என்னை
தினமும்...
குளிப்பாட்டினாய்,
குளிரூட்டினாய்,
இணைப்பாக்கினாய்,
இனிப்பாக்கினாய்,
கனிப்பாக்கினாய்,
கனிவாக்கினாய்,
இளைப்பாக்கினாய்,
இளைப்பாற்றினாய்,
உணவாக்கினாய்,
உணவாகினாய்,
அணைப்பாக்கினாய்,
அணையாகினாய்,
களிப்பூட்டினாய்,
களிப்பாகினாய்,
விழியாகினாய்,
விழிப்பாக்கினாய்,
சுகமாக்கினாய்,
சுகமாகினாய்,
இச்சையாகினாய்,
இச்சையாக்கினாய்,
எச்சிலாக்கினாய்,
எச்சிலாகினாய்,
சந்தோஷமாக்கினாய்,
சந்தோஷமாகினாய்,
சுவையாக்கினாய்,
சுவையாகினாய்,
நம்
இருவரை நால்வர் ஆக்கினாய் இன்று என்னை மட்டும் ஏன் தனி ஒருவன் ஆக்கினாய் ?
இன்று 30.08.1991 & 30.08.2016 எங்கள் (25) வெள்ளி விழா ஆண்டு திருமண்நாள்
நினைவாய் என்னவளுக்கு எனது பா(ய்)மாலை
காணிக்கை.
காணொளி
வணக்கம் ஜி !
பதிலளிநீக்குசாதலால் உயிரை மேவும்
சங்கடத் தீயில் பட்டுக்
காதலால் கண்ணீர் சொட்டக்
கவிதைகள் தந்தாய் ! சொந்தம்
போவதால் பிரிவென் றாகா
புலனுளே வாழ்வார் நாளும்
ஆதலால் அருமை நண்பா
அமைதிகொள் அடுத்து நாமே !
இனிமையான கவிதைதான் இருந்தும் இதயம் நனைக்கிறது
இறுதி வரிகள் !
நினைவோடு வாழுங்கள்
நிம்மதி கொள்ளுங்கள் !
இல்லற நாளை எண்ணி
பதிலளிநீக்குஇனித்திடும் நெஞ்சில் இன்னும்
கல்லறை சென்றார் காதல்
கடிமணம் கமழக் கண்டேன்
நல்லறம் கொண்டு நீயும்
நலமுடன் வாழ்க வென்றே
வல்லவன் தாளைப் போற்றி
வாழ்த்தியே நிற்கின் றேனே !
வாழ்க வளத்துடன் !
இழப்பு அளவிட முடியாதது என்றாலும் அவர்கள் நினைவுடன் வாழ்ந்திடத் தான் வேண்டும்.
பதிலளிநீக்குநல்லதொரு பாமாலை.
கில்லர்ஜிக்கும் அவர் நினைவில் வாழும் அவர் துணைவியாருக்கும் திருமண நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்பத்தையும், மன வேதனையையும் பகிரும் நிலையில் நீங்கள் பெரும் தாக்கத்தை நண்பர்களிடையே ஏற்படுத்திவிடுகின்றீர்கள். அதுதான் உங்கள் நட்பின் அடையாளம்.
பதிலளிநீக்குஇன்னோரு சென்மம் - இருந்தா..
பதிலளிநீக்குஇருந்தா.. என்ன!.. நிச்சயம் இருக்கின்றது..
அப்போது மீண்டும் தொடரட்டும் அன்பின் உறவு!...
இறைவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை தரப் போறீங்க:)
பதிலளிநீக்குநெகிழவைத்துவிட்டீர்கள் கில்லர்ஜி!
பதிலளிநீக்குஉங்கள் கலாய்த்தலுக்குள் இவ்வளவு கண்ணீர் இருக்குமென்று நினைத்ததில்லை. உன்னை எண்ணிப் பெருமைப்படுகிறேன் நண்பா!
“பழகிய காதல் எண்ணிப்
.....பள்ளியில் விழுந்து நித்தம்
அழுவதே சுகம் என்பேன் யான்
.....அறிந்தவர் அறிவாராக!” -கண்ணதாசன்.
திருமண நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.
அன்பான நெஞ்சம் வாழ்க !
உன்னவள் - உன்
பதிலளிநீக்குஉள்ளத்திலே வாழ்வதால் தானே
தங்கள் உள்ளத்து
உண்மை வரிகளை பகிர்ந்தீர் - அவள்
உமது உள்ளத்திலே இருக்கையிலே - நீர்
தனியாளல்ல - நீர்
உன்னவளையும் சுமக்கும்
புனிதர் என்பேன்!
தங்கள் மனைவியார் கொடுத்து வைத்தவர் - தங்களைப் போல் ஒரு காதல் கணவரைப் பெற...
பதிலளிநீக்குஆனால்...
கொடுத்து வைக்காதவர் - தங்களுடன் வாழ...
:~-(
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதுணையின் பிரிவு என்றுமே ஆறாத்துயரத்தை தருவதுதான். தங்கள் மனதை தேற்றிக்கொள்ள ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். மாறாத நினைவுடன் வாழும் தங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.
நன்றியுன்
கமலா ஹரிஹரன்.
அவர் நினைவில் வாழும் நீர் எல்லாம் தெரிந்தும் துன்பத்தின் வசம் சிக்கலாமா
பதிலளிநீக்குதங்களின் திருமண நாளில், தங்கள் நினைவில் வாழும் தங்கள் துணைவியாருக்கு படைத்திருக்கும் பாமாலை கண்ணீர் வரவழைத்துவிட்டது. வாழ்த்து சொல்லும் நாளில் ஆறுதல் தான் சொல்லமுடிகிறது. தங்கள் துணைவியாரின் நினைவோடு வாழுங்கள்!
பதிலளிநீக்குமனம் கனக்க வைத்த பிரிவு கவிதை.
பதிலளிநீக்குத ம 6
மிக அருமை. உங்களுடன் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை அவங்களுக்கு! அல்லது அவர்களுடன் சேர்ந்து வாழ உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை! என்றென்றும் உங்கள் நெஞ்சில் வாழ்பவர்களுக்கான அஞ்சலி சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குமனதை உருக்குகிறது...உலுக்குகிறது உங்களின் ஆற்றாமைப் பதிவு.
பதிலளிநீக்குஇனிய திருமணநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமனது வலிக்கிறது....சகோதரா.
உள்ளத்தை உருக்கும் வரிகள்,
பதிலளிநீக்குஉள்ளத்தை உலுக்கிறது தங்கள் நிணைவு பாமாலை
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் தனி ஒருவனானாலும் கோடியில் ஒருவனாக மிளிர்கின்றீர். வாழ்க உங்கள் காதல் உறவு, வாழ்த்துக்கள்
கோ