புகைப்படத்தின் மையத்தில் எலியால்
சொடுக்கி படித்து பார்க்கவும்.
நட்பூக்களே... மேலேயுள்ள
புகைப்படத்தை பார்த்தீர்களா ? வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்தது கோவை பதிப்பின் நாளிதழில் வந்த செய்தி அதாவது
கோவையிலிருந்து சென்னை சுமார் 520 கி.மீ சாதாரணமாக 8 மணி நேர பயணம் ஆகும்
தற்போது கோவையிலிருந்து சென்னைக்கு 1 ½ மணி நேரத்தில் செல்லும்
அதி நவீன வசதி பேரூந்து இதைப்படித்து மக்கள் பலரும் சந்தோஷப்பட்டும்,
பெருமையாகவும் பேசுகின்றார்கள் இதன் பிண்ணனி உண்மைகளை நாம் சிந்தித்து
பார்ப்பதில்லையா ? அல்லது நமது அறிவுக்கு ஏதும் புலப்பட
வில்லையா ?
ஆம் இவர்கள் பேரூந்துடன்
விமானத்துக்கு இணையாக பறக்கின்றார்களா ? கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் போவதற்க்கு 0.40 நிமிடம் ஆகின்றது நான் ஒருமுறை
போயிருக்கின்றேன் இவர்கள் நம்மை வாழவே விடமாட்டார்களா ? வேகமாக போனால் நேரம் மிச்சமாகிறது, அவசர காரியங்களுக்கு
உதவியாகத்தானே இருக்கின்றது என்று சொல்பவர்களுக்கு இந்த பேரூந்து சாலையில்தானே
போகின்றது அல்லது வான வீதியிலா ? இது பிறநாடுகளுக்கு சாத்தியமே நமது நாட்டுக்கு சாத்தியப்படுமா ? என்பதே எமது கேள்வி கோவையிலிருந்து சென்னைக்கு அதி நவீன
சாலை அமைக்கப்படுகிறது என்று சொல்லட்டும் பெருமைப்படுவோம், சந்தோஷப்படுவோம் கோவை
காந்திபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து கோவை நகரைக்கடந்து சென்னை சாலையை
பிடிக்கவே ½ மணிநேரம் வேண்டுமே பிறகு சாலையில் செல்லும்
ஆடு மாடுகள் சாலையை கடக்கும் பாதசாரிகள் இவர்களின் நிலையென்ன ? நமது நாட்டில் இருக்கும் குண்டும், குழியுமான சாலையில்
வேகமாக போவது எப்படி ? இப்படி போவதை அரசு அனுமதிக்கின்றதா ? இதற்கு அரசு உடனடி தீர்வு காணவேண்டும் இல்லையேல் இன்னும்
நிறைய கோர விபத்துக்களை நாம் காண நேரிடும் இவ்வளவு வேகமாக போகின்ற மனிதன் எதை
சாதிக்க ஓடுகின்றான் எல்லாமே ஒருசாண் வயிற்றுப்பசிக்காகத்தானே விஞ்ஞான வளர்ச்சி
மனிதனுக்கு தேவையே அது மனித உயிர்களுக்கு கொடுக்கின்றதே வீழ்ச்சி.
இந்த (U.A.E) நாட்டில் இருக்கும் சாலைகளில் சீரூந்தின்
கடைசி வேக எல்லையான 280 கி.மீ. வேகத்தில்கூட
போகமுடியும் காரணம் பாதுகாப்பான சாலை அப்படிப்பட்ட இங்குகூட 140 கி.மீ. மேல் போக அனுமதி இல்லை மீறிப்போனால்
ராடாரின் புகைப்படங்களுக்கு இரையாக வேண்டியதிருக்கும் அபராதம் கட்ட
வேண்டியதிருக்கும் இங்கு அரேபியர்களுக்கு திறமை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் ? சீரூந்து ஓட்டுவதில் பெரும்பாலும் தைரியசாலிகளே அதற்க்கு
முதல் காரணம் இவர்களுக்கு மரணபயம் கிடையாது குடும்ப உருப்பினரே இறந்தாலும் மறுநாளே
மறந்து விடக்கூடய இதயம் படைத்தவர்கள் ராடாரைப்பற்றிய கவலையும் கிடையாது பணத்தை
தூக்கி வீசி விட்டு போய் விடுவார்கள் நானும்கூட அரேபியர்களைவிட வேகமாக சீரூந்து
ஓட்டும் திறன் உள்ள தைரியசாலிதான் ஆனால் ? ராடாரைக் கண்டால் பயந்து விடும் கோழை.
ஆம் திங்காமல் உங்காமல்
தண்டமாக பணத்தை இழப்பதில் நான் எப்பொழுதுமே உடன்பாடு இல்லாதவன் அந்தப் பணத்தில்
ஏழை எளியவர்களுக்கு உணவுக்கு கொடுக்கலாமே என்பதே எமது கருத்து இதை
நடைமுறைப்படுத்தியும் வருகிறேன் சமீபத்தில் நமது நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்கள் மறுபக்கம் என்ற சிறுகதை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் வரும் மகேந்திரன் என்ற
காதாபாத்திரம் உடையவர் எனது குணாதிசயத்தோடு ஒன்றி இருப்பவர் போலவே தோன்றியது வாழ்க அந்த வகை நல்ல உள்ளங்கள்.
இந்த செய்தியை நான் சில வாரங்கள் முன்னால் படித்தேன். இங்கே சுவிஸ்லாந்திலும் ஹைவேக்களில் 120- 130 க்கு மேல் போக முடியாது. போனால் பைன் மட்டுமல்ல ஒட்டுனர் உரிமம் காலவரையின்றி பறிக்கப்படுவதும் நிச்சயம். ஜேர்மன் போன்ற பெரிய தேசங்களில் 140-150 வரை போகலாம் எனினும் நம் பாதுகாப்புக்கு நாம் உததவராதம் சொல்ல முடியாது என்பதால் அந்த மாதிரி ஹைவேக்களிலும் லிமிட் பண்ணித்தான் வாகனம் ஓட்டுவோம்.
பதிலளிநீக்குகோவை டூ சென்னை 520 கிலோ மீற்ரர் எனும் போது ஐரோப்பிய ஹைவேக்களில் ராபிக் இல்லாமல் போனாலே குறைந்தது நான்கரை மணி நேரம் ஆகும். ராபிக்கில் மாட்டிக்கொண்டால்... கேட்கவே வேண்டாம்.
இவர்கள் யாரை ஏமாத்த இந்த மாதிரி விளம்பரங்களை வெளியிடுகின்றார்கள். முதலில் இம்மாதிரி வெளியிடும் பத்திரிகைதர்மப்பிரபுக்களை ஒரு பிடி பிடிக்க வேண்டும்.
சிந்திக்கும் திறனிருந்தால் இந்தமாதிரி விளம்பரத்தினை மக்களை ஏமாற்றவெனதான் வெளியிடுகின்றார்கள் என தெரிந்தும் வெளியிட்ட அந்த பத்திரிகைக்கு எதிராக சிலிர்த்து எழும்பி இருப்பார்களே!
எங்கேப்பா எல்லோரும்ஜ் சிந்திக்கும் திறனை அடகு வைத்து விட்டார்கள் போலவே!
தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி தவறுகளை தட்டிக் கேட்க ஆட்கள் உண்டு ஆனால் அந்த கூட்டம் சிறுபான்மை என்ற குறுகிய வட்டத்துக்குள் இருக்கின்றது இதோ பாருங்கள் பீப் பாடல் என்னவாயிற்று ? இப்படித்தான்.
நீக்குடூவீலர் லைசென்ஸ் வைத்திருக்கும் டிரைவர் குழப்பமாக இருக்கிறதே. எந்த பேப்பர் இது. நான் ஒரு சின்ன விளம்பரம் கொடுத்தாலே வார்த்தைக்கு வார்த்தை லென்ஸ் வைத்துப் பார்க்கிறார்கள். எப்படி இப்படி ஒரு அபத்தமான விளம்பரத்தை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குத ம 2
ஆம் நண்பரே தொலைபேசி எண்களும் 9 மட்டுமே இருக்கின்றது.
நீக்குகண்ணால் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருப்பது ஏர்-பஸ் 737. அது சுருங்கி பஸ் என்று ஆகிவிட்டது. அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. வேலைக்கு விண்ணப்பம் போட கட்டணம் 1000 ரூபாய். 1000 பேர் விண்ணப்பம் போட்டால் 10 லட்சம் ரூபாய் வசூல். உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வந்தால் கசக்குமா?
பதிலளிநீக்குஏர்-பஸ்ஸுக்கு எதுக்கு டூவீலர் லைசென்ஸ் ஐயா!
நீக்குஅதிலும் றைவர்,கண்டக்டர் எதுக்கு?
கவனிக்கவும்!அதி நவீன பஸ் சேவையாம்!
நீக்குமுனைவர் ஐயாவின் விளக்கவுரைக்கு நன்றி இதுவும் வியாபாரம்தானா ? அதேநேரம் இந்த விளம்பரங்கள் குழறுபடியாகவும் இருக்கின்றதே...
நீக்குநண்பர் தளிர் சுரேஷ் சிறுகதையை நினைவுபடுத்திய விதம் வெகு சிறப்பு நண்பா!
பதிலளிநீக்குசூப்பர் ஸ்பீட்!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
யாவரும் விழிப்பாக இருப்பதற்கு நல்ல அறிவுரை... சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குசாத்தியமே இல்லாத விஷயம். யாராவது தமாஷ் பண்ணியிருக்க வேண்டும். அல்லது அச்சுப்பிழை நேர்ந்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குவருக நண்பரே தமாஷுக்காக இப்படியும் செலவு செய்வார்களா ?
நீக்கு11/2யில் போனால் ஏழரைதான்.
பதிலளிநீக்குஅதேதான் நண்பரே... இது பேரூந்து உரிமையாளருக்கும்தானே...
நீக்குஅந்த விளம்பரத்தில் இன்னொன்றை கவனித்தீர்களா? அந்த நவீன பேருந்தில் பணியாற்ற இரு சக்கர வாகன ஓட்டும் உரிமம் வைத்திருக்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேவையாம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். இது ஏப்ரல் 1 ஆம் நாள் வரவேண்டிய விளம்பரம் என நினைக்கிறேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே தொலைபேசி எண்களை கவனித்தீர்களா ?
நீக்குதட்டச்சுப் பிழையாக இருக்கலாம்! :) அல்லது பழனி. கந்தசாமி ஐயா சொல்வது போல ஏர்-பஸ் ஆக இருக்கலாம்!
பதிலளிநீக்கு1 1/2 மணி நேரத்தில் கோவையிலிருந்து சென்னை சாத்தியமில்லை.
வாங்க ஜி ஐயா உள்ளூர்க்காரர் அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
நீக்குரைட்டு.
பதிலளிநீக்குவாங்க நண்பரே... பதிவையா ? சொல்கின்றீர்கள்.
நீக்குகிறுக்குப் பயல் எவனோ - எதையோ எழுதி விளம்பரம் என்று கொடுத்தாலும்,
பதிலளிநீக்குஅதை அக்கறையுடன் கட்டம் கட்டி வெளியிட்டிருக்கும் ஊடகக் காரனை என்ன செய்வது!..
கண்முன்னே காசைக் கண்டதும் கேள்வி கேட்கும் அறிவு காற்றில் பறந்து போயிருக்குமோ!..
நீங்கள் சொல்வதுதான் சரியானது என நினைக்கிறேன்
நீக்குவாங்க ஜி சரியாக சொன்னீர்கள் மக்களைக் குழப்புவதில் ஊடகங்களும் போட்டிக் கொண்டுதான் பிழைக்கின்றார்கள்.
நீக்குநண்பர் திரு. இசக்கி முத்து அவர்களின் முதல் வருகைக்கு நன்றி
நீக்குநண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நானும் தேவகோட்டைதான். காரைக்குடி மு.வி. பள்ளியில் வேலை, ஓய்வு நேரத்தில் உங்கள் வலைப்பக்கம் வருவேன், படிப்பேன் பதில்அளிக்க நேரம் இருக்காது. எப்பவாவது நேரம் கிடைக்கும் போது பதில் அளிப்பேன். இனிமேல் தவராமல் வருவேன். பதிலும் தருவேன்.
நீக்குஅடடே வாங்க நண்பா மிக்க சந்தோஷம் தி கிரேட் தேவகோட்டை வரும் பொழுது சந்திப்போம் தொடருங்கள் இணைப்பில் இருப்போம் வாழ்க வளமுடன்.
நீக்குNote: That cell No: have 9 digit only.I think its for FUN.
பதிலளிநீக்குவருக நண்பரே நானும் அந்த நம்பருக்கு கால் செய்து போகவில்லை பிறகுதான் கவனித்தேன் ஒரு நம்பர் குறைவு அதை பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்.
நீக்குஅட! கடவுளே! இப்படி ஒரு விளம்பரமா!
பதிலளிநீக்குவாங்க ஐயா எல்லா வகையிலும் மக்களைக் குழப்புவதே இவர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது.
நீக்குஇப்படியொரு விளம்பரமா..? விளம்பரம் வெளியிடுவதில் இவ்வளவு அசட்டையாவா இருப்பாங்க. 530 கி.மீ தூரத்தை 1 1/2 மணி நேரத்தில் செல்வதா...இந்நாட்டிலேயே சாத்தியமில்லை. இங்கேயே நாங்க பயணம் செய்யும்போது எவ்வளவு கவனமாக போகவேண்டியிருக்கு. ம்.ம்.சட்டத்தை அங்கு கடுமையாக்கவேண்டும்.!!
பதிலளிநீக்குவருக சகோ விளம்பரங்கள் இப்பொழுது வரைமுறையே இல்லாமல் போய் விட்டது வேதனையானதே...
நீக்குஎதுக்கு இந்த அரைகுறை விளம்பரம் என்று தெரிய வில்லையே :)
பதிலளிநீக்குஎனக்கும் அதுதான் புரியவில்லை ஜி
நீக்குதங்களைத்தவிர .....அவ்வூர்காரர்கள் எவரும் இந்த விளம்பரத்தை பற்றி மூச்சு விட்டதாக எதுவும் தெரியவில்லயே.......
பதிலளிநீக்குயார் கண்ணிலும் படவில்லையோ நண்பரே...
நீக்குமனோ வேக வாயு வேகம் என்பார்கள் அப்படிப்பார்த்தால் எந்த உரிமமும் இல்லாமல் கோவை டு சென்னை போக ஒரு வினாடி போதுமே
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களின் கருத்தும் சரிதான்.
நீக்குமுதலில் இதை ஏர் பஸ் என்று எடுத்துக் கொண்டால் (ஏர்பஸ் என்று உண்டே) அதில் டூவீலர் லைசன்ஸ் கேட்டிருப்பது முரண்படும். தில்லுமுல்லு. சரி அதைச் சாலையில் ஓடும் பஸ் என்றாலும் இந்த லைசன்ஸ் முரண்தான்.
பதிலளிநீக்குசாலையில் சாத்தியமே இல்லை. இது ஏதோ அச்சுப்பிழை, இல்லை என்றால் அச்சுக் கோர்க்கும் போது இரண்டு, மூன்று விளம்பரங்கள் தவறுதலாகச் சேர்ந்திருக்கின்றது. அதாவது சிலசமயங்களில் நாம் ஒரு ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒவ்வொன்றாக மாறி மாறி வரும் போது ஒவ்வொன்றில் வரும் செய்தியோ இல்லை ஏதோ ஒன்று தொடர்ந்து வருவது போல நாங்கள் மேடையில் தமாஷ் கூட பண்ணியிருக்கின்றோம். அது போல் தவறுதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு அச்சுக் கோர்க்கும் போது. அப்படி நிகழ்ந்திருந்தால் அந்தப் பேப்பர் எடிட்டர் ஆசிரியர் தவறு என்றுதான் சொல்ல வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாலை வழி சாத்தியமில்லை. ஏதோ தவறு..
தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி மொத்தத்தில் குழறுபடிகள் இதில் உண்டு
நீக்குதவறுதலாகத் அச்சடிக்கப்பெற்ற விளம்பரம்என்று எண்ணுகின்றேன்
பதிலளிநீக்குவாட்ஸ்அப்பில் பார்த்தேன் நண்பரே
தம+1
தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே.
நீக்குவரிவிளம்பரங்களை நம்புவதற்கு இல்லை! ஆனால் டூவீலர் லைசென்ஸ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க சொல்லி இருப்பதும் ஒன்றரை மணி நேர விரைவு பஸ் என்பதும் யோசிக்க வைக்கிறது. விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. என்னுடைய கதையை பதிவில் நினைவு கூர்ந்து பாராட்டி லிங்க் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபணத்தைப் பெற்றுக் கொண்டு யோசிக்காமல் ஆராயாமல் அச்சடித்து விடுவது என்ன பத்திரிகை தருமமோ!!
பதிலளிநீக்குமித மிஞ்சிய பேராபத்து. நானும் உங்களைப் போல்தான் சகோ, வேகக் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே ஓட்டுவேன்.
வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குதங்களின் நல்ல மனம் வாழ்க...!
நன்றி.
த.ம.15
மணவையாரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஇந்த செய்தியை முகனூலில் பார்த்த போது சிரிப்புத்தான் வந்தது.டூவீலர் லைசென்ஸ் இருந்தாப் போதுமாம்... ஹா... ஹா...
பதிலளிநீக்குநல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.
தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே.
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குகாலையில் தான் விளம்பரங்கள் குறித்து ஒரு யோசனை, இங்கு தங்கள் பதிவில், ஊடகங்கள் எதைப்பற்றியும் யோசிப்பது இல்லை பணம் மட்டுமே,
இது போல் எனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி ஒன்றினை நான் பிறருக்கு அனுப்ப அவர் நல்லா என்னைத் திட்டினார். எப்படி நீங்க இதுபோன்ற செய்திகளை நம்பி பிறருக்கு அனுப்புகிறீர்கள் என்று,,
நல்ல பகிர்வு சகோ தங்களுடைய பதிவு.
வாங்க சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குவாட்சப்பில் இச்செய்தியை நானும் பார்த்தேன்.
பதிலளிநீக்குவரி விளம்பரத்தில் சொறிசெய்திகளும் இடம்பெறுவது வழக்கம்...
ஏமாற்று கும்பல் ஏமாற எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்று பல்ஸ் பார்க்கும் யுக்தியோ என நினைக்கத் தோன்றுகின்றது....
விழிப்புணர்வு பதிவினை சுவாரசியமாய் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் சகோ!
வருக நண்பரே அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்று
நீக்குபேருந்து ஓட்ட டூ வீலர் லைசன்சா? ஒரே குழப்பமாக இருக்கிறதே.ஃபிராட்
பதிலளிநீக்குவாங்க ஐயா எல்லோருக்குமே இந்தக் குழப்பம் உண்டு.
நீக்குஅனைவரும் கவனிக்க வேண்டிய விடயம் முக்கியமாகச் சாரதிகள்..
பதிலளிநீக்கு(வேதாவின் வலை)
வருக சகோ நன்றி
நீக்கு