இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 30, 2016

உன்னுடன் – 16


ண்மையானவன்
(From my Heart)

த்தமி துணையே என பாடினேன்
ன்னை நினைத்தே வாடினேன்
யிரே எனதுயிரே எனச் சொல்வேன்
லகமே நீதான் என நினைத்தேன்
ண்மையானவள் நீயென உரைப்பேன்
ள்ளத்தை உனக்கென கொடுத்தேன்
ரிமையுடன் உன்னைத் தொடுவேன்
னது நினைவுகளை மறவேன்
னக்காக கடைசிவரை வாழ்வேன்
றுதியாய் இறுதிவரை இருப்பேன்
னக்கென இறைவனிடம் தொழுவேன்
ன்னை நினைத்தாலே அழுவேன்
ன்னை நினைத்தே அழுதேன்
ன்னையன்றி யாரை நாடுவேன்
ன்னிடமே சரணடைய வருவேன்
யர்ந்த நாள் என அதை நினைப்பேன்

ண்மையுடன்
 ன்’’னை உண்ண’’உன்னவன்

இன்று 30.05.2016 என்னவள் வனவாசம் சென்ற16 ஆம் ஆண்டு நினைவு நாள் என்னவளுக்காக முன்பு நான் எழுதிய கவிதையை படிக்காதவர்கள் கீழே சொடுக்கி படிக்கலாம் - கில்லர்ஜி


மரியாதைக்குறிய திரு. சுப்பு தாத்தா அவர்கள் எனக்காக பாடிய எனது பழைய திரு (மண்) நாள் பதிவின் கவிதை இதோ கீழே.....

கேளொலி

சனி, மே 28, 2016

கோவிலூர், கோடரி கோவிந்தன்


தோ பஸ்ல... போறானே கோடரி கோவிந்தன் கோபக்காரன் அவன் நல்லா ஹைக்கூ கவிதை எழுதுவான், ஆனா, வன்முறையாகத்தான் எழுதுவான்.
எப்படி ?

சுத்தியலை எடுத்து நெத்தியில் அடித்து பாத்தியை கட்டி பாத்தியா ? இந்த மாதிரி.
அடடே... கவிதை பிரமாதம்.

இவனோட கவிதைக்கு பாக்கிஸ்தான் விருதுகூட கிடைச்சுருக்கு.
எந்த கவிதைக்கு ?

துப்பாக்கியை எடுத்து பாக்கியராஜை சுட்ட துர்பாக்கியம் எமக்கேன் ?
இது நமக்குத்தானே பெருமை.

மெதுவாப்பேசு அவன் காதுல விழுந்தால் ? உனக்கும் விழும் வெட்டு.
ஏன் ? இப்படிச்சொல்றீங்க ?

உன்னைப் போலத்தான் ஒருத்தன் பெருமையா பேசுனான் இவனுக்கு தெரிஞ்சு பேசினவன் வீட்டுக்குப் போய் பெருமைப்பட பேசிய நாக்கே உமக்கு இதோ ஏகே. அப்படினு சொல்லிக்கிட்டே அவன் வாயிலேயே போட்டான் 47 குண்டு.
ஆத்தாடி பயமாவுல இருக்கு.

இப்படித்தான் இவன்கிட்ட ஒருத்தன் கடன் வாங்கியிருக்கான், இவன் கவிதை எழுதி தூது விட்டான்.
எப்படி ?

பாக்கி வாங்கிய பாக்கியநாதா பாக்கியை நீ தா தா அப்படினு...
அவன் கொடுத்தானா ?

பதிலை அவனும் ஒரு கவிதை போல எழுதி விட்டுக்கான்.
எப்படி ?

இந்த ஏரியாவுக்கே நான் தாதா நீயெல்லாம் எனக்கு சாதான்னு.
அய்யய்யோ அப்புறம் ?

இவனுக்கு கோபம் வந்து ஹாக்கி மட்டையாலே அடிச்சு பாக்கி கொடுக்க வக்கில்லாத பக்கி உனக்கு எதுக்கு இந்த பாக்கிய லட்சுமி அப்படினு அவன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வந்துட்டான்.
என்னய்யா ? இது மானக்கேடா இருக்கு.

ஆமா, இந்த லட்சணத்துல தேவயானிக்கு கவிதை எழுதிக் கொடுத்துருக்கான்.
எப்படி ?

தேவகோட்டை தேவதையே, தேவயானி எனக்கு தேவையே நீ அப்படினு...
ம், அப்புறம் ?

தேவாங்கு நீ எனக்கு தேவையில்லை நீ அப்படினு அவ சொல்லிட்டா.
பிறகு என்னாச்சு ?

எனக்கு தேவைப்படாத நீ தேவையில்லை உலகுக்குனு உலக்கையாலே அடிச்சுக் கொன்னுட்டான்.
அப்படீனா போலீஸ் இவனை கைது பண்ணலையா ?

இவனை கைது பண்ண வாரண்டோட வாரேன்டானு அலைஞ்சிருக்கார் இன்ஸ்பெக்டர் இன்பமூர்த்தி.
சரி.

வாரண்டோட வாரேன்டானு சொன்னவரு வீட்டுக்குப் போயி வராண்டாவுல ரவுண்டு கட்டி அடிச்சுருக்கான் இந்தக் கோவிந்தன்.
அப்புறம் ?

நான் போறேன்டா, போடி நாயக்கனூருனு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டாரு இன்ஸ்பெக்டரு.
இதெல்லாம் பத்திரிக்கைகாரனுக்கு தெரியலையா ?

நம்ம ‘’தினக்குடுக்கை’’ பத்திரிக்கையில் பத்தி, பத்தியா எழுதுனான் பக்கிரிசாமி.
சரி.

கோபமாக கோடரியோடு போனவன் எழுதுன, கையி எனக்கே சொந்தம்னு கையை வெட்டி கையோட கொண்டு வந்துட்டான்.
என்ன இது காலக்கொடுமையாவுல இருக்கு சரி, கையிலே ஒரு கையேடு வச்சு இருக்கானே.. அதென்ன ?

அந்தக் கையேடுலதான் யாரு... கை எடுத்தேன், கால் எடுத்தேன், தலையெடுத்தேன் இப்படிக் குறிப்புகள் எல்லாம் இருக்கும்.
அந்தக் குறிப்பு இருந்தால் நாளைக்கு போலீஸ் புடிச்சுக்கிருமே..

அட நீ வேற அவன் அதை அவுங்கள்ட்ட கொடுத்துதான் விக்கி பீடியாவுல அப்டேட் பண்ணச்சொல்றான், அப்புறம் அவன்ட்ட போயி இந்தக் கையேடு எதுக்குனு ? கேட்டுடாதே உன் கையை எடுத்துடுவான்.
இதையெல்லாம் தடுக்க ஒரு வில்லங்கத்தார் வராமலா... போயிடுவாங்க ?

சரி அவன் திரும்பி வர்றான் அவன் காதுல விழுந்துடுச்சோ என்னமோ, கையிலே கோடரி வச்சுருக்கான் நீ மேற்காலே போ, நான் கிழக்காலே போறேன் அவன் வந்தால், முதல்ல உன்னைத்தான் போடுவான்.

(இருவரும் ஆளுக்கொரு திசையை நோக்கி நகர்ந்தார்கள்)
 
இதற்கு மேல் என்னாச்சுனு அந்த பகவான்(ஜி) மேலே சத்தியம் எனக்கு தெரியாதுங்கோ - கில்லர்ஜி

வெள்ளி, மே 27, 2016

திடீரென...


திடீரென அவள் வீட்டுக்கு பெண் பார்க்க போனேன் தங்கைக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தாள், என்னைக் கண்டதும் உட்காரச் சொல்லி ஃபேன் போட்டு விட்டு காஃபி போட சென்று விட்டாள், இடைவெளியில் எனது பென்னை எடுத்து ஹைக்கூ கவிதை எழுதினேன்...

வீதியில் நடந்து போகும் பொழுது அவளும் பார்த்தாள், திடீரென அவள் கண்களில் மின்னல் போல ஒரு ஒளியைக் காணவும், மன எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பறந்தன...

வீட்டிலிருந்த மாமாவுக்கு திடீரென நெஞ்சுவலி பாமா எனக்கத்தினார் அடுப்படியிலிருந்து அத்தை ஓடிவர, சட்டென ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனால் கோமாவுக்கு போய் விட்டார் அட ராமா...

அப்பாஸ் நடந்து போகும்போது வழியில் கடையில் ஜூஸ் குடித்தான், திடீரென வந்து நின்ற ஈஸ்வரனை கண்டதும் மனதுக்குள் நினைத்தான் நம்மளை பீஸ் பண்ணுறதுக்குன்னே வர்றாங்கே...

இப்போதுதான் பார்த்தேன், திடீரென காணோம் நந்தாவை, தப்பித்து விட்டானே... எவ்வளவு பந்தாவாக போறான் வீட்டிற்கு போய் அவன் மனைவி சாந்தாவிடம் கேட்டேன் இந்த மாத சந்தா...

மழையில் நனையாமலிருக்க, மரத்தோரமாய் நின்றிருந்தேன் திடீரென மரம் சாய நான் சட்டென விலகி மயிரிழையில் உ.யிர் பிழைத்தேன் பிறகு வழியில் போன ஆட்டோவை அழைத்து வீட்டுக்கு வந்தேன்...

இரவு மிமிக்ரி ப்ரோக்ராம் முடிந்து வந்து இறங்கிய பக்கிரி வழியில் ஜக்கிரிப் பெட்டியில் காசு போட்டு கொண்டு இருந்தான் திடீரென வந்த போலீஸ் ஏன்டா போக்கிரிப் பயலே என பிடித்துக் கொண்டு போனார்...

பேசிக்கொண்டே கண்ணாடியை பார்த்து தலை சீவிக்கொண்டு இருந்தேன், பின்னாடி நின்ற நண்பன் கென்னடி விளையாட்டாக திடீரென என்னை தள்ளி விட்டான், முன்னாடி மூக்கு உடைந்து மூன்று நாள் ரெஸ்ட்...

வயல் ஓரமாய் நடந்து போனாள் கயல்விழி, நான் அவளையே பார்த்துக் கொண்டே... போனபோது திடீரென குறுக்கே பாய்ந்த முயல் ஒன்றால் பயந்து என்மீது சாய்ந்தாள் அந்த சாயல் சுகமானது...

எனக்கு திடீரென தோன்றியது வாழும் காலத்திற்குள் எதையாவது விதைத்து செல்லலாமே... உடனே நான் எழுதி வைத்திருந்த அதை எடுத்தேன் அதுதான் இந்தக் கதை...

Chivas Regal சிவசம்போ-
ஓஹோ... இப்படியும் கதை ஓட்டலாமோ... ?   

புதன், மே 25, 2016

நோட்டாவால் நொட்டப்பட்டவர்கள்

எலியால் சொடுக்கி பெரிதாக்கி காண்க
 தமிழகத்தை இப்படி ஆக்குவேன் - அம்புமாணி
எம் புள்ளை இப்படி சொன்னது குற்றமா ?
 
 கடைசி சந்தர்ப்பம் கொடுத்திருக்க கூடாதா ?
நீ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் நீதான் கும்பிடணும்.
 நான் பச்சைத் தமிழன்டா.....
நான்தான் ஊதா எம்ஜிஆர்.
அட இங்கே பாருங்க கூத்தை...
ஹூம் இதெல்லாம் ஒரு பொழப்பு.
 உன்னால, என்னை மாதிரி ‘’பீப் ஸாங்’’ பாடமுடியுமா ?
ஸூப்பர் கேள்வி மச்சி.
 தம்பி நான் குடிச்சேன் கஞ்சியைத்தான் நேற்று.
சரிங்கண்ணா....
 தலைவா உன் பெயர் ‘’எடு’’ப்பேன்.
அட இவன் எப்போ...
 1025 நோட்டாவுல, நமக்கு 87 பேரு போட்டு இருக்ககூடாதா ?
இதுக்குத்தானே கடைசி நேரத்துல பல்டி அடிச்சேன்.
 அடுத்து நாம லிட்டில் ஸூப்பர் ஸ்டார் ஆவோம்.
பேசியடியே தேர்தலை முடிச்சுட்டு ஷேவிங் பண்ணிட்டேன் சினிமாவுல ஹீரோ சான்ஸ் வாங்கி கொடுங்க... கமல், ரஜினியை ஓரம் கட்டுறேன்.
 கேப்டன் பிடிங்க எங்களோட ராஜிநாமாவை...
மஞ்சமாக்கான் நீ கூட திருவாடானையில் ஜெயிச்சுட்டியடா...
 தேவிபட்டணத்தில் மூழ்கி கர்மம் தொலைச்சாச்சு அடுத்த வேலை... ?
இங்கிலாந்து நாட்டு தேர்தலுக்கு முன் நேற்று ஒப்பந்தம் இட்டபோது...
 நான் ஒண்ணுமே சொல்லலீங்க சாமி கில்லர்ஜி
நம்பிக்கைதான் வாழ்க்கை.
நான் BJP காரனும் அல்ல ! இருப்பினும் இதை ஏற்கிறேன்.
தம்பி கில்லர்ஜி அங்கே என்னதான் நடக்குது ?

நோட்டா அவசியமே ஆனால் ? அதில் இன்னும் வலிமையான மாற்றம் வேண்டும்.- கில்லர்ஜி