தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 26, 2016

மனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்

குழந்தைகள் – பர்ஹானா & அனஸ் மதுரை.

வணக்கம் நட்பூக்களே வலைப்பதிவர் சகோ திருமிகு. வைஷாலி செல்வம் அவர்கள் இன்றைய கல்வி நிலையின் அவலத்தை மாற்றுவதைக் குறித்து விஜய் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி ஒளிபரப்பியதாக சொல்லி அதனைக் குறித்து பதிவு எழுதச் சொல்லி இருந்தார் நான் எந்த தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை இதோ மாற்று இருபது பதிவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நல்லதொரு முயற்சிக்கு முதலில் எமது பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக இதில் அவர் செய்த தவறு படிப்பறிவில்லாத என்னை தேர்வு செய்ததுதான் பாவம் அவரும் பதிவுலகுக்கு புதியவர்தானே வெளுத்ததெல்லாம் MILK என்று நினைத்து ஆவின் பால் வாங்குவது போல் பித்தளை முலாம் பூசிய என்னை சொக்கத்தங்கம் என்று தவறாக கணித்து விட்டார் இருப்பினும் அழைத்தமைக்கு மரியாதை கொடுப்பதுதானே தி கிரேட் தேவகோட்டை தமிழனின் பண்பாடு ஆகவே நானும் எனது மூளையின் மூலையில் கிடந்த விடயங்களை சேகரித்து ஏதோ எழுதி இருக்கின்றேன் அழைப்பிற்கு நன்றி சகோ.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதம் கல்வியே கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்றனர் நமது முன்னோர் இந்த வேதத்தை மனதில் ஏற்றித்தான் நாம் நமது செல்வங்களை, செல்வங்களை கொடுத்து கல்வி பயில வைக்கின்றோமா ? என்ற சிந்தை என்னுள் பலமுறை தோன்றியதுண்டு பகட்டு வாழ்க்கை என்று சொல்வோமே இதற்கு இன்றைய மக்கள் அடிமை ஆகிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும் சொகுசு வசதிகள் நிறைந்த பள்ளியில் நமது குழந்தைகள் படித்தால்தான் நமக்கு பெருமை என்று இந்த குருட்டுச்சமூகம் நினைக்கின்றது இதை கல்வி வியாபாரிகள் நன்கு புரிந்து படித்துக் கொண்டார்கள் அதை மென்மேலும் அபிவிருத்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள் கொடுப்பதற்கு ஒருகூட்டம் உண்டு இதைக்கண்டு மறுகூட்டம் ஓட்டம் எடுக்கின்றது இனிவரும் காலங்களில் செல்வந்தனின் குழந்தைகள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை நிச்சயம் உருவாகும் மீண்டும் படிக்காதவர்களை இந்நாடு சந்திக்கும் துர்பாக்கிய நிலை வருமோ என்ற அச்சமும் எழுகின்றது இந்நிலைக்கு காரணகர்த்தா சமூகமே என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டு அனைவரும் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

முதலில் சமூகம் என்றால் என்ன ? நாம்தானே அந்த சமூகத்தில் இருப்பது மனிதர்கள்தானே எனக்கு முன்னால் நீ இருக்கின்றாய் உனக்கு முன்னால் நான் இருக்கிறேன் எனக்கு நீ சமூகம் உனக்கு நான் சமூகம் ஆக சமூகம் என்பது தனியாக உருண்டையாக, சதுரமாக, முக்கோணமாக வடிவம் பெறவில்லை நாம்தான் சமூகம், சமூகம்தான் நாம் இதை உணராமல் மனிதனின் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் சமூகமே காரணம் என்று தப்பித்து விடப்பார்க்கின்றான் தனக்கு ஆறறிவு என்று போட்டுக்கொண்ட மானிடன் பிழைக்க வந்த ஆங்கிலேயர் நம்மை ஆள்வதா ? என்ற நாட்டுப்பற்றால்தான் நமது முன்னோர்கள் பல உயிர்களை துறந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள் அந்த சுதந்திரக்காற்றை உண்மையிலேயே நாம் சுவாசிக்கின்றோமா ? இல்லையே என்று ஒருபெண் தனியாக நள்ளிரவில் சென்று வரமுடிகின்றதோ... அதுதான் உண்மையான சுதந்திரம் அந்த நாட்டுக்கும் பெருமை இது அரபு நாடுகளில் நடக்கின்றது காரணமென்ன ? நாட்டை ஆண்ட வெளியூர் திருடனிடமிருந்து பறித்து உள்ளூர்த் திருடனிடம் கொடுத்து விட்டு என்றுமே ஏமாளியாகவே வாழ்கின்றோம் இதன் காரணமாகவே இன்று கல்வி வியாபாரிகள் மட்டுமல்ல, மருத்துவ வியாபாரிகள் என்று நிறைய பெறுகி விட்டார்கள் இந்தியாவில் இப்பொழுது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை.

கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும் என்று எல்லோரும் சொல்கின்றார்கள் நாற்காலியின் மேல்புறத்தில் அழகு படுத்திப் பார்க்கின்றீர்கள் நான் நாற்காலின் கால்கள் இத்துப்போய் இருக்கின்றன அதை சரி செய்தல் வேண்டும் என்கிறேன் ஆம் அஸ்திவாரம் சரியில்லாத வீடு ஆபத்தான வீடல்லவா ! நாட்டை ஆள்பவர்களை நாட்டைக் கெடுத்து விட்டார்கள் என்று குறை சொல்பவர்களே அவர்களிடம் நாட்டைக் கொடுத்தது யார் ? தேசியக்கொடியை செல்போனை காதில் வைத்து பேசிக்கொண்டே கொடி ஏற்றச் சொன்னது யார் குற்றம் ? இதை சிந்திக்க வேண்டும் கோடிகள் செலவு செய்து ஆட்சியைப் பிடிக்க வருகின்றவனை இவன் அயோக்கியன்தான் என்பது உங்கள் விழிகளுக்கு அடையாளம் தெரியவில்லையா ? இல்லை நாம் அனைவரும் விழியிருந்தும் குருடர்களா ? இலவசங்கள் தருகிறோம் என்று சொல்பவர்கள் சொல்லட்டும் நாம் வாங்காமல் இருந்தால் அவர்கள் கொடுத்து விடமுடியுமா ? நமக்கு ஃப்ரீயாக கிடைத்தால் பினாயிலையும் குடிப்போம் இப்படித்தான் நமது பெற்றோர்கள் நம்மை வளர்த்து விட்டார்கள் நாமும் அப்படியே நமது பிள்ளைகளையும் வளர்க்கின்றோம் அதன் பலனை நாம் அனுபவித்தே தீரவேண்டும் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் மக்கள் மனதில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை வாழ்வில் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை அடேங்கப்பா.... இவரு வாழ்நாளில் இதுவரை கடமை கண்ணியம் கட்டுப்பாடு மீறியதே இல்லை ஓட்டுப்போட பணம் வாங்குவது ஜனநாயக கடமையோ ? எல்.கே.ஜி படிப்புக்கு இன்று ஐம்பதாயிரம் செலவு சாதாரணமாகி விட்டது நான் தெரியாமல்தான் கேட்கிறேன் திரு. அப்துல்கலாம், திரு. காமராஜர் நிறைய நபர்களை சொல்லலாம் போதும் இவர்கள் எல்லோரும் எல்.கே.ஜி படித்துதான் இந்த சாதனை படைத்தார்களா ? குழந்தைகளை 2 ½ வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது பெருமை என்று இந்த குருட்டுச்சமூகம் நம்புகின்றதே அங்கு தொடங்குகின்றது நமது அறியாமை.

இந்த உலகில் சந்தோசமாக வாழ்கின்றவர்கள் இரண்டே நபர்தான் முதலாவது மனநலம் குன்றி பைத்தியமாக வாழ்பவர்கள் என்னைப் பொருத்தவரை இவர்கள் வாழ்வதைவிட கருணைக் கொலை மூலம் இறப்பதே மேல் ஏர்வாடியில் கொடூரமாய் கருகி இறந்தார்களே அதைவிட கருணைக் கொலையே மேல் (இதனைக் குறித்து விரிவாக நான் பதிவு எழுதுவேன்) இரண்டாவது உலகம் அறியும்வரை புரியாமல் விளையாடும் குழந்தைகள் உலகம் புரிந்த நாள்முதல் அவனோ, அவளோ தனது மரணகாலம்வரை ஏதோவொரு காரணங்களுக்காக கவலைப்பட்டுத்தான் வாழ்கின்றார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்தக் குழந்தைகள் சுமார் 10 வயதுவரை சுதந்திரமாக சந்தோசமாக வாழவிட்டு அதன் பிறகு அவர்களை பள்ளியில் சேர்த்தால் என்ன ? குடியா முழுகி விடும் நான் கேட்பது வினோதமாக இருக்கின்றதா ? நமக்கு நமது மகன் சீக்கிரம் படித்து பட்டம் பெற்று வேலை வாங்கி கைநிறைய சம்பாரித்து நமது கையில் கொடுக்க வேண்டும் இதுதானே நம்மில் பலருக்கும் எண்ணம் ஏதோ ஒருநாடு மன்னிக்கவும் பெயர் மறந்து விட்டது குழந்தைகளை12 வயதில்தான் பள்ளிகளில் சேர்க்க முடியும் அவர்களும் சந்தோசமாக வாழத்தானே செய்கின்றார்கள் சில நேரங்களில் குழந்தைகளை பார்த்து இருக்கின்றேன் பொதிபோல முதுகில் தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் குழந்தைகளைக் கண்டு வேதனைப்பட்டு இருக்கின்றேன் சிலர் நினைக்கலாம் இப்பொழுதே குழந்தைகளின் சேட்டை தாங்க முடியவில்லை என்று சேட்டை செய்தாலே அது குழந்தை இல்லையெனில் அது ஜடம் குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்க முடியாதவன் இவ்வுலகில் வேறெந்த நிகழ்வையும் ரசிக்கும் தகுதி இல்லாதவன் என்பது எமது ஆணித்தரமான கருத்து.

 குழந்தைகள் பெற்றோர்களுக்கு உரிமையானவர்களே.... ஆனால் ? அதற்கு முன் இந்தச் செல்வங்கள் நாட்டுக்கு சொந்தம் ஆக்கப்படல் வேண்டும் அரபுநாடுகளில் குழந்தை பிறந்து அது வேலைக்கு செல்லும்வரை அதன் பாராமரிப்பு செலவுகளை அரசே செய்கின்றது வளர்ப்பது மட்டுமே பெற்றோர் நமது நாட்டில் இப்படிச் செய்யமுடியாதா ? நாம் ஏழைநாடு என்று சொல்கின்றீர்களா ? ஒரு தனிப்பட்டவனின் திருமணத்துக்கு 1000 கோடி ரூபாய் அரசு செலவழித்ததே... ஒரு சாமியாருக்கு இந்திய ராணுவம் வேலை செய்து கொடுத்ததே இந்த சம்பளப்பணம் யாருடையது ? ஒரு தனிப்பட்ட மனிதனின் உடைக்கு 14 லட்சரூபாய் செலவு செய்யப்பட்டதே... அது யாருடையது ? தேர்தல் நேரங்களில் கட்டவுட்டுகளுக்கு கண்ணெதிரே மின்சாரம் திருடப்படுகின்றதே அது எந்தக்கணக்கில் செலவாகின்றது ? அரசியல் தலைவர் மேடைக்கு அருகில் வரவேண்டும் என்பதற்காக மறைமலைநகரில் ரயில்வே தண்டவாளம் போடப்பட்டதே... இந்தப்பணம் யாருடையது ? தனிப்பட்ட மனிதன் வாங்கிய 9 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதே... அது யாருடையது ? கட்டப்பட்ட சட்டமன்றம் தனிப்பட்ட விரோதத்தால் மருத்துவமனையாக மாற்றப்பட்டதே இது யார் பணம் ? நாளை மீண்டும் அந்தக்கோஷ்டி வந்தால் ? மீண்டும் மாற்றப்படுமே அதுவும் யார் பணம் ? என்னால் இன்னும் சொல்லமுடியும்.

நாளைய மன்னர்கள் என்று நாம் யாரைச் சொல்கின்றோம் ? நமது குழந்தைகளைத்தானே காரணமென்ன ? நாளை இந்நாட்டை வழி நடத்தி கொண்டு செல்வது இவர்களே... ஆக இந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுத்து ஊக்குவிற்க வேண்டியது அரசின் கடமை ஆனால் ? இந்த அரசு இன்னும் குழந்தை தொழிலாளர்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையே எவ்வளவோ திட்டங்கள் தீட்டி, எவ்வளவோ ஆலோசித்து எவ்வளவோ இலவச பொருட்களைத் தரும் அரசு இலவசமாக மருத்துவம் வேண்டாம் கல்வியை மட்டும் கொடுத்தால் போதாதா ? இவர்களை தேர்ந்தெடுப்பதில் நாம் செய்த, செய்யும் தவறே இன்றைய இந்தநிலை கல்வியில் இந்தியா சிறந்து விளங்க வேண்டுமானால் ?

01. அரசியல்வாதிகளின் கூட்டங்களிலும், கிரிக்கெட் நடக்கும் கூட்டங்களிலும் கேமராவைக்கண்டு கையை அசைத்து ஆரவாரம் செய்வதை மக்கள் கூட்டம் என்று நிறுத்துகின்றதோ...
02. அரசியலில் அனுபவம் பெற்றவரை அரசியலே தெரியாத சினிமா நடிகன் தோற்கடிக்கும் நிலை என்று மாறுகின்றதோ...
03. படிப்பறிவில்லாத அரசியல்வாதி முன் ஐ.ஏ.எஸ் படித்தவர் கைகட்டி நிற்கும் அவலம் மாறுகின்றதோ...
04. விபச்சாரிகளுக்கு கோயில் கட்டுவதை மக்களே தடுத்து நிறுத்துகின்றார்களோ...
05. துரோகம் செய்த அரசியல்வாதிகள் மீண்டும் தேர்தலில் நிற்கும்போது அவர்களை டெபாசிட் இழக்க வைக்கின்றார்களோ...
06. இரண்டு தொகுதியில் நின்று இரண்டிலுமே வெற்றி பெற்றவுடன் ஒரு தொகுதியை ராஜினாமா செய்து ஓட்டுப் போட்டவர்களை இளிச்சவாப்பயல் ஆக்குபவர்களுக்கு மீண்டும் ஓட்டுப் போடும் மக்கள் என்று உணர்கின்றார்களோ...
07. அரசியல்வாதிகள் பேசும் கூட்டத்தில் மக்கள் கூடாமல் என்று புறக்கணிக்கின்றார்களோ...
08. சினிமா ஸூட்டிங் நடக்கும் இடத்தில் மக்கள் சொந்த வேலைகளை மறந்து கூடி நிற்கவில்லையோ...
09. சினிமா நடிகர் நடிகைகள் விளம்பரத்தில் பரிந்துரைக்கும் பொருள்களை மக்கள் வாங்குவதை என்று ஓரம் கட்டுகின்றார்களோ...
10. கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளின் சிறகுகள் என்று ஒடிக்கப்படுகின்றதோ...
11. அரசியல்வாதிகள் தங்களது ஆதாயத்துக்காக ஜாதீயை மூட்டி விடுவதை என்று மக்கள் புரிந்து கொள்கின்றார்களோ...
12. இலவசங்கள் வேண்டாமென்றும், ஓட்டு போட ஒட்டு மொத்த மக்களும் பணம் வாங்கச் செல்லவில்லையோ...

அன்றுதான் நம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நம்ப முடியும் ஆனால்  எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் படிக்காத மேதை திரு. காமராஜரையே தோற்கடித்தவர்கள்தானே இந்த மக்கள்.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் என்ற P.S. வீரப்பா அவர்கள் பேசிய வசனம் பலித்தது போதாதா மேலும் பலிக்க வேண்டுமா ? இன்றாவது சிந்திப்போமே நாளைய நமது சந்ததிகளுக்காக.

குறிப்பு - பதிவு நீள்வதை கஷ்டப்பட்டு நிறுத்தினேன் நீளமாயின் மன்னிக்கவும்.

அன்பின் சகோ திருமிகு. வைசாலி செல்வம் அவர்களுக்கு நாம் கல்வியைக்குறித்து எழுதச் சொன்னால் கில்லர்ஜி அரசியலைக் குறித்து எழுதி இருக்கின்றாரே... என்று கருதலாம் இதற்கு அடிப்படையான விடயத்தை முதலில் பார்ப்போம் அதற்கு நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்போம் பிறகு நம் இந்தியா உலகின் முதல் சிறந்த நாடு என்ற பெயரெடுக்கும் ஆலோசனை வழிகளை நான் தருகிறேன் எனது தளத்தின் வழியே... நல்லதொரு விடயத்தை எழுத என்னையும் மதித்து அழைத்த உங்களுக்கு எனது வணக்கமும், நன்றியும்.
வாழ்க இந்தியா.

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

40 கருத்துகள்:

  1. நமது வாரிசுகள் சம்பாதித்து நம் கையில் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லை. அவர்கள் காலில் அவர்கள் நிற்கும் பலத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்தால் போதும். நீங்கள் கொடுத்திருக்கும் 12 கருத்துகளும் கை தட்டி வரவேற்கப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. தம வாக்கிட்டு விட்டேன். முதலில் கமெண்ட் இட்டபோது சப்மிட் செய்யப்பட்டிருக்கவில்லை!

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  2. நல்லதொரு விஷயத்தைப் பதிவிட்ட
    அன்பின் ஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு

  3. அருமையான கருத்துகளை சொல்லியிருக்கிறீர்கள். ஒரே ஒரு திருத்தம் தனி மனிதன் ஒருவன் பெற்ற கடன் தொகையான ரூபாய் 9000 கோடி இன்னும் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதே. பகிர்வுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவுக்கும், கருத்துரையில் தந்த தகவலுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  4. தங்களது கருத்துக்கள் நியாயமானவை
    நம் மக்கள் என்று புரிந்து கொள்வார்களோ?
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நல்ல விதமாக சிந்தித்தால் அனைவரும் நலமே தங்களது கருத்துக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  5. உங்கள் பதிவு மூலமே ,எனக்கும் அழைப்பு வந்துள்ளதை அறிய முடிந்தது !
    பதிலுக்கு, நீங்கள் அருமையாய் 'கொந்தளித்து' விட்டீர்கள் ,நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தாங்களும் உங்களது பாணியில் நக்கலடியுங்கள்.

      நீக்கு
  6. தங்கள் கருத்து நியாயமானது. தாங்கள் நினைப்பதும் சரிதான். ஆனால் இவையனைத்தும் சாத்தியமா என நினைக்கும்போது சற்று வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே மனிதர்கலால் முடியாதது எதுவுமே இல்லை அனைவர் மனமும் ஒன்று படுதல் என்பது சாதாரண விடயமில்லைதான் இருப்பினும் எல்லாம் நமது நன்மைக்காகத்தானே..

      நீக்கு
  7. கருத்துக்கள் அனைத்தும் அருமை சகோ. நாங்கள் நாளை சென்னை செல்கிறோம். ஊருக்கு வர ஒரு வாரமாகி விடும். தங்களின் அடுத்த பதிவுகளுக்கு இங்கு வந்தவுடன் கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமுடன் சென்னை சென்று வர எமது வாழ்த்துகள்.

      நீக்கு
  8. உண்மையிலே தாங்கள் சொக்க தங்கம்தான் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவனமாக கருத்துரை எழுதுங்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காரன் படித்தால் எனது கை, காலை எடுத்துருவாங்கே...

      நீக்கு
  9. வணக்கம் ஜி !

    சொல்லவந்த விடயத்தை அரசியல் கலந்தாலும் அழகாய்ச் சொல்லி இருக்கீங்க ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டினாலும் அதை நம் மக்கள் மனங்களில் இருந்து மறைக்க சில ஆயிரங்கள் போதும் ஏனெனில் அவ்வளவு அறிவாளிகள் நம் மக்கள் ! தாங்கள் சொன்ன மாற்றங்கள் வந்தால் நல்லது ஆனால் வராது ! சிறுவர் கல்விகள் பற்றி அழகாய் சொன்னீங்க எந்தத் தாயும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை பிள்ளை பால்குடி மறக்க முன்னரே பள்ளிக்கு அனுப்பவே ஆசைப்படும் அறிவு ஜீவிகள் உள்ளவரை பிஞ்சுகளின் எதிர்காலம் போராட்டமே !

    நன்றி ஜி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே மிகவும் விரிவாக அழகான கருத்துரை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமையான கருத்துக்களை
    பதிவின் மூலம் சொன்னீர் நண்பரே....
    நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  11. வழக்கத்த்திற்கு மாறாக ஒரு நீண்ட பதிவு. ஆனால் உங்கள் மனக் குமுறல்களை அழுத்தமாக சொல்லிவிட்டீர்கள். வைசாலி அவர்களின் தெரியாத்தனமாக பட்டியலில் என் பெயரையும் சேர்த்ததனால் நானும் எழுதி விட்டேன்.பாவம் வருத்தப் படப்போகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆதங்கத்தையும் படித்தேன் அருமையான கட்டுரையே.... இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை நண்பரே.

      நீக்கு
  12. ஒரு மாற்றத்திற்கு ஐந்தாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் இராணுவ ஆட்சி கொண்டுவரப்படுமாயின், நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் நிறைவேறும் என்று எண்ணுகின்றேன்.

    ஏற்புடையக் கருத்துக்கள் நண்பரே!

    இப்படி இருக்க வேண்டும் தன் தாய் நாடு என்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்... இல்லையெனில் நாட்டுப்பற்று இல்லாதவனாகவே பார்க்கப்படுவான்....

    அன்னிய நாடுகளில் சுய நலமும் தன் நாட்டின் நலமும் பெரிதும் பலமாய் சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதால் தான் மேலை நாடு என்றும் ஆதிக்க சக்திகளாகவும் இருக்கின்றனரோ?

    இந்த நிலை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்...

    வல்லரசும் நல்லரசும் மக்களின் மனதில் உதிக்கவேண்டும்...

    உதிக்கும் வரை நம் போன்றோர் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இராணுவ ஆட்சி வருவதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் அதுவே மாற்றத்தை உறுதி படுத்தி நடத்தும் ஆற்றலுக்குறியது.
      தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமையான சிந்திக்க வேண்டியவிடயங்கள்.மக்கள் செய்வார்களா???

    பதிலளிநீக்கு
  14. அருமையான கருத்துக்கள் தோழர்
    வாழ்த்துகள்
    தம +

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா.முதலில் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா.எனக்கு பல்கலைக்கழகத் தேர்வு நடைபெறுவதால் வலைப்பக்கம் வர இயலவில்லை அதன் விளைவாக தான் காலதாமதமாக வந்துள்ளேன் ஐயா.

    நான் எதிர்பார்க்காத பல செய்திகளை அறிந்துக் கொண்டேன் ஐயா.இதற்கு அடிப்படை எது என்று அருமையாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.நம்ம மக்கள் எப்படி தெரியுமா இலவசம் என்றால் போதும் அதுப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் உடனே வாங்கிடுவாங்க.அது மட்டுமா அனைத்து வகையான ஊழலுக்கும் இந்த சமூகம் அதாவது நாம தான் இதற்கு காரணம் ஐயா.
    சும்மா அரசு அலுவலகத்து போனால் போதுமே பத்து ரூபாய் கொடுத்தால் தான் உள்ளே செல்வதற்கு வழிவிடுவார்கள் ஐயா.
    நம் நாடு ஏழை நாடு அப்படினு ஏன் சொல்லுறாங்கனு தெரியல ஐயா..??ஒவ்வொரு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வாங்கும் இலஞ்சமும் ஊழலும் கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் வைத்துள்ள பணத்தை வெளிக் கொண்டு வந்தாலே நம்ம நாடு வல்லரசு தான்.ஆனால் இதற்கு எத்தனை நபர்கள் தயாராக இருப்பார்கள் ஐயா.

    படிக்காதவன் நாட்டை ஆளுகிறான் படித்தவன் அவர்களுக்கு கைக்கட்டி வாய் பொத்தி சேவை செய்கிறார்கள்.இந்நிலை என்று மாறும் ஐயா.

    அரசால் கொடுக்க முடியாத கல்வியை எப்படி ஐயா தனியார் பள்ளியால் தர முடிகிறது..??
    அவர்களை சொல்லி குற்றம் இல்லை எந்த பொற்றோர் சொல்லுகிறார்கள் என் பிள்ள அரசு பள்ளியில் படிக்குதுனு..??இல்லை அவர்கள் என் பிள்ள தனியா...ர் பள்ளியில் படிக்கறான்,அப்படினு பெருமையாக பேசுவார்கள்.இந்நிலை மாற்ற எத்தனை பெற்றோர்கள் தயார்..??

    ஐயா இதுக்குறித்து எனது கருத்தைப் பதித்தால் அதுவே ஒரு கட்டுரையாக மாறிவிடும் ஐயா.அதனால் எனது கருத்தை முடித்துவிடுகிறேன் ஐயா.

    மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வருக சகோ தங்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தேன் நேற்று தமிழ் மண வாக்கு மட்டும் இட்டுச் சென்றது எனது மனதை குழப்பிக்கொண்டு இருந்தது தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி நன்றி

    பதிலளிநீக்கு
  17. இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக என் தளத்தில் நான் ஒரு பதிவு எழுதுவேன் பின்னூட்டம் மிக நீண்டுவிடும் என்ப்தே காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஆவலுடன் காத்திருக்கின்றேன் படிப்பதற்கு.....

      நீக்கு
  18. நல்ல அலசல். மாற்றம் ஒன்றுதான் மாற்றம் தரும். அந்த மாற்றம் எப்போது யாரால் இந்த இந்தியாவில் வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை நோவா படகு நிகழ்வு மீண்டும் வந்தால் நடக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வருகைக்கு நன்றி அதென்ன ? நோவா படகு

      நீக்கு
  19. வணக்கம்
    ஜி
    எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. ஜி இன்றைய கல்வி முறை மாற வேண்டும் என்றால் இருவர் மனம் வைத்தால் மட்டுமே நடக்கும். ஒன்று மக்கள் அதாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகப் பணம் கட்டி சேர்க்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும்.

    மற்றொன்று அரசு கல்விக் கூடங்களை நல்ல உயர் தரமாமாக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தானும் பட்டணத்துக் குழந்தை பெறும் கல்வி பெற வேண்டும். அப்படி ஒரு வேளை அரசு வழங்கினால் மக்களுக்கு அரசுக் கல்வியின் மீது நம்பிக்கை வர வேண்டும். ஏனென்றால் இத்தனை வருடங்களாகத் தனியார்க் கல்விக் கூடங்களில் இருந்த மனது மாற வேண்டுமே. எனவே இது மிகப் பெரிய சவால்.

    மற்றொன்று பெரும்பான்மையானோர் அதாவது பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாதாரண மாணவர்கள் சேரும் கல்விக் கூடத்தில் வகுப்பறையில் இருப்பதை விரும்புவதும் இல்லை. அதனால்தான் எனவே இந்த மாற்றம் புல்லின் வேர்களில் இருந்து வர வேண்டும். நிறைய பேசலாம். முடிந்தால் பதிவு எழுதுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அருமையான அலசல் தங்களின் கருத்துரை நன்றி இதுதான் நடைமுறை உண்மை வருகைக்கு நன்றி

      நீக்கு