இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 18, 2019

இதுவும் ந(க)டக்கலாம்...



பெண்கள் முன்பைவிட எல்லாவற்றிலுமே முன்னேற்றமே இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க சாத்தியமில்லை. அதேநேரம் விவாஹரத்துகள் இன்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகி வருகிறது. இதன் அடிப்படை காரணம் எங்கு தொடங்குகிறது ? எட்டையபுரத்தான் தொடங்கி வைத்த புதுமைப் பெண்களிடமிருந்தா ?

ஒரு மனிதனுக்கு தனது மகள் எவ்வளவுதான் புகழடைந்து பிரபலமாக இருப்பதைவிட, தனது மகளுக்கு திருமணமாகி கணவனுடன் "வாழ்ந்து" அவள் குழந்தைகளுடன் குதூகலமாய் வாழ்ந்து அவளது மாமனார்-மாமியாரே அவளைப்பற்றி பெருமை பேசுகின்றார்கள் என்றால் இதைவிட இவ்வுலகில் வேறு மகிழ்ச்சி உண்டோ.. ?

எத்தனையோ செல்வந்தர்களின் மகள்கள் விவாகரத்தோடும், எத்தனையோ ஏழைகளின் மகள்கள் சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள்.
(உதாரணம் திரைப்படக் கூத்தாடி திரு. ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா)
(மறுஉதாரணம் குப்பைமேடு திரு. சுப்பையன் மகள் வேலாயி)

இந்த நவீன வாழ்வாதார மாற்றம் வாழ்வின் பிறவிப்பயனான தாம்பத்யத்தின் அடிப்படையையே பாதிக்கிறது. கலாச்சாரத்தை மாற்றி விட்டு காலம் மாறிவிட்டது என்று நாம் அனைவரும் பொய் சொல்ல பழகி விட்டோம். அமெரிக்க கலாச்சாரத்தை குறை சொல்லிக் கொண்டு தமிழ்க்கலாச்சாரம் உயர்வானது என்று பேசிக்கொண்டு அமெரிக்க கலாச்சாரத்தையே பின் பற்றுகிறோம். எட்டையபுரத்தான் இந்த மாற்றத்துக்காக பெண்களுக்கு எழுச்சியுணர்வை ஊட்டவில்லை அவன் எதிர் பார்த்தது வேறு... வேறு...

எதிர் காலத்தில் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி வைக்கும் நிலை வரலாம் ??? (காரணம் நமக்கு இருப்பதே இவள் ஒரு வாரிசு மட்டும்தானே)

இன்று பெண்களின் கற்புகளுக்கு மட்டுமல்ல! உயிருக்கே உத்திரவாதமில்லை சமீபத்தில் யூட்டியூப்பில் ஒருவன் பேசியதை கேட்டேன் தர்மபுரியில் உனக்காக மூன்று கல்லூரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் வைத்து தீ வைத்தது நாங்கள்தானே... என்று இவனை சட்டத்தால் கைது செய்ய முடிகிறதா ? நமக்கு எதற்கு மக்களாட்சீ... இதோ பொள்ளாச்சியை மறந்து விட்டோம் நமக்கு தேர்தல் முக்கியம் நாதாரிகளை நாடாள விட்ட பிறகு குத்துதே குடையுதே என்று புலம்புவதில் சுகம் காணுகிறோம்.

இனி வரும் அரசியல்வாதிகளால் இனியும் இப்படி நடப்பது உறுதி இனி நல்லவர் ஆட்சி வராது வந்தாலும் நடத்த விடப்படமாட்டாது. சிலருக்கு இதில் மாற்றுக் கருத்து வரலாம் என்றாவது ஓர்நாள் நான் சொன்னது விளங்கும் அன்று நான் இல்லாமல்கூட போகலாம் - கில்லர்ஜி

49 கருத்துகள்:

  1. விரக்தி... வேதனை... தேர்தல் நாளில் நல்லவரை எதிர்பார்த்து செல்லும் நமக்குக் கிடைப்பது இவைதான்.​

    பதிலளிநீக்கு
  2. கில்லர்ஜி நீங்கள் சொல்ல வரும் கருத்து புரிகிறது.

    என் தனிப்பட்டக் கருத்து உடைகளில் இல்லை நீங்கள் சொல்ல வருவது. நம் மனதில் தான் இருக்கிறது பண்பாடு கலாச்சாரம் எல்லாமே. புடவை கட்டிக் கொண்டு .....வேண்டாம் நான் அதை இங்கு சொல்லவில்லை..

    மற்றபடி இளைஞர்கள், பெண்கள் இருவருமே நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பெற்றோர்தான் முதல் காரணம். இதில் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி. வெங்கட்ஜி, நெல்லை எழுதியிருந்த கதைகளில் வரும் நிகழ்வு போல அதாவது குழந்தைகளை வளர்த்தல் அதில்தான் தொடங்குகிறது.

    பொள்ளாச்சி விஷயம் முடங்கிப் போனது என்ன சொல்ல? நம்மூர் சட்டம் அப்படி! இந்த நிகழ்விலும் எனக்கு வேறு கருத்துகள் உண்டு. ஏனென்றால் நான் அதை ஒரு தாய் என்ற ரீதியில்தான் பார்ப்பேன். ஆனால் அதை நான் இங்கு சொல்லவில்லை கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது ஆணித்தரமான குற்றச்சாட்டு பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்னவென்பதை இன்றைய யுவதிகள் இன்னும் சரியாக உணரவில்லை.

      நீக்கு
    2. மிகவும் சரியான பார்வை.

      நீக்கு
    3. குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் பெற்றோர்களையே குற்றம் சாட்டிவிட முடியாது..... என்னதான் நன்றாக வளர்த்தாலும் சமுகத்தின் செயல்பாடுகள் காரணமாக குழந்தைகள் மாறிவிடுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே

      நீக்கு
    4. என்னை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக வர வேண்டும் என்று நினைப்பதைவிட தங்களுக்கு சமமாக ஆண்கள் வர வேண்டும் என்று நினைக்க தொடங்கி செயல்படுகிறார்களோ அன்றுதான் அவர்கள் சரியான திசை நோக்கி செல்கிறார்கள் என்று அர்த்தம்

      நீக்கு
    5. மதுரைத்தமிழரின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நல்லதே நடக்கட்டும் தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
  4. என்ன சொல்வது? மனம் வேதனைப்படுவது தவிர! பொள்ளாச்சியில் அந்தப் பெண்களே விரும்பித் தான் போனார்கள் என்றொரு கருத்தும் நிலவுகிறது. எது உண்மை, எது பொய் என்பதை அந்தக் கடவுளே அறிவார்.. ஆனால் மொத்தத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே சீரழித்துக் கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்த சீரழிவின் தொடக்கமே பெண்கள்தான்.
      அதற்காக ஆண்களை உத்தமபுத்திரன்கள் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல!

      நீக்கு
  5. காலை வணக்கம்.

    வேதனையான நிகழ்வுகள் பல இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. தலைப்பில் சொன்னது போல 'இதுவும் ந(க)டந்து போகும்.....

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைத்துமே வேதனை தரும் விஷயங்கள்தான் அரங்கேறி கொண்டிருக்கின்றன. காலம் எப்போதும் போல் தன் கடமையை ஆற்றிக் கொண்டேதான் வருகிறது. மாறி வரும் கலாச்சாரத்தோடு காலமும் வேறு வழியின்றி சுழன்று வருகிறதோ என பிரமை கொள்ள வைக்கிறது. நல்லவைகளாக இனி அனைத்தும் நடக்க நாமும் பிரார்த்திப்போம்.
    பகிர்வுக்குமிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவாக அலசிய கருத்துரை அருமை.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  7. உண்மை தான் நண்பரே.
    மற்ற நாட்டு பெண்மணிகளுக்கு நம்முடைய சேலை மீது அப்படி ஒரு மோகம்.
    நாங்கள் ஜப்பானில் இருக்கும்போது, அம்மணி நிறைய ஜப்பானிய பெண்களுக்கு சேலை கட்டிவிட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. மேலை நாட்டு பெண்கள் தினமும் சேலை கட்டிக் கொள்ள ஆசைப்படுவதில்லை இந்தியப் பெண்களுக்கு மேலை நாட்டுப் பெண்கள் தோழிகளாக இருந்தால் அவர்களுக்கு சேலை கட்டி அழகுபார்ப்பார்கள் அதுதான் உண்மை


      இந்திய பெண்கள் டீ சர்ட் போட்டு ஜீன்ஸ் அணிவதால் கலாச்சாரம் கெடுவதில்லை... ஆனால் மேலை நாட்டு பெண்களில் கூறு கெட்டப் பெண்கள் செய்யும் செயல்களை காப்பி அடித்து அதுதான் மேலை நாட்டுப் பழக்கம் என்று சிரழிவதுதான் இப்போது இந்திய பெண்களிடம் நடக்கிறது அதுதான் இங்கு பிரச்சனையே


      நமது இந்தியர்களிடயே மேலை நாட்டு பெண்களை பற்றி தவறான கருத்துகள்தான் உலாவி வருகின்றன

      நீக்கு
  8. காலம் மாறி வருகிறது. மனித மனங்களும் மாறி வருகிறது.
    ஏற்றுக் கொள்ள முடியாதவர்களை அவர்கள் புறம் தள்ளுகிறார்கள்.
    நடப்பது எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வதை விட வேறு வழி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  9. வேலி தாண்டலாமா வெள்ளாடு...

    கல் மீது கண்ணாடி விழுந்தாலும்..
    கண்ணாடி மீது கல் விழுந்தாலும்..
    சேதம் யாருக்கு?...

    என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள்....

    அந்த வார்த்தைகளுக்குள் பற்பல அர்த்தங்கள்...

    அதெல்லாம் புரிவதற்கு தமிழைப் படிக்க வேண்டும்...

    ஆனால் இன்றைய நாளில்
    வெள்ளாடுகளே வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு வருகின்றன...

    இறைச்சி கடைக்காரனுக்கு சோலி மிச்சம்....

    நீங்களோ நானோ சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை...

    சிறை காக்கும்காப்பு என்செய்யும் மகளிர்
    நிறை காக்கும் காப்பே தலை....

    பெருங்கிழவனார் சொல்லியே கேட்க வில்லை யாரும்!...

    இன்னொரு சேதி...

    அந்த அமெரிக்காவிலேயே சதையைப் பிதுக்கும் லெக்கின்ஸ்களுக்கு எதிராகப் பெண்களே போராட ஆரம்பித்து விட்டார்கள்....

    ஆனால் நம்மவர்களுக்கோ
    லெக்கின்ஸை பெருச்சாளி கடித்து வைத்த மாதிரி இருந்தால் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது...

    காலக் கொடுமையடா - கந்தசாமி
    காலக் கொடுமையடா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. ஒரு தந்தையின் கவலை தெரிகிறது

    பதிலளிநீக்கு
  11. ரொம்பவே புலம்பிவிட்டீர்கள். கோபத்தில் நோட்டாக்கு வாக்களிக்காமல் இருந்தால் சரிதான்.

    பெண்களைப் பற்றி நம்ம பார்வைக்கும், அவங்க என்ன நினைக்கிறாங்க என்பதற்கும் வித்தியாசம் உண்டு கில்லர்ஜி. இருப்பிடம், காண்பவை(தொலைக்காட்சி), உணவு, உடை எல்லாவற்றிலும் இருபாலாருக்கும் மாற்றம் வந்துவிட்டது. இருவரும் வேலைக்குச் செல்லுதல் காலத்தின் கட்டாயம் என்று ஆண்கள் நினைப்பும் மாறிவிட்டது. நம் எண்ணங்களிலேயே மாற்றங்கள் வந்துவிட்டன. அதனால், காலத்திற்கேற்ற மாற்றம் என்றுதான் எடுத்துக்கணும். கொஞ்ச வருடங்களில் சட்டங்கள் பெண்களை இன்னும் காப்பதாக அமையும், ஆண்களின் பார்வையிலும் மாற்றம் வரும்னுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாற்றம் வருமென்று இன்னும் நம்பிக்கை இருக்கிறதா ?

      பரமக்குடி வீதியில் மக்களை வரிசையாக நிறுத்தி வைத்து ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்கின்றார்கள்.

      சட்டம் தன் கடமையை செய்கிறதா ?

      இந்நாடு இன்னும் சீரழியும் இதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

      நீக்கு
    2. கில்லர்ஜி.... பணம் வாங்கிக்கொள்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில் பிச்சைக்காரர்கள். அவர்கள், அவர்களுடைய பையன்களும் பிச்சைக்காரர்களாக இருக்கவேண்டும் என்று அதிகம் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள். அதிலும் பணத்தைப் பொறுத்து வாக்களிப்பவர்கள் தேசத் துரோகிகள்தாம்.

      நீக்கு
    3. சரியானபடி சாடியுள்ளீர்கள்.

      பொதுவாகவே நிறைய பேருக்கு தற்போதைய பிரதமர் யார் என்பதே தெரியவில்லை நண்பரே...

      இந்நிலையில் நாம் யாரை நோவது ?

      நீக்கு
  12. இப்போதும் இதுதானே நிலைமை..நண்பரே..!

    பதிலளிநீக்கு
  13. தவிர்க்க முடியாத காரணத்துக்கு விவாகரத்து தப்பில்லை. ஆனா, பைசா பெறாத காரணத்துக்காகலாம் இப்ப விவாகரத்து நடக்குது. ரஜினி மகள் இரண்டாவது திருமணத்தில் நாம கருத்து சொல்ல முடியாது. ஆனா, இதுவே ஏழை வீட்டில் நடந்திருந்தால்?!

    அதான் பையன் ஒருத்தன் இருக்கானே! அவனுக்காக வாழ்ந்திருக்கலாமே! அவன் எதிர்காலம் என்னாவதுன்னு போராளிகள் பொங்கி இருப்பாங்க.
    எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னுதான் மனசை தேத்திக்கிட்டு போக வேண்டியதா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுவே ஏழை வீட்டில் நடந்திருந்தால்?//

      ஸூப்பர் கேள்வி சகோ நம்மவர்களுக்கு நரம்பில்லாத நாக்கு.

      நீக்கு
    2. அதிலும், ஏதோ அவருடைய பையன், புது அப்பாவிடம் மிக நன்றாக விளையாடுகிறான், அம்மாவின் திருமணத்தில் அவ்வளவு சந்தோஷம் என்று செய்திகளில் வரும்படிச் செய்வது படிக்க நன்றாகவே இல்லை. விட்டால், பையன் சொல்லித்தான் புதுத் திருமணம் செய்துகொண்டேன், அவந்தான் எனக்கு புதுக் கணவரை அடையாளம் காட்டினான் என்றெல்லாம் செய்திகள் வரச் செய்வார் போலிருக்கிறது.

      நீக்கு
    3. அடடே இது எனக்கு புது தகவலாக இருக்கிறதே...

      நீக்கு
  14. நாகரிகம் என்ற பெயரில் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்வது தெரியாமல் பலர் தவறான பாதைக்குச் செல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்து மிகச் சரியானது.

      நீக்கு
  15. இதுவும் கடந்து போகும்.
    நடந்தும் போகும்.ஆனால் (ஏ)மாற்றம் வருமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் என்பது வரும்... ஆனால் வராது...

      நீக்கு
  16. பார்வைகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  17. //கலாசாரத்தை மாற்றி விட்டு, காலம் மாறி விட்டது என்று பொய் சொல்ல நாம் அனைவரும் பழகி விட்டோம்.// 100% உண்மை. மாற்றங்களை தவிர்க்க முடியாது ஆனால், எவ்வளவு தூரம் மாற வேண்டும் என்பதை பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் மிக அருமையாக சொன்னீர்கள்.

      நீக்கு
  18. உடையில் கட்டுப்பாடு தேவைதான். அது எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதை அணிபவர் தீர்மானித்தாலும் பெற்றோர்களும் அதுபற்றி எடுத்துக்கூறவேண்டும். ஆனால் உடையை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  19. வருக நண்பரே தங்களது கருத்தும் அற்புதம். வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு