தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 10, 2016

கிராமியப்பாட்டு

புகைப்பட உதவி வலைப்பதிவர் திருமதி. சசிகலா அவர்களுக்கு நன்றி

கிராமியப் பாடல்களை கேட்டிருப்பீர்கள் அதனைப் போலவே பாடிப் பாருங்கள் நிச்சயம் ஒரு மெட்டு கிடைக்கும்.

ஆண்-
பூவிழிக் கண்ணழகி, பொட்டுவச்ச பொன்னழகி,
போவோமடி ஊர்கோலம், பூங்குயிலே...
நாம ஆடிப்பாடி, கூடிடுவோம் கூண்டுக்குள்ளே...
பெண்-
குங்குமப் பொட்டுகாரா, பொல்லாத மீசக்காரா,
புரிஞ்சுபோச்சு உன்னோட, எண்ணமெல்லாம்...
சேர்ந்து போனால் சேதாரமே எங்கன்னமெல்லாம்...

ஆண்-
அடியே கள்ளசிறுக்கி, விடிய விட்டசிறுக்கி,
மடிந்து விட்டேனடி, மாங்குயிலே... உனக்கு
வைகாசியில் வளைகாப்பு வைதேகியே...
பெண்-
போதுமய்யா பொன்னழகா, பாசாங்கு பாசக்காரா,
முடிச்சவித்தா முடிஞ்சு போகும், முத்தழகா...
மொத்தமாக கொடுத்துடுவே, கொள்ளைக்காரா...

ஆண்-
போதும்னு சொன்னாலே, வேணும்னு
அர்த்தமடி, புரியாதா பொன்மயிலே...
போவோமடி வைக்கோல் போருக்குள்ளே...
பெண்-
போதும்னு சொன்னதையே வேணும்னு,
புரிஞ்சுக்கிட்ட தேவகோட்டை, மச்சானே...
நாம, போயிடுவோம் கரும்பு தோட்டத்துக்கே...

ஆண்-
தந்தானே தந்தனத்தானே, தானானே
தானேதன்னே, தன்னாலே தந்தேனே...
என்னை நானும் தந்தேனே, செந்தேனே...
பெண்-
தன்னானே நானே தானே, நானே
தந்தேனே தன்தேனை தந்தானே...
மடத்தேனாய் மடிந்தேனே, தன்னாலே...

இருவரும்-
லாலா... லால, லல்லா... லாலி,
லாலிப்பப்பு, லாலி லாலா, லா...
லாலா.. லா, லாலா... லாலிலே...

52 கருத்துகள்:

  1. நண்பரே அருமையான வரிகள்
    முதல் ஆறு வரிகளுமே
    உடம்பை சிலிர்க்க வைத்து விட்டது....
    ஆஹா அற்புதமான படைப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சிலிர்ப்பான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. பாடல்வரிகள் அருமை ரசித்தேன் ஜீ!

    பதிலளிநீக்கு
  3. இரசித்துப் படித்தேன்
    இயல்பான வார்த்தைகளாலான கவிதை
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அட்ட்ட்ட்ட்ட்ட்டா! சினிமாவுக்கு பாட்டெழுத போவதாய் சொல்லவேஇல்லையே சார்?அதிலும் கை வைத்து விட்டீர்களா?கலக்குங்க சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்க உண்மையிலேயே கிண்டல் செய்திருந்தாலும் பரவாயில்லை எனக்கு சினிமாவுக்கு பாட்டு எழுத முடியும் என்ற நம்பிக்கை உண்டு இதை தலைக் கனத்துடன் சொல்லவில்லை தலை வணக்கத்துடன் சொல்கிறேன் காரணம்

      ‘’ஆலுமா டோலுமா அச்சாலக்கடி டாலுமா’’
      ‘’எவன்டீ உன்னை பெத்தான் என் கையில கிடைச்சா செத்தான்’’
      அப்படின்னு என்னமோ எழுதி அதையும் பாடுறாங்கே இந்த செவிட்டுச் சமூகமும் அதை தினம் தினம் ரசித்து கேட்கின்றது வாலிபக் கவிஞராம் வாலி இவருகூட எழுதுனாரு... லாலாக்கு டோல் டப்பிம்மான்னு....

      இன்னும் எவ்வளவோ சொல்லலாம் வேண்டாம் மானக்கேடு.
      எனது ஊரில் ஒரு பெரியவர் சாதாரணமாக பேசினாலே கவிதை போல் இருக்கும் வெளியுலகம் தெரியாமல் எனக்கு மட்டும் தெரிய அவர் மறைந்தே 20 வருடம் கடந்து விட்டது கண்ணதாசனைவிட திறமைசாலிகள் எவ்வளவோ பேர் வெளியுலகம் தெரியாமல் மண்ணுள் புதைந்து விட்டார்கள் காரணம் எல்லோருக்கும் ஒருநேரம் வரும் வர்ற ஆடி போயி ஆவணி வந்தா TOPல போயிருவேன்னு ‘’சோலந்தூர் சோசியர் சோனைமுத்து’’ சொல்லி இருக்காரு இப்ப எனக்கு குரு எட்டாம் வீட்ல குடி இருக்கான் அதானால உங்களை சும்மா விடுறேன்.

      நீக்கு
    2. ஹாஹா! நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன் போல!எங்கே போனாலும் எனக்கு நல்ல நேரம் தான் போல! அந்தப்பக்கம் ரிலாக்ஸ் வருண் சார் எனக்கு நல்ல நேரம் என்கின்றார்! அடுத்த பக்கம் மதுரைத்தமிழன் என் தலையில் குட்ட காத்திட்டிருக்கார், நீங்க என்னன்னால் என்னை சும்மா விட்டிருக்கிங்க?

      என்னத்தை சொல்ல! எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் என் நேரம்!

      ஆமாம் நான் கிண்டல் செய்தே என எப்படி சொல்வீர்கள்?

      நீக்கு
    3. எழுத்துல டாட் நிறைய இருக்கு இன்றைக்கு கிழக்கே சூலம் வேற இது போதுமே கணிப்பதற்கு.

      நீக்கு
  5. ரசித்தேன். கன்னம் மட்டும் கண்ணம் ஆகி விட்டது!! கோவை ஆவி, தானே மெட்டமைத்து தானே இயற்றி பாடல்கள் புனைவதில் வல்லவர். அவர் இந்தப் பாடலுக்கு அருமையான டியூன் வழங்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனக்குறைவான தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே இதோ மாற்றி விட்டேன் நானும் பாடி (?) காணொளியில் இணைத்து வைத்தேன் அதன் ஃபைலைத்தான் தேடினேன் கிடைக்கவில்லை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. கிராமியப் பாட்டு எழுதுவதிலும் திறமையை காட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  7. அன்புள்ள ஜி,

    கிராமியப் பாட்டு ரம்மியமாக உள்ளது!

    த.ம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் ரசனைக்கு நன்றி நிறைய பதிவுகளை விட்டு விட்டீர்களே...

      நீக்கு
  8. அருமை
    அருமை
    அசத்திவிட்டீர்கள் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களின் கருத்துரைக்கு.

      நீக்கு
  9. ஆஹா..

    கண்மாய்கரைப் பாட்டு
    காதோரமாக் கேட்டு
    தாழங்குடையும் வீசும்
    அந்தக் குயிலுங்கூட பேசும்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி கண்மாய்க் கரையோரப் பாட்டேதான் நன்றி.

      நீக்கு
  10. இந்த பதிவில் கிராமியப் பாடல்கள் எழுதும் திறமையும் அறிந்து கொண்டேன் சகோ. அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  11. ச்ச்சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே...... இருக்கட்டும் நண்பரே... நன்றி

      நீக்கு
  12. கல்யாணத்துக்கு முன்னாலே தேவகோட்டை மச்சான் 'முடிச்சவிழ்கி 'மாற மாட்டார்னு நம்புறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஹாஹாஹா உங்களுக்கு மட்டும் எப்படி ஜி இந்த மாதிரி தோணுது..... பதிவுல இதெல்லாம் சகஜம்தானே.....

      நீக்கு
  13. பொல்லாத மீசைக்காரா..என்னும் போதே தெரிந்துவிட்டது..தேவகோட்டை மச்சான் வேற.. கலக்குங்க ஜி

    பதிலளிநீக்கு
  14. உங்கள் அடுத்த பதிவு எப்படி இருக்கும் என்று யூகிக்கவே முடியாது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஐயா என்ன இப்படி சொல்லிட்டீங்க..... ?

      நீக்கு
  15. கரும்பு தோட்டம்,,,,, பாட்டு சும்மா அதிருதுல்ல,,, கலக்குங்க சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஒரு நாளாவது பதிவை அதிர விட்டு பார்ப்போமே

      நீக்கு
  16. கிராமிய மணம் வழியும் பாடல்!

    பதிலளிநீக்கு
  17. என்ன கில்லர்ஜி இப்படி எல்லாம் கலக்குறீங்க! அம்மாடியோவ்...அருமை!

    கீதா: அட செம ஜி!!! பாடிப் பாத்துக்கிட்ருந்தேன்....அதான் லேட்டு கருத்திட....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க இப்படி எல்லாம் கண்ணு படறதாலதான் கண்ணேறு வந்து விரலில் நகச்சுத்தி வருகின்றது.

      நீக்கு
  18. தம 12

    ஆஹா...இன்னொரு முகத்தை இன்று பாத்துட்டோம்...

    சினிமா பாட்டு எழுதிட்டு பாடகரை இயக்குனர் தேட வேண்டாம் போல... நீங்க பாடினதை எப்போ போடுவீங்க சகோ... ஃபைலை தேடிட்டீங்களா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா இந்தப்பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது ட்ராப்டில் கிடந்தது அதனால் ஃபைலை தேடுகின்றேன் நான்....

      நீக்கு
  19. ரம்மியமான பாட்டு ..இங்கே. இருக்க... இன்றைக்கு பாடுறானே ஒய் திஸ் கொல வெறின்னு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனையெல்லாம் கொலை செய்யணும்னு தோணுமே....

      நீக்கு
  20. ஆயிரம் பாடல்கள் வந்தாலுமே நம்ம கிராமிய பாடலுக்கு இணையாக எந்த பாடலும் நிற்க முடியாது ஐயா.அருமை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. நம்ம ஊர்ப் பாட்டு
    எப்போதும்
    இனிய இசைப் பாட்டு

    பதிலளிநீக்கு
  22. Ahaa padalasiriyar akitingale valthukal....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏதாவது ஏமாந்த ஏகாம்பரம் இருந்தால் சினிமா எடுக்க சொல்லி வைங்க படத்தை பிச்சுக்கிட்டு ஓட வைப்போம் தியேட்டரை விட்டு.....

      நீக்கு