தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 04, 2022

மாட்டுத்தாவணியும், ஆட்டுப்பாவாடையும்


மதுரை பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
யோவ் படியில் நிற்காம மேலே வா, எங்கே போகணும் ?
எனக்கு ஆட்டுப்பாவாடைக்கு ஒரு டிக்கெட் கொடு
ஆட்டுப்பாவாடையா.... ? அங்கே எல்லாம் பஸ் போகாது...
ஏன் அந்தப்புள்ளைக்கு மாட்டுத்தாவணிக்கு டிக்கெட் கொடுக்குறே... எனக்கு மட்டும் பஸ் போகாதோ ?
? ? ?
 
காரைக்குடி பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
யோவ் உள்ளே வா, எங்கே போகணும் ?
எனக்கு குன்றக்குடி மலைக்கு டிக்கெட் கொடு.
மலைக்கு ஏதுயா... டிக்கெட்டு ? குன்றக்குடிதான் போகும் மலைக்கு மேலே நடந்துதான் போகணும்.
யேன் மருதமலைக்கு மட்டும் பஸ் போகுது... பஸ்ஸ குன்றக்குடி மலை மேலே விடுயா...
கீழே இறங்கு இல்லை உன்னை தள்ளி விட்டு உன் மேலதான் பஸ்ஸ விடுவேன்...
? ? ?
 
இராமேஸ்வரம் பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
எங்கே போகணும் ?
எனக்கு கொழுந்தியாள் மடத்துக்கு டிக்கெட் கொடு.
கொழுந்தியாள் மடமா ? சரிதான் அங்கே எல்லாம் பஸ் நிற்காது...
ஏன் தங்கச்சி மடத்துல நிற்கும்போது... கொழுந்தியாள் மடத்துல மட்டும் பஸ் நிற்காதோ ?
? ? ?
 
தேவகோட்டை பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
எங்கயா போகணும் ?
எனக்கு கோட்டைக்கு ஒரு டிக்கெட் கொடு.
எங்கே கோட்டையூரா ?
இல்லை சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு.
கீழே இறங்கு இல்லை கட்டையால அடிச்சே கொன்னுருவேன் ?
? ? ?
 
காளையார்கோவில் பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
எங்கயா போகணும் ?
எனக்கு புலியடிதம்மத்துக்கு ஒரு டிக்கெட் கொடு.
புலியடிதம்மம் நிற்காது
இல்லைனா புலியூருக்கு டிக்கெட் கொடு
யோவ் போகாத ஊருக்கெல்லாம் டிக்கெட் கேட்டா இறங்குயா...
அப்படீனாக்கா... சிங்கம்புணரிக்கு கொடு
யோவ் கெரகம் புடிச்சவனே... அந்த ஊருக்கு போகாதுயா...
அப்ப நரிப்பையூருக்கு வண்டியை விடு.
ஏண்டா உனக்கு மனுஷன் வாழுற ஊரே கிடையாதா...யோவ் டிரைவர் பஸ்ஸை பன்னிமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு இந்த முடுமையை அங்கே விட்டுட்டு போகலாம்.
யோவ் நிறுத்துயா.... ஏறங்கிறேன்.
இப்ப எரங்குடி மாப்ளே...
 
எலிக்குளம் பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
எங்கே போகணும் ?
எருமைப்பட்டிக்கு ஒரு டிக்கெட் கொடு.
எருமைப்பட்டி உள்ளே போகாது மெயின் ரோட்ல இறங்கிக்க...
இல்லைனா கரடிவாவிக்கு டிக்கெட் கொடு
யோவ் அந்த ஊருக்கு போகாது
அப்படீனாக்கா... குருவித்துறைக்கு கொடு
கிளியூர் டிக்கெட்தான் போடுவேன் சரியா ?
சரிய்யா....
 
பசும்பொன் பேருந்தில்... ‘’குடி’’மகனோடு நடத்துனர்...
எங்கே போகணும் ?
யானைமலை
ஆந்தைமடை சுத்திதான்போகும்
அது கிடாரிப்பட்டி வழியா... போகுமே... நாங்கெல்லாம் கவரிமான் பரம்பரை
அதுக்கென்ன... இப்ப ?
துவரிமானில் இறக்கி விடு
இன்னைக்கு பூராம் மிருகத்தோட போராடணும்னு விதிபோல... அடுத்து பாம்பு விழுந்தான் டிக்கெட் எல்லாம் இறங்குங்க...
 

ChavasRegal சிவசம்போ-
நல்லவேளை நாம குதிரை குத்தியிலே ஏறும்போதே கீரிப்பாறை டிக்கெட் வாங்கிட்டோம். 

சாம்பசிவம்-
கேரளா கோழிக்கோடுதான் போகலை போலயே...

38 கருத்துகள்:

  1. நல்லவேளை.. நம்ம ஊருக்கு டிக்கெட் கேக்கலை..

    அதுவரைக்கும் சந்தோசம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அடுத்த ரவுண்ட் அந்த ஏரியா போகலாம்.

      நீக்கு
  2. இப்படி வாய்விட்டுச் சிரிச்சு ரொம்ப நாளாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. இப்படி குடிச்சுவிட்டு அட்காசம் பண்ணு குடிகாரர்களிடம் 'மேலுருக்குதான் பஸ் போகும் டிக்கெட் வாங்குறியான்னு நடத்துடன்ர் கேட்டாலே போதுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே குடிகாரங்கே நான் கீழூருக்கு போறேன்னு சொல்லுவாய்ங்களே...

      நீக்கு
  4. எல்லோருமே குடிகாரன்பட்டிலேருந்து கிளம்பி வந்திருப்பாங்க போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவய்ங்களுக்கு ஓட்டுப் போட்ட நாமலும்தானே காரணம் ?

      நீக்கு
  5. ஹாஹாஹா நடத்துனர் என்ன பாவம் பண்ணரோ தெரியல நண்பரே

    பதிலளிநீக்கு
  6. நல்லா யோசிச்சு ஊர்ப்பெயர்களைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற வாசகங்களைச் சேர்த்து! பிச்சு உதறிட்டீங்க! உங்கள் திறமை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஹா... ஹா...

    இதன்பின் சில நடத்துனர்கள் குடிகாரர் ஆகி இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இருக்கலாம் இன்று குடிக்காதவர்கள் குறைவே...

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவை.
    எரங்குடி
    கடைசி படம் இந்த மாதிரி ஊர் பேர் கேள்விபட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. ஹாஹாஹா நல்லா பொருத்தமா ஊர்ப்பெயர்களை எடுத்து நகைச்சுவை பண்ணிட்டீங்க் கில்லர்ஜி!!

    அந்தக் 'குடிமகன்' கிட்ட நீ போக வேண்டிய ஊர் 'ஸ்ரீவைகுண்டம்' இந்தா பிடின்னு நடத்துநர் டிக்கெட் கிழிச்சிருக்கணும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஒருவேளை அப்படி சொன்னால் எனக்கு கைலாசாவுக்கு டிக்கெட் கொடு சகலையை பார்க்கணும்னு சொல்லுமே அந்த குடிகார முடுதாரு...

      நீக்கு
  10. பதில்கள்
    1. வார்த்தைகளை ரசித்தமைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  11. குடிமகனோடு நடத்துநர்கள் படும் பாட்டினை உங்கள் பாணியில் கூறிய விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. குடிமகனை அந்த நடத்துனர் எப்படித்தான் சமாளித்தாரோ? பல ஊர்களை வைத்து ஊர் விளையாடல் செய்திருக்கின்றீர்கள் கில்லர்ஜி! நல்ல கற்பனை! ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது ரசிப்புக்கும, கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  13. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. நானெல்லாம், அந்த குடிமகன் மாதிரி இல்லை..நண்பரே! நடத்துனர் கேட்கும் முன்னமே! பெரியார் நிலையம் ஒன்னு என்பேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதென்றால் அண்ணா நிலையம் என்று சொல்லி ஒரு விரலை காட்டுவேன்... சம்பாசிவம் சொன்னமாதிரிதான் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதுதான் தங்களுக்கு அழகு.

      நீக்கு
  15. செம கலக்கல் சிரித்து முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சிரித்து முடிந்து வாருங்கள்.

      நீக்கு
  16. பதிவினை மிகவும் ரசித்தேன். எரங்குடி திருச்சியில் இருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்த டவுன் பஸ் பார்த்தது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை ரசித்தமைக்கு நன்றி. பேருந்து கண்டமைக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  17. அருமையான வார்த்தை விளையாடல். குடி மகன்களின்
    ஆட்டம் என்றும் நிற்கப் போவதில்லை.
    ஆட்டுப்பாவாடை அனியாயத்துக்குச் சிரிக்க வைத்தது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  18. "மாட்டுத்தாவணி"யை பற்றி நீங்கள் கிண்டலாக பதிவு போட இப்போது அந்த பேருந்து நிலையத்தின் பெயரை "எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்" என பெயர்மாற்றம் செய்துவிட்டார்கள் தெரியுமா?.... நீங்கள் இங்கு அடித்த அடி அங்குபோய் வலித்துள்ளது?... ஹ.ஹஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.‌ ஹா.. மாற்றம் தேவைதான் நண்பரே...

      நீக்கு