தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 01, 2018

விமான நிலையத்தில், கில்லர்ஜி



தமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம்

பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சுமைகள் குறைவாகவே இருக்கும், நானும் எனது சுமையை லக்கேஜில் சேர்த்து விட்டு வழக்கம்போல் எனது கைக்குழந்தை எனது கழுத்தில் தொங்கி கொண்டு இருந்தது, சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்து, கடவட்டையில் முத்திரை குத்தி, விமானச்சீட்டை பரிசோதித்து இருக்கை எண் அட்டையும் வழங்கி விட்டார்கள் அனைத்தும் முடிந்தது அடுத்து செல்ல வேண்டியது விமானத்தின் உள்ளேதான் ஒரு அதிகாரி என்னை நிறுத்தினார் கடவட்டையை கேட்க கொடுத்தேன்.

எங்கே போறீங்க ?
அபுதாபி.
ஃபோட்டோ பாஸ்போர்ட்டில் ஒரு மாதிரி, விசாவில் ஒரு மாதிரி, நேரிலே வேற மாதிரி இருக்கீங்க ?
ஆமா, ஸார் அது எடுத்து மூணு வருஷமாச்சு அன்றைக்கு அப்படியிருந்தேன்.
ஏன் ?
அது என்னோட பழக்கதோஷம் வருஷத்துக்கு ஒரு தடவை மாற்றிடுவேன்.
ஒரு மாதிரியாக பார்த்தார்
கேமரா புதியதா ?
இல்லை பழையது.
எல்லோருமே வரும்போதுதான் கொண்டு வருவாங்க நீங்க போகும்போது வச்சுருக்கீங்க...
நான் பல நாட்டுக்கும் போவேன் அதனாலதான்.
கையிலே வச்சுருக்கீங்க லக்கேஜ்ல போடாமல்... ?
எப்பவுமே கையிலேதான் இருக்கும் நான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருப்பேன்.
இங்கே, ஃபோட்டோ எடுக்ககூடாது.
இங்கே எடுத்தால் நீங்க நடவடிக்கை எடுக்கலாம்.
கேமராவை சோதிக்கனும் புதுசா ? பழசானு ?

கேமராவை ஸ்விட்ச்சை ஆன் செய்து ஃபோட்டோவை திறந்து காண்பித்தேன், வரிசையாக பார்த்தவர் தினமலர் பேப்பரில் மதுரை வலைப்பதிவர் விழா வந்திருந்த பேப்பரை ஃபோட்டோ எடுத்து வைத்திருந்தேன் தேவகோட்டை தியாகிகள் ரோட்டில் ஒருசிறுவன் கையில் கோடரியோடு சிங்கத்தை விரட்டிக்கொண்டு ஓடும்போது பார்த்ததை எடுத்திருந்தேன் மதுரை அண்ணாநகரில் சாக்கடையை மறைத்து தடுப்புச்சுவர் கட்டாமல் ரோட்டில் சைக்கிள் பைக்கில் நடந்து போகிறவர்கள் உள்ளே விழுந்து விடும் சூழல் அதைப் புகைப்படம் எடுத்திருந்தேன் பதிவு எழுதுவதற்காக... அனைத்தையும் பார்த்தவர் கேட்டார்


இதென்ன சாக்கடையை ஃபோட்டோ எடுத்து இருக்கீங்க ?
இதுவரை நான் பொறுமையாகவே பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்
ஆமா.
ஏன் ?
அது என்னோட இஷ்டம்.
அப்பன்டௌண் ஒரு மாதிரியாக பார்த்தான்ர்
இந்த பத்திரிக்கையிலே இருப்பது யாரு ?
நாந்தான்.
எப்போ வந்தது  ?
இன்றுதான்.
நீங்க அபுதாபியிலே என்ன வேலை செய்றீங்க ?
பத்திரிக்கை துறையிலே...
அரபு நாட்டுல பத்திரிக்கை துறையில எப்படி வேலை கொடுப்பாங்க ?
நான் அடுத்த நாட்டு செய்திகளை சேகரிப்பேன் இதுதான் என்னோட வேலை.
இந்த சாக்கடை ஃபோட்டோவை பத்திரிக்கையில போடுறதுக்கா ?
ஆமா என் கண்முன் எது நடந்தாலும் எழுதுவேன் புகைப்படம் எடுப்பேன்.
எந்த நாட்டுக்கு போயிருக்கீங்க ?
அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாண்ட், உகாண்டா, ஆஸ்திரேலியா இன்னும் நிறைய போயிருக்கேன்.
எதுக்காக போனீங்க ?
ஊர் சுத்திப்பார்க்க... செய்தி சேகரிக்க...

மீண்டும் கடவட்டையை சோதித்தார் விமானம் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது என்பது எனக்கும் புரிந்து விட்டது மேலும் சுங்க சோதனை முடிந்து விமான இருக்கை எண் வாங்கிய பிறகு நாம் எக்காரணம் கொண்டு வெளியே போக முடியாது மேலும் விமான இருக்கை எண் பெறப்பட்ட பயணி கண்டிப்பாக விமான நிலையத்துக்கு உள்ளேதான் இருக்கமுடியும் அந்தப் பயணிக்காக விமானம் புறப்படும் நேரம் கடந்தும் இருபது நிமிடம் காத்திருக்கலாம் என்பது விதிமுறை.

இப்படித்தான் சென்னை விமான நிலையத்தில் என்னை ஒருமுறை உள்ளே நுழைய விடாமல் ½ மணி நேரம் அலைய விட்டார்கள் போராடி உள்ளே சென்ற நான் விமான இருக்கை எண் வாங்கிய பிறகு பழிக்குப்பழி வாங்க கழிவறைக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு விமானத்தை பத்து நிமிடம் நிறுத்த வைத்து அனைவரையும் சுற்றுல விட்டேன் என்பது வேறு கதை. வேண்டுமானால் நான் அவசர வேலையாக வீட்டுக்கு போகிறேன் எனச் சொல்லி பயணத்தை ரத்து செய்தாலொழிய அதுவும் பணம் கண்டிப்பாக கிடைக்காது மேலும் ஒரேயொரு காரணம் இருக்கின்றது நம்மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு போலீஸார் வேண்டுமானால் நம்மை அழைத்துப் போக முடியும் வேறு எந்தக் கொம்பனாலும் நமது பயணத்தை நிறுத்த முடியாது இது அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும்
இது என்ன ஸ்டாம்பு நிறைய அடிச்சு இருக்கு ?
அது என்ன முத்திரைனு உங்களுக்கு தெரியாதா ?  
கேள்விக்கு பதில்.

இப்பொழுதுதான் எனக்குள் உறங்கி கிடந்த சைத்தான் விழித்தான் எமிரேட்ஸில், நம்மை சந்தேகத்தின் பேரில் பொது இடத்தில் விசாரிக்கும் சிஐடியைக்கூட நீங்க யாரு ? உங்களோட ஐடியை காண்பிங்க என்று கேட்கலாம் அவர்களும் காண்பித்து விட்டே நமது ஐடியை கேட்பார்கள் இதற்கு அங்கு உரிமை உண்டு ஆனால் பலரும் கேட்பதில்லை நான் கேட்டிருக்கிறேன் அதையும் பக்கவமாக கேட்டால் கோபப்படமாட்டார்கள் காரணம் அரபிப்பசங்க என்னைப் போன்ற அப்பாவிகளைக் கண்டால் விளையாட்டுக்காக சிஐடியைப் போல் நடித்துக் கேட்டு வாங்கி கொண்டு ஓடிவிடுவார்கள் அவர்கள் தூக்கி வீசிவிட்டு போய் விடுவார்கள் என்பது வேறு விசயம் பிறகு நாம் போலீஸ் ஸ்டேஷன் அலைய வேண்டியது வரும்


இந்த முத்திரை ஜெர்மனி பெர்லினில் அடித்தது.
யூஎஸ் ஆர்மினு, போட்டுருக்கு....
ஆமா.
ஜெர்மனினு சொல்றீங்க ?
சார் உண்மையிலேயே தெரியலையா ? இல்லை வேற ஏதும் ஐடியாவா ?
ஐடியானா ?
வேறென்ன சார் ஜெர்மனி பெர்லினில் யூ.எஸ். ஆர்மி இருப்பது தெரியாதா ?
சரி அமெரிக்கா விசா ஸ்டாம்பு இல்லையே ஏன் ?
அது என்னோட பழைய கடவட்டையில் இருக்கு.
பழையது எங்கே ?
தேவகோட்டையிலே இருக்கு, எடுத்து வரவா ?
என்ன நக்கலா ?
பின்னே உங்களுக்கு வேண்டியது என்ன ? நான் இப்போ போற நாட்டுக்கான விசாவும் விமான டிக்கெட்டும் சரியா இருக்கானு எல்லா சோதனையும் முடிஞ்சு விமானத்துக்கு உள்ளே போறதுக்காக அனுப்பிட்டாங்க நீங்க அதிகாரினுங்கிறதுக்காக கடைசி சோதனையில வந்து இவ்வளவு அவசியமில்லாத கேள்வி கேட்கிறீங்க... இது என்னோட மூணாவது கடவட்டை எல்லாத்தையும் வச்சுக்கிறனும்னு அவசியமில்லையே... எனக்குப் பின்னால் சுமார் முப்பது பேர் வரிசையில் நின்றவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்

ஏன் ஸார் எங்களை இப்படி நிறுத்தி வைக்கிறீங்க... எங்களுக்குத்தான் சோதனை முடிஞ்சிருச்சே ?    
சலசலப்பு கேட்டு பெரிய அதிகாரியொருவர் வந்து கேட்க எனக்குப் பின்னால் நின்ற கோட்ஸூட் போட்ட கோமான் ஒருவர் கடகடவென ஆங்கிலத்தில் புகார் அளிக்க ஃபைனல்ல ஏன் இப்படிச் செய்றீங்க ? சுருக்கமாக முடிங்க எனச் சொல்ல என்னை முறைத்து விட்டு எனது கடவட்டையை தந்து விட்டு அடுத்து வந்தவர்களை பெயரையும் வந்தவர்களின் புகைப்படத்தையும் மட்டுமே பார்த்து விட்டு அனுப்பிக் கொண்டிருக்க நான் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’அது’’ எனது கண்ணில் பட எழுந்து அதனருகே போன என்னை அந்த அதிகாரி வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தொடரும்..

49 கருத்துகள்:

  1. ஒருவழியா இப்போதான் படிச்சு முடிச்சேன்...

    என்னா ஒரு வில்லத்தனம்!...

    ஏதோ நல்ல காலம்..
    ஏழரை பார்வை படாமல் போச்சு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி குருப்பார்வை நம்மீது உண்டு ஜி வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. அப்பப்பா என்ன ஒரு நெஞ்சுரம்.....
    பயங்கரம்.....
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  3. மதுரையில் நடந்த பதிவர் விழா செய்தி (தினமலர்) அருமை.
    உங்கள் விமானநிலைய அனுபவங்கள் படித்து வியந்தேன்! இவ்வளவு சோதனையா?
    அடுத்து அது என்ன? தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

    தில்லி டு பாட்னா ஒரு விமானக் கதை என்றால் இங்கும் ஏதோ ஒரு கதை போல!! இதோ வாசிச்சுட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மீசையின் விஸ்தீரணத்தைக் கண்டும் உங்களிடம் கேள்வி கேட்கத்துணிந்த அந்த ஆ...பீசரை என்னவென்று சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அவருக்கு மீசையே கிடையாது. அவருக்கு மீசையை கண்டால் பிடிக்காதோ...

      நீக்கு
  6. ஆஹா... உட்காரும்பொழுது உங்கள் கண்ணில் பட்ட "அது" என்ன? சிக்கினாரா அந்த சிங்காரம்?

    பதிலளிநீக்கு
  7. என்னாது தாய்நாடு வந்துட்டு மீஈண்டும் போகும் போது பொருட்சுமை குறைவா....ஆஆஆஆஆஆ....ஆனால் எனக்குத் தெரிந்து பலரும் பொட்டி பொட்டியா இல்ல கொண்டு போவாங்க....அத்தனை வகைப் பொடிகள், ஊறுகாய்கள் என்று!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது குடும்பத்தோடு வசிப்பவர்கள் தனக்கு அனுமதிக்கப்பட்ட எடையை மளிகைச் சாமான்களோடு சரி கட்டிச் செல்வார்கள்.

      நீக்கு
  8. கைக்குழந்தைய இப்படியா கேள்வி கேட்பாங்க!!!! ஹா ஹா ஹா

    சரி அந்த அது என்ன என்று அறியனுமே....ஏதோ ஒரு யூகம் இருக்கு...மனசுக்குள்ள அந்த "அது" அதுவா இருக்குமோன்னு!! தொடர்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ￰பாவங்க அந்த அதிகாரி .உங்களிடம் மாட்டிக்கிட்டு ரொம்ப பாடு பட்டிருப்பார் என்று நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
  10. என்ன என அறிய ஆவலுடன் காத்திருக்கேன். இத்தனை சோதனைகளையும் கடந்தவருக்கு அது ஒரு பிரமாதம் இல்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அதான் போர்டிங் பாஸ் வாங்கிட்டோம்ல... பின்னே பயப்படலாமா ?

      எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து ஜெர்மனியர்களையே சமாளித்து விட்டேன்.

      நீக்கு
  11. ஆஹா.... கடைசியாக சஸ்பென்ஸ் வச்சி இருக்கீங்களே. அதை தெரியாமல் இருப்பது கஷ்டமா இருக்கு. சீக்கிரம் சொல்லுங்க ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நானும் எப்பதான் எழுத்தாளராக முயல்வது ?

      நீக்கு
  12. தங்களின் மீசையைப் பார்த்தபிறகும் தைரியமாகக் கேள்விகள் கேட்டாரா என்ன?
    தங்களின் கண்ணில் பட்ட அது, எது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மீசைதான் பல இடங்களிலும் என்னை நிறுத்தி வைக்கிறது.

      காத்திருப்புக்கு நன்றி.

      நீக்கு
  13. அவருக்கு 'அல்லு' விட்டுருக்குமே ஜி...

    பதிலளிநீக்கு
  14. என்னாதூஊ சிங்கத்தை விரட்டிய சிறுவனா? அதை நீங்க படம் எடுத்தீங்களோ? இதை எப்படிப் பொறுத்துக் கொண்டார் அந்த அதிகாரி?;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க... தத்தவம் சொன்னால் ரசிக்கணும். அதை விட்டுட்டு இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்கப்படாது.

      நீக்கு
  15. இவ்ளோ குழப்பமா எயார்போர்ட்டில்.. எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கழுத்துக் கமெராதான்,. நல்லவேளை நீங்க ஸ்கொட்லாண்ட் பக்கம் வந்திருக்கவில்லை:).. வந்ததாகச் சொல்லிகிருந்தால் தேம்ஸ்கரை ஓனர் ஞானி அதிராவைத் தெரியுமோ எனக் கேட்டிருப்பார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பூட்டு செல்வாக்கா உங்களுக்கு ? அடுத்து நைஜீரியா போகும்போது பார்க்கிறேன்.

      நீக்கு
  16. நான் ஒசாகா சென்றிருந்தபோது பருப்புப் பொடி வகைகள்கொண்டு சென்றேன் அங்கே என்உடைமைகளை சோதனை போட்டார்கள்பருப்புப்பொடிவகைகளை ஏதோ போதைப் பொருளென்று நினைத்து நிறையவே கேள்விகள் கேட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஊறுகாய் கொண்டு வருவதைக்கூட சில நேரங்களில் அனுமதிக்க மாட்டார்கள்.

      நீக்கு
  17. என்ன ஒரு அட்டூழியம் தேவகோட்டையாரே.
    நம் ஊரிலியே இத்தனை கேள்விகள.
    பொறுக்க முடியவில்லை.
    அதுவும் கூடவே ஒரு சஸ்பென்ஸ். எப்பொழுதும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. தங்களின் மீசையை கண்டு பொறாமைப்படுகிறார்களா? அல்லது தாங்கள்தான் வைக்க வேண்டும் மற்றவர்கள் யாரும் மீசை வைக்ககூடாது என்ற காப்பிரைட் வாங்கியிருக்கிறார்களா...?? வீரம் மீசையில் இருக்கிறதா...? சமயோசித்தலில் இருக்கிறதா...????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே... பண்டைகாலம் தொட்டு வீரத்தின் அடையாளங்களில் ஒன்றாக மீசையும் உணரப்பட்டது தமிழர்களால் மட்டுமே...

      சமயோசிதமாக நடப்பவரும் அழகுதானே அது அறிவின் வழி.

      மீசை வைத்துக்கொள்ளாத வீரர்களும் உண்டுதானே...

      நம்மில் முரட்டு மீசை வைத்த அறிவீணர்களும் உண்டு.

      நீக்கு
  19. உங்க விமான நிலைய அனுபவத்தை (சொந்த நாட்டு அனுபவத்தை )திகிலுடன் படித்தேன். எனது வெளிநாட்டு நண்பர் ஒருவர் முன்பு சொன்னார் பயணிப்பதற்கு தனக்கு நியாயமான விலையில் நல்ல ஒரு விமான ரிக்கட் கிடைத்தும் அது சீனாவின் Guangzhou விமான நிலையத்தில் தங்கி இருந்து செல்ல வேண்டும், கம்யூனிஸ்ட் நாடுகளில் மனித உரிமைகள் கேள்விக்குரியாத இருப்பதினானல் தான் அச்சம் கொண்டு அந்த விமான ரிக்கட்டை வாங்கவில்லை என்றார்.
    இங்கே லஞ்ச வெறி பிடித்த அரச அதிகாரிகளினால் சொந்த நாட்டுகாரனும் பாதிக்கபடுகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது அனுபவத்தில், அயல் தேசங்களில் தனது நாட்டின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக இந்தியர்களை சோதித்துக் கொள்கிறான்.

      ஆனால் ?

      இந்தியாவில் மட்டுமே இந்தியர்களை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டே பிறகு சோதிக்கின்றான். இதில் பிறதேசத்தானை கை கழுவி விடுகின்றனர் இதுதான் இன்றைய நிலைப்பாடு.

      வருகைக்கு நன்றி வேகநரி.

      நீக்கு
  20. சுவாரஸ்யமான நிகழ்வு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  21. மதுரை விமான நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களிலும் இது போல நிறைய சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன். என்ன ஆயிற்று இவர்களுக்கு? வெளிநாட்டுப் பயன்களில் அனுபவம் பெற்ற உங்கள் பதில்கள் அவரைக் கண்டிப்பாக வெறுப்பெற்றியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அயல் தேசத்திலிருந்து வந்த தமிழர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களிடம் விசாரித்து பாருங்கள் மதுரை விமானநிலையம் என்றாலே முகம் சுழிப்பார்கள்.

      மதுரையைப் பொருத்தவரை இண்டர் நேஷனல் சர்வீஸ் தேவையே இல்லை.

      நீக்கு
  22. இதுபோன்ற அனுபவத்தைப் பார்க்கும்போது விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்லும் ஆசையே போய்விடும் போலுள்ளதே. மதுரையிலிருந்து செல்வோருக்கு இது ஒரு பாடமாக அமையும் என நினைக்கிறேன். கோபமாகச் சொன்னால்கூட உங்களின் பொறுமையை கடைசி வரை கடைபிடித்ததைப் போலவே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தமிழகத்தில் மதுரை விமானநிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலும் தவறானது.

      இதன் காரணமாகவே இராமநாதபுரம் மாவட்டத்தினர் பலரும் திருச்சிக்கே வருகின்றனர்.

      வெருங்கையோடு போனவனுக்கே இப்படி என்றால் பெட்டிகளோடு வந்து இறங்கும் பயணிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  23. சில சமயம் அவங்களோட எரிச்சல் மூடை பயணிகளிடம் தவறாகக் காட்ட முயல்வார்கள். இது மாதிரி அயல் நாடுகளில் நடைபெறாது. பெரும்பாலும் அவங்க சட்டத்தைக் கடைபிடிப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நம்நாட்டு அதிகாரிகள் ஏதோ தேவலோகத்து அவதாரங்கள்போல நினைத்து கொள்கின்றனர்.

      நீக்கு
  24. இந்த மாதிரி கேள்விகள் கேட்க (செக்யூரிட்டி செக் முடிந்த பிறகு) அவர்களுக்கு அதிகாரமே இல்லையே... சும்மா மீசையைப் பார்த்து 'ஜாதி' என்னவோ என்று தீர்மானித்துக்கொண்டு, அதனால் கேள்வி கேட்டாரா? இல்லை அது வடநாட்டு செக்யூரிட்டி ஆட்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆகவேதான் நானும் சற்று தைரியமாக பேசினேன், இதே கௌண்டராக இருந்தால் பேசியிருக்க முடியாது.

      அவர் தமிழர்தான் ஆனால் அவர் மீசை வைத்துக்கொள்ளவில்லை.

      நீக்கு