தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 17, 2020

பெரியகுளம், பெரியவர் பெரியசாமி


துபாய் ஷேக் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறி எனது சீரூந்துக்குப் போகும் பொழுது இனிமையான குரல்
எஸ்க்யூஸ் மீ
திரும்பிப் பார்த்தேன் அழகிய தேவதையொன்று நின்று கொண்டு இருந்தது.
யூ ஆஸ்க் மீ ?
ஆமா உங்களைத்தான்...
அழகியின் அழகிய உதடுகளிலிருந்து அழகிய தமிழ் வார்த்தை அடடே..

சொல்லுங்க, என்ன விசயம் ?
தப்பா நினைக்க மாட்டீங்களே... ?
ம்.... மாட்டேன் சொல்லுங்க ?
உங்க மீசை அழகா இருக்கு.

அவள் பொய் சொல்வதற்கு நூறு % சாத்தியமில்லை காரணம் தினமும் அரேபிய பெண்களிலிருந்து... பிலிப்பைன்ஸ் மட்டுமல்ல சோமாலியா பெண்களிலிருந்து... நைஜீரியா கருப்பிகள்வரை பெரும்பான்மையான பெண்கள் சொல்வதுதானே...
நன்றி
நீங்க எங்கே போறீங்க ?
நான் அபுதாபி எனது வீட்டுக்கு போறேன் ஏன் ?
நானும் அபுதாபிதான் என்னை அபுதாபியில் விடமுடியுமா ?

மனம் ஆலோசித்தது என்ன... செய்யலாம் சரி நாமயென்ன... தூக்கிட்டாப் போகப் போறோம் பேச்சுத் துணைக்கும் உதவுமே.... ?
சரி வாங்களேன்...
சீரூந்தின் தாணியங்கி பொத்தானை அழுத்தவும் கதவுகள் திறந்து கொண்டன.. நான் எனது இருக்கையில் உட்கார்ந்து நாடாவை மாட்டிக் கொள்ள அவள் முன் புறக்கதவை திறந்து உட்கார்ந்து நாடாவை மாட்டிக் கொண்டாள்.. சீரூந்தை நகர்த்தி பிரதான சாலைக்கு வந்ததும் விரட்டினேன் ஏனோ தெரியவில்லை சீரூந்து வழக்கத்தை விட சீறியது....

நீங்க எங்கே... வேலை செய்றீங்க ?
மனம் சொல்லியது டேய் கில்லர்ஜி உண்மையை சொல்லக் கூடாது..
அது வந்துங்க, சுற்றுலா நிறுவனத்துல வேலை செய்யிறேன்.. நீங்க ?
நான் அபுதாபி பத்திரிக்கையில் தட்டச்சராக இருக்கேன் உங்க பேரு ?
என்னோட பேரு.. கில்லர்ஜி உங்க பேரு ?
என் பேரு வெண்ணிலா.. கில்லர்ஜியா... என்னங்க... புதுமையா இருக்கு ?
ஆமாங்க வித்தியாசமா இருக்கட்டும்னு எங்க ஐயா ஞானி ஸ்ரீபூவு கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு வச்சாரு..
இல்லை நான் நம்ப மாட்டேன்..

சரி நம்ப மாட்டேன்னு சொன்னால் நான் என்னதான் செய்யிறது ?
உங்களிடம் குடியுரிமை அட்டை, ஓட்டுனர் உரிமை அட்டை இருக்குமே அதை காண்பிங்க அப்பத்தான் நம்புவேன்.
என்னங்க, இதுக்காக நிரூபிக்கணுமா ?

எனது பணச்சுருக்கை (Money Purse) எடுத்து ஓட்டுனர் உரிமை அட்டையை எடுத்துக் கொடுத்தவன் பக்கத்திலிருந்த சிறிய திறந்தவெளிப் பெட்டியில் வைத்து விட்டேன் அட்டையைப் பார்த்தவள்...
ஆமா... இதுல மீசை வேற மாதிரி வச்சு இருக்கீங்க... இப்ப வேற மாதிரி வச்சுருக்கீங்க ?
ஆமா, அடிக்கடி மாத்திடுவேன்.
இதுவும் அழகாத்தான் இருக்கு...

எனக்கு எதுவும் அழகாத்தான் இருக்கும்.
சீரூந்துகூட அழகா ஓட்டுறீங்களே....
மனசு கேட்டது இவள் நம்மை ஓட்டுறாளோ.. ?
அட்டையை உள்ளே வைப்பதற்கு பணச்சுருக்கை எடுத்தவள்...

என்னங்க... நிறைய அட்டைகள் வச்சு இருக்கீங்களே... பணமும் நிறைய இருக்கே ஆமா நேற்று முதல்தேதி சம்பளம் எடுத்து இருப்பீங்க.... நான் எடுத்துட்டேனு சொல்லிடாதீங்க... ஹா... ஹா.. ஹா குடியுரிமை அட்டையில் மீசை வேற மாதிரி வச்சு இருக்கீங்க ?
அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் ஆமா, ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி மீசை வச்சு இருப்பேன்.

பாட்டுக்கேட்போம் என்று பொத்தானை அழுத்த... ‘’தல’’ M.K.T. பாடினார் இப்படி... //தியானமே எனது மனது நிறைந்தது சந்திர பிம்ப வதனம்// அசோக்குமார் திரைப்படத்திலிருந்து.. மெய் மறந்து ‘’தல’’ பாடலைக் கேட்கவும் தலையை ஆட்டி ரசித்து அதனுள் நுழைய...
என்னங்க ?
திடுக்கிட்டு என்னங்க ?
என்னபாட்டு இது ?
M.K.T. பாட்டு பிடிக்காதா ?
பிடி....க்....கூ...ம்...

எனக்கு புரிந்து விட்டது ராஸ் அல் கைமாஹ் வானொலியை திருகினேன் K.J. யேசுதாஸ் //கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால்நிலா// என்றார்.. இதுவும் நமக்கு பிடித்ததுதானே... அவள் ஒவ்வொரு அட்டையாக பார்த்துக் கொண்டே வந்தாள் அந்தப் பார்வையில் எனது புகைப்படத்தை ரசிப்பதை உணர்ந்து நான் ரசித்தேன் சீரூந்து எரிபொருள் குறைவதாக சமிக்ஞை காண்பிக்க.. அடுத்து வந்த ADNOC நிறுவனத்துக்குள் உள்ளே நுழைந்தேன்... சிப்பந்தி சூடானி வந்து நிற்க, கண்ணாடியை கீழே இறக்கிய நான்...

ஹஸூஷி மத்ரூஸ் (Special Full)
என்றேன் இயந்திரம் 132.00 Dhs காண்பிக்க.. நான் அவளைப் பார்க்க புரிந்தவள்..


பணமா... அட்டையா ?
அந்த கடன்கார அட்டையை (RAK Credit Card) எடுங்க...
எடுத்துக் கொடுக்க, இயந்திரத்தில் தேய்த்து விட்டு தந்தார் சிப்பந்தி
ஸுக்ரான் (Thanks)
சொல்லி விட்டு.. சீரூந்தை அங்காடியின் அருகில் நிறுத்தி..

ஏங்க, குடிக்கிறதுக்கு... ஏதும் வாங்கிட்டு வரவா ?
ம்... ஆனால், ஒன்று நான்தான் பணம் கொடுப்பேன்.
பரவாயில்லை நான் போய் தேநீர் வாங்கிட்டு வர்றேன் அந்த பணப்சுருக்கை கொடுங்க ?
இல்லை இதுக்கு நான்தான் செலவு செய்வேன் பணச்சுருக்கை கொடுத்தால் உங்க பணத்தை கொடுப்பீங்க... இந்தாங்க வாங்கிட்டு வாங்க...


அவளது கைப் பைக்குள்லிருந்து பத்து திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுத்தாள்... நான் அழகாக சிரித்துக் கொண்டே... உள்ளே போய் இயந்திரத்தில் இரண்டு தேநீர் எடுத்து நான்கு திர்ஹாம்ஸ் கொடுத்து விட்டு திரும்பும் பொழுது சந்திப்புகளில் வழங்கப்படும் மலர்க்கொத்து வரிசையாக இருந்தது ச்சே பணச்சுருக்கை கொண்டு வந்திருந்தால் வெண்ணிலாவுக்கு ஒன்று வாங்கி கொடுக்கலாம் அவள்தான் நான்தான் செலவு செய்வேன் என்று அடம் பிடித்து விட்டாளே சரி பரவாயில்லை இன்னொருநாள் அபுதாபியில் வாங்கி கொடுக்கலாம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போகப்போகுது இவளுக்கும் நமக்கும் ஏதோ போன ஜென்மத்து பந்தம்போல அதுதான் நம்மிடம் ஒட்டிக்கொண்டாள். 

சரியென சீரூந்துக்கு வந்தேன் இருக்கையில் ஆளில்லை எங்கு போனாள் ? கழிவறைக்குப் போனாளோ... குழப்பமாகிய எனது அழகான முகத்தைக்கண்டு அங்கு தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாக்கிஸ்தானி என்ன ? என்பது போல சைகையால் கேட்க, நானும் இங்கிருந்தவள் எங்கே ? எனக்கேட்க அருகில் வந்து சொன்னான்.

//ஆப்னா காடிஸே ஏக் லடுக்கி தூஸ்ற லால் வாலா காடிமே பௌத் ஜல்த்தி ஜாத்தாஹே//
(உங்களுடயை சீரூந்திலிருந்து ஒரு பெண் வேறு சிவப்பு நிற சீரூந்தில் ரொம்ப வேகமாக ஏறிப்போனாள்)
‘’அய்யோ.... யேம் பணம் போச்சே’’
பொது இடத்தில் அலறி விட்டேன்.
யோவ் மூஞ்சியில கொதிக்கிற கருவாட்டு கொழம்பை ஊத்திடுவேன் எந்திரிச்சு சோத்தை வடிய்யா... எப்பப் பாத்தாலும் பகல் கனவு கண்டுக்கிட்டு ஒனக்கு வேற வேலக்கழுத இல்லே.. நான் கொழம்பு வச்சுட்டேன் நீ சோறு வடிக்கிற நாளெல்லாம் ஒன்னோட... 7 ½ த்தானே இருக்கு சீக்கிரம் எந்திரிய்யா சாப்புட நேரமாச்சு ஒன்னை மெஸ்சை விட்டு தூக்குத்தான் சரியா வரும்.

பக்கத்து கட்டில் பெரியகுளம் பெரியவர் பெரியசாமி விரட்ட எனது அழகான முகத்தை இஞ்சி தின்ன சிங்கம் போல் வைத்துக் கொண்டு அரிசிச் பையை திறந்து அரிசியை வழக்கமான அளவில் அளந்து பாத்திரத்தில் கொட்டினேன்.

ChivasRegal சிவசம்போ-
இஞ்சி தின்ன சிங்கம் நான் பார்த்தது இல்லையே... ஒருவேளை இது உகாண்டா நாட்டு சிங்கமாக இருக்குமோ....

காணொளி

57 கருத்துகள்:

  1. "அதானே யாருகிட்டே...?" என்று சொல்லலாம்-ன்னு இருந்தேன்... ஜொள்ளு மழை, அந்தி மழையால் மாறி விட்டது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உடனடி வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆரம்பத்லயே கனவுன்ற சஸ்பென்ஸ் ஒடைஞ்சிரிச்சே....நான் அழகு; எம்மீசை அழகு போன்ற நிஜத்துல இல்லாத எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் கனவுலதான வரும்😟

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக திரு. சங்கர் அவர்களே...
      தங்களது முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
      (முன்பு வந்தது போன்ற நினைவும் இருக்கிறது)

      நீக்கு
    2. நன்றி. அருமையான சரளமான நகைச்சுவை !!! சுத்தத் தமிழ் சுத்தமா வராது..ஹி...ஹி

      நீக்கு
    3. எனது சின்ன வயதில்(1962-64)அப்பாவின் வேலை நிமித்தம் 2 வருடம் பெரியகுளத்தில் வசித்தோம். பிரம்மஞான மந்திரம் என்ற பள்ளியில்(இப்பொழுதும் இருக்கிறதா தெரியாது)படித்த நினைவு. எங்கள் வீட்டின் அருகில் நடிகர் SSR வீடும் இருந்தது. அவரை பெரியகுளம் வரும்போது பார்க்க முடியும். நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் வீடும் அருகிலேயே இருந்தது !!!

      நீக்கு
    4. வருக நண்பரே சுத்தமான தமிழை நாமே விரும்பவில்லை என்றால் வேறு நபர்கள் ரசிக்கவே மாட்டார்களே...

      தங்களால்தான் எஸ்.எஸ்.ஆரும், மேஜரும் பெரியகுளத்து பெருமக்கள் என்பதை அறிய முடிந்தது நன்றி.

      நீக்கு
    5. 'விரும்பவில்லை' என்று கூறவில்லை நண்பரே !!! 'வராது' என்றுதானே குறிப்பிட்டேன் !!!

      நீக்கு
    6. நல்லது இனியாவது முயலுங்கள் நண்பரே... மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    7. ஆமா, இல்ல, சொல்ல மறந்துட்டேன், மேஜர் என் அண்ணியின் அண்ணாவின் நண்பர். அதோடு மதுரையில் நாங்க இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டு அண்ணாவுக்கும் வகுப்புத் தோழர். அடிக்கடி வருவார். பார்த்திருக்கேன். எஸ்.எஸ்.ஆர் தேனி என்றே என் சித்தப்பா சொல்லுவார். சித்தப்பாவின் பள்ளித்தோழர் பிடிஆர். பழனிவேல் ராஜன்! பி.டி.ராஜன் பெரியப்பாவுக்கு நண்பர். அவங்கல்லாம் சர்வ சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தவர்கள்.

      நீக்கு
    8. ஆஹா பெரியகுளம் பெரிய விசயங்களை வெளிக் கொண்டு வருதே...

      நீக்கு
  3. நல்லா இருக்கு போங்க, அது எப்படிக் கனவெல்லாம் நினைவிலே வேறே இருக்கு? எனக்கு எப்போவானும் அதிகாலைக் கனவுகள்/அது கனவா , நனவானு சந்தேகமா இருக்கும்! அப்போப் பார்த்து எழுந்துடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நான் கனவு வரும்போதே லட்டர் பேடு வச்சு எழுதிக் கொண்டே வருவேன்.

      நீக்கு
  4. நல்லவேளையா ஏமாறலை! உலக்கை நாயகன் படங்கள் பிடிக்காது. ஆனால் பாடல்கள் அருமையாத் தான் அமையுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக்கை நாயகன் புடிக்காதுனு எப்ப சொன்னேன் ?
      புடிச்சால் நல்லதுக்கு இல்லைனு சொன்னேன். இது தவறா ?

      நீக்கு
    2. ஹிஹிஹி, எனக்குப் பிடிக்காது. பாடல்கள் பிடிக்கும்னு சொன்னேன். அவருக்கு அமையுதுனும் சொன்னேன். :)))))

      நீக்கு
    3. ஆமாம் ஆளுக்கு தகுந்த பாடல்களை அமைக்கிறார்கள்.

      நீக்கு
  5. பெரியகுளத்துக்கு 2010 ஆம் ஆண்டிலே கடைசியா போனோம்னு நினைக்கிறேன். அங்கேயே செட்டில் ஆகும் எண்ணத்துடன் போயிட்டு அங்கு உடுப்பி ஓட்டலில் தங்கிக் கொண்டு ஒரு நாலைந்து நாட்கள் இருந்தோம். சுற்றுவட்டார ஊர்களை எல்லாம் நம்ம ரங்க்ஸ் பார்த்ததில்லை. சின்னமனூர், குச்சனூர், மேல்மங்கலம்(எங்க அப்பாவின் பூர்விகம், இன்னமும் வீடு இருக்கு)தேவதானப்பட்டி எல்லாம் போனோம்.மஞ்சளாற்றுத் தண்ணீரைக் குடிச்சுட்டு அதன் சுவையில் மயங்கிட்டார். அதே போல் குச்சனூரில் ஐந்து ரூபாய்க்கு வாங்கிக் குடித்த இளநீர். மார்க்கையங்கோட்டையிலிருந்து சின்னமனூர் போகும் வழி! முன்னெல்லாம் இரு பக்கங்களிலும் அடர்ந்த மரங்கள் இருக்கும் சாலை. மார்க்கையங்கோட்டை ஒரு காலத்தில் ஆசியாவிலேயே அரிசி உற்பத்திக்குப் பெயர் போன ஊர்! சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில்ச் செப்பேடுகள்! புராதனமான கோயில்! நிறையப் போயிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தங்களது பழைய நினைவுகளை மீட்டி விட்டதில் மகிழ்ச்சி.

      நான் பெரியகுளம் போனதே இல்லை. நிறைய ஊரின் பெயர்களை தந்தமைக்கு நன்றி தலைப்பு வைக்க உதவும் ஹி... ஹி... ஹி...

      நீக்கு
    2. நான் மேல்மங்கலம், பெரியகுளம் குழந்தைகளுக்குக் காட்டுவதற்குக் கூட்டிப் போனேன். அப்போவும் சின்னமனூர் போனோம். என் சித்தி/சித்தப்பா இருந்தார்கள். சித்தப்பா பிரபலமான மருத்துவர். பிச்சுமணி என அழைப்பார்கள். சுப்ரமணியம் என்னும் பெயர்! அவர் திடீர்னு இறந்தப்போக் கிட்டத்தட்ட எம்ஜிஆருக்குக் கூடிய கூட்டம் கூடி அவர் உடலுக்குப் பொதுமக்கள் மரியாதைக்கு என எடுத்துச் சென்றுவிட்டனர். அனைத்தையும் முடித்துக்கொண்டு தான் உடலைப் பிள்ளைகளிடம் ஊர்க்காரங்க ஒப்படைத்தனர். இப்போவும் அங்கே இது ஒரு கர்ணபரம்பரைக் கதையாகப் பேசப்படும். வருடா வருடம் மருத்துவர்கள் தினத்தன்று யாரேனும் நினைவு கூர்வார்கள்.

      நீக்கு
    3. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தார் என்பதை அவர்களது இறுதிநாளில் தெரியும்.

      இது வாழ்ந்த முறைக்கு கிடைத்த மரியாதை எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. அடக் கஷ்டமே!...
    கனவுல கூட நெனச்சது நடக்க மாட்டேங்குது...

    உடுக்கையடி உலகநாதங்கிட்ட சொல்லி நல்லதா ஒரு முடிகயிறு கடிக்குங்க ஜி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஹா.. ஹா.. கயிறுகூட கடிக்கும் போலயே....

      நீக்கு
  7. ஆஆஆஆ நான் 1ஸ்டூஊஊ இல்லையா....:)... திரும்ப வாறேன் படிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நீங்க லாஸ்ட்டுக்கு ஃபர்ஸ்ட்டுதான். நன்றி மீண்டும் வறுக்க, வருக...

      நீக்கு
  8. மிகவும் அழகாக உள்ளது எழுத்து நடை. கனவு என்றும் எனக்கு தோன்றவில்லை nanbare. ஒரே ஒரு விஷயம் இடித்தது என்னவென்றால் அரபு நாடுகளில் பெண்கள் அவ்வளவு எளிதில் பிறரிடம் பழக மாட்டார்களே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் ஆனால் காரியம் சாதிக்க இடித்து(ம்) பழகுவார்கள் என்பதும் உண்மையே...

      நீக்கு
  9. கனவிலும்ஏமாற்றியது தமிழ்ப்பெண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா தமிழனைத் தமிழரே சுலபமாக ஏமாற்ற இயலும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல வேளை கனவாக போய் விட்டதில் ஏமாற்றவில்லை.ஆனால், கனவிலேயே உஷாரான எண்ணங்கள் உங்களுக்கு வந்த போது இது கனவாகத்தான் இருக்குமென அந்தி மழையிலும் ஒரு பட்சி என் மனதுள் கூவிக் கொண்டேயிருந்தது. கனவின் பலன் முடிவில் நல்ல வேலைதான்.ஹா ஹா ஹா.
    கனவையும் எப்போதும் போல் நல்ல நகைச்சுவையுடன் அழகாக எழுதியுள்ளீர்கள்.உங்கள் அற்புதமான திறமைக்கு பாராட்டுக்கள்.

    காணொளி கண்டேன். நீங்கள் அனாயாசமாக கார் ஓட்டும் திறமையை பார்த்து அந்த பிரமாண்ட கட்டிடங்கள் வழி விட்டு வியக்கின்றன போல் இருக்கிறது. அருமை. வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

      இந்த மூதேவி நமது முகத்தை பெயர்த்திடும் என்றுகூட கட்டிடங்கள் நகன்று வழி விட்டு இருக்கலாமோ...

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. மீசைக்கார நண்பர் ஏமாறுகிற ஆள் இல்லையே என்று பார்த்தேன்
    கனவு
    அருமை

    பதிலளிநீக்கு
  12. கண்ணியமான மனிதர் என்று நினைத்த கில்லர்ஜி இப்படி பெரிய ஜொள்ளு பார்ட்டியாக இருக்கிறாரே..? என்று வருத்தப்பட்டேன், நல்ல வேளை கனவுதான்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் கனவுதான் என்பது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறதே... நன்றி.

      நீக்கு
  13. ஆஆஆஆ கில்லர்ஜி... பற்றன் பற்றனாக மீசையை மாத்த்தி ஸ்ரைல் பண்ணினாலும், ஆரும் பயமில்லாமல் பல்ப்புக் குடுத்து விடுகினமே... கனவிலும் கூட .... புவஹாஆஅ புவஹாஅ புவஹாஆ ... இது சிரிக்கிறேன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சுலபமாக பல்பு கொடுத்து விடுகிறார்கள்.
      சிரிப்பு சிலிர்க்கிறது.

      நீக்கு
  14. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:).. தட்டிக்கேய்க்க ஆளில்லை எனும் தைரியத்தில் போட்டதை எல்லாம் திரும்பப் போடுறீங்க கர்ர்ர்ர்ர்:)... அதிரா வந்திட்டேனாக்கும்... க்கும்.... க்கும்:)...
    அந்திமழை பொழியப் பொழியக் காரோடியதை ஏற்கனவே இங்கு ரிலீஸ் பண்ணிட்டீங்களாக்கும்:)...

    ஏதோ இன்னும் வெள்ளோட்ட நினைப்பிலேயே இருக்கிறார்—- இதைச் சொல்பவர் சிறீ சிவசம்போ அங்கிள்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ கார் ஓட்டும் காட்சிகள் வந்து இருக்கலாம் ஆனால் இதே காட்சி இருக்காது.

      ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?

      நீக்கு
  15. கில்லர் ஜி இப்படி ஏமாற  மாட்டாரே என்றே படித்து வந்தேன்!   கடைசியில் கனவு!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஸ்ரீராம்ஜி கனவுதான் பதிவை (தூக்கி) நிறுத்தி இருக்கிறது.

      நீக்கு
  16. பெரியவர் பெரியசாமி சற்று நேரம் கழித்து வந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில பெரியவர்கள் இங்கிதம் தெரியாதவர்களே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. கில்லர்ஜியை ஏமாற்ற முடியாது. இப்படியும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல இந்த கனவு கதையோ!

    காணொளி நன்றாக இருக்கிறது. பாடல் பாடிக் கொண்டு கார் ஓட்டும் ஜி கொஞ்சம் தீவிரமாக சிந்திப்பது போல் இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சிந்திக்கவில்லை காணொளி எடுத்துக் கொண்டே வண்டி ஓட்டுவதால் போலீஸார் கவனிக்கிறார்களா ? என்று பார்க்கிறேன் வேறொன்றுமில்லை.

      நீக்கு
  18. அன்பு தேவகோட்டைஜி,
    காரும், நீங்க ஓட்டும் காட்சியும் ஷேக் சாயது ரோடும் துபாயைக் கண்ணில் நிறுத்துகின்றன.
    அப்போது எடுத்த காணொளியா.
    மிக அருமை.

    நீங்களா பெண்ணிடம் ஏமாறுவீர்கள் எனக்குத் தோன்றவில்லை:)
    நல்ல ரசனையான பதிவு.

    நல்ல வேளை கனவு.!!!
    எனக்குப் பெரியகுளத்தில் அம்பி என்ற சித்தப்பா இருந்தார்.
    நல்ல மாவடுகள் அங்கிருந்து. வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பழைய காணொளிதான், பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      பதிவு பெரியகுளம் சித்தப்பாவை நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  19. கடைசியில் கனவிலும் அழகிகள் அப்போ நடமாட ஆரம்பித்திருந்தார்களா?

    இப்பவும் ஏகப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பலருடைய வாழ்வை நகர்த்திச் செல்வதே கனவுதான்.

      நான் RAK BANK மட்டுமே வைத்திருந்தேன் கடைசிவரை என்னால் வங்கிக்கு துளியளவும் லாபமில்லை. துள்ளியமான வரவு செலவு.

      எனக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ்ந்தேன், வரும்போது முறையாக ரத்து செய்து பணத்தை கட்டி விட்டு வந்தேன்.

      நீக்கு
  20. கடைசிவரை உண்மைச் சம்பவம் என்று நம்ப வைக்கும் தத்ரூபமான நடையில் சுவையான சிறுகதை. மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வருக நண்பரே ஏமாந்து விட்டமைக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  21. தாங்களாவது கனவில் ஏமாந்தீர்கள்.... நான் நிஜத்திலே..ஏமாந்து... செல்போனை பறிக் கொடுத்து...எதுவும் நடக்காததுபோல் கப்சிப் ஆகிவிட்டேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விபரமான நீங்களா ஏமாந்தீர்கள் ?

      நீக்கு
    2. அதனால்தான் கப்சிப்...ஆக ஆகிவிட்டேன்

      நீக்கு
    3. ஹா.. ஹா.. அனுபவத்தை சொல்லலாமே.. என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு பயனாகும்.

      நீக்கு
  22. நல்ல வேளை! கனவு தான். பதிவினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு