இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 29, 2019

விழிப்பது எப்போது ?



01. நமது அரசியல்வாதிகள் கொள்ளையர்கள் என்று தெரிந்தே ஓட்டுப் போடுகிறோம்.

02. கொக்கோ கோலாவை துறுப்பிடித்த இரும்பை சுத்தம் செய்வதை தெரிந்தும் வாங்கி குடிக்கிறோம்.

03. குழந்தைகளின் தின்பண்டம் விசம் என்பதை அறிந்திருந்தும் வாங்கி கொடுக்கிறோம்.

திங்கள், ஜூன் 24, 2019

எட்டையபுரம், எழுத்தாளர் எட்டப்பன்


ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’அனாவின் கனா’’ பத்திரிக்கையிலிருந்து ‘’அந்தோ பரிதாபம்’’ நிகழ்ச்சிக்காக தங்களை பேட்டி காண வந்திருக்கின்றோம் ஆரம்பிக்கலாமா ?
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ நல்லது ஆரம்பிக்கலாம்.

சட்டங்கள் அதிரடியாக மாற்றம் கொண்டு வரும் குழுவிற்காக பல அறிஞர்களை மோடிஜி அரசு தேர்வு செய்து வருகிறது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்... தங்களின் பங்களிப்புகள் எப்படியிருக்கும் ?

புதன், ஜூன் 19, 2019

உஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்



இப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக...

லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை கீழே வைத்து விட்டு வந்தவன் கேட்பான்... (வரவைத்தவன் பேசத்தெரியாத அப்பாவி அதிராவைப் போல் ஓரமாய் நின்று கொள்வான்)

அரபாப் அதா ஸூரா ஒயின் ரெக்கப் ?
முதலாளி இந்த படத்தை எங்கே வைக்க ?
அதா மக்கான் ஃபோக் ரெக்கப் மர்கஷ்
அந்த இடத்தில் மேல் மையமாக வை

வெள்ளி, ஜூன் 14, 2019

அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்



அன்பு நெஞ்சங்களே....
முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே...
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...

இந்தப்பாடலை அனைவருமே கேட்டிருபீர்கள் நான் அரபு நாடு வந்ததும், அரேபியர்களைப்பற்றி தெரிந்து கொண்டதும் இந்தப்பாடல் நினைவுதான் அடிக்கடி நினைவுக்கு வரும் எவ்வளவு பொருத்தமாக எழுதியிருக்கின்றார்கள் நமது அன்றைய கவிஞர்கள். அரேபியர்கள் சர்வ சாதாரணமாக பிற நாட்டவரை முக் மாபி (மூளை இல்லை) என்று சொல்லி விடுவார்கள் இந்த வார்த்தை சாதாரணமாக ஆச் என்று நாம் தும்முவோமே அதனைப்போல வந்து கொண்டே இருக்கும் இதை ஆதிகாலம் தொட்டே பிழைப்புத்தேடி வந்த நமது முன்னோர்களும் கேட்டு வாழ்ந்து பழகி நமக்கும் அதனை கற்றுக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.

ஞாயிறு, ஜூன் 09, 2019

பணயம் வைத்த பயணம்


நான் இரண்டு குதிரைகள் பூட்டிய ஸாரட் வண்டியில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்பவன் இரண்டு குதிரைகளையும் வெவ்வேறு திசைகளை நோக்கி செலுத்துவேன், ஆயினும் எனது பயணம் நான் போகின்ற இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.

செவ்வாய், ஜூன் 04, 2019

அவன் நினைத்தால் ?


னக்கு அரேபியர்களிடம் ஆச்சர்யமாக நிறைய விசயங்களிருக்கிறது அதில் ஒன்று அரசாங்க அலுவலகத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இதில் எப்படியும் நான்கு நாட்கள் மீட்டிங் நடக்கும் காலை வந்தவுடன் மீட்டிங் தொடங்கி விடுகிறது. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், வேலை முடியும் நேரம்வரை பேசுகிறார்கள். பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் அலுவலகத்தில் பேசியது போதாதென்று விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் அருசுவை உணவுகளோடு மீட்டிங். நான் பலமுறை இவர்களிடம் ஆச்சர்யப்பட்டு கேட்டிருக்கிறேன் இப்பொழுது பேசியவை எல்லாம் எப்போது நடைமுறைப்படுத்துவது ? அதற்கு இவர்கள் சொல்லும் ஒரே பதில்.