இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 11, 2017

வறுமையின் நிறம் இருட்டே...

வறுமையின் நிம் இருட்டே...

இறைவா என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு முதற்கண் நன்றி.
நீ படைத்த இவர்களை என்னை காண வைத்தமைக்கும் நன்றி.
கண்டு இவர்களுக்கு என்னை உதவ வைத்தமைக்கும் நன்றி.
இவர்களுக்கு உதவ என்னை செல்வந்தனாக்கியதற்கும் நன்றி.
என் சந்ததிகளை இந்நிலைக்கு ஆகவிடாமல் என்னை தடுக்க வைத்தமைக்கும் நன்றி.
பின்குறிப்பு ஆக்கமாட்டாய் என்பதற்கும் நன்றி.

இருப்பினும் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயடா... சண்டாளா...

என் நெஞ்சிருக்கும்வரை என் நினைவில் நிற்க வேண்டியவை.

நட்பூக்களே கீழ்காணும் இவையனைத்தும் முதலில் எனக்கே பிறகே தாங்களுக்கு.

ஸ்ரீ சாரதா சக்தி பீடம் சென்னை.

சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் சென்னை.
தி யுனைடெட் பேஸிக்கிலி ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் கோவை.

47 கருத்துகள்:

  1. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது முறையில் அமைத்திருக்கிறீர்கள் பதிவை. நற்செயல் புரிந்திருக்கிறீர்கள் என்றும் தெரிகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாாக எனக்கு தொடர்பு உள்ளவை நண்பரே

      நீக்கு
  2. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்று ளெல்லாம் தலை”
    என்ற அய்யன் வள்ளுவனின் வழி நடக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. நல்லசெயலுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

  4. செல்வத்தின் பயன் ஈதல் என்பர் நம் முன்னோர்
    தங்களின் செயல் போற்றதலுக்கு உரியது நண்பரே

    பதிலளிநீக்கு
  5. இறைவன் எம்மைப் படைத்தமைக்கு நன்றி
    இன்னல், இன்பம், துயரம் எனப் பல தந்து
    இவற்றில் இருந்து எத்தனையோ கற்றுத் தேற
    துணை நின்று உதவிய இறைவனுக்கு நன்றி!
    வாழ்க்கையில் துன்ப, துயரங்கள் வரலாம்
    அத்தனையையும் கடந்து வாழ்ந்தவர் தான்
    உண்மையான மனிதர் என்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான கருத்துரை வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம்
    ஜி

    தாழ்வதும் உயர்வதும் அவன் நினைத்தால் முடியும் உணர்வு வலிகள் மிக்க படம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. சினிமாகாரன்களைவிட டபுள் வேடம்போடுவதில் கடவுளை மிஞ்ச முடியுமா...?

    பதிலளிநீக்கு
  8. நல்ல விஷயம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கருணை உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன் :)

    பதிலளிநீக்கு
  10. நல்ல செயலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  11. முதல் படம் மனதைக் கலங்க வைத்தது. 'கருணை உள்ளமே... கடவுள் இல்லமே'. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மிக மிக நல்ல சேவை!! தங்கள் சேவை தொடரட்டும் ஜி! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. என்ன ஆயிற்று அன்பரே. தங்கள் தொடர்பு எண் இடமி ல்லை. அருள் கூர்ந்து பிழை பொறுத்து. தொடர்க.

    பதிலளிநீக்கு
  14. நல்ல மனம் கொண்ட தங்களின் வாழ்வு மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. பிறர் துன்பம் தீர்க்கும் அளவுக்கு உங்களுக்கு சக்தியை இறைவன் கொடுத்திருப்பது கண்டு நன்றி! உங்கள் பரந்த மனதுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. பிறருக்கு உதவும் உங்களின் உயர்ந்த எண்ணத்துக்கு வாழ்த்துக்கள் ஜீ!

    பதிலளிநீக்கு
  17. நற்பணிகள் தொடரட்டும்
    உங்கள் வலி புரிகிறது

    பதிலளிநீக்கு
  18. நல்ல செயல் வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. தங்களின் இச்செயலுக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  20. வாழ்க கில்லர்!தெலைவழி தொடர்பு கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  21. உதவும் மனம், உதவும் கரங்கள் உங்களுக்கு கடவுள் கொடுத்தற்கு நன்றி.
    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    இறைவனின் விளையாட்டுக்கு காரணம் யாரும் அறிய முடியாது.
    மனதை தளர விடாதீர்கள்.

    எங்களுக்கும் கடவுள் சோதனை கொடுத்து இருக்கிறார். திட்டினாலும், அடித்தாலும் தாயின் காலை கட்டிக் கொள்ளும் குழந்தை போல் இறைவனை பிடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் வேறு என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு