பிக்கமுடியாது ஜி. அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  20. தங்களின் கருத்துப்படி அப்பன் ஆத்தா..தம்பி தங்கை..இப்படி குடும்த்தோடு ஆடி..பாடி வெளியிடட்டும் பார்ப்போம்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மானமுள்ள தமிழன் செய்யமாட்டான் இவங்கே வீட்ல 3 பேரு கூத்தாடிகள் செய்தாலும் செய்யலாம் நண்பரே

      நீக்கு
  21. வணக்கம் கில்லர் ஜி !

    தாமத வருகைக்கு பொறுத்தருள்க ! வீணாப்போனவன் ஒருவன் வெளங்காதவன் ஒருவன் இவனுகளை கணக்கிலே எடுக்காமல் விடுவதுதான் புத்திசாலித்தனம் ...பெண்களைக் கேவலப்படுத்தும் பாடல் என்று நாமும் திட்டித் தீர்ப்போம் ஆனால் இன்னும் ஓரிரு மாதங்களில் சிம்பு படம் வெளிவந்தால் பெண்கள்தான் அதிகம் பார்க்கப் போவாங்க அதனால கண்டமா காறித் துப்பினமா என்று .....போய்க்கிட்டே இருப்போம் மிக விரைவில் நல்லதொரு பதிவில் தங்களை எதிர்பார்க்கிறேன் நன்றி !
    வாழ்க வளமுடன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே..இத்தோடு இந்த சனியனை மறந்து விட்டேன் விரைவில் செ.செ.செ

      நீக்கு
  22. இந்த கேவலத்துக்கு எல்லாம் ஒரு பதிவே அதிகம். நீங்கள் இரண்டு பதிவுகள் வேற போட்டு விட்டீர்கள். நானும் இந்த கருமாந்திரம் பிடித்த பாட்டை கேட்கக்கூடாது என்று இருக்கிறேன்.
    ஆமா, ஆஸ்திரேலியாவில் வில்லங்கத்தார் என்று யாராவது இருக்கிறீர்களா என்ன? அவரை எனக்கு அறிமுகப்படுத்துங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பந்து விளையாட்டில் தி கிரேட் 916 அணியுடன் மோதிய 420 கோஷ்டிகள் யாரு ?

      நீக்கு
    2. 420 கோஷ்டிகள் தான் உண்மையான சொக்கத் தங்கம்

      நீக்கு
    3. ஹலோ 420 க்கு அர்த்தம் தெரியலைனா, www.devakottai.com மில் அடித்துப் பாருங்கள்

      நீக்கு
  23. என்னாச்சு ஜி எங்கள் கருத்து? ஓட்டாவதுவிழுந்துசானு தெரில. சுத்துக்கிட்டே இருந்துச்சு நேத்து. அப்புறம் நாள் முழுவதும் வெளியில்தான் இருக்க வேண்டிய சூழல். இப்பொது பார்த்தால் கருத்தும் ஏறவில்லை....சரி அப்போ ஓட்டு? அதனால் மீண்டும்சொடுக்கிப் பார்த்தால் ஏற்கனவே சேர்த்தாச்சுனு சொல்லல..சரிதான் ...

    ம்ம்ம்ம் என்ன ஜி இவங்களுக்கு எல்லாம் இப்படி நாம் சொல்லுவதே மதிப்புக் கொடுப்பது போல் ஆகிவிடுகின்றதோ...நாங்கள் சேஞ்ச் ஆர்கில் யாரோ பதிந்து வந்தது..அதில் பதிந்துவிட்டோம்...

    ஆனால் இனிமேல் இப்படி வராது என்பது தெரிகின்றது..நிச்சயமாக ஒரு பயம் வந்திருக்கும் அந்த வட்டாரத்தில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரை வரவில்லையே...
      ஆம் அவர்களுக்கு மட்டுமல்ல இனி எவனும் இப்படி எழுதக்கூடாது என்ற பாடம் கிடைத்து இருக்கும்.

      நீக்கு
  24. அண்ணா...
    கட்டுரை அன்றே படித்தேன்.
    வேலைப்பளுவின் அசதியில் கருத்திடவில்லை...
    இந்த வாரம் முழுவதுமே 11 மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாய் வேலை... அதான்....

    இந்தப் பாடலைப் பற்றி நாமெல்லாம் முகநூல் வலைப்பூ என்று எழுதுவதாலேயே இது ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது....

    மழை வெள்ளச் சேதம், அரசின் மெத்தனம், அரசியல் அல்லக்கைகளின் அடாவடி என எங்கும் பேச்சாய் இருக்கும் போது இது வந்து அதை மாற்றி இருக்கிறது... அவ்வளவே.

    இப்போ மீடியா கூட மழை வெள்ளத்தையும் சுயநலமில்லாத அம்மாவையும் கரை ஒதுங்கிய கட்டுமரத்தையும் விட்டு விட்டு இந்தக் கேவலத்தின் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்டது. அதன் ஒரு பகுதிதான் இளையராஜாவின் இதைக் கேட்கப் போக அவர் உனக்கு அறிவிருக்கான்னு சொல்ல, இப்போ அந்த டிவி நிருபரிடம் கோபமாக பேசிய இளையராஜான்னு தன்னோட டி.ஆர்.பியை ஏற்றிக்கிட்டு இருக்கு.

    இப்ப பீப் போயி பீப் பற்றி இளையராஜா நிருபருடன் வாக்குவாதம்ன்னு முகநூலில் முந்திக்கிட்டு இருக்கு. இனி இதை மறைக்க அல்லது மறக்க இன்னொன்னு வரும்... நாமும் அதன் பின்னே பயணிப்போம்.

    அதை அப்படியே இறக்கிவிட்டுட்டு வேலையைப் பார்ப்போம்... அதுதான் நமக்கு நல்லது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் இவன் கைது செய்யப்படவில்லை இதுதான் மக்கள் ஆட்சி மானக்கேடு நாம் இனி காதுகளை மூடிக்கொண்டு செவிடர்களாய்த்தான் வாழ வேண்டும்

      நீக்கு
  25. நல்லவேளையாய் நான் இதைக் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை. பிழைச்சேன்.

    பதிலளிநீக்கு