தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 01, 2021

தொலைநோக்கு பார்வை

மேலேயுள்ள புகைப்படத்தில்  திரைப்படக் கூத்தாடியின் பதாகைக்கு பாலூற்றும் பெண்ணை பார்த்தீர்களா ? இப்பெண் வீட்டுக்கு விளக்கு ஏற்றுவதற்கு தகுதியானவளா ? இதற்குத்தான் செல்லம்மா புருசன் பெண்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று கொதித்து எழுந்தானா ? நாகரீக வளர்ச்சி, விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெண்களை எங்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது பார்த்தீர்களா ?

கட்டு மரத்தின் சாரத்தில் ஏற்றி இருக்கிறது, கட்டு மரத்தின் ஆட்சியில் தொடங்கிய சாராயத்தையும் குடிக்க வைத்தும் இருக்கிறது. கீழே காணொளியில் காண்க... பிறகு வந்த செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தொடந்தது. இப்பொழுது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்

பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை நல்ல முறையில் கண்காணித்து வளர்ப்போம். கல்லூரி படிப்பிற்காக விடுதிகளில் தங்கிப் படிக்கும் பெண்களிடத்தில்தான் இந்த கேடுகெட்ட பழக்கங்கள் தொட்டு படர்கிறது. காரணம் அங்கு நிலவும் சூழல். மீற முடியாத நிலைப்பாடு.

கூத்தாடிப் பயல்ட்ட ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாளிடம் கொடுத்துட்டு போவான் என்ற கர்மவீரர் காமராஜரின் வாக்கு எத்தனை சத்தியமானது. சரி இந்த இழிநிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டும்தான் காரணமா ? அவர்களுக்கு அரியாசனம் வழங்கிய மா’’க்களாகிய நாம்தானே... வெறும் ஆயிரம் ரூபாய்கு ஆசைப்பட்டு ஒருநாள் வேலையைக் கெடுத்து அன்று முழுவதும் வரிசையில் நின்று அந்த ஆயிரத்தை வாங்கி ஐநூறை டாஸ்மாக்கில் செலுத்தி விட்டு... அட செங்கூவைகளா ? இதோ திமுக ஆட்சியில் அடிக்கடி மின்சார வெட்டு இதுதான் இவர்களது அடையாளம்.

என்றுதான் உங்களுக்கு சுய உணர்வு வரும் ? இல்லை வராதோ ? தமிழகத்தில் பாஜாக-வை நுழைத்திட எத்தனை தொலைநோக்கு திட்டம் ? இந்த மூளையை மக்களுக்கு நன்மை செய்வதில் பயன்படுத்தலாமே.... இந்தியாவில் எங்கும் வாக்கு செலுத்தலாம் என்ற சிந்தனை விரைவில் வழியாகும்.

இதோ சென்னை, கோயமுத்தூர், மதுரை பெரு நகரங்களில் வட நாட்டவரின் குடிபுகுதல் இதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியை தாண்டி விட்டனர். இனி தமிழர்களின் வாக்கு அவசியமில்லை காரணம் பெரும்பான்மை நிலையை அவர்கள் தொட்டு கடந்து விடுவார்கள். இலங்கையில் சிங்களரால் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை. தமிழகத்தில் வட நாட்டவரால் ஏற்படும்.

எப்போது ? அடுத்த இரண்டு தலைமுறைகளில் இது சாத்தியமே... தமிழன் இந்தோனிஷியாவரை போய் ஆட்சி செய்தான் என்று பீற்றிக் கொள்கிறோம். வாய் சவடாலில் நாம் வீரர்களே... அவர்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் கடன் வழங்குவதில் முணைப்பு காட்டுகிறது அரசு. கட்டிடச் சாமான்கள், சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரத்திலும் அவர்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்வார்கள் மூடர்கள். இதன் பின்னணி என்ன ?

இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பதுபோல் தமிழகத்தின் தமிழனும் சிதறும் காலம் நெருங்கி விட்டது. நமக்கு நாளை சந்ததிகள் மீது உண்மையிலேயே பற்று இருந்தால் ? இதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ? என்பதை சிந்திக்க வேண்டும். மிகச்சுலபமான வழி. அவர்களிடம் விலை குறைவாக இருக்கிறது என்ற பேராசைப்பட்டு எந்த வியாபாரமும் செய்யாமல் தமிழர்களின் கடைகளிலே இதிலும் ஜாதி, மதம் பார்க்காமல் நடந்தால் தானாகவே அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். 

ChavasRegal சிவசம்போ-

கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு ஆனால் நமக்குதான் நல்லது மண்டையில ஏறாதே... இனி என்னத்த ஏறி... என்னத்த சாதிக்க...

காணொளி

32 கருத்துகள்:

  1. //பாலூற்றும் பெண்// - ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் முன்னேறணும்னு நினைத்தால் இந்த கில்லர்ஜி அதை அனுமதிக்க மாட்டேன் என்கிறாரே... கில்லர்ஜி சொல்றதைக் கேட்டு டாஸ்மாக்குக்கு அவங்களும் போகலைனா, தமிழக அரசு பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி துண்டு விழுந்துடுமே. அதை யார் சரி செய்வார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இதுதான் முன்னேற்றமா ? துண்டு யார் தலையில் விழும் ? மா'க்கள் தலையில்தான்...

      நீக்கு
  2. //வடநாட்டவர் குடிபுகுதல்// - தமிழகத்தில் பங்களாதேசிகள் லட்சக்கணக்கில் இருக்காங்க. இதையெல்லாம் வாக்குக்காக அனுமதிக்கறாங்க. தமிழகம் எங்க போகப்போகுதோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரட்டும் தமிழரே பான்பராக் பேக்டரி உருவாக்கலாம்.

      நீக்கு
  3. உங்களின் தொலைநோக்கு பார்வை நன்றாக இருக்கிறது.
    முதல் படமும் காணொளியும் கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள் பல!

      நீக்கு
  4. காணொளி திறக்கவே இல்லை!:( பின்னர் பார்க்கிறேன். நீங்க எழுதி இருப்பது எல்லாம் சரி. ஆனால் தமிழர்களை இப்படித் தொழில் செய்ய விடாமல்/வேலையும் செய்ய விடாமல்/இலவசங்களைக் கொடுத்துக் கெடுத்து வைத்திருப்பது யார்னு சொல்ல வேண்டாமா? சுமார் ஐம்பது வருடங்கள் முன்னர் பல தொழிலதிபர்கள் தமிழ்நாட்டு நெல்லை பிராமணத் தமிழர்கள். சிவசைலம், அவர் தந்தை, ஈச்வர ஐயர், டிவிஎஸ் குடும்பம், ஜெயராம ஐயர், ஹிந்து கஸ்தூரி ஐயங்கார், தினமணி ஏ.என்.எஸ்.(தினமணியின் ஆசிரியராக இருந்தார்), டிடிகே எனப் பலரும் பிரபலமான தொழிலதிபர்களாக இருந்ததோடு அல்லாமல் பலருக்கும் வேலை கொடுத்தும் பலவிதமான சலுகைகள் கொடுத்தும் வந்திருக்கிறார்கள். இவர்களைப் போல இப்போதைய இளைஞர்கள் துணிச்சலாகத் தொழில் தொடங்க முன் வருகின்றனரா? அதற்குத் தகுந்த மனோபலம், படிப்பு இவை இன்றைய இளைஞனிடம் இருக்கிறதா? வடநாட்டவர் எனில் துணிந்து தொழிலில் இறங்குகிறார்கள். முன்னேறுகின்றனர். நம்மவர்கள் அவர்களிடம் வேலை தான் பார்க்கின்றனர். அதுவும் வெகு சிலரே! கிராமங்களில் போய்ப் பார்த்தால் பல இளைஞர்களின் சக்தி வீண் விரையம் ஆகிக் கொண்டிருக்கிறது, பேச்சிலும் சும்மா உட்கார்ந்திருப்பதிலும். யாரும் அவங்க கிராமங்களைக் கூடச் சுத்தம் செய்வதில்லை. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இத்தனை நேரம் என அவங்க அவங்க கிராமத்தின் முக்கியமான வேலைகளைச் செய்து வந்தாலே போதும்.அரசின் உதவியே தேவை இல்லை. அரிசிலாற்றங்கரையில் இருக்கும் இரு பக்கத்துக் கிராம மக்களும் ஒரு நாளைக்கு இத்தனை நேரம் எனச் செலவு செய்து ஆகாயத் தாமரையையும் பார்த்தீனியத்தையும் வேண்டாத கருவேல மரங்களையும் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தினால் போதுமானது. ஆனால் எங்கே? அரசு வந்து தான் செய்யணும் என உட்கார்ந்திருக்காங்க! இந்த மனோநிலைக்கு அவர்களைத் தள்ளியவர்கள் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மிகவும் அருமையாக தங்களது கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள்.

      யார் காரணம் ?

      ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகள்தான். உண்மை வடநாட்டவர்களுக்கு இருக்கும் தன்நம்பிக்கைதான்.

      நம்மவர்களுக்கு பதாகைக்கு பால் ஊற்றவே நேரம் போதவில்லையே...

      நான் வருந்துவது அடுத்தடுத்த தலைமுறையினருக்காகவே...

      நீக்கு
  5. ஒரு வழியாக் காணொளி வந்துவிட்டது. ஏன் பார்த்தேன் என்றாகி விட்டது. பள்ளிச்சீருடைகளில் மாணவிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் யார் ? ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டதால்தான்....

      நீக்கு
  6. காணொளி முன்னரே பார்த்த நினைவு.  ஆண்கள் கூட இப்படி ஒரே இழுப்பில் பாட்டிலோடு கவிழ்த்து கொள்ள மாட்டார்கள்.  கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமைதான் ஜி கொடுங்கோலனிடம் ஆட்சியை கொடுத்தது நாம்தானே...

      நீக்கு
  7. என்று திராவிட அரசியல் தமிழக அரசியலில் நுழைந்ததோ அன்று தொடங்கியது கேடுகாலம்.

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி, கல்லூரி சீருடையில் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது வேறொரு காணொளியும் கூடப் பார்த்திருக்கிறேன் நினைவு இருக்கு. மட்டமான வளர்ப்பு. மட்டமான நட்பு. இவர்களின் பெற்றோரை எல்லாம் பெற்றோர் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கு. மாதா பிதா முன்னறி தெய்வம் என்ற வாக்கெல்லாம் போயிந்தி. எனக்கு அந்தப் பெற்றோரை இழுத்து வைத்து நல்லா அறையணும் போல இருக்குது.

    பெற்றால் மட்டும் போதாது. வளர்ப்பு மிக மிக முக்கியம். இவங்க அவங்களுக்குத் தெரியாம பண்ணுற தப்புக்குப் பெற்றோர் என்ன செய்வாங்க ந்னு கேட்கலாம். இந்தக் கேள்வி தவறு. இந்த அளவிற்குப் போகும் அளவு பெற்றோரின் கண் காணிப்பு, கவனம், நல்லது சொல்லிக் கொடுத்தல் எதுவும் இல்லை பொறுப்பற்ற பெற்றோர் என்றே தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் கண்காணிப்பு சரியில்லை என்பதே நிதர்சனம்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. கில்லர்ஜி, வட இந்தியர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டாங்க. தயங்கமாட்டாங்க. நம்ம இளைஞர்கள் எத்தனைப் பேர் வெட்டியா இருக்காங்கனு சமீபத்தில் கண்கூடாகக் கண்டேன். நம்ம பசங்க கமென்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க அதே சமயம் வட இந்தியப் பசங்க வேலை செஞ்சுட்டுருக்காங்க...ஏன் அந்த வேலையை இவங்க செய்திருக்கலாமே. கூலி வேலையிலிருந்து, தொழில் தொடங்குவது வரை, போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பது உட்பட இறங்கிவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்து என் மகன் வகுப்பில் வடநாட்டு பசங்க சிலர், 5 முறை மருத்துவம் படிக்கத் தேர்வு எழுதி முனைந்து அப்பவும் கிடைக்காததால் கால்நடை மருத்துவம் சேர்ந்திருந்தாங்க. வயசு 26, 27 என்று. நம் மக்கள் ம்ம்ம் என்னத்த சொல்ல...மருத்துவம் கிடைக்கலைன்னு உடனே தற்கொலை....வடநாட்டவரை ஆதரிக்கிறேன் என்று நினைக்காதீங்க நம்மவங்க இப்படி ஆகிட்டாங்களேன்னு ஆதங்கம். அதான் மேலே உள்ள முதல் படமே சொல்லுகிறதே....அவங்க புகுந்துட்டாங்கன்னு சொல்றத விட நாம என்ன செய்திக்கிட்டிருக்கோம்ன்றதும் பார்க்கணும் இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழர்கள் உழைப்பதற்கு தயாரில்லை. காரணம் நாம் பட்டதாரி என்ற அகம்பாவம் இன்றைய மாணாக்கர்களிடம் நிறைந்து இருக்கிறது.

      பெற்றோரை மதிப்பதில்லை ஆசிரியர்களை கிண்டல் செய்வது, வெட்டி பேச்சு இப்படியே காலம் கடந்து போகிறது.

      நீக்கு
  10. பால் உற்றுவது தன் எதிர்காலத்திற்கும் சேர்த்து தான் என்பதை எப்போ தான் இவர்கள் உணர்வார்களோ நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த இழிவு செயல் நாளுக்குநாள் கூடிக்கொண்டு போகிறதே...

      நீக்கு
  11. பெருந் தலைவர் தோற்ற போதே அனைத்தும் முடிந்து விட்டது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்து உண்மைதான்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பதிவை பார்க்கும் போதே மனது பதறுகிறது. முதல் படத்தில் அந்த நடிகரின் படத்திற்கு பாலபிஷேகம் செய்து அந்த பெண்மணி என்ன சாதிக்கப் போகிறார்.? ஏன் இப்படி ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.. காணொளியும் மனதை வருத்துகிறது. பள்ளிக்கூட மாணவிகள் இப்படி ஒரு கேவலமான காரியங்களை செய்ய எப்படி தைரியம் வந்தது... பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்காத கூட்டம் இப்படி பள்ளி சீரூடைக்கு ஒரு அவமானத்தை தேடித்தர வேண்டுமா? காலத்தினால் இவர்கள் கெட்டு விட்டார்கள் என சொல்கிறோம். உண்மையில் இவர்கள் இப்படி கெட்டு சீரழிவதை காண பொறுக்காமல் காலம் கண்களை மூடிக் கொண்டு மெளனமாகி விட்டது. மனதுக்குள் இதைப் பார்க்கும் போது ஆதங்கந்தான் நிறைய வருகிறது. என்ன செய்வது? என்ன சொல்வது? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதற்கு பொறுப்பாளர்கள் பெற்றோர்களே... பணத்தை தேடி கணவனும், மனைவியும் ஓடுவதால்கூட இருக்கலாம்.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. வெட்கப்படவும், வேதனைப்படவேண்டியும் உள்ள சூழலில் உள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. கேடு கெட்ட பயல்க... ஆட்சிய கூத்தாளியாளுக்கு கொடுத்துட்டு போயிருவான்னு காமராசர் சொன்னது எனக்கு தெரிந்ததால் நண்பரே! நான் இதுவரைக்கும் ஓட்டே போடவில்லை நண்பரே!!

    பதிலளிநீக்கு
  15. வேதனை... வேறென்ன சொல்ல கில்லர்ஜி. போகிற போக்கைப் பார்த்தால், இன்னமும் மோசமான விளைவுகள் வரும் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி இன்னும் மோசமாகி போகும் சாத்தியமே...

      நீக்கு