இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

ஷாக்கிங் மால்


நினைவுகள்
அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட
விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட

திட்டங்கள்
சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு காது குத்த திட்டமிட்டான் காத்தவராயன்
சம்பளம் பெற்றதும் கணவனை மொட்டை அடித்தாள் மொக்கச்சியம்மாள்

முட்டை
சேவல் நினைத்தது நாளை பக்கத்து வீட்டு கோழிக்கு முட்டை கொடுக்க
சேகர் நினைத்தான் இன்று மாலை சேவலை சூட்டான் போட

மிருதங்க வித்வான்
வீட்டுக்குள் இருந்து கடத்தை தட்டிக்கிட்டு இருந்த கணவரை தெருவுல 
போயி  குடத்தை வச்சு தண்ணீர் பிடிச்சுட்டு வரச்சொன்னாள் மனைவி
 
அடைக்கலம்
வாழ்க்கையில் எதையுமே அடைய முடியாமல் விரக்தியான 
அடைக்கலம் அடையாரில் கொரோனாவால் அடைக்கலமானார்

பசும்பால்
எதிர்வீட்டு பாலுவிடம் பாத்திரத்தோடு பல்லைக் காட்டினாள் பல்லவி
பூத்தில் போய் பால் வாங்கி வந்து கொடுத்தான் பூச்சிப்பல்லு பாலு

நிறங்கள்
கருப்பு மனிதன் வீட்டுச் சுவருக்கு வெள்ளை அடித்துக் கொண்டு போனதில்
வெள்ளை மனிதன் சிவப்பு வெற்றிலை எச்சியை துப்பி விட்டு போனான்

யுத்தம்
சோமு ஐயாவின் பின்புறத்தில் டயர் வெடித்தது போல் சத்தம்
நேற்றைய மொச்சைக் கொட்டை குழம்பால் வந்த யுத்தம்

ஸூட்டிங்
பாபா கோவிலுக்கு போய் வந்ததும் சோபாவில் சாய்ந்த ஷோபாவை
தாழ்ப்பாள் படத்தின் ஸூட்டிங்குக்கு நேரமாச்சு என்றாள் அம்மா பாமா

உழைப்பு
சண்டையில் மகனிடம் இது நானே உழைத்து கட்டிய வீடுடா என்ற அப்பாவை
நீங்க கொத்தனார் வேலையா பார்த்தீங்க என்றதும் வாயடைத்து நின்றாள் அம்மா

ரசிப்புத்தன்மை
என் கணவரைத் தவிர யாரும் என்னை தீண்ட முடியாது என்றதும் தியேட்டரில் 
ரசிகர்கள் கை தட்டியதை டைரக்டரின் மடியில் அமர்ந்து ரசித்தாள் நடிகை ரசிகா

ஷாக்கிங் மால்
ஷாப்பிங் மாலில் கணவனோடு கனகாவை கண்டு ஷாக்கானாள் ஷகிலா
ஷாக்கான ஷகிலாளோடு தன் கணவனை கண்டு ஷாக்கானாள் கனகாவும்

ChivasRegal சிவசம்போ-
வெக்கங்கெட்ட சிறுக்கியை கண்டா வெளக்கமாறும் விலகி நிற்கும்.

சிவாதாமஸ்அலி-
எல்லோருமே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தவாதிகளாக இருப்பாங்களோ...

எமது மின்நூல் ரம், ரம்மி, ரம்பா இலவச தரவிறக்கம் செய்யும் முகூர்த்தநாள் ஆகஸ்ட் 04 – 12:00 am முதல் ஆகஸ்ட் 06 – 11:59 pm வரை. 

இதோ இணைப்பு – ரம், ரம்மி, ரம்பா

48 கருத்துகள்:

  1. கில்லர்ஜி எப்ப இந்த மால் வாங்கினீங்க அல்லது கட்டினீங்க!! சொல்லவே இல்லை!! சரி இப்பத்தான் வாங்கியிருந்தீங்கன்னா எங்க எல்லாரையும் ஜூம்ல வரவழைச்சு வெர்ச்சுவலா கூட ஒரு விருந்து கொடுத்துருக்கலாம்ல!! ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரடங்கு பிரச்சனையால் வெளியில் தெரியாமல் கட்டியது.
      மாலில் உணவகங்கள் திறக்கட்டும் பார்க்கலாம்.

      நீக்கு
  2. மிருதங்கவித்வான், அடைக்கலம், ரசித்தேன் கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் அடைக்கலம், அடையாரில் அடக்கமானது உங்களுக்கு ரசிப்பதாக இருக்கிறதா ?

      நீக்கு
  3. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.... ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க ஜி வந்ததும் தலைப்பை மாற்றி விட்டீர்களே...

      நீக்கு
  5. கோடைக்கேற்ற குளிர் மோர் போல
    ஜிலுஜிலு என்றிருக்கிறது - பதிவு...

    பதிலளிநீக்கு
  6. விமலா, "அமலா அவள் கணவனோடு காலத்தை ஓட்டணும்' என்று நினைத்தால் என்ன தவறு? அமலாவும் தன் நண்பி விமலா, அவள் கணவனோடு காலத்தை ஓட்டணும் என்றுதானே நினைக்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உங்களது கோணத்திலும் நினைக்கலாம், யாரும் குறை சொல்ல வழியில்லை.

      நீக்கு
  7. பல்லவி செய்ததைத்தானே 16 வயதினிலே காந்திமதி அம்மாளும் செய்தார். சப்பாணியை எல்லா வேலைகளையும் சொல்லி வேலை வாங்கினாளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லவியையும், காந்திமதியையும் சமமாக ஒப்பிட்டு விட்டீர்களே...

      நீக்கு
  8. நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்...

    கிடைக்கும் என்பார் கிடைக்காது
    கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்...

    இந்த பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மனிதர்களின் மனம் என்றுமே முரண்பட்டதுதானே...

      நீக்கு
  9. ரைமிங் ஜோக்ஸ்! புன்னகைக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜியின் புன்னகைக்கு நன்றி.

      நீக்கு
  10. அடுக்கு மொழி விற்பன்னர் நீர் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பெயர் புதுமையாக இருக்கிறதே... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  11. இங்கிலீசு mall ஹிந்தி माल ஆகிவிட்டது ரசிக்க முடியவில்லை.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தலைப்பு ரசிக்க முடியாமல் போய் விட்டதோ...

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் ஷாப்பிங் மாலுக்கு வரலாமென்றால், இந்த கொரோனா காலத்தில் போய் திறந்துள்ளீர்களே..! முக கவசமே மாலுக்கு வந்துதான் வாங்க வேண்டும். கும்பல் அதற்குள் வந்து விட்டது போலும்..! யாரையும் தொடாமலே அங்கு ஷாக்கிங் ஆனவர்கள் வேறு இருக்கிறார்கள். நாம் வந்து தவறுதலாய் தொட்டு விட்டாலும் மறுபடி ஷாக் ஆவார்களோ ? ஹா ஹா.

    எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது.
    நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் வேறொன்றை நினைக்கும் என்பதற்கு உதாரணம் சேவல்.

    மிருதங்க வித்வான் அதிலேயே லயித்து தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தாலும் ஆபத்துதான்.. கடம் அவர் தலையை பதம் பார்த்து விடும். ஹா ஹா.

    அப்பாவின் உழைப்பு ஒரு மகனுக்கு என்றுதான் புரிந்திருக்கிறது. அவன் உழைப்பை அவன் மகன் சுரண்டும் வரை அவனுக்கு புரியாது.

    அனைத்தையும் ரசித்தேன்.
    தங்கள் மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆமாம் சும்மாவே மனிதர்களால் ஷாக் அடிக்கிறது இதில் ஷாக்கிங் மாலுக்கு போனால் சுத்தம்தான்.

      அப்பாவின் அருமை அவரது மறைவுக்கு பிறகுதான் பலரது மகன்களுக்கு புரிகிறது.

      தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  13. கடவித்வான் கடத்தை தட்டிக் கொண்டு இருக்கும் போது மனைவி வெளியே போய் தண்ணீர் பிடித்து வர சொன்னது அவர் கடத்தை வைத்தா?

    யுத்தம் சிரிக்க வைத்தது.
    உழைப்பு இப்படி மகனால் கேள்வி கேட்க்கும் படி ஆச்சே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      கடத்தை அல்ல! குடத்தை வைத்துதான்.
      ஆமாம் இன்றைய மகன்கள் இப்படித்தான் கேட்கிறார்கள்.

      நீக்கு
  14. கடம் எல்லாத்துக்கும் பயன்படும்னு வித்வான்  வீட்டம்மாக்கு புரிஞ்சிருக்கு அனைத்தும் ரசித்தேன் .அடைக்கலம் ,நிறங்கள் இரண்டும் மிகவும் பிடித்தது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ?
      ரசித்தமைக்கு நன்றி.

      ஜேம்ஸ் ஊரணிக்காரவுங்களை காணோமே... ?

      நீக்கு
    2. நாங்கள் அனைவருமே நலம் ,
       
      அவங்க புதிய ஒரு ஆராய்ச்சியில் இருப்பதாக கேள்வி ..ஒரு அரவை மெஷின் வாங்கிட்டு அதில் என்னெனலாம் செயலாம்ன்னு  மேடம் ஆராய்ச்சி செய்றாங்க :))))) எதுக்கும் தயாரா இருங்க விரைவில் புத்தம்புதிய சமையல் குறிப்புகளுடன் களம் இறங்குவார் :)

      நீக்கு
    3. கவச உடையுடன் நாங்களும் தயார் எதிர் கொல்'ல...

      நீக்கு
  15. வெக்கங்கெட்ட சிறுக்கிய கண்டா வௌக்குமாறும் விலகி நிக்குமா...??அது எப்படி???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதற்கு முகலட்சணம் தெரியும்.

      நீக்கு
  16. நாளை தரவிறக்கிவிடுகிறேன் கில்லர்ஜி. அரபு மொழி குறித்த பின்னூட்டப் பதிவில் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். எப்படி தொடர்பு கொள்ளுவது? அப்புறம்... முதன்முதலாக உங்கள் பதிவுக்கு வரவில்லை. நான் பழைய ஆள்தான். வலைத்தளத்தில் கவிப்ரியன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது இயற்பெயராக மாற்றிக் கொண்டேன். அதுவும் தவிர கடைசி ஐந்தாண்டுகளாக வலைப்பக்கமே வராமலிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி.
      கவிப்பிரியன் ஞாபகம் வருகிறது. தங்களுக்கு எவ்வகையில் எனது உதவி தேவையோ... என்னிடம் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

      எனது முகவரி - sivappukanneer@gmail.com

      நீக்கு
  17. அவசரத்துக்கு உங்க மாலில் வந்து பொருட்கள் வாங்கிக்கலாம் போல! அமலா, விமலா , பல்லவி எல்லோருமே புன்னகைக்க வைத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்ப ஊரடங்கு மால் பூட்டி இருக்கிறது. பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  18. இதுபோல் துணிச்சலாக தலைப்பு வைக்க உங்களால்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. நிறங்கள் பற்றிய வரிகளை இரசித்தேன்.அருமை! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  20. அனைத்துமே நன்று.

    ‘ரசிப்புத்தன்மை’யை ரசித்தேன்.

    ‘யுத்தம்’...வாய்விட்டுச் சிரிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஹா.. ஹா.. ரசித்து சிரித்தமை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  21. வித்தியாசமான சிந்தனை. ரசனை.

    பதிலளிநீக்கு
  22. அடைக்கலம் - நகைச்சுவையானது.
    அப்புறம் - அந்த இயக்குனரே ரசிகாவின் கணவராய் இருக்கலாமோ ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ உங்களது சிந்தனை இப்படி போகிறதோ...

      எனக்கு குண்டக்கா, மண்டக்காதான் வருகிறது.

      நீக்கு