இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 24, 2017

காலணி


காலமெல்லாம் உன் காலடியில் கிடந்தேனே...
காலம் ஒருநாள் மாறுமென நினைத்தேனே...
வீரநடை போடும்போது வீரியமாய் வந்தேனே...
வீட்டுக்கு வந்தவுடன் வாசலில் கிடந்தேனே...

காலமெல்லாம் உன் கால்கள் நடக்க...
காவல் காத்து வாயிலில் நான் கிடக்க...
எழுந்து உள்ளே போக என்மனம் தடுக்க...
எழ முடியாமலும் என்னுடல் படுக்க...

எம்மையும் மதிக்கும் ஜீவன்கள் இருக்கிறதோ...
ஷோகேஸ் கடைகளில் அலங்கரிக்கிறதோ... 
வாங்கியவர்களுக்கு, மட்டும் மனம் மறுக்கிறதோ...
எமது மனம் கொடுத்தவர்களை வாழ நினைக்கிறதோ...

அந்த ஜீவன்கள்தான் செருப்புக்கடை அதிபர்கள்
வாழ்க அவர்கள் வளர்க அவர்கள் தொண்டு
  
இப்படிக்கு
Bata Brothers  & Sons

42 கருத்துகள்:

  1. காலணியைப் பொறுத்தே பாதங்களில் வலியோ, இதமாக இருத்தலோ கிடைக்கும். காலணிகள் சரியில்லை எனில் நடப்பது கஷ்டம். இங்கே ஒரு காலணி வாங்கிட்டு அதைப் போட்டுக் கொண்டதில் கட்டை விரல் வீங்க ஆரம்பித்து விட்டது! :(

    பதிலளிநீக்கு
  2. அவைகளின் மனதில் எண்ணம் இருந்தால் இப்படித்தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. எந்தக் காலனியிலும் இந்தக் காலணி... காலனியாதிக்கம் செலுத்த முடியாதோ?! புது செருப்புக் கடிக்கும்...!

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  4. காலணி காலணிதான் ,அது காதணியும் ஒன்றாக முடியாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனால்தான் தங்கத்தில் செய்யவில்லையோ ஜி ?

      நீக்கு
  5. ஆமாம் ஜி செருப்புகள் பேசினால் இப்படித்தான் இருக்கும்.

    கீதா: மேற் சொன்ன கருத்துடன்....செருப்புகளிடமிருந்து நிறைய தத்துவம் இருக்கிறது...ஸோகேசில் அலங்கரிப்பவை காலில் ஏறியதும் மிதிபடுகிறதே அதிலிருந்து மனிதன் என்னதான் உயரத்தில் சென்றாலும் கீழே வரும் நிலையும் ஏற்படலாம்....

    செருப்பு நம்மைக் காக்கிறது ஆனால் நாம் அதை மதிப்பதில்லை அது போல் நமக்காக உழைத்து உழைத்துத் தேயும் மனிதர்களை நாமும் கௌரவிப்பதில்லை...மதிப்பதில்லை...பல சமயங்களில் தூர எறிகிறோம் வீட்டினுள் கூட விடாமல்...

    நிறைய சொல்லலாம்....இல்லையா ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பல நேரங்களில் இவைகளைக் குறித்து யோசித்து இருக்கிறேன்.
      சில டாஸ்மாக் ஜடங்களைவிட இவை உயர்ந்தவை என்று.

      நீக்கு
  6. வித்யாசமான அணுகுமுறை
    தம

    பதிலளிநீக்கு


  7. காலணியின் சிந்தனை நன்றாக இருக்கிறது ..

    காலணியை நாம் காலில் போட்டு மிதித்தாலும் அது நம் காலை பாதுகாக்கிறது ஆனால் படித்த மனிதர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே படித்தவர்கள் பலருக்கும் பண்பு வளரவில்லை

      நீக்கு
  8. காலணிகளின் கவிதை......ம்ம்...


    நன்று..

    பதிலளிநீக்கு
  9. ஆனால் அறிமுகம் என்ற பெயரில் காசு கொடுத்து வாங்கிய கவுரவம் காலில் போட்டு ,மிதிக்கிறாயே என்று ஒரு கடி கடிக்கிறதே? கீதா அம்மாவின் கட்டை விரல் வீங்கியதே?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. காலணி பேசுவது அருமை.ஒவ்வொரு பொருளுக்கும் பேசும் தன்மை இருந்தால் எப்படி இருக்கும்?

    என் அம்மா வீட்டுக்கு வந்தவுடன் காலணிகளை விசிறி அடித்து தூக்கிப் போடக் கூடாது என்பார்கள் அத்ற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பார்கள், அதுவே அதற்கு நாம் கொடுக்கும் மரியாதை தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உங்கள் அம்மா சொல்வது மிகவும் சரி.
      அதை நாம் வணங்க வேண்டியதில்லை அதற்காக உதாசீனப்படுத்தாமல் இருந்தால் போதும்.

      நீக்கு
  11. எழுதியதை ரசித்தேன். காலணி இல்லாமல் எங்கேயும் செல்ல இயலாது. ஆனால் எல்லா நல்ல இடங்களிலும் காலணியை அனுமதிக்காமல் வெளியே விட்டுவிடுகிறோம். வாழ்க்கையிலும் நிறைய பேர்களின் உதவியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்களை நாம் நம்மோடு ஒன்றாக சேர்ப்பதில்லை. (அதாவது மரியாதையைத் தருவதில்லை)

    வித்தியாச வித்தியாசமாய் யோசிக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. அவை அவை இருக்குமிடத்தில் இருந்தால்தான் சிறப்பு. காலணி கால்களில் தான் இருக்க வேண்டும் அவை என்ன பரதன் சுமந்த பாதுகைகளா தேவாலயங்களில் காலணி அனுமதிக்கப் படுகிறதே வீட்டிற்கென்று அணியவும் காலணிகள் உள்ளதே காலணியே இல்லாமல் செல்வோருமுண்டு. என்னென்னவோ எண்ணங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அயல் தேசங்களில் மருத்துவமனையின் உள்ளே காலணி இட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
      ஆனால் இந்தியாவில் கட்டாயமாக மறுக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகவே வியாதிகள் பெருக்கம் உண்டாகிறது வெறும் காலுடன் நடப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

      நீக்கு
  13. காலணியில் பலவகை உண்டு. சில காலணிகளை மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டுக்குள் போட்டு நடப்பதும் உண்டு. எனவே காலணி வருந்தத் தேவையில்லை. அதிர்ஷ்டம் இருப்பின் வீட்டுக்குள்ளும் வரலாம்! அடுத்த ‘பிறவி’யிலாவது வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அடுத்த பிறவியில் வாய்ப்பா ? ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
  14. அருமை நண்பரே..என்காலணி என்னிடம் விடை பெற்ற கதை... தங்கள் காலனியை படித்ததும் நிணைவுக்கு வந்தது நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நினைவு கவிதை ஆனதையும் படித்தேன் நண்பரே

      நீக்கு
  15. அருமையான பாவரிகள்

    கடையிலே அழகுப் பொருள்
    படையிலே மிதிபடும் பொருள்
    காலணி!

    பதிலளிநீக்கு
  16. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    பதிலளிநீக்கு
  17. பேசும் சக்தி இருந்தால் இன்னும் எப்படியெல்லாம் அது பேசியிருக்குமோ!

    மனதில் வருத்தத்தைச் சுரக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  18. உண்மைதானே....
    பேசும் சக்தி இருக்கும் பட்சத்தில் இன்னும் நிறையச் சொல்லியிருக்கும்....
    அருமை அண்ணா....

    பதிலளிநீக்கு
  19. செருப்பின் சிந்தனையை வார்த்தையாக்கிய விதம் அருமை சகோ :)

    பதிலளிநீக்கு