தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 29, 2015

கணக்கு


நேற்று இரவு 02.00 மணிக்கு பொழுது போகவில்லை சரி நமது வாழ்வில், நாம் எவ்வளவு காலங்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம் ? என நாட்காட்டியை வைத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டைரிகளை வைத்து கணக்கு எடுத்தேன்.

வருடத்தில் எத்தனை மாதங்கள் சந்தோஷமாக போனது என பார்த்தேன் 2 மாதங்கள் மட்டுமே வந்தது எனது மனம் திருப்தி கொள்ளவில்லை.

சரி வாரக்கணக்கு பார்ப்போம் கூடுதலாக வரும் எனபார்த்தேன் 8 வாரங்கள் மட்டுமே வந்தது அப்பொழுதும் எனது மனம் திருப்தி கொள்ளவில்லை.

சரி நாட்கணக்கு பார்ப்போம் கூடுதலாக வரலாம் எனபார்த்தேன் 60 நாட்கள் வந்தது மனம் திருப்தி கொள்ளவில்லை.

சரி மணிக்கணக்கு பார்ப்போம் கூடுதலாகவே வரும் எனபார்த்தேன் 1440 மணி நேரங்கள் வந்தது அப்படியும் என்மனம் திருப்தி கொள்ளவில்லை.

சரி நிமிஷக்கணக்கு பார்ப்போம் நிறைய வரலாம் எனபார்த்தேன் 86,400 நிமிஷங்கள் வந்தது அப்பவும் எனது மனம் திருப்தியாகவே இல்லை.

சரி நொடிக்கணக்கு பார்ப்போம் கண்டிப்பாக நிறைய வரும் எனபார்த்தேன் 51, 84, 000 நொடிகள் வந்தது.....

அடேங்கப்பா தேன் தேன் மலைத்தேன் ஒன்றுமில்லாத பூஜ்யமான நமது வாழ்விலும்கூட இத்தனை நொடிகள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோமே கண்டிப்பாக என்னைப் படைத்த திருவாளியத்தவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும், இருப்பினும் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்தல் ஒரு வருடத்தில் 6 ல் ஒரு பங்கே இவ்வளவு என்றால் ? மொத்த பங்கும் சந்தோஷமாக வாழ்பவர்கள் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் ? ? ? இருப்பினும் மனதின் மறு ஓரத்தில் தோன்றியது பராவாயில்லை 6 ல் ஒரு பங்காவது கிடைத்ததே 12 ல் ஒரு பங்கு கிடைத்திருந்தால் என்ன செய்வது ? பகவான்ஜியிடம் கடன் கேட்க முடியுமா ? மனம் மீண்டும் திருவாளியத்தவனுக்கு நன்றி உரைத்தது.

CHIVAS REGAL சிவசம்போ-
சுத்தி வளைச்சு கடைசியிலே அதே 2 மாசம்தானே வருது ?

56 கருத்துகள்:

  1. இன்பமும் துன்பமும் நம் மனதைப் பொறுத்துதானேஜி... வரும் வருடங்களில் சந்தோஷ நேரம் அதிகரிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  2. சந்தோஷம் அல்லது துக்கம் என்பது அளந்து தெரியக் கூடியதல்ல. சில நேரங்களில் ஒரு நொடி சந்தோஷமே பல நாட்கள் மனதில் நிலைத்து நிற்கும் அதே போல் எப்பேர்ப்பட்ட துக்கமும் ஒரு சில நாட்களிலேயே காணாமல் போகும் அன்றைய சந்தோஷ துக்க நினைவுகளை அசைபோடும் போது வருவது மகிழ்ச்சியா துக்கமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நல்ல விளக்கம் இரண்டும்தான் கிடைக்கும் ஐயா

      நீக்கு
  3. குறைவாக இருந்தால்தான் அதன் பெயர் மகிழ்ச்சி
    அப்பொழுதுதான் மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கும்
    அருமை நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்திலும் உண்மை இருக்கின்றது.

      நீக்கு
  4. வருடம் வருடம் இனி மகிழ்ச்சி மட்டும் தான் சகோ உங்களுக்கு.
    தங்கள் கணக்கு வாத்தியார் பார்த்து மகிழ்ந்து இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எந்த வாத்தியார் திரு. குருந்தன் வாத்தியார்தானே...

      நீக்கு
    2. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

      நீக்கு
    3. தங்களுக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

      நீக்கு
  5. 51,84,000 நொடிகள் மகிழ்ச்சியாய் இருந்தது அறிந்து மகிழ்ச்சி, இந்த கணக்கில் தூங்கும் நேரத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அதையும் சேர்த்துதான் அதை பிரிக்க முடியாதே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. இரவும் பகலும் மாறி மாறி வருதல் வாழ்வில் இன்பம் துன்பமும் வரும் கில்லர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. இப்பத்தான் புரியுது, உங்கள் தலையில ஏன் முடியே இல்லைன்னு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நாங்க அதையெல்லாம் ப்ளான் செய்துதான் மீசையாக வளர்க்கிறோம்.

      நீக்கு
  8. முதலில் புத்தாண்டு வாழ்த்துகள்! வரும் ஆண்டு என்றில்லை இனி வரப்போகும் ஆண்டுகள் முழுவதும் வாழ்க்கை முழுவதும் உங்கள் சந்தோஷ நொடித்துளிகள் பெருகிட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! (நொடித்துளிகள் பெருகினால் மாதங்களும் அதில் அடங்கிவிடும்...சுத்துவளைச்சு எல்லாம் ஒண்ணுதானே என்ன சொல்லுறீக ...சிவாஸ் ரீகல் சிவ சம்போ??!!!...சிவாஸுக்கு ரொம்ப சந்தோஷம் அவரு கணக்கப் புரிஞ்சுக்கிட்டோமாம் இந்த வில்லங்கத்தார்!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி - சிவாஸ் ரீகல் சிவசம்போ

      நீக்கு
  9. அன்புள்ள ஜி,

    அம்மாடியோவ்... 51,84,000 நொடிகளா...? பரவாயில்லையே...!

    இன்பமும் துன்பமும் இயற்கையின் நீதி...!

    த.ம.4

    பதிலளிநீக்கு
  10. ஜி.. என்னங்க இது!...

    புள்ளி வெவரமெல்லாம் சரிதான்!..

    ஆனா - அந்தக் கோடாலி எங்கே இருக்குது!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கோடரி சாணைக்காக போய் இருக்கின்றது.

      நீக்கு
  11. நண்பரே,

    அருமை, அருமையான positive thinking.

    வரும் காலங்களில் மீதமுள்ள 2,592,0000 நொடிகளும் உமக்கு சந்தோஷ நொடிகளாகட்டும், வாழ்த்துக்கள்

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அடேங்கப்பா தங்களது உயர்ந்த மனதின் உயரம் கண்டேன் நன்றி நண்பரே..

      நீக்கு
  12. இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக எண்ணி வாழ்பவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை....

    அந்த நிலையை அடையும் வரை.... கணக்கிட்டு தான் வாழ்க்கை நடத்துகின்றனர்....

    இல்லையென்றால்...மனைவி சொல்வாளா? உன்னைக் கட்டிக்கிட்டு என்ன சந்தோஷமா நான் இருக்கேன்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே... நீண்ட இடைவெளி வருகைக்கு நன்றி.
      சரியான கருத்து சொன்னீர்கள் மனைவிகள் சொல்வது பொய்தான் காரணம் சந்தோஷம் கூடுதல் கிடைக்காமல் இருந்திருக்கலாம் ஆனால், சந்தோஷமே இல்லை என்பது பொய்தான் அம்பானி குடும்பத்து பெண்களும் சண்டை போடுகின்றார்கள் காரணம் என்ன பணமா பிரட்சினை இல்லை மனம்.

      நீக்கு
  13. சிந்திக்க வைத்த பதிவு. அப்படியென்றால் வாழ்வில் மகிழ்ச்சியைவிட துன்பம்தான் அதிகம் ஆக்கிரமிக்கிறதோ என்பதுதான் அந்த சிந்தனை.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. நீங்க போட்டு இருக்கிறது தலைக்கீழ் கணக்கு ,ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷமாக வாழ பழகுங்கள்,அப்புறம் நிமிஷம் ,மணி நேரம் ,நாள் ,மாதக்கணக்கு பாருங்கள் ,கணக்கு 'டாலி'யாகும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதுவும் சரிதான் இனி பார்க்கலாம்.

      நீக்கு
  15. நண்பா!
    இயற்கையின் இடர்பாட்டில்தானே இதயங்கள் இருப்பது இவ்வுலகிற்கு இனிய செய்தியாக கிடைத்தது. நல்லதை அறிய உதவும் வாய்ப்புதான் அல்லது நண்பரே!
    உங்களது பதிவில் இனி நேர்மறை செய்திகள் பேரும் புகழும் பெற்று சிறக்கட்டும்!
    வாழ்த்துகள்!
    த ம +
    நடுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. இத்தனை நாட்களை சந்தோஷமாக இருந்ததாய் எப்படி கணக்கெடுத்தீர்கள் சார்? அதை விட சந்தோஷமாயிருந்தோம் என்றால் என்ன?
    துன்பம் வரும் போது தான் இன்பத்தின் அருமை புரியுமெனில் நான் தூங்கும் நேரம் கூட நம் மனம் சந்தோஷப்படாதோ?துக்கத்தில் தான் தூங்குவோமோ?

    என்னன்னமோ சிந்திக்க வைத்து விட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குழப்பி நீங்க குளம்பீனீர்களா ? இல்லை நீங்கள் குலம்பி என்னை குழப்புகின்றீர்களா ? குளப்பத்தோடு படிக்கும் பொழுது குலம்பும், குழம்பி படித்ததும் குளப்பும். குலப்பம் தீர குழப்பம் இல்லாமல் படிப்பதே குளப்பாது என்பதை தங்களால் நான் குலப்பம் இன்றி அறிந்தேன் நன்றி.

      நீக்கு
  17. உங்களின் கணக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பினைத் தந்துள்ளது. நானும் கணக்கு போட்டு பார்க்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. நில்லா உணர்வுகளை
    நிலைக்குமென நம்புவதும்
    நிலைத்திருக்க நாள் தோறும்
    நாடுவதும் ஓடுவதும்

    நிலைத்துவிட்டால் வெறுத்துப்போய்
    நீர்த் தலங்கள் நாடுவதும்


    நம்முலக வாய்பாடே .

    நீர்த்துப்போன இன்பங்கள்
    நீங்காத துன்பங்களாம்.
    நீங்கிப்போகும் துன்ப வலியும்
    நீங்காத இன்ப ஊற்றாம்.

    நும்
    அன்னையைக் கேட்டுப்பாரும்.
    ஆயிரம் கதைகள் சொல்வாள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா அழகிய விடயம் அறிந்தேன் நன்றி

      நீக்கு

  19. இனி வரும் நாட்கள் எல்லாம் உங்களுக்கு சந்தோஷம் மட்டும் தான் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டதுதானே.
    அருமை

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்
    ஜி
    நீங்கள் கணக்கில் புளி......புலி..ஜி...
    இந்த ஆண்டு பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள் த.ம 10
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரூபன் தங்களின் கவிதையை கண்டேன் மனம் கனத்து விட்டது அருமை.

      நீக்கு
  22. புதிய கணக்கில் 2016 இனிதாக மலர்க!
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  23. கில்லர்ஜி புத்தாண்டு வாழ்த்துகள்!
    அன்பைக் கூட்டுவோம்
    துயரன்களக் கழிப்போம்
    இன்பத்தைப் பெருக்குவோம்
    கூட்டிக் கழிச்சுப் பாருங்க..கணக்கு சரியாவரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே ஆசிரியர் பாணியிலேயே கருத்துரைத்தமைக்கு நன்றி

      நீக்கு
  24. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே

      நீக்கு
  25. இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை...
    நமக்கு இன்பம் குறைவுதான்... இங்கிருக்கும் காலநிலை போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே வெளிநாடு வாழ்வோருக்கு குறைவுதான்.

      நீக்கு
  26. இது மாதிரி கணக்கு போட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அப்படித்தான் செய்தாக வேண்டும்.

      நீக்கு