தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 11, 2020

காலம் மறக்காத கலாம்



ணக்கம் நட்பூக்களே நான் மிகவும் மதித்த மாமனிதர்களில் ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அவருடைய கனவு இறுதிவரை இந்தியாவைப் பற்றியதாகவே இருந்தது. மதம் மறந்து இவரை இந்திய மக்கள் அனைவருமே நேசித்தது மறுக்க இயலாத உண்மை.

இவர் இளம் பருவம் முதலே இந்து மதத்தில் ஈடுபாடு உள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்த விட.மே எனக்கு அதில் கருத்து சொல்ல விருப்பமில்லை ஆனால் இவ்வளவு படித்த மாமேதையான இவர் ஒரு நிர்வாண சாமியாரின் முன்னால் இப்படி வணங்குவது நியாயமா ? இந்த புகைப்படத்தை கண்டது முதல் இவர்மீது சற்றே மரியாதை சறுக்கி விட்டது. மேலேயுள்ள பொன்மொழி அவருடையதுதானே செயலில் ஏனிந்த முரண் ?

அப்படியென்ன இந்த சாமியாரிடமிருந்து இவர் பெற்று விட்டார் ? இந்த பூமிக்கு கலாம் செய்ததைவிட இந்த சாமியார் அதிகமாக செய்து விட்டாரா ? இப்படி இருப்பதுதான் சரியான வாழ்வுமுறை என்றால் அவரைச்சுற்றி உள்ளவர்கள் ஏனிப்படி இருக்கவில்லை ?

சாதாரண மனிதர்கள்தான் போராசைக்கு அடிமையானதால் இப்படி சாமியார்களை நம்பிக்கை என்ற பெயரில் அவர்கள் இப்படி வாழ்வதற்கு வழிவகை செய்து விட்டார்கள் இவருமா ?

இந்தியாவில் அனைத்து மதத்து துறவிகளும் பணமுதலைகளாகவே இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனம் இதிலிருந்தே தெரிகிறது இந்த வாழ்வு முறையில் ஒழுக்கமும், உண்மையும் இல்லை என்பது. இறைவனை நம்பும் மானிடா உமது நம்பிக்கை உண்மையெனில் மனிதனை தெய்வமாக பார்க்காதே.... மக்களால்தான் மதத்தின் பெயர்களில் இழுக்கு விழுகிறது.

மக்கள் முட்டாள்த்தனமாக ஏமாந்து விட்டு ஏலச்சீட்டு நிறுவனங்களையும், அரசியல்வாதிகளையும், போலிச் சாமியார்களையும் குற்றம் சொல்வது மடமைத்தனம் நாளைய சந்ததிகளின் வாழ்வை மனதில் கொண்டு இனியெனும் இப்படியானவர்களின் பின்னே போய் தவறான பாதையை பிள்ளைகளுக்கு கொடுத்து விடாமல் வாழவேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன். மதம் மறப்போம் மனிதம் போற்றுவோம்.

70 கருத்துகள்:

  1. 3% சங்கிகள் தான் காரணமே... மதம் பிடித்த ஜந்துகள் ஆளும் நாடு இது...

    பதிலளிநீக்கு
  2. இந்த சாமி நாதாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஜந்து வலைப்பூ பதிவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பதை தாங்களே அறிவீர்கள் ஜி...

    பதிலளிநீக்கு
  3. சிவக்குமார் குடும்பத்தை கேவலமாக சித்தரிக்கும் மாமாக்கள் ஒருபுறம் பயந்து கொண்டு இருக்க, மாமிகள் இருக்காங்களே - அவர்களிடம் இதற்கு விளக்கம் கேளுங்களேன் ஜி...

    பதிலளிநீக்கு
  4. பிறப்பதற்கே தகுதியற்ற ஒரு கோட்சே எனும் ஜந்துவை மாமாக்கள் கோஷ்டி வணங்க வைத்த, ஒரு புகைப்படமும் உண்டு ஜி... அனுப்பவா...?

    பதிலளிநீக்கு
  5. கலாம் ஐயாவின் சிறப்பிற்காக :

    ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...

    எனும் பதிவு தான், இன்றைய எனது வலை நுட்பத்திற்கு ஒரு சான்றாக நினைத்துக் கொள்வேன்... இதற்கு மேலும் நுட்பம் செய்ய முடியுமா என்பது ஐயமே... ஆனால் உங்களின் இன்றைய புகைப்படம் போல பலதும் மனதை பாதிப்பது உண்மையே...

    https://dindiguldhanabalan.blogspot.com/2015/08/KALAM.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதம் ஒரு அபின் என்பதை மக்கள் உணரவேண்டும்.

      இவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தவறே....

      சிவக்குமார் குடும்பத்துக்கு நேரம் சரியில்லை போலும் தொடர்ந்து பிரச்சனை.

      கோட்சேவை ஆதரிப்பவர்களை என்னவென்று சொல்வது ?

      பதிவுக்கு சென்று வந்தேன் ஜி

      நீக்கு
  6. நாம்நினைப்பதை விட என்னவோ இருக்கிற்துகலாமிடமே கேட்க வேண்டியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஏதோ இருப்பது என்னவென்று உலகுக்கு சொல்லிச் சென்று இருக்’கலாம்’

      நீக்கு
  7. படத்தில் இருப்பவர் சமணத் துறவியாக இருக்கலாம்...

    சமணத்தில் அது வழக்கம் என்பதால்
    துறவி எனும் நிலையில் அவருக்கு ஐயா கலாம் அவர்கள் மரியாதை செய்திருக்கலாம்...

    இப்போது இதனை விமரிசனம் செய்யும் ஜி அவர்கள் அப்போதே எல்லாருக்கும் எளிமையானவராக இருந்த ஐயா கலாம் அவர்களிடம் நேரிடையாக கேட்டிருக்கலாம்...

    இதனை இத்தனை காலம் கழித்து குடைந்து கொண்டிருக்காமல் வேறு ஏதாவது எழுதி இருக்கலாம்...

    அல்லது என் அன்பின் நண்பர்
    சும்மா இருந்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      கலாம் ஐயாவின் படிப்பு இவருக்கு முன் தூசுவாகி விட்டது.

      கடந்த வாரம்தான் கீழேயுள்ள புகைப்படம் எனக்கு இணையத்தில் யதார்த்தமாக கிடைத்தது மேலேயுள்ள படம் நானே நத்தம் செருப்புக்கடையில் எடுத்தது.

      ஜி எனக்கு பெரும்பாலும் புகைப்படங்களே பதிவுகள் எழுதும் கருக்களை தருகிறது இது தாங்களும் அறிந்த்தே.. மற்றபடி எனக்கும் கலாம் ஐயாவுக்கும் முன்பகை கிடையாது.

      நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

      மேலே அவர் சொன்ன பொன்மொழி முரணாகிறது இதையே நான் சொல்ல வருகிறேன் நன்றி ஜி

      நீக்கு
    2. ஓ!..

      அவரது காலம் முடிந்து விட்டது...
      பழசைப் பேசி பயனில்லை என்ற ஆதங்கத்தில் தான் எனது கருத்துரையும்..

      நீக்கு
    3. //கலாம் ஐயாவின் படிப்பு இவர் முன் தூசாகிவிட்டது// - இந்தக் கருத்தெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கில்லர்ஜி. பத்தாப்பு பாசாகவர்கள், ஊழலில் கரைகண்டவர்கள், தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டவர்களிடமெல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கற்றுத்துறைபோகிய துணைவேந்தர்கள், படித்த மருத்துவர்கள், ஆடிட்டர்கள் போன்றோர் வணங்கி நிற்கவில்லையா? அப்போது அவர்களது படிப்பெல்லாம் தூசாகவில்லையா?

      நமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு அளவுகோல், மற்றவர்களுக்கு வேறு அளவுகோல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

      நீக்கு
    4. எந்த துறவியாக இருந்தாலும் நிர்வாணமாக இருப்பது என்பது வனத்திலேயே திரிந்தால் தவறில்லை. இவர் நம்மோடு மக்களோடு, மக்களாகவே வாழ்கிறார் இப்படி இருப்பது என்பது மதம் சொன்னது என்பதைவிட மனிதனாக அமைத்துக் கொண்டதாகவே நான் நினைக்கிறேன் நண்பரே...

      நீக்கு
  8. அப்துல் கலாம் அவர்கள், தன் நாட்டில் என்றில்லை, வெளிநாட்டு மக்களையும் கவர்ந்த ஒரு நல்ல மனிதர்...

    பதிலளிநீக்கு
  9. கடசிப்படம் பார்க்க, உண்மையான படம்போல தெரியவில்லை கில்லர்ஜி, ....கிரஃபிக்ஸ் போல இருக்குது.. இந்தக் காலத்தில் எல்லாம் கொம்பியூட்டர் மயம், எதையும் நம்ப முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  10. வருக அதிரா உண்மைதான் அவர் உலக அளவில் மக்களை கவர்ந்தவரே...
    இது கிராப்பிக்ஸ் அல்ல நிறைய படங்கள் கிடைத்தது நான்தான் நாகரீகம் கருதி ஒன்று பிரசுரித்தேன் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. தானே படித்தவர், தானே உயர்ந்தவர், தானே எல்லாம் தெரிந்தவர்  என்று அகந்தை கொள்ளாதவர் கலாம் அவர்கள்.   மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர். அடுத்தவர்களை அவர் அவமதித்தோ, இழிவான சொற்கள் பேசியோ, கேலியோ கிண்டலோ செய்தோ நான் பார்த்ததில்லை.  அடுத்தவர்கள் நம்பிக்கையையும் கீழ்த்தரமாக விமர்சிக்காதவர் அவர்.  எனவே இங்கு காணப்படும் படத்தில் பெரிய குறை தெரியவில்லை எனக்கு.   அனைத்து வகை மனிதர்களையும் மதிக்கும் மாண்புதான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது நடுநிலையான நியாயமான கருத்தை ரசித்தேன்
      அவருடைய இந்த மாண்பு அனைவரும் அறிந்ததே வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  12. கலாம் அவர்கள் எதையுமே இழிவாகப் பேசாதவர் ஜி. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று சொல்லாதவர். நாமே போனாலும் கூட நம்மிடமும் அவர், தான் நம்மை விடப் படித்தவர் என்று காட்டிக் கொள்ளாதவர். நம்மிடம் இருந்து புதிதாக அறிய முனைவாரே தவிர தன் புலமையைக் காட்டிக் கொண்டதில்லை. அவருடைய சப்ஜெக்ட்டாகவே இருந்தாலும். ராக்கெட் சயன்ஸாகவே இருந்தாலும் கூட. நாம் அறிவிலிகளாகப் பேசினாலும் கூட அவர் அதைப் பொறுமையாகக் கேட்கக் கூடியவர். நீ சொல்வது தவறு என்று சொல்லமாட்டார். அப்படி நெகட்டிவாக அவர் பேசியதும் இல்லை. இந்தப் பண்புதான் அவரை அந்த இடத்தில் வைத்ததாக அவரிடம் பழகிய என் நெருங்கிய வட்டம் சொல்லித் தெரிந்தது. ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கிட்டத்தட்ட ஸ்ரீராம்ஜி அவர்களின் கருத்தை ஒட்டியே சொல்லி இருக்கின்றீர்கள்.

      அவர் ஓர் மாமேதை இந்த சாமியாரின் கீழ் நிற்பது எனக்கு தவறாக பட்டது காரணம் படிக்காத நானே இந்த சாமியாரை வணங்குவது சாத்தியமில்லை.

      நீக்கு
    2. கில்லர்ஜி /படிக்காத நானே இந்த/ - நீங்க இந்த இடுகையை சரியாக எழுதலைன்னு நினைக்கிறேன். நீங்கள் வணங்குவது யாரை? யோசியுங்க. அவரை மற்ற எல்லோரும் வணங்கி, குருவாக ஏற்றுக்கொள்கிறார்களா என்று யோசியுங்க. அதனால யார் வணக்கத்துக்கு உரியவர் என்பது அவரவர் மனசாட்சி சொல்லும். இது ஆளுக்கு ஆள் வேறுபடும்.

      இரண்டாவது, கலாம் நாட்டின் ஜனாதிபதி. அவர் எல்லா மக்களின் உணர்வையும் மதிக்கத் தெரிந்தவராக இருப்பார், மதிக்கவேண்டும். நீங்க ஜனாதிபதியாக இருந்தாலும், பொற்கோவில் சென்றால் மரியாதை செலுத்தவேண்டும். அப்படீல்லாம் கிடையாது, எனக்கு தமிழகத்துக் கடவுள்கள்தான் முக்கியம், சீக்கிய குரு மனிதனாகப் பிறந்தவர் அதனால் வணங்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. ஜெயலலிதா எதற்காக ரம்ஜான் விருந்துக்குப் போனார், அப்போது தலைமுடியை மறைத்துக்கொண்டு போனார்? அவருக்கும் இஸ்லாமியர்களுடைய பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்? அவர் முதல்வர், எல்லா மக்களையும் அவரவர் விழாக்களையும் மதிக்கும் மாண்பு இருக்கவேண்டும், அதனால் அவர் சென்றார். இதுதான் எல்லாத் தலைவர்களுடைய பண்பு (அந்தப் பண்பு இல்லாமல், கலாம் என்பவர் கலகக்காரர் என்று யார் சொன்னார் என நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை)

      அதுனால ஒருத்தரைப் பற்றி எழுதும்போது, அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் ஏதோ விமர்சனம் செய்யமுடியாது.

      இவர் சமணத் துறவியாக இருப்பார் என்றுதான் தோன்றுகிறது (திகம்பரர் வழி). நம் கண்ணில் ஆபாசத்தை வைத்துக்கொண்டு எதைப் பார்த்தாலும் ஆபாசமாகத்தான் தெரியும், சிறு குழந்தை உடை இல்லாமல் இருந்தாலும். இது கடுமையாக எழுதியிருப்பதுபோலத் தோன்றும், அப்படி அல்ல.

      நீக்கு
    3. நண்பரே இறைசக்தி உண்டு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.
      நான் எவ்வளோ திறமையாக கொண்டு சென்ற எனது வாழ்க்கை முடிவில் அதனுடைய வழியிலேயே என்னை அழைத்துச் செல்கிறது.

      நாட்டின் தலைவர்கள் எல்லா மதத்தின் கலாச்சாரம் மட்டுமல்ல எந்த நாட்டுக்கு போனாலும் அவர்களது கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்.

      ஆனால் இங்கு முதல் படத்தில் சொல்லி இருந்த தத்துவம் கலாம் அவர்களுடையது நடைமுறையில் அவர் தடம் மாறிவிட்டார் என்றே சொல்கிறேன்.

      நீக்கு
  13. மற்றொன்றும்...

    இங்கு வலையில் வருபவர்கள் எல்லோருமே படித்தவர்கள் தான் அதிகம் படித்து நல்ல புத்திசாலித்தனம் உள்ளவர்களும் உள்ள்னர்தான். அதாவது நான் சொல்லுவது டிகிரி அல்ல. அறிவு. உலக அறிவு எட்சற்றா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு. இருக்கலாம். ஒருவருக்கு ஒன்றில் நம்பிக்கை இருக்கலாம் அது எந்த விஷ்யமானாலும் சரி, அதே விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருக்காமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக நான் அவரைக் குறை சொல்லமாட்டேன் கூடவும் கூடாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    யாரும் 100 பெர்சன்ட் பெர்ஃபெக்ட் கிடையாது நாம் அந்தக் கண்ணோட்டத்தில், அல்லது நம் கண்ணோட்டத்தில் எல்லாரையும் பார்ப்பதால் தான் நமக்குப் பலதும் குறையாகத் தெரியுது. இதுவும் என் தனிப்பட்டக் கருத்து ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் 100 சதவீதம் சரியானவர்கள் என்று சொல்ல முடியாதுதான்.

      நான் கலாம் அவர்களைக் குறித்து ஏற்கனவே பதிவுகள் எழுதியவன் என்பதும் தங்களுக்கும் தெரியும்

      நீக்கு
  14. மரியாதை வேறு மண்டியிடுவது வேறு.

    மண்டியிடுவது ஆதாயத்துக்காக. கலாமின் மாண்பு தெரியாதவர்கள்தாம் இப்படிச் சிந்திக்க முடியும்.

    நாம் எல்லாத்தையும் மதம் ஜாதி கொண்டு அணுகுகிறோம். வெளில சாதி இல்லை, மதச்சார்பின்மை என்று போலி வேடம் தரிக்கிறோம். அவர் மேற்கொண்ட அரசியல் முடிவில் நமக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம். அவரின் மாண்பை கேள்வி கேட்கும் தகுதி அனேகமாக யாருக்கும் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது மாண்பு தெரியாதவர்கள் இருக்க முடியாதுதான் நண்பரே
      தங்களது கருத்தை ஏற்கிறேன்.

      நீக்கு
  15. காந்தியைப் பற்றி ரொம்பவே கவலைப்படுவதாக வேடம் தரிப்பவர்கள், காந்தி சொன்ன அஹிம்சைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்.

    மகாராஷ்டிரா ஒரு கோட்சேவை பிரிவினை காலத்தில் உருவாக்கியது. ஆனால் தமிழ்நாடு எத்தனை கோட்சேக்களை உருவாக்கி இருக்கிறது என்பதை 70களிலிருந்து பேப்பர் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    ராஜீவ் காந்தியைக் கொன்றதும், கொலைகார்ர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததும், சதிச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு முட்டுக்கொடுப்பதும் சில தமிழர்கள்தாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சதிச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு முட்டுக் கொடுப்பதும்..///

      ராஜீவுடன் சாகடிக்கப்பட்ட தமிழர்களின் மீது ஈவு இரக்கம் கொள்ளாதவர்கள்...

      அவர்கள் எல்லாம் புனிதர்கள்...

      நீக்கு
    2. //சாகடிக்கப்பட்ட தமிழர்கள்// - துரை செல்வராஜு சார்... அதைவிட நான் தேசவிரோதச் செயலாக கருதுவது, சதிச்செயலில் ஈடுபட்ட சிவராசனை தனது டேங்கர் லாரியில் ஏற்றி பெங்களூருக்கு அனுப்பியவர், அவரது செயலுக்கு முட்டுக்கொடுத்தவர்கள், நீங்கள் சொல்லியிருப்பதுபோல, குற்றமற்ற, போலீஸ்காரர்கள் உட்பட 20+ பேர் இறந்ததைவிட, சட்டத்தினால் தண்டனை தரப்பட்ட 7 பேர் விடுதலைதான் முக்கியம் என்று பேசும் தேசவிரோதிகள், நாட்டிற்கு ஆபத்தானவர்கள்.

      நீக்கு
    3. ஆம் தமிழகத்தில் ஆட்சியில் பல கோட்சேக்கள் அதிகாரத்தோடு கோலோச்சுகின்றார்கள் இதை யாருமே மறுக்க இயலாது உண்மையே...

      தமிழர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே... ராஜபட்சேவுடன் விருந்தில் கலந்து கொண்டவர்களும் உண்டுதான்.

      நீக்கு
    4. // தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே.. ராஜபட்சேவுடன் விருந்தில்..//

      சரியான கருத்து....

      நீக்கு
    5. நிகழ்ந்த உண்மை ஜி.
      அதிமுக தெண்டங்கள் மட்டுமல்ல, திமுக தெண்டங்களுக்கும் பதவிதான் முக்கியம்.

      நீக்கு
  16. ஐயா
    இது கலாம் அவர்களை இழிவுபடுத்த யாரோ செய்த போட்டோஷாப் என்று தோன்றுகிறது. கலாம் இந்த மாதிரி உடை அணியத்தொடாங்கியது ஜனாதிபதி ஆன பின் தான். குடியரசு  தலைவர் சந்திக்கும் முறை பற்றி ஒரு protocol உண்டு. அது இதில் இல்லை. 
    கலாம் அவர்கள் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை. அவர் தானாக எந்த சந்யாசியையும் சென்று சந்தித்ததில்லை. இது சங்கிகளின் ஒரு வேலையாகத் தோன்றுகிறது. நேரு வையும் காந்தியையும் கேவலமாக சித்தரித்தவர்களுக்கு இது ஒரு ஜுஜுபி. 
    நீங்கள் என்ன சொன்னாலும் இந்த போட்டோ உண்மையில்லை என்று கூறுவேன். காரணம் நான் கலாம் அய்யாவின் கீழ் வேலை செய்தவன்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      இது ஃபோட்டோஷாப்பா ? நிறைய படங்கள் இருந்ததே...

      தாங்கள் கலாம் ஐயாவுடன் தொடர்பு உள்ளவர் என்பது நான் அறிந்ததே.

      இவரைக் குறித்து தங்களுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

      நீக்கு
  17. திரு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா அவர்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
    இது இருபடங்களின் இணைப்பு என்றுதான் தோன்றுகிறது
    அப்துல் கலாம் ஐயா அவர்கள் அடுத்தவரை வணங்கும்போது, புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவரல்ல என்றே எண்ணுகிறேன்.
    ஆசி வழங்குபவரின் பார்வை வேறிடத்தில் இருக்கிறது
    ஆசி பெறுபவரின் பார்வையும் வேறிடத்தில் இருக்கிறது
    போட்டோ சாப் வேலைதான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது உன்னிப்பான கவனிப்புக்கும், கருத்துரை விவரிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  18. இவர் ஓர் சமணத்துறவி. ஆனால் கலாம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டு வேறே எங்கேயோ பார்க்கையில் இது அவரைக் குறித்து வணங்குவதாகத் தெரியவில்லை. வணங்கினாலும் தப்பில்லை. சமணத்துறவி, திகம்பர சாமியார் என்பதற்காகப் படிக்காதவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. இத்தகைய நிலையை அவர்கள் அடையும் முன்னர் எத்தனை எத்தனையோ கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், விரத முறைகள் உண்டு. இவர் இந்த இடத்திற்கு வரும் முன்னர் பல சோதனைகளைத் தாண்டியே வர வேண்டும். இவர்களுக்கான விரதமுறைகளையும் துறவறம் ஏற்கும் முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் ஒரு முறையானும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதோடு அவர் மக்களோடு மக்களாக இருந்தாலும் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து சுற்றித் திரிபவர் இல்லை. மழைக்காலங்களில் முற்றிலும் வெளியே வர மாட்டார்கள். எல்லா மதங்களையும் போல் சமணமும் ஓர் மதம். கடுமையான நெறிமுறைகள் கொண்டது. சென்னை சௌகார்ப்பேட்டைப் பக்கம் போயிருந்தீர்கள் எனில் மாதம் ஓர் இளைஞனோ, இளம்பெண்ணோ சமணத் துறவியாகப் போவதற்கான ஊர்வலங்கள் நடைபெறுவதைப் பார்க்கலாம். தங்கள் தலை மயிரைத் தாங்களே கைகளால் அகற்ற வேண்டும். இன்னும் எத்தனையோ முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத இந்த இடம் போதாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமணம் பற்றிய நிறைய விடயங்கள் அறிய தந்தீர்கள் நன்றி.

      நீக்கு
  19. அப்படியே திரு கலாம் இவரை வணங்கி இருந்தாலும் அதில் தவறென்ன இருக்கிறது? மரியாதை நிமித்தம் ஒருவரை ஒருவர் வணங்குவது உண்டு தானே? பல சமயத்தலைவர்களையும் திரு கலாம் அவர்கள் சந்தித்திருக்கிறார். வணங்கி இருக்கிறார். தனிப்பட்ட முறையிலாக இருந்தாலும் சரி, அல்லது குடியரசுத்தலைவர் என்ற முறையிலானாலும் சரி அது அவருடைய பண்பைத் தான் சுட்டிக் காட்டுகிறது. நாம் தான் ஏதேதோ அர்த்தங்களைக் கண்டு பிடித்துக்கொண்டு வெறுப்பை வளர்த்துக் கொள்கிறோம். மனதில் வேறுபாடு இல்லை எனில் எதுவும் சம்மதமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதே மனிதபண்பு.
      ஆனால் கலாம் ஐயா தான் சொல்லிய தத்துவத்தில் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றியது.

      நீக்கு
  20. எந்த மதமாக இருந்தாலும் அதைக் கேலி செய்யாமல் அவரவர் வழிப்படி பின்பற்ற அனுமதிப்பதே உண்மையான மதச்சார்பின்மை. திரு கலாம் அத்தகைய மனப்பான்மை கொண்டவரே! ஆகவே யார் வந்திருந்தாலும் எந்தத்துறவியாக இருந்தாலும் இதே மரியாதையைத் தான் அவர் அனைவருக்கும் கொடுத்திருப்பார். நேற்றுத் தான் இறந்த பிறகு ஒருவரை இழிவாகப் பேசுவது தவறு என எங்கள் ப்ளாகில் கருத்துகள் எழுதினோம். இப்போ ஓர் மாமனிதரைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதான் மனிதர்கள்! மனதை வேதனை அடைய வைத்த பதிவு! :((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாம் தனது பதவி அதிகாரத்தால் தனது குடும்பத்துக்கு எந்த பலனையும் கொடுத்ததில்லை இது அனைவரும் அறிந்ததே...

      தனது குடும்பம் டெல்லியை சுற்றிப்பார்த்ததற்கான செலவை உடனே கொடுத்த விட்டதாக செய்திகளில் படித்து இருக்கிறேன்.

      நான் அவரை தவறாக சொல்ல வரவில்லை துறவியைவிட மாமேதை என்றே குறிப்பிடுகிறேன்.

      நீக்கு
  21. கலாம் அனைவராலும் மதிக்கப்படுபவர் ஜி.
    மண்டி இடவில்லை அவர் மதிப்பாய் வணங்குவது போல் இருக்கிறது.

    இந்த படம் உண்மையான படம் போல் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கலாம் அவர்களின் நேர்மை எல்லோரும் தெரிந்ததே...

      படமும் கிராப்பிக்ஸ் போல்தான் இருக்கிறது.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    திரு. கலாம் அவர்கள் அன்பான பண்புகள் நிறைந்த எளிய மனிதர் என நாம் அனைவருமே அறிந்துள்ளோம். நேற்று இரவு பதிவை பார்த்தேன். இது அவரின் பண்பை குறிக்கும் படமாக மட்டுமின்றி அவரது இறை நம்பிக்கையையும் காட்டுகிறது என நினைக்கிறேன். கருத்துக்களையும் படித்தேன். சமணர்கள் துறவியாகும் சிரமமான முறைகளையும் ஏற்கனவே கொஞ்சம் படித்துள்ளேன்.

    எனக்கும் இந்தப்படம் உண்மையானது இல்லையோ.. இப்போதுள்ள கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக அவர் பெயருக்கு ஏதேனும் களங்கம் கற்பிக்க சிலர் (அவரைப்பிடிக்காதவர்கள்) எண்ணுகிறார்களோ எனத்தான் தோன்றியது. ஆனால் அதையும் நீங்கள் கருத்துரையில் மறுத்திருக்கிறீர்கள். இது தனிப்பட்ட மனித சுதந்திரம் என நினைக்கலாமே எனவும் தோன்றுகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மேலே திரு. ஜெயக்குமார் ஐயா அவர்கள் இந்த விசயத்தை மறுத்து இருக்கிறார்.

      அவருடைய தகவல் உண்மையாக இருக்கவே சாத்தியம். தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  23. திகம்பரர் எனப்படுகின்ற திசைகளையே ஆடையாக அணிபவரைக் குறிக்கின்ற வகையில் இவர் ஒரு சமணத் துறவி. சரவணபெலகோலா போனபோது இவரைப் போன்றோர் இயல்பாக மலைமீது நடந்து சென்று ஒவ்வொரு சன்னதியின் முன் சற்றே அமர்ந்துவிட்டுச் சென்றதைப் பார்த்துள்ளேன். அது அவரவர் நம்பிக்கை மற்றும் சமயம் பற்றியதாகும்.
    அப்துல் கலாம் இவரை வணங்கியிருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது பிறர் கூறுவது போல போட்டோஷாப்பாகக்கூடவும் இருக்கலாம். கலாமிடம் நாம் கற்பது எவ்வளவோ இருக்க நாம் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் விளக்கவுரைக்கும், நடுநிலையான கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  24. கலாம் அவர்களின் பேச்சு,அவரைப்பற்றிய கட்டுரைகள் படித்திருக்கிறேன். இங்கு ஒரு சானலில் டாகுமெண்டரி கூட போட்டார்கள். எனக்கும் இப்படம் உண்மையில்லை என தோன்றுகிறது. நல்லதையே எடுத்துப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  25. கலாம் அவர்கள் பண்பு நிறைந்த மனிதர்.
    சமையத்தை மதித்து நடந்தும் இருக்கலாம். இப்பொழுது படங்களை நம்பவும் முடியாது.
    'யார் அறிவார்..... '

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  26. கலாம் மனிதர்களை மதிக்கும் எளிய மனிதர். புகைப்படம் போட்டோ ஷாப்பாகத்தான் இருக்க வேண்டும். கீதா அக்கா கூப்பிட்டிருப்பது போல சமணத் துறவிகளின் வாழ்க்கை நியமங்கள் நிறைந்த கடினமான வாழ்க்கை. வணங்குவதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  27. சமணரோ வேறு சாமியாரோ, பிறர் காணும் வகையில் நிர்வாணமாக் காட்சி தருவதும் நடமாடுவதும் இன்றைய சமுதாயச் சூழலில கண்டிக்கத்தக்கது; தண்டனைக்குரியது.

    இம்மாதிரி நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி வழங்குவதும் தவறு.

    இவர்கள் முற்றும் துறந்தவர்களாக இருக்கலாம். இவர்களைப் பார்க்கும் இளம் பெண்கள் முற்றும் துறந்தவர்கள் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே.....

    இந்த அநாகரிக...காட்டுமிராண்டி மனிதருடனான சந்திப்பைக் கலாம் தவிர்த்திருக்க வேண்டும்.

    நீங்கள் கலாமை விமர்சித்ததில் தவறில்லை கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொதுவில் இப்படி நிர்வாணமாக இருப்பது தவறு என்பதையே நான் சொல்ல வந்தேன்.

      நானோ, நீங்களோ இப்படி இருந்தால் கைது செய்யும் அரசு இவர்களுக்கு அனுமதி அளிப்பது ஏன் ?

      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    2. பரமசிவனே...ஆடையின்றி பிச்சாடனராக பிச்சை எடுத்தவர். பிச்சாண்டார்கோயிலில் சிலையும் உள்ளது. மக்களும் வழிபடுகின்றனர். (திருச்சி உத்தமர் கோயில்.)

       Jayakumar

      நீக்கு
    3. இன்றைய சாமியார்கள் 90% போலியாகத்தான் இருக்கிறார்கள் ஐயா.

      மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
    4. கில்லர்ஜி, நாம் பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் இருக்கிறது. இவர்களில் யாரும் பொதுவெளியில், போக்குவரத்தில் உலாவி/திரிந்து பார்த்திருக்கிறீர்களா? இது அவர்களின் ஏதோ ஒரு மஹாநாடு. இந்தப் படத்தின் உண்மைத் தன்மை குறித்த பதில் ஆழ் மனதில் இருக்கிறது. வெளியே வரவில்லை. ஆனாலும் இவரை நீங்கள் போலி என்று சொன்னதால் அவர் பெருமை குறையப் போவதில்லை. பெண்கள் முன்னால் வரவும் மாட்டார்கள்! அதிலும் இளம்பெண்கள் முன்னால்! வாய்ப்பே இல்லை. சமணத்தைப் பற்றி அறியாமல் இவ்வளவு தூரம் பேசுவது சரியில்லை.

      நீக்கு
    5. வருக சமண மதம் பற்றி தங்களது அளவுக்கு எனக்கு தெரியாது.

      இருப்பினும் ஆண்டியின் கோலம் என்று சொல்வார்களே அந்த நிலையிலாவது இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து.

      பெண்கள் ஆசி வாங்கும் புகைப்படங்களும் நான் பார்த்து இருக்கிறேன்.
      (வேறு சாமியார்கள்)

      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  28. வணக்கம்
    ஜி

    இப்படியான சாமியார்களின் ஆதிக்கம் தான் இந்தியாவில் அதிகம் இவர்களுக்கென்று தனி கூட்டமே இருக்கிறது
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்த ரூபன் அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  29. மேனாள் குடியரசுத்தலைவர் Dr அப்துல் கலாம் அவர்கள் எல்லோரையும் மதிக்கக்கூடியவர். இந்த படத்தில் அவர் சமணத்துறவியை நின்றுகொண்டுதான் வணங்குகிறார். காலில் விழவில்லை. எனவே இதை பெரிதுபடுத்தவேண்டாம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரையை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  30. நண்பா..

    எல்லோரையும் மதிக்கும் பண்பாளர்.

    இவரை நிற்கவைத்து மரியாதை பெற்றுக்கொள்ளும் மனிதருக்கே தலைகுனிவு, இவருக்கல்ல.

    ஆமாம் சங்கிகள் என்றால் யார்?

    தனபால் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.

    ரொம்ப நாளாவே இந்த doubt எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவரை நிற்க வைத்து மரியாதை பெற்றுக் கொள்ளும் மனிதருக்கே தலைகுனிவு, இவருக்கல்ல//

      வருக நண்பரே மிகச்சரியான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  31. அது தான் வள்ளுவரே சொல்லி விட்டாரே நண்பரே. குறையை மறந்து நற்குணங்களை கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகையை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  32. சிறந்தது நமக்குப்பிடித்தது நிறைய இருக்க பிடிக்காத ஒன்றுக்காக மதிப்பைக் குறைத்தல் கூட சரியில்லைதான்..அண்ணா பொடி போடுவார் அது எனக்குப் பிடிக்காது அதனால் அவர் சொற்பொழிவுகள் பிடிக்காது போகுமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே நான் பெரிதும் மதிக்கும் மாமேதைகளில் திரு.கலாம் அவர்களும் ஒருவரே...

      இச்செயல் சற்று மதிப்பை சறுக்கி விட்டது அதற்காக இவர் மேதையில்லை என்றாகி விடாது. வருகைக்கு நன்றி.

      நீக்கு