இப்படி தொங்கி கொண்டு போவது
யார் படிக்காத
பாமரனா ? இல்லையே
பட்டம் படிக்கும் கல்லூரி மாணவன்தானே இவனுக்கு உயிரின் மதிப்பு தெரியாதா ? அப்படியென்ன அவசரமாக
போகவேண்டும் கணினியில் உலக எவ்வளவு விடயங்கள் படிக்கின்றான் ஓட்டுனர் சிறிய பிரேக்
அடித்தால் இவன்
நிலையென்ன என்பது
தெரியாதவனா ? இவன்
அடிபட்டு இறந்து விட்டால் அதற்கு காரணம் ஓட்டுனரா ஓட்டுனராகவே இருக்கட்டும்
இழப்பு யாருக்கு ? பெற்றோருக்குத்தானே
இனி கொள்ளி வைக்க மகன் ? இனி பிறக்க வழியில்லை காரணம்
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று அன்றே குடும்பக் கட்டுப்பாடு செய்தாகி விட்டது
நாம் அரசாங்கத்தை குறை சொல்கிறோம் இந்த பேருந்தில் முதல்வரோ, போக்குவரத்துதுறை
அமைச்சரோ பயணம் செய்யப்போவதில்லை தெரிந்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றி சிந்திக்க
நேரமில்லை அவர்கள் பங்குக்கு படியில் பயணம் நொடியில் மரணம் என்று மக்(கு)களுக்கு சித்தாந்த வரிகளை
எழுதி வைத்து விடுகின்றார்கள் டாஸ்மாக்கை திறந்து வைத்து குடி குடியைக் கெடுக்கும்
குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும், என்றும் சிகரெட் கம்பெனிகளுக்கு தாராளமாக
சலுகைகளை வழங்கி விட்டு புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது போன்ற
வசனங்களை எழுதி வைக்கின்றார்கள் மேலும் அவர்களுக்கு தலைக்குமேல் ஆரிரமாயிரம் வேலைகள் இருக்கிறது (சலூனில் அல்ல) மக்களின் (தன்மக்களின்) வாழ்வாதாரத்தை உயர்த்துவது எப்படி என்று.
இந்த பயணிகள் பேருந்தில்
கதவுகள் கண்டிப்பாக வைத்துதான் தயாரிக்க வேண்டுமென்ற கட்டாய சட்டத்தை இயற்றினால்
என்ன ? அயல்
நாடுகளில் கதவுகள் மூடினால்தான் பேருந்து நகரும் அப்படியொரு தொழில் நுற்பம்
தாங்கள் கேட்ககலாம் நீ அயல் நாட்டில் பார்த்து விட்டு இப்படி சொல்கிறாய் என்று
இல்லை நண்பர்களே... கீழே பாருங்கள்.
இதுவும் நமது நாட்டில்
ஓடும் பேருந்துகள்தானே இந்த முரண்பாடுகளால் மனித உயிர்களுக்குதானே நஷ்டம் அந்த
உயிர்கள் கண்டிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும், அடித்தட்டு மக்களுக்கும்
மட்டுமே ஒழிய பணக்கார வர்க்கங்களுக்கோ அல்லது அதிகார வர்க்கங்களுக்கோ அல்ல !
சரி இந்த அதிகார வர்க்கங்களுக்கு
அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது யார் கொடுத்தது ? நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும்தானே
பிச்சை (ஓட்டு) போடும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை இல்லை, ஆனால் பிச்சை பெறுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை இது
எந்தக்கடவுள் இட்ட சாபமோ தெரியவில்லை ஓட்டுரிமையின் தன்மை தெரியாத நமக்கு
ஓட்டுரிமை எதற்கு ? மன்னர் ஆட்சியை பிரகடணப்படுத்தி விடலாம்
இன்றைய ஆட்சியாளர்களும் வாரிசுகளைத்தானே கொண்டு வருகிறார்கள் மன்னர் ஆட்சி
நடந்தாலும் கொள்ளை அடிக்க மாட்டார்கள் காரணம் நாம்தானே ஆள்கிறோம் என்ற எண்ணங்களால்
சரித்திரத்தில் இடம் பெறுவோம் என்ற சிந்தனைகள் தோன்றக்கூடும் இவ்வுலகில்
பெரும்பாலான மன்னர் ஆட்சி நடைபெறும் நாடுகளில் மக்கள் நல்ல வாழ்க்கையே
வாழ்கின்றார்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பாருங்கள்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் திரு. டேவிட் காமரூன் (தகவல் தந்த சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி) ரயிலில்
அலுவலகத்துக்கு (பாராளுமன்றம்) செல்கிறார் உட்கார இருக்கை
இல்லை காரணமென்ன ? அங்குள்ளவர்கள்
நீயும் நானும் சமம் உனது வேலைதான் பிரதமர் நீ எங்களுக்கு கடவுள் இல்லை அதுவும்
நாங்கள் உனக்கு போட்டுக்கொடுத்த வேலை என்ற சிந்தனையாளர்கள் நம் நாட்டில் ?
ஒருமுறை
சென்னை விமான நிலையத்தில் ஒரு அரசியல்வாதியின் சின்னவீடு ஏதோ வெளிநாட்டுக்கு போகின்றாள்
நுழைவாயிலில் நின்ற சிலர் அவளின் காலை தொட்டு வணங்கினர் (இவன் பெற்ற
தாயை வணங்கி இருப்பானா ?) மற்ற அனைவரும் அவளை வணங்கினர் அனைவர்
முகத்திலும் ஒளிவட்டம் கடவுளைக் கண்டதைப்போல் அவள் அதை சட்டையோ, பேண்டோ செய்யாமல்
போய்க்கொண்டே இருந்தாள் அந்த இடத்தில் அவளையும் சட்டை செய்யாமல் சிந்தனைக்
கண்ணோட்டத்துடன் முகத்தில் சலனமின்றி ஒருவன் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்தான்
கில்லர்ஜி.
நண்பர்களே... நண்பிகளே...
மக்களாகிய நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சிந்திக்கும்
எண்ணமில்லை இனியாவது சிந்திப்போமே... நமக்கு வாக்குரிமை தேவையா... தேவையில்லையா ? வாக்கால் நமது வாய்க்கே
வாக்கரிசி விழுகிறது மக்கள் எண்ணங்களில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை நமது வாழ்வில்
ஏற்றமில்லை.
CHIVAS REGAL சிவசம்போ-
இந்த ஆளு விபத்தைக்குறித்து பதிவு போடுறார இல்லை
அரசியல்வாதிகளை தாக்கி பதிவு போடுறாரா ?
சாம்பசிவம்-
விபத்து நடக்குறதுக்கு காரணமே அரசியல்வாதிகள்தானே...
சிவாதாமஸ்அலி-
டாஸ்மாக்குலே
கிடக்கிற கூமுட்டை எல்லாம் கேள்வி கேட்குது.
காணொளி